Lankamuslim.org

Archive for ஒக்ரோபர் 25th, 2010

ரிஸானாவுக்கு மரண தண்டனை வேண்டாம் ஜனாதிபதி மஹிந்த

leave a comment »

ரிஸானா நபீக்குக்கு மரண தண்டனையை நிறைவேற்றக் கூடாது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சவுதி மன்னரிடம் கோரிக்கை விடுக்கவுள்ளார். ஜனாதிபதியின் இந்த முடிவு குறித்து இலங்கை வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் பிபிசியிடம் கூறியுள்ளார்.
ரிஸானாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து அவரது குடும்பத்தினரால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை சவுதி உச்ச நீதிமன்றம் நிராகரித்ததை அடுத்து இலங்கை ஜனாதிபதி இந்த முடிவை எடுத்துள்ளார்.

Advertisements

Written by lankamuslim

ஒக்ரோபர் 25, 2010 at 11:41 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ரிஸானா நபீகின் மரண தண்டனை உறுதிப் படுத்தப்பட்டுள்ளது !!

leave a comment »

2005 ஆம் ஆண்டில் இலங்கை வீட்டுப்பணிப் பெண் ஒருவர் சவூதியில் சிசுவினை கொலை செய்தார் என்பதனை விசாரணையின் பின் ரியாத் உயர் நீதிமன்றம்   உறுதிசெய்துள்ளது என அறப் நியூஸ் தெரிவித்துள்ளது

ரிஸானா  நபீக் என அழைக்கப்படும் இலங்கையைச் சேர்ந்த வீட்டுப்பணிப் பெண், தனது சவுதி எஜமானின்   4 மாத குழந்தையை கொலை செய்தார் எனும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக அப்துல்லா அல் ரொசாமி தலைமையிலான மூன்று நீதிபதிகளை கொண்ட உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழு தெரிவித்துள்ளது. ரிஸானாவுற்கு வேலை வழங்குனரின் மனைவி அவரது குழந்தைக்கு பால் வழங்குமாறு குழந்தையை வழங்கியுள்ளார் இதன் பின்னரே அவர் குழந்தையை கொன்றுள்ளார் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 25, 2010 at 1:06 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

முஸ்லிம்களின் கையை விட்டு போகும் புத்தளம் கற்பிட்டி:ஆப்தீன் யஹ்யா

leave a comment »

கற்பிட்டி பிரதேசத்தில் பெரும்பான்மையாக வாழும் முஸ்லிம்கள் காலக்கிரமத்தில் சிறுபான்மையாக மாறுவதற்க்கு அதிக வாய்புகள் காணப்படுவதாக வடமேல் மாகாண சபை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஆப்தீன் யஹ்யா எச்சரிக்கை விடுத்தார்

கற்பிட்டி பிரதேசத்தை சுற்றுலா பயணிகளை கவரும் விதத்தில் அபிவிருத்தி செய்ய மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் காரணமாக சுற்றுலாத் துறைக்கென பல்லாயிக்கணக்கான ஏக்கர் நிலங்களை அரசு சுவீகரித்து வருவதன் மூலம் இது தத்துரூபமாக தென்படுவதாக அவர் தெரிவித்தார்.

இவ்வாறு சுவீகரிக்கப்படும் நிலங்களில் பெரும்பான்மை இன சிங்களவர்களை திட்டமிட்ட அடிபடையில் குடியமர்த்தவும் முனைப்புகள் இடம்பெறுவதாகவும் தெரிவித்துள்ளார் இந்த நிலை ஏற்பட்டால் கற்பிட்டி பிரதேசத்தில் பெரும்பான்மையாக வாழும் முஸ்லிம்களின் எதிர்காலம் இருள் சூழ்ந்ததாக அமைத்து விடுமோ என்ற அச்சம் குடிகொண்டிருபதாகவும் அவர் சுட்டிக்காட்டு கின்றார் இது தொடர்பாக எமது lankamuslim.org இணையத் தளத்துக்கு சற்று முன்னர் அவர் செவ்வி ஒன்றை வழங்கினார் விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 25, 2010 at 11:27 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

சிறு பான்மை அரசியலுக்கு சாவு மணியடிக்கும் உள்ளுராட்சி தேர்தல் முறை சட்ட சீர்திருத்தம்

leave a comment »

அஷ்ஷெய்க் மஸீஹுத்தீன் இனாமுல்லாஹ்-
முஸ்லிம் காங்கிரஸ் முன்னாள் மஜ்லிஸ் அல்ஷுரா தலைவர்: ஆளும் கட்சி ,எதிர்க்கட்சி என்பவற்றிலுள்ள பாராளுமன்ற மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் சிறுபான்மை முஸ்லிம் தமிழ் கட்சிகள் ஏனைய சிறு கட்சிகளுடன் ஒருமித்து உள்ளுராட்சித் தேர்தல் முறை சீர்திருத்தச் சட்ட முலத்தை நிராகரிக்க வேண்டும். இரண்டு பேரினக் கட்சிகள் தவிர்ந்த சகல சிறுபான்மை கட்சிகள் ,சிறு கட்சிகள் சகலதையும் ஜனநாயக அரசியல் நிரோட்டத்திலிருந்து ஓரங்கட்ட எடுத்துக் கொள்ளப்படும் மிகவும் பாரதூரமான இந்த வரலாற்று சதி முயற்சி குறித்து சிறுபான்மையின புத்தி ஜீவிகள் விழிப்பாக இருக்க வேண்டும்.

அரசியல் அதிகாரங்கள் பரவலாக்கப்பட்டு ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் சிறுபான்மையினரை இணைய்துக்கொள்ள வேண்டிய தருணத்தில் அதற்கு நேர் எதிராக இருக்கின்ற எச்ச சொச்ச அரசியல் பிரதிநிதித் துவங்களையும் பறித்து எடுக்கின்ற முயற்சிக்கு துணை போகின்ற சகல சிறுபான்மை அரசியல் வாதிகளும் மிகப் பெரிய வரலாற்றுத் துரோகத்தை தம் சார்ந்த சமூகங்களுக்கு இழைக்கின்றனர் என்பதனை மறந்து விடக்கூடாது விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 25, 2010 at 9:46 முப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது