Lankamuslim.org

Archive for ஒக்ரோபர் 17th, 2010

2010 கருப்பு ஒக்டோபர் நினைவாக

with one comment

வடமாகாண முஸ்லிம்களில்  புலிகளினால் வெளியேற்றப்பட்டு    20 ஆண்டுகள் பூர்த்தி

முஸ்லிம் மீள் குடியேற்றம் ஓர் ஆய்வு: M. ஷாமில் முஹம்மட்

1990 இல் வட மாகாணத்தின் பூர்விக குடிகளில் ஒன்றான முஸ்லிம்கள் புலிப் பயங்கரவாதத்தால் வெளியேற்றபட்டனர் அவர்களின் அனைத்து அசையும் அசையாச் சொத்துகள் புலி பயங்கரவாதத்தால் கொள்ளையிடப்பட்டது கோடிகணக்கான சொத்துகளின் சொந்தகாரர்கள் சில மணித்தியால அவகாசத்தில் அணைத்தையும் இழந்த அகதிகளாக ஆக்கப்பட்டனர் அன்றில் இருந்து இன்றுவரை வடமாகாண முஸ்லிம்களில் அகதி வாழ்கை 20 ஆண்டுகள் பூர்த்தியான நிலையிலும் விடிவு இன்றி தொடர்கின்றது.

வடக்கில் இருந்து அன்று வட மாகான முஸ்லிம்கள் ஒரு இலட்சதுக்கும் அதிகமான மக்கள் பலவந்தாமாக வெளியேற்ற பட்டனர் இன்று அவர்களின் தொகை இரு மடங்குகளால் அதிகரித்துள்ளது ஒரு கும்பமாக வந்தவர்கள் இன்று மூன்று குடும்பங்களாக , நான்கு குடும்பங்களாக பெருகியுள்ளார்கள் 20 வருடங்களில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது ஆகவே மீள் குடியேற்றம் என்பது அவர்களின் இடங்களை அவர்களுக்கு பெற்று கொடுப் பதுடன் , அவர்களின் மஸ்ஜித்துகளையும், பாடசாலைகளையும் மீள கூரை போட்டு, சுவர்களுக்கு வர்ணம் பூசி கொடுப்பதுடன் முடிந்து விடாது விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

ஒக்ரோபர் 17, 2010 at 12:13 பிப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

கடத்தப்பட்டவரை கண்டுபிடித்து தருமாறு புத்தளத்தில் ஆர்பாட்டம்

leave a comment »

கடந்த பெப்ரவரி 11 ஆம் திகதி பொலன்னறுவையில் வைத்து கடத்தப்பட்ட புத்தளம் சமூக நம்பிக்கை நிதியத்தின் நம்பிக்கையாளரும் முன்னால் கிராம அதிகாரியுமான பட்டானி ராசிக்கை கண்டுபிடித்து தருமாறு கோரி கடந்த வெள்ளிகிழமை மதுரங்குளி சமீரகமவில் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றுள்ளது இவர் கடத்தப்பட்டு 9 மாதங்கள் கடந்துள்ளது .

பிரதேச முஸ்லிம்கள் ஒன்றிணைந்து ஜூம்ஆ தொழுகையின் பின்னர் மஸ்ஜிதுக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். ஆர்ப்பாட்டம் சுமார் 1 மணித்தியாலம் வரை இடம்பெற்றது. இதில் அப்துல்லாஹ் மௌலவி உரையாற்றினார் இவரின் விடுதலைக்காக உழைப்பது மார்க்க கடமை என்றும் அனால் இந்த சம்பவங்களை பயன்படுத்தி எவரும் பிரதேசவாதக் கருத்துகளை கூற முற்படகூடாது என்று தெரிவித்துள்ளார் விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 17, 2010 at 12:03 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

42 குடும்பங்களை மண்முனைப் வடக்கு பிரதேச செயலாளர் வெளியேற்ற அறிவுறுத்தல்

leave a comment »

– அபூ றப்தான் -மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவின் மஞ்சந்தொடுவாய் தெற்கு கிராமத்தின் குவைத் சிட்டி வீட்டுத்திட்டத்திலுள்ள 42 வீடுகளில் வசிக்கும் முஸ்லிம்களை அவ்வீடுகள் அமைந்துள்ள காணி அரச காணி என்பதால் அவ்வீடுகளிலிருந்து வெளியேறுமாறு மன்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி கலாமதி பத்மராஜா கடிதமொன்றின் மூலம் வீட்டுரிமையாளர்களுக்கு அறிவித்துள்ளார்.

இக்கடிதங்கள் குறித்த வீட்டு உரிமையாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன் சிலரின் வீட்டுக்கதவுகளிலும் ஒட்டப்பட்டுள்ளன.இவ்வீட்டுத்திட்டக்காணி அரச காணி என தெரிவித்துள்ள பிரதேச செயலாளர் 1997ம் ஆண்டு 7ம் இலக்க அரச காணிகள் ஆட்சி மீளப்பெறல் சட்ட வெளியேற்றல் அறிவித்தலின் கீழ் இக்கடிதங்கள் இவ்வீட்டின் உரிமையாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார் விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 17, 2010 at 12:02 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அவர்களும் இவர்களும் ஒன்றேயானால் மக்கள் யார்?

leave a comment »

எஸ்.எம்.எம்.பஷீர் -பகுதி மூன்று

நான் எனது கட்டுரையின் இரண்டாம் பாகத்தில் ஹசன் அலி முஸ்லிம் காங்கிரசிலிருந்து விலகி சென்று மஹிந்த அரசுடன் சேர்ந்து அமைச்சுப்பதவிகள் பெற்றவர்களின் தலையில் இருக்கின்ற கிரீடங்கள் முள்கிரீடமாக மாறும் ( ஏசுநாதர் ஞாபகத்துக்கு வந்தால் மன்னிக்கவும்) என்றும் அவர்கள் அமர்ந்திருக்கின்ற கதிரைகள் முகாரி ராகப் பாடலுக்கான ( செம்மாங்குடி சீனிவாச ஐயர் ஞாபகத்துக்கு வந்தால் மன்னிக்கவும்) ஒரு சங்கீதக் கதிரை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

அதன் பின்னர் தான் அரசுடன் முன்னர் இணைந்து வீர வசனம் பேசி வெளியேறினார்கள், பின்னரும் சென்ற தேர்தலில் அதைவிடவும் நீண்ட வீர வசனங்களை மூலைக்கு மூலை முஸ்லிம் கிராமங்களில் மேடையமைத்து முஸ்லிம்களின் அரசியல் அரைவேக்காட்டுத்தனத்தில் நாடாளுமன்ற கதிரைகளை கைப்பற்றி கொண்டவர்கள் மீண்டும் நேர் குத்துக்கரணம் அடித்து இப்போது அதே கதிரையில் புதிய ஜனாதிபதி ஆட்சியில் என்ன கிரீடங்களை அணிந்து கொண்டு மிக விரைவில் எந்த சங்கீதக் கதிரையில் எந்த ராகப் பின்னணியில் குந்தியிருக்க போகிறார்கள் விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 17, 2010 at 12:02 பிப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

சிறைக் கைதிகளில் 16 முதல் 19 வீதம் முஸ்லிம் ??

leave a comment »

சிறைச்சாலைகளில் அதிகரித்துவரும் முஸ்லிம் சிறைக் கைதிகளின் விவகாரம் தொடர்பாக முஸ்லிம் மதத் தலைவர்களுடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தப்படும். இது பற்றி தாம் ஏற்பாடுகளைச் செய்யப் போவதாக புனர்வாழ்வு, சிறைச்சாலைகள் புனரமைப்பு அமைச்சர் டியூ குணசேகர தெரிவித்துள்ளார்.

முஸ்லிம்களின் முழு சனத்தொகை எட்டு வீதம் எனக் கூறப்படுகிறது. ஆனால் சிறைவாசம் அனுபவிக்கும் முஸ்லிம் கைதிகளின் விகிதமோ 16 முதல் 19 வீதம் வரையில் அதிகரித்து இருப்பது குறித்து முஸ்லிம் மதத் தலைவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அமைச்சர் டியூ குணசேகர மேலும் தெரிவித்திருக்கிறார். -தகவல் தினகரன்

Written by lankamuslim

ஒக்ரோபர் 17, 2010 at 9:15 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது