Lankamuslim.org

Archive for ஒக்ரோபர் 22nd, 2010

வடக்கு முஸ்லிம்களின் நிலை தொடர்பாக முஸ்லிம் காங்கிரஸ் விளக்கம்

leave a comment »

இலங்கை வந்துள்ள பொதுநலவாய பாராளுமன்ற அமைப்பின் பிரித்தானிய தூதுக்குழுவினருடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சந்திபொன்ரை மேற்கொண்டுள்ளது இந்த சந்திப்பின்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெளியேற்றப்பட்ட வட மாகாண முஸ்லிம்களின் தற்போதைய நிலை தொடர்பாக தூதுக்குழுவினருக்கு விளக்கப்பட்டுள்ளது . இச்சந்திப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், செயலாளர் ஹசன் அலி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தெளபீக் ஆகியோர் கலந்து கொண்துள்ளனர்

மேலும் இலங்கையில் முஸ்லிம் பயங்கரவாத இயக்கங்கள் செயற்படுவதாக தெரிவிக்கப்படும் பிரச்சாரங்க முற்றிலும் பொய்யானவை என்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற அரசியல் ஸ்தாபனம் உருவாக்கப்பட்டதன் மூலம் முஸ்லிம்கள் ஆயுதம் தூக்க வேண்டிய நிலை இல்லாமல் செய்யப்பட்டதாகவும் அவர்கள் குறிப்பிட்துள்ளனர் இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பங்கு தொடர்பாக பிரித்தானிய தூதுக்குழுவிற்கு விளங்கப்படுத்தப்பட்ட போது மேற்கண்ட விடையங்கள் தெரிவிக்க பட்டுள்ளது .

Advertisements

Written by lankamuslim

ஒக்ரோபர் 22, 2010 at 9:55 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

புத்தளத்தில் வடமாகாண முஸ்லிம்கள் கருப்பு ஒக்டோபரை நினைவு கூறுகின்றனர்

leave a comment »

வடமாகாண முஸ்லிம்கள் புலிகளினால் இனச் சுத்திகரிப்பு செய்யப்பட்டதை நினைவு கூறுமுகமாக கருப்பு ஒக்டோபர் புத்தளத்தில் அமைதி பூர்வமாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் யூத் போரம் – Sri lanka Muslim Youth Forum- என்ற அமைப்பினால் நினைவு கூறப்பட்டு வருகின்றது வடமாகாணத்தின் யாழப்பாணம் மன்னார் முல்லைத்தீவு வவுனியா கிழிநொச்சி ஆகிய ஐந்து மாவட்டங்களிலிருந்தும் சும்மார் ஒரு இலட்சம் வரையான முஸ்லிம்கள் அவர்களின் பாரம்பரிய பிரதேசங்களிலிருந்து புலிகளால் 1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் விரட்டியடிக்கப்பட்டனர் இந்த ஆண்டு ஒக்டோபருடன் 20 ஆண்டுகள் பூர்தியடைந்துள்ளது.

இனச் சுத்திகரிப்பு செய்யப்பட்டதை வடமாகாண முஸ்லிம்கள் ஆண்டு தோறும் நினைவுகூர்ந்து வருகின்றனர் என்பது குறிபிடத்தக்கது இது தொடர்பாக எமது புத்தள செய்தியாளர் தெரிவித்துள்ள செய்தியில் புத்தளம் நகரம் மற்றும் புத்தள புறநகரப் பகுதிகளிலும் நூற்றுக் கணக்கான சுவரொட்டிகள் ‘கருப்பு ஒக்டோபரை ஒரு வரலாற்றுப் பதிவாக கொள்வோம்’ போன்ற  வாசகங்கள் கொண்டதாக எழுதப்பட்டுள்ளதாகவும், மேலும் அந்த அமைப்பு இது தொடர்பாக பல நிகழ்சிகளையும் ஏற்பாடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கின்றார் படங்கள் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 22, 2010 at 4:38 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது