Lankamuslim.org

Archive for ஒக்ரோபர் 16th, 2010

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணா இலங்கை வருகின்றார்

leave a comment »

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணா இலங்கை வருகின்றார் இம்மாத இறுதியில் இலங்கை வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இந்தியாவுக்குச் சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ எல் பீரிசுக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணாவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று இடம்பெற்றது.

இருதரப்பு உறவுகள் குறித்து இதன்போது முக்கிய கவனம் செலுத்தப்பட்டதாக ரொய்டர் செய்திச் சேவை, செய்தி வெளியிட்டுள்ளது. வடமாகாணத்தின் தற்போதைய நிலைமை குறித்து ஆராயும் வகையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை வெளிவிவகார அமைச்சர் ஜீ எல் பீரிசுக்கும் இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திற்குமிடையிலான சந்திப்பொன்று நடைபெறவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது

Advertisements

Written by lankamuslim

ஒக்ரோபர் 16, 2010 at 9:29 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மீனவரைக் கொன்று அட்டகாசம் புரிந்த முதலை மடக்கிப் பிடிப்பு

leave a comment »

காத்தான்குடி பிரதேசத்தில் நீண்ட நாட்களாய் அட்டகாசம் புரிந்து பல உயிர்களைக் காவுகொண்ட இராட்சத முதலையைக் காத்தான்குடி மக்கள் இன்று மதியம் மடக்கிப் பிடித்தனர்.

காத்தான்குடி வாவியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 60 வயது மீனவரைக் கடந்த சனிக்கிழமை இழுத்துச் சென்று உயிரைக்குடித்ததுடன் பல கால் நடைகள் கோழிகளையும் பிடித்து உண்டு வந்தது இந்த முதலை. வீதியில் கட்டி வைக்கப்பட்டுள்ள முதலையைக் காண பெருந்தொகை மக்கள் அங்கு வருகின்றனர்

Written by lankamuslim

ஒக்ரோபர் 16, 2010 at 9:14 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மட்டக்களப்பிலும் ,மாத்தறையிலும், மினுவன்கொடையிலும் மூவர் பலி

leave a comment »

மாத்தறைப் பிரதேசத்தில் இன்று காலை நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த ஒருவர் மீது வானொன்றில் வந்த சிலர் இவர்மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளதாகப் பொலிசாருக்குத் தகவல் கிடைத்துள்ளது.இதேவேளை மினுவன்கொடப் பகுதியில் கனரக வாகனங்களைப் பழுதுபார்க்கும் இடமொன்றின் காவலாளி சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார்.

குறிப்பிட்ட காவலாளியின் சடலம், வாகனங்களைப் பழுதுபார்க்கும் இடத்தினருகிலுள்ள சாக்கடையொன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதேவேளை மட்டக்களப்பு கொக்கொட்டிச் சோலையில் நேற்று இரவு மணியளவில் ஒருவர் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளார். குற்றச் செயல் சம்பவத்துடன் தொடர்புள்ள சந்தேக நபரொருவரைத் தேடி பொலிசார் சென்ற போது பொலிஸாருக்கும் இருவருக்குமிடையில் ஏற்பட்ட கைகலப்பின் போது கொல்லப்பட்டதாக தெரிவிக்க படுகின்றது

Written by lankamuslim

ஒக்ரோபர் 16, 2010 at 11:09 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிர்வரும் 29ம் திகதிவரை விளக்கமறியலில்

leave a comment »

உயர்கல்வி அமைச்சிற்குள் அத்துமீறி நுழைந்து அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட 21 பல்கலைக்கழக மாணவர்கள் கொழும்பு நீதவான் நீதிமன்றில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர் .

பல்கலைக்கழக மாணவர்கள் அத்துமீறி உயர்கல்வி அமைச்சிற்குள் நுழைந்து உயர்கல்வி அமைச்சரின் வாகனத்திற்கு சேதத்தை ஏற்படுத்தி, பொலிஸ் வாகனத்திற்கும் சேதத்தை ஏற்படுத்தியதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதல்களில் சுமார் 2 லட்சம் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் நீதிமன்றில் கூறியுள்ளனர் விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 16, 2010 at 10:51 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

தலவாக்கலையில் வெடிமருந்துகளுடன் ஒருவர் கைது

leave a comment »

தலவாக்கலை பிரதேசத்தில், தகவல் கிடைக்பெற்றதையடுத்து, வெடிப்பொருட்களுடன் சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்என்று செய்திகள் தெரிவிக்கின்றன

சி4 ரக வெடிமருந்துகளும், அரை கிலோ கிராம் கைக்குண்டுகள் ஐந்தும், 1.6 கிலோ கிராம் நிறையுடைய கிளைமோரும் மற்றும் இரு மின் பிறப்பாக்கிகளும் குறித்த நபரிடம் கைப்பற்றப்பட்டுள்ளதாக மத்திய மாகண பிரதி பொலிஸ் அத்தியேட்சகர் பூஜித ஜயசுந்தர தெரிவித்துள்ளார். மேலும் சந்தேக நபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை மத்தியமாகண குற்றப் புலனாய்வுத் துறையினர் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Written by lankamuslim

ஒக்ரோபர் 16, 2010 at 10:44 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது