Lankamuslim.org

Archive for ஒக்ரோபர் 13th, 2010

அக்குறணை வர்த்தக நிலையங்களை அகற்ற மீன்டும் முஸ்தீபு ?

leave a comment »

அக்குறணை நகரத்தில் உள்ள சட்டவிரோதமான கட்டிடங்கள் என்று தெரிவிக்கப்படும் வர்த்தக நிலையங்களை இம் மாதம் 19ஆம் திகதிக்கு முன் மூடிவிட நடவடிக்கை எடுக்குமாறும் 29 ஆம் திகதிக்கு முன் அவைகளை உடைத்து அகற்றி விடுமாறு உரியவர்களுக்கு அறிவித்தல் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்ட திகிதிக்குள் அவற்றை அகற்றத் தவறினால் பாதுகாப்புப் படையினரின் உதவியுடன் அதிகாரிகள் அவற்றை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் பிரதி அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்தார் என்று அக்குறணையில் இருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிகின்றன.

கடந்த சில மாதங்களுக்கு முன்னரும் அக்குறணை பிரதேச செயலகத்தில் பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா தலைமையில் பிரதேசத்தின் சுற்றாடலைப் போணுதல் தொடர்பான கூட்டம் ஒன்றில் இது தொடர்பாக ஆராயப்பட்டது எனினும் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டமை குறிபிடத்தக்கது .

சட்டவிரோதமான கட்டிடங்கள் என்று 382 வர்த்தக நிலையங்கள் அடையாளப் படுத்த பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது ஒருகடைக்கு 50 இலச்சம் என்றாலும் 382 கடைகளுக்கும் 191 கோடி ரூபா நஷ்டம் ஏற்படும் விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

ஒக்ரோபர் 13, 2010 at 7:37 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

புத்தளம் நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் மின்உற்பத்தி டிசம்பரில்

leave a comment »

புத்தளம் மாவட்டம் கற்பிட்டி நுரைச்சோலையில் நிர்மாணிக்கப்பட்டுவரும் அனல்மின் நிலையத்தின் முதற்கட்ட மின்உற்பத்தி எதிர்வரும் டிசம்பர் மாதத்திலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது. முதலாம் கட்டத்தின்கீழ் 300 மெகாவோட் மின்சாரம் நாட்டின் மின்சாரத்துடன் இணைக்கப்படவுள்ளது.

நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின் முதற்கட்டப் பணிகள் தற்போது 95வீதம் நிறைவடைந்துள்ளன. இயந்திரங்களின் மின் உற்பத்தி தொடர்பான பரிசோதனைகள் தற்போது இடம்பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அனல்மின் உற்பத்தி நிலையத்தில் முழுமையான நிர்மாணப் பணிகள் 2012ம் ஆண்டில் நிறைவடையவுள்ளது. அதன்போது, 900 மெகாவோட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றது.

Written by lankamuslim

ஒக்ரோபர் 13, 2010 at 7:32 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பாலியல் துன்புறுத்தல்களின் பின்னணியில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ?

leave a comment »

யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக சூழலில் மாணவிகள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் காரணமாக தற்கொலை முயற்சிகள் என்றுமில்லாவாறு அதிகரித்திருப்பதாக யாழ் அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் எச்சரித்திருக்கின்றார்.

ஏற்கனவே இடம்பெற்ற பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் மற்றும் தற்போது இடம்பெறுகின்ற பாலியல் துன்புறுத்தல்களின் பின்னணியில் பல்கலைக்கழக விரிவுரையாளர்களே உள்ளதாக அவர் குற்றம்சாட்டி இருந்தமை பெரும் பரபரப்பையும் திடுக்கிடுதல்களையும் ஏற்படுத்தியுள்ளது பல மாணவிகள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகவும் ஏற்கனவே தற்கொலை செய்து கொண்ட மாணவிகளின் பின்னணியில் இவ்வாறான பாலியல் துன்புறுத்தல்கள் உள்ளமை கண்டறியப்பட்டிருப்பதாகவும் அது தொடர்பாக குறித்த வைத்திய அதிகாரி தன்னிடம் விபரங்களை வழங்கியிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். நேற்று 11.10.2010 -யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இந்தக் கவலையை வெளியிட்டிருந்தார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன

Written by lankamuslim

ஒக்ரோபர் 13, 2010 at 7:30 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது