Lankamuslim.org

Archive for ஒக்ரோபர் 26th, 2010

குற்றமும் தண்டனையும் மனிதமும் !

leave a comment »

S.M.அப்துல்லாஹ்

ரிஸானாவும் ஒரு மனித உயிர் அதே போல் மரணித்த அல்லது கொல்லப்பட குழந்தையும் ஒரு உயிர் இங்கு யார் நீதியை எப்படி நிலைநாட்டுவது என்பதுதான் பிரச்சினை இஸ்லாமிய குற்றவியல் சட்டத்தில் வேண்டுமென்றே கொலை செய்த ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்படுகின்றது. களவு செய்தவருக்கு கை வெட்டப்படுகின்றது. விபச்சாரத்தில் ஈடுபட்ட வர்களுக்கு ஒரு கூட்டம் பார்த்தி ருக்க கசையடி வழங்கப்படுகின்றது. இவற்றை அல்குர்ஆன் நேரடியாகவே குறிப்பிட்டுள்ளதை காணலாம்.

இஸ்லாமிய குற்றவியல் சட்டம் ஒருவரின் உயிரை போக்குவதற்கு தகுந்த செயலைச் செய்து கொலை செய்யும் நோக்கத்துடன் கொலை செய்தால் அதைக் கொலைக்குற்றம் என்று குறிப்பிடுகிறது கொலை செய்தால் கொலை காரர் கொல்லப்படமுடியும் அல்லது கொல்லப்பட்டவரின் இரத்த உறவினர் நினைத்தால் ஒரு தொகையை பெற்றுகொண்டு மன்னிக்க முடியும் என்று கூறுகின்றது விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

ஒக்ரோபர் 26, 2010 at 9:32 பிப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

வடமாகாண முஸ்லிம்களும் 20வது கருப்பு ஒக்டோபரும்

with one comment

முஹம்மது சரீபு

1990 ஒக்டோபர்  மாதம் 18ம் திகதியிலிருந்து 30ம் திகதிக்கிடைப்பட்ட காலப்பகுதியில் வடமாகாணத்தின் முக்கிய மாவட்டங்களான யாழ்ப்பாணம் மன்னார் முல்லைத்தீவு கிளிநொச்சி மற்றும் வவுனியா பிரதேசத்தை சோர்ந்த அப்போதைய கணக்கின்படி 85000க்கு மேற்பட்ட முஸ்லிம்கள் பாசிஸ புலிகளால் வெளியேற்றப்பட்டனர். இது இலங்கை முஸ்லிம்களின் முதல் இடம்பெயர்வல்ல. இதற்கு முன்பும் 10ம் நூற்றாண்டில் கீரிமலை பகுதிக்குள் நுழைந்த துலுக்கர் மொழி பேசும் முஸ்லிம்கள் தீட்டை ஏற்படுத்தி விட்டார்கள் எனக்கூறப்பட்டு பொலநறுவையை தலைமையகமாகக் கொண்டு ஆட்சிசெய்த இந்நிய அரசன் ராஜசோளனின் பணிப்பின் பேரில் வெளியேற்றப்பட்டார்கள்.

13ம் நூற்றாண்டில் மாதகல் தொடக்கம் நவாலி வரை வாழ்ந்த முஸ்லிம்கள் இடம்பெயர்ந்தார்கள் அல்லது இறந்துவிட்டார்கள் என சொல்லப்படுகிறது. இதன் பிறகு 1470களில் கனகசு+ரிய சிங்கையாரியனால் ஜாவகர் வழிவந்த முஸ்லிம்கள் சாவகச்சேரி மிருசுவில் பளை போன்ற பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர் விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 26, 2010 at 9:19 முப

உலக செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ரிசானா நபீக்காவின் உயிரைக் காக்க வேண்டுகோள் !

with 4 comments

எஸ்.எம்.எம்.பஷீர்

என்ன தீர்ப்பு வருமோ , எமது பிள்ளை மீண்டும் எம்மிடம் வருவாளோ என்று பதைபதைப்புடன் காத்திருந்த ரிசானா நபீகாவின் பெற்றோர் உறவினர் இப்போது வெளியாகிருக்கும் ரியாத் உச்ச நீதிமன்ற தீர்ப்பினை கண்டு அதிர்ச்சி யடைந்திருக்கிரார்கள். அந்த சிறுமி குடும்ப வறுமைக் கொடுமைகளை தனது இளமை பிராயத்தில் தாங்கிக் கொண்டு தனது குடும்ப நலனுக்காக அயல் நாட்டில் பனிப்பெண்ணாக பிழைக்கப்போய் இறுதியில் சிசுக் கொலைக்காக உயிரை இழக்கப் போகிறாளே என்ற கவலை காரணமாக அவரது விடுதலைக்காக குரல் கொடுத்த மனித உரிமை வாதிகள் மனித உரிமை நிறுவனங்கள் அதிலும் குறிப்பாக மேன் முறையீட்டுக்கான செலவினை க்ஹடெப் அல்ஷமரி ( Al-Shammary) எனும் சவூதியிலுள்ள சட்ட நிறுவனத்துக்கு வழ‌ங்கிய ஆசிய மனித உரிமை ஆணையகம் (Asian Human Right Commission) என்பன மிகுந்த ஏமாற்றத்தை அடைந்துள்ளன.

தான் பணியாற்றிய வீட்டு உரிமையாளரின் குழந்தையை ரிஷானா மே மாதம் 22ம் திகதி 2005ம் ஆண்டு கொலை செய்ததாக 16ம் திகதி ஜூன் மாதம் 2007 ஆம் ஆண்டில் டவாதமி (Dawadami High Court) உயர் நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்திருந்தது.அத் தீர்ப்புக் கெதிரான ரிசான நபீக்கின் மேன் முறையீட்டை ரியாத்தில் உள்ள உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளதுடன் டவடாமி மேல் நீதி மன்றினால் வழங்கப்பட்ட மரன தன்டனைத் தீர்ப்பினை உறுதி செய்துள்ளது விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 26, 2010 at 8:37 முப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

காத்தான்குடி சம்மேளத்தின் செயலாளர் பொலிசார் ஒருவரினால் அச்சுறுத்தப்பட்டுள்ளார்

leave a comment »

அபூ றப்தான்– காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளத்தின் செயலாளர் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம். சபீல் நழீமி பொலிசார் ஒருவரினால் அச்சுறுத்தப்பட்டுள்ளார்.இச்சம்பவம் இன்று (26.10.2010) பிற்பகல் இடம்பெற்றள்ளது. காத்தான்குடி 6ம் குறிச்சி ஹைறாத் நகரிலுள்ள பள்ளிவாயல் சம்மேளனத்திற்கு சொந்தமான காணியை சிலர் அத்துமீறி நில அளவை செய்வதற்கு முற்படுவதாக சம்மேளன செயலாளர் சபீல் நழீமிக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து ஸ்த்தலத்துக்கு விரைந்த சபீல் நழீமி அங்கு நில அளவையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அதிகாரிகள் மற்றும் அப்பகுதியின் கிராம உத்தியோகத்தர் ஆகியோரிடம் இக்காணியை நில அளவை செய்வதற்கு உங்களுக்கு யார் உத்தரவு பிறப்பித்தார்கள் என வினவி விசாரிக்க முற்பட்ட போது அங்கு அவ்வதிகாரிகளினால் அழைத்து வரப்பட்ட பொலிசார் ஒருவர் சம்மேளன செயலாளருடன் மிகவும் கடுமையாக பேசியுள்ளதுடன் அச்சுறுத்தியுமுள்ளார் விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 26, 2010 at 8:31 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது