Lankamuslim.org

One World One Ummah

Archive for ஒக்ரோபர் 23rd, 2010

விக்கிலீக் மீண்டும் 391,832 ஆவணங்களை வெளியிட்டுள்ளது

leave a comment »

M.ரிஸ்னி முஹம்மட்

ஈராக் மீது  அமெரிக்க ஆக்கிரமிப்பு போர் குறித்த 391,832    ஆவணங்களை  விக்கிலீக்ஸ் இணையதளம் நேற்று வெளிட்டுள்ளது இதில் 2004 ஆம் ஆண்டு ஜனவரி தொடக்கம் 2009 ஆம் ஆண்டு டிசம்பர் வரையான காலத்தில் அமெரிக்கா உலகிற்கு மறைத்துள்ள ரகசியங்கள் கொண்டது எனினும் 2004ஆம் ஆண்டு மே மாதம் மற்றும் 2009 ஆம் ஆண்டு மார்ச் மாத சம்பவங்கள் உள்ளடக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளது    (except for the months of May 2004 and March 2009)

விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது இரகசிய ஆவணங்களில் பிரகாரம் 2004 தொடக்கம் 2009 ஆண்டு வரையுள்ள 6 ஆண்டுகளில் ஈராக்கில் 109,032 பேர் கொல்லப்பட்டுள்ளனர் இவர்களின் 60 வீதமானவர்கள் பொது மக்கள் என்று விக்கிலீக் தெரிவித்துள்ளது விரிவாக பார்க்க

Advertisements

Written by lankamuslim

ஒக்ரோபர் 23, 2010 at 8:46 பிப

ஈராக் இல் பதிவிடப்பட்டது

பௌத்த மதத்தைப் பின்பற்றுபவர்களின் தொகை வீழ்ச்சிகாரணம் அதன் கடினமான போக்கு

leave a comment »

பௌத்த மதத்தைப் பின்பற்றுபவர்களின் தொகை வீழ்ச்சியடைந்து வருவதற்குக் காரணம் அதன் கடினமான போக்காகும். பௌத்தம் உலகில் முதலிடத்திலிருந்து இன்று நான்காம் இடத்திற்குத் தள்ளப்பட்டு விட்டதாகவும் உயர் கல்வி அமைச்சர் எஸ்.பீ திசாநாயக்கா தெரிவித்துள்ளார்

உலகில் ஐந்தாவது மிகப்பெரிய சனத்தொகையுடைய நாடான இந்தோனேசியா ஒரு பௌத்த நாடு. ஆனால் அவர்களுடைய தொழில் மீன்பிடிப்பது. பௌத்த மதத்துக்கும் மீன்பிடித் தொழிலுக்கும் இடையே முரண்பாடுகள் காணப்படுவதனால் இன்று முழு இந்தோனேசியாவும் இஸ்லாம் மதத்தை ஏற்றுக் கொண்ட ஒரு நாடாகி விட்டது விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 23, 2010 at 6:54 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நீதிமன்றம் செல்லுமா ?

leave a comment »

உள்ளூராட்சி தேர்தல் திருத்தச் சட்டமூலத்தின் கீழ் ஓர் உள்ளூராட்சித் தேர்தல் நடத்தப்படுமானால் அது இருகட்சி முறைக்கு சாதகமானதாகவும் சிறுபான்மை கட்சிகளுக்கும் சிறுபான்மை இனங்களுக்கும் பாதகமாக அமைவதால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி திருத்தங்களை எதிர்த்து நீதிமன்றம் செல்வது பற்றி தமது கட்சி ஆராய்ந்து வருவதாக அதன் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவிக்கின்றார்.

இது நடைமுறைக்கு வந்தால் வடக்கு கிழக்குக்கு வெளியில் இருகட்சி முறை பல பெரும் என்றும் சிறுபான்மை பிரதிநிதித்துவம் குறைவடையும் என்றும் தெரிவிக்கின்றார் அதேவேளை, பெரும்பான்மையின பிரதிநிதித்துவம் என்பது கேட்காமலேயே அதிகரிக்கக் கூடிய வாய்ப்பும் உள்ளது இதன் காரணமாக சிறுபான்மையினராக மக்கள்ஒன்றில் பெரும்பான்மைக் கட்சிகளுடன் இணைய வேண்டும் அல்லது தமது தேவைகளுக்காகப் பெரும்பான்மை இனத்தில் தங்கியிருக்க வேண்டும் என்று விமர்சிக்கப் படுவது குறிபிடத்தக்கது. உள்ளூராட்சி தேர்தல் திருத்தச் சட்ட மூலம் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மலேசியா சென்று திரும்பியதும் அரச தரப்பினருடன் மீட்டும் பேசவுள்ளதாக ரவூப் ஹக்கீம் தெரிவித்திருந்தார்

Written by lankamuslim

ஒக்ரோபர் 23, 2010 at 1:36 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பணிக்கனும் பணத்தாளூம் : ஒரு சுவையான தகவல்

leave a comment »

எஸ்.எம்.எம்.பஷீர்

ஆயிரம் ரூபாய் நாணயத்தாளின் பின்னாலுள்ள ஆச்சரியகரமான விஷயம் என்ற தலைப்போடு ஒரு செய்தி பெப்ரவரி மாதம் இலங்கை தொடர்பான இணையத்தளமொன்றில்விரிவாக பார்க்க பிரசுரமாகியிருந்தது. ஆனால் அதற்கு முன்னரே ஏறாவூர் வரலாறு பற்றி எழுதப்பட்ட நூலொன்றில் (2005) இது பற்றி விரிவாகவே எழுதப்பட்டுள்ளது என்பதுடன் ஆங்கிலத்தில் வெளியான செய்திகுறிப்பும் அன்னூலில் வெளியான தமிழ் குறிப்பின் ஆங்கில மொழியாக்கமாகவே காணப்பட்டது. ஆங்கிலத்தில் வெளியான அக்குறிப்புரையை இங்கு மொழிபெயர்த்து உங்களின் வாசிப்புக்கு விட்டுவிட்டு அது பற்றிய சில செய்திகளையும் பார்ப்போம். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 23, 2010 at 1:30 பிப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

மூதூர் தக்வா நகரில் இடம்பெற்ற வெடிவிபத்தில் ஒரு சிறுவன் வபாத்தாகியுள்ளார் பலர் காயம்

leave a comment »

இன்று காலை 9.45 மணி அளவில் மூதூர்  தக்வா நகர் பகுதியில் இடம்பெற்ற வெடிவிபத்தொன்றில் ஐந்து சிறுவர்கள் படுகாயமுற்ற நிலையில்  அதில் ஒரு சிறுவன் கடும் காயங்கள் காரணமாக  வபாதாகியுள்ளனர். ஏனைய வர்கள் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிகின்றன.

மூதூர் தக்வா நகர் ஜெற்றி பகுதியில்  பொலிதீன் பேக்கில் மடிக்க பட்டிருந்த   பொருளொன்றை குறித்த  சிறுவர்கள் எடுத்து விளையாட முற்பட்ட போதே அது வெடித்துள்ளது. இந்த சம்பவத்தில் 8 வயதான முஜாகிதீன் சர்பான் என்ற சிறுவன் வபாத்தனமை உறுதியாகியுள்ளது காயமடைந்தவர்கள், மூதூர் முதலாம் குறிச்சியை சேர்ந்தவர்களாவர்.  5 வயதான நஜீம் ஷா, 3 வயதான நஸீர்,  9 வயதான ராசிக் இம்ரான், 10 வயதான சல்மான் ஆகியோரே காயமடைந்தவர்களாவர் என்று அறிய முடிகின்றது

Written by lankamuslim

ஒக்ரோபர் 23, 2010 at 1:20 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது