Lankamuslim.org

Archive for ஒக்ரோபர் 19th, 2010

உள்ளூராட்சி தேர்தல்கள் திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றம்

leave a comment »

உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் திருத்தச் சட்டமூலம் மற்றும் உள்ளூர் அதிகார சபைகள் விசேட திருத்தச் சட்ட மூலம்  என்பன மத்திய மாகண சபையில் இன்று சமர்ப்பிக்கப்பட்டன. இந்த சட்ட மூலங்கள் தொடர்பான விவாதத்தின் பின்னர் வாக்கெடுப்பின்றி சட்டமூலங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது  என்று ஆரம்பகட்ட செய்திகள் தெரிவிகின்றன பின்னர் வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதன் பொது மேலதிக 11 வாக்குகளினால் உள்ளுராட்சி திருத்தச்சட்ட மூலத்திற்கான அங்கீகாரம் கிழக்கு மாகாண சபையில் இன்றிரவு நிறைவேற்றப்பட்டது. திருத்தச்சட்ட மூலத்துக்கு ஆதரவாக 18 வாக்குகளும் எதிராக 7 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களும் ஜக்கிய தேசியக் கட்சியின் எதிர்கட்சித்தலைவர் தயகமேகேயும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. இதே நேரம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினரான ஜவாத் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர் இரா துரைரத்தினம் ஆகிய இருவரும் பிரேரணைக்கு எதிராக வாக்களித்தனர். மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் சபையிலிருந்து வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் வெளியேறிச் சென்றார். வாக்கெடுப்பு இன்றிரவு 10.40 மணியளவில் இடம்பெற்றது.

Advertisements

Written by lankamuslim

ஒக்ரோபர் 19, 2010 at 5:18 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

உள்ளூராட்சி தேர்தல்கள் திருத்தச் சட்டமூலம் கிழக்கின் அங்கீகாரம் பெறுமா ?

leave a comment »

தொகுப்பு: S.M.அப்துல்லாஹ்

உள்ளூராட்சி சபைகள் தேர்தல்கள் திருத்தச் சட்டமூலம் இன்று கிழக்கு மாகாணத்தின் வாக்கெடுப்புக்கு வருகின்றது அரசாங்க வர்த்தமானியில் வெளியான உள்ளூராட்சி சபைகள் தேர்தல்கள் திருத்தச் சட்டமூலம்  அவசர அவசரமாக அமைச்சரவையின் அங்கீகாரம் பெற்று வர்த்தமானியில் வெளியாகியுள்ளது எனிலும் அமைச்சர்களுக்கும் கூட இதன் முழுமையான உள்ளடக்கம் தெரியாது

என்று முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஹகீம் தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஆண்டு ஜனவரி அல்லது பெப்ரவரி மாதம் அளவில் நடைபெறவுள்ள உள்ளூராட்சிச் சபைத் தேர்தல்களை புதிய ஏற்பாடுகளின் கீழ் நடத்தவும் அரசு தீர்மானித்துள்ளது.

தேர்தல்கள் திருத்தச் சட்டமூலத்தில் சிறுபான்மை இனங்களுக்கும் நாட்டின் ஜனநாயகத்துக்கும் பாதகமான சில அம்சங்களும் சாதகமான சில அம்சங்களும் காணப் படுகின்றமை தெரியவந்துள்ளது என்றும் எனவே அரசாங்கம் உத்தேசித்துள்ளவாறு எதிர்வரும் ஜனவரி அல்லது பெப்ரவரி மாதம் அளவில் விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 19, 2010 at 10:40 முப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

நான்கு தினங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட சிறிய வானொலி நிலையம் முற்றுகை

leave a comment »

கல்பிட்டி பொலிஸ் நிலைய எல்லைகுற்பட்ட பிரதேசத்தில் நான்கு தினங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட சிறிய வானொலி நிலையம் ஒன்றினை தொலைத் தொடர்பு ஆணைக்குழுவின் அனுமதியின்றி நடாத்தப்பட்டதாக கூறி நேற்று பிற்பகல் கல்பிட்டி பொலிசார் முற்றுகையிட்டுள்ளனர்.

சிகரம் எப்எம் எனும் பெயரில் கல்பிட்டி பிரதேசத்திற்கு மாத்திரம் ஒலிபரப்பை மேற்கொண்டு வந்த இந்த வானொலி நிலையம் கல்பிட்டி நகரின் கடை ஒன்றினுள் சேவை நடாத்தப்பட்டுள்ளது. எனிலும் இது பரிச்சாத்த நிலையில் இருந்தது என்றும் தொலைத் தொடர்பு ஆணைக்குழுவின் அனுமதி பெற்று கொள்ளும் முயற்சிகள் நடைப்பெறும் வேளையில் இந்த முற்றுகை இடம்பெற்றுளதாக கல்பிட்டி தகவல்கள் தெரிவிகின்றன நாட்டின் பல பாகங்களில் தொலைத் தொடர்பு ஆணைக்குழுவின் அனுமதியுடன் பல சிறிய வானொலி நிலையங்கள் இயங்கிவருகின்றமை குறிபிடத்தக்கது

Written by lankamuslim

ஒக்ரோபர் 19, 2010 at 9:27 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது