Lankamuslim.org

Archive for ஒக்ரோபர் 18th, 2010

கருப்பு ஒக்டோபர் நினைவாக எமது இணையத்தளத்தில் புதிய பக்கம்

leave a comment »

கருப்பு ஒக்டோபர் 1990 ஆம் ஆண்டு முஸ்லிம்களுக்கு நீண்ட அகதி வாழ்கை ஆரம்பித்த ஆண்டாகும். முஸ்லிம்களின் பாரம்பரிய தாயக பிரதேசங்களான வடகிழக்கிலிருந்து புலிப்பயங்கரவாதிகளால் விரட்டியடிக்கப்பட்டு பல பயங்கர படுகொலைகளை முஸ்லிம்களுக்கு எதிராக புலிகளால் செய்யப்பட்ட ஆண்டாகும். இந்த ஆண்டோடு 20 ஆண்டுகள் பறந்தோடிவிட்டன இந்த மாதத்துடன் 21 ஆம் ஆண்டு ஆரம்பித்து விட்டது.

வடமாகாணத்தின் யாழப்பாணம் மன்னார் முல்லைத்தீவு வவுனியா கிழிநொச்சி ஆகிய ஐந்து மாவட்டங்களிலிருந்தும் சும்மார் ஒரு இலட்சம் வரையான முஸ்லிம்கள் அவர்களின் பாரம்பரிய பிரதேசங்களிலிருந்து புலிகளால் விரட்டியடிக்கப்பட்டார்கள். அவர்களின் அனைத்து அசையும் அசையாச் சொத்துகள் அனைத்தும் புலி பயங்கரவாதத்தால் கொள்ளையிடப்பட்டது விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

ஒக்ரோபர் 18, 2010 at 6:44 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

முஸ்லிம் சமூகத்தை அவமதிக்கும் சிங்களப் பாடல்

leave a comment »

சித்தி மனிலா என்ற பாடல் இராஜ் வீரரத்ன தயாரித்துள்ளார் இராஜ் பெசலா என்ற பிரபல சிங்களப் பாடகர் பாடி வெளிவந்துள்ளது இந்த பாடலின் காட்சிகள் முஸ்லிம்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை பெற்றுவருகின்றது இந்த பாடலின் சில காட்சிகள் மாதம் பிட்டி மஸ்ஜித் பகுதியில் தயாரிக்கப் பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது இந்த பாடல் காதலையும் பாதாள உலக தாதாக்களையும் மையமாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது .

இந்திய தமிழ் நாட்டு சினிமா கூத்தாடிகளின் முஸ்லிம் விரோத படங்களின் பாணியில் தொப்பியும் ஜுப்பாவும் அணிந்த தாதாக்கள் இந்த பாடலில் வளம் வருகின்றனர் இதில் ஒருவர் புர்கா அணிந்த பெண்ணுடன் காதல் கொள்கின்றார் . இதில் புர்கா அணிந்த பெண் அவரின் நடத்தைகள் முஸ்லிமாக நடிக்கும் பெண்ணின் தந்தையாக கட்டப்படும் தகப்பனின் நடத்தைகள், தொப்பியும் ஜுப்பாவும் அணிந்த தாதாக்கள், மஸ்ஜிதில் காதல் காட்சி, அதான் ஒலியை பிரதிபலிக்கும் ஒரு ஒலி என்பன கடும் விமர்சனத்தை தோற்றுவித்துள்ளது இதில் அகில இலங்கை ஜம்மியதுள் உலமா இந்த விடையத்தை கவனத்தில் கொள்ளவேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்படுகின்றது இந்த பாடலில் மொத்தமாக முஸ்லிம்  மற்றும் இஸ்லாமிய அடையாளங்கள் முற்றிலும் தவறாக அடையாளப்படுத்தப்  படுகின்றது

Written by lankamuslim

ஒக்ரோபர் 18, 2010 at 5:25 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

முஸ்லிம்கள் கிழக்கு மாகாணத்தில் பௌத்தர்களின் பூர்விக, புராதன அடையாளங்கை அழிக்கின்றனர் ??

leave a comment »

கிழக்கு மாகாணத்தின் பொத்துவில் அறுகம்பே கடற்கரை பிரதேசத்தில் புத்தர் சிலை ஒன்ரைகொண்ட சிறியபெளத்த விகாரை ஒன்று புதிதாக கட்டப்பட்டுள்ளது இந்த கட்டிடம் சட்டவிரோதமாக நிர்மானிக்கப்படுள்ளதாக கூறி பொத்துவில் பிரதேச போலீஸ் மற்றும் அதிரடிப் படை உதவியுடன் புல் டோசர் கொண்டு கடந்த ஜூலை மாதம் 23 திகதி உடைக்கப்பட்டுள்ளது இதற்கு நீதிமன்ற அனுமதியும் பெற்றுக்கொள்ளப் படுள்ளதாக செய்திகள் தெரிவித்தன

இந்த சம்பவத்தை கிழக்கில் முஸ்லிம் அடிப்படைவாதிகளின் செயல் என்றும் இஸ்லாமிய தீவிரவாதிகள் இந்த பெளத்த விகாரையை பொலிசாரின் உதவியுடன் உடைத்ததாகவும் கிழக்கில் முஸ்லிம் தீவிரவாத சக்திகள் சிங்கள மக்களின் பூர்விக, புராதன நிலங்களை கைபற்றுவதாகவும், அவற்றை அழிப்பதாகவும் கிழக்கில் சிங்கள மக்கள் மத்திலும் இலங்கையின் ஏனைய பகுதிகளிலும் பிரச்சாரங்கள் செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 18, 2010 at 1:06 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மட்டகளப்பு பிரதேசத்தின் முஸ்லிம் காணிகள்

leave a comment »

ஏறாவூர் பற்றுப் பிரதேசத்தில் முஸ்லிம்களுக்குரிய 486 ஏக்கர் காணிகள் மேய்ச்சல் தரைக்கு ஒதுக்கயிருப்பது தொடர்பாக 17 ஆம் திகதி மட்டகளப்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தன் தலைமையில் நடைபெற்ற உயர் மட்ட மகா நாட்டில் இறுதி முடிவு என்று அறிவிக்கபட்டது எனினும் அது பற்றி நேற்று செங்கலடி பிரதேச செயலகத்தில்  நடைபெற்ற இக்கூட்டத்தில் முதலமைச்சர் சந்திரகாந்தன் உரையாற்றுகையில், மேய்ச்சல் தரைக்கு ஒதுக்கப்பட்ட காணிகள் காரணமாக பாதிக்கப்பட்ட முஸ்லிம் விவசாயிகள் சட்டரீதியான ஆவணங்களை முன்வைத்தால் அவர்களுக்கு மாற்று இடங்களில் விவசாயச் செய்கைக்கான காணி வழங்கப்படும்’ என்று கூறியுள்ளார்

கடந்த -11.10.2010-அன்று நடை பெற்ற மட்டகளப்பு மாவட்ட அபிவிருத்தி கமிட்டி கூட்டத்தில் முஸ்லிம்களுக்குரிய காணிகள் மேய்ச்சல் தரைக்கு ஒதுக்கயிருப்பது குறித்தும் மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் விவசாயிகள் தமது சொந்த விவசாய நிலங்களில் விவசாயம் செய்யமுடியாமல் தடுக்கப்படுகின்றனர், விரட்டியடிக்கப்படுகின்றனர். முஸ்லிம்களின் விவசாயம் மற்றும் நிலங்கள் எரிக்கப்படுகின்றன இவைகள் உடனடியாக நிறுத்தப்படல் வேண்டு எனவும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பசீர் சேகுதாவூத் தெரிவித்திருந்தார் இதை தொடர்ந்து விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 18, 2010 at 10:13 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது