Lankamuslim.org

Archive for ஒக்ரோபர் 28th, 2010

யாழ்ப்பாணத்தில் 20 வரையான இந்திய பிரஜைகள் கைது

leave a comment »

யாழ்.நகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலுள்ள விடுதிகளில் தங்கியிருந்த வியாபாரிகள் என்று தெரிவிக்கபடும் இருபது வரையான இந்திய பிரஜைகள் இலங்கை புலனாய்வுப் பிரிவினர் என்று தெரிவிக்க படும் நபர்களினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது நேற்று அதிகாலை 4.30மணிக்கு வெள்ளை வானில் சிவில் உடையில் வந்த குழுவினர் யாழ்.நகர் விடுதிகளில் தங்கியிருந்த 20 இற்கும் மேற்பட்ட இந்திய பிரச்சைகளை கடவுச் சீட்டுகளை பறிமுதல் செய்ததுடன் அவர்களையும் அழைத்துச் சென்றுள்ளனர்.

Advertisements

Written by lankamuslim

ஒக்ரோபர் 28, 2010 at 6:08 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கிழக்கு மாகாணத்தில் சீன உளவாளிகள் ஊடுரிவியுள்ளனர். ரிஎம்விபி

leave a comment »

கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் பல அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் சீன நிறுவனங்களும் பங்கெடுத்துள்ளது. இவ்வாறன நிறுவனங்களின் ஊழியர்களாக உள்ள சீனப்பிரஜைகளில் சீனா வின் முக்கிய உளவுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் கிழக்கு மாகாணத்தினுள் ஊடுருவி உள்ளமை தெரியவந்துள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் கைலேஸ்வரராஜா லக்பிம விற்கு தெரிவித்துள்ளார். சந்தேகத்திற்குரிய சீனப் புலனாய்வுப் பிரிவினர் தொடர்பான தகுந்த சாட்சியங்கள் தம்மிடமுள்ளதாக குறிப்பிட்டுள்ள கைலேஸ்வரராஜா , புலனாய்வாளர்கள் தொடர்பாக எச்சரிக்கையாக இருக்குமாறு தமது உறுப்பினர்களுக்கு பணித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன

Written by lankamuslim

ஒக்ரோபர் 28, 2010 at 6:00 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இலங்கை பணியாளர்களுக்கு இஸ்ரேலில் தொழில் வாய்ப்பு !!

leave a comment »

“The Palestinians are very bad, they kill innocent people, including the Chinese,” said one worker on the bus. “The Israelis are fighting because they have to stop the terror,”

இலங்கை பணியாளர்களுக்கு இஸ்ரேலில் தொழில் வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் இலங்கையர் குழு இன்று இஸ்ரேல் பயணமாவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. இதன்படி 300 இலங்கையர்கள் விவசாயத் துறை சார்ந்த தொழில்களுக்கு இஸ்ரேலுக்கு அனுப்பப்படுகின்றனர். இவர்களுக்கு வீஸா வழங்கும் வைபவம் நேற்று வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் நடைபெற்றுள்ளது .

6 மாதகால ஒப்பந்த அடிப்படையில் இலங்கையர் குழு அங்கு தொழில்பெற்றுச் செல்கின்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது இலங்கை பணியாளர்களுக்கு இஸ்ரேலில் தொழில் வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் இஸ்ரேலில் தொழில் செய்வதற்கு ஏற்றவாறு இவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக தலைவர் கிங்ஸ்லி ரணவக்க கூறியுள்ளார் ஆனால் இவர்களின் எந்த பகுதிகளின் வேலைக்கு அமர்த்தப் படுவர் மற்றும் இவர்களின் பாதுகாப்பு பற்றி எதுவும் வெளியாகவில்லை விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 28, 2010 at 12:06 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

உள்ளூராட்சி சட்டமூலங்களுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மூன்று மனுக்கள்

leave a comment »

சிறுபான்மை அரசியல் மட்டங்களில் பெரிது விவாதிக்கப்படும் உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் திருத்தச் சட்டமூலம் மற்றும் உள்ளூர் அதிகார சபைகள் விசேட திருத்தச் சட்ட மூலம் ஆகிய உத்தேச சட்டமூலங்களுக்கு எதிராக நேற்று உயர் நீதிமன்றத்தில் மூன்று மனுக் கள் தாக்கல் செய்யப்டுள்ளது இதில் உள்ளூர் அதிகார சபைகள் விசேட திருத்தச் சட்ட மூலத்துக்கு எதிராக காத்தான் குடி நல்லாட்சிக்கான மக்கள் இயக்கமும் தாக்கல் செய்யப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன<!–more–>

இலங்கை தமிழரசு கட்சி இரண்டு மனுக்களையும் தாக்கல் செய்துள்ளது இதல் மேற்கண்ட சட்ட மூலங்களை வடமாகாண சபையின் அங்கீகாரம் இன்றி பாராளுமன்றம் நிறைவேற்றமுடியாது என்று தீர்ப்பு கோரும் மனுவும் உள்ளடங்கும் இந்த மனு மீதான தீர்ப்பு சாதகமாக கிடைக்கும் நிலையில் உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் திருத்தச் சட்டமூலம் மற்றும் உள்ளூர் அதிகார சபைகள் விசேட திருத்தச் சட்ட மூலம் வடமாகாண சபையில் வாக்கெடுப்புக்கு விடப்படும் நிலை தவிர்க்க முடியாத சர்தாக மாறும் இது சிறுபான்மை நலன் பேன போதுமானதாக அமையும் என்றும் கருதப்படுகின்றது

காத்தான் குடி நல்லாட்சிக்கான மக்கள் இயக்கமும் தாக்கல் செய்த மனுவில் குறித்த திருத்தச் சட்டமூலம் சிறிய கட்சிகள், சிறுபான்மைக் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களுக்கு பதிப்புகளை ஏற்படுத்துவதாகவும், இது அரசியலமைப்பின் சில சரத்துகளுக்கு முரண்படுவதால் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்றே இது நிறைவேற்றப்பட வேண்டும் என்றும், எல்லை மீள்நிர்ணயக் குழுவினை அமைப்பது தொடர்பில் அமைச்சருக்கு கூடியளவு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளமையும் இந்த சட்ட மூலத்தில் தெளிவில்லாத சர்துகள் இருப்பதும் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது .

Written by lankamuslim

ஒக்ரோபர் 28, 2010 at 10:27 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு இன்றுடன் இருபது வருடங்கள் பூர்த்தி ??

leave a comment »

றிஸ்வி ஷரிப்

என்ற தலைப்புடன் ஒரு பத்திரிகை தலைப்பு செய்தி தீட்டியுள்ளது அதில் இன்று என்பது எந்தளவு பெருந்தும் ? என்பதுதான் கேள்வி   வடக்கிலிருந்து முஸ்லிம்கள் ஒரு தினத்தில் வெளியற்றப்  படவில்லை வடக்கிலுள்ள 5 மாவட்டங்களிலும் உள்ள முஸ்லிம்கள் மிகவும் திட்ட மிட்ட  முறையில் கட்டம் கட்டமாக வெளியற்றப் பட்டனர்.

உதாரணமாக  யாழ்ப்பாண மாவட்டத்தில் யாழ் மாவட்ட முஸ்லிம்கள் முழுவதுமாக ஒரு குறித்த தினத்தில் வெளியற்றப்  படவில்லை சாவகச்சேரி முஸ்லிம்கள் 1990 ஒக்டோபர் 16ம் திகதியும் யாழ்ப்பாண முஸ்லிம்கள்  1990 ஒக்டோபர் 30ம் திகதியும் வெளியற்றப் பட்டனர் என்பன மிகவும் தெளிவாக பதிவாகியுள்ளன அதேபோன்று மன்னார் மாவட்ட முஸ்லிம்களும் தலைமன்னார் ,மன்னார் , எருக்கலம்பிட்டி பிரதேச முஸ்லிம்கள் கட்டம் கட்டமாக வெளியேற்றபட்டனர் 1990 ஒக்டோபர் 23ஆம் திகதி மறிச்சுக்கட்டி முஸ்லிம்கள் வெளியேற்றத்துடன் தொடங்கப்பட்ட மன்னார் மாவட்ட முஸ்லிம் வெளியேற்றம்  ஒக்டோபர் 28ஆம் திகதி வரை கட்டம் கட்டமாக நீடித்தது அதேபோன்று  முல்லைத்தீவு, வவுனியா , கிளிநொச்சி  முஸ்லிம்கள் கட்டம் கட்டமாக  1990 ஒக்டோபர் மாதம் இறுதி அரைப்பகுதி முழுவதும் வெளியேற்றபட்டனர்

எனவே அந்த குறித்த பத்திரிகை ‘ வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு இன்றுடன் இருபது வருடங்கள் பூர்த்தி’ ?? என்று ஒரு நாளை மையமாக கொண்டு தலைப்பு தீட்டியது தவறாகும் வடமாகாணத்தின் முஸ்லிம் பலவந்த வெளியேற்றத்தை குறிக்கும் கருப்பு ஒக்டோபர் என்ற பிரயோகம் மிகவு பொருத்தமானதாகும் இந்த வகையில் லங்காமுஸ்லிம் -Lankamulim.org-  இணைத்தளம் பயன்படுத்தும் ‘கருப்பு ஒக்டோபர்’ என்ற பதம் மிகவும் பொருத்தமாது என்பது எனது நிலைப்பாடு

Written by lankamuslim

ஒக்ரோபர் 28, 2010 at 10:17 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது