Lankamuslim.org

Archive for ஒக்ரோபர் 12th, 2010

30 ஆண்டுகளின் பின்னர் இலங்கை முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு

leave a comment »

30 ஆண்டுகளின் பின்னர் இலங்கை முழுவதும் 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதமளவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. இதற்கு தேவையான ஆரம்பகட்ட ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. வட க்கு கிழக்கில் 30 வருடங்களுக்கு பின்னர் சனத்தொகை கணக்கெடுப்பு நடைபெறுவது விசேட அம்சமாகும் என்று புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டி.பி.பி. சுரஞ்சனா வித்தியாரட்ன தெரிவித்துள்ளார் .

மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிவடைந்து ஒரு மாதத்தில் ஆரம்பகட்ட முடிவுகளை வெளியிட முடியும். அதாவது சனத் தொகை இன மத வயது அடிப்படையில் சனத் தொகை புள்ளிவிபரங்கள் போன்றன வெளியிடப்படும். அதன் பின்னர் கட்டம் கட்டமாக ஏனைய புள்ளிவிபரங்கள் வெளியிடப்படும். கணக்கெடுப்பு முடிவடைந்து ஒரு வருடத்தில் இறுதி முடிவுகள் வெளியிடப்படும். எனவே இந்த வேலைத்திட்டத்தை மிகவும் சிறப்பாக செய்து முடிக்க எதிர்பார்க்கின்றோம் என்று மேலும் அவர் தெரிவித்துள்ளார்

Advertisements

Written by lankamuslim

ஒக்ரோபர் 12, 2010 at 9:39 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

முஸ்லிகள் தமது சொந்த விவசாய நிலங்களில் இருந்து தடுக்கப்படுகின்றனர்- பசீர் சேகுதாவூத்

leave a comment »

MSM. நூர்தீன்-மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் விவசாயிகள் தமது சொந்த விவசாய நிலங்களில் விவசாயம் செய்யமுடியாமல் தடுக்கப்படுகின்றனர், விரட்டியடிக்கப்படுகின்றனர். முஸ்லிம்களின் விவசாயம் மற்றும் நிலங்கள் எரிக்கப்படுகின்றன இவைகள் உடனடியாக நிறுத்தப்படல் வேண்டு என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பசீர் சேகுதாவூத் தெரிவித்தார்.

இன்று(11.10.2010) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுக்கூட்டத்தில் உரையாற்றும் போதே பசீர் சேகுதாவூத் மேற்கண்டவாறு கூறினார்

இங்கு தொடாந்துரையாற்றிய பாராளுமன்ற பசீர் மட்டக்களப்பு மாவட்ட மக்களின் அடிப்படைவ வாழ்வாதாரம் விவசாயமாகும். இதில் தமிழ் முஸ்லிம் என்று பார்க்கவேண்டியதில்லை விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 12, 2010 at 8:58 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

சிறையிலேயே எனக்கு மரணம் ஏற்பட்டாலும் எவரிடமும் மண்டியிட மாட்டேன்

leave a comment »

மரணிக்கும் வரையில் சிறையிலேயே அடைபட்டுக் கிடந்தாலும் செய்யாத குற்றத்துக்காக ஒருபோதும் மண்டியிட்டு மன்னிப்புக் கேட்கமாட்டேன். நான் தைரியமாகவே இருக்கிறேன். எனவே, ஆதரவாளர்களும் அதைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று முன்னாள் இராணுவத் தளபதியான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பிலான வழக்கு விசாரணை கொழும்பு மேல்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. இதில் ஆஜர்படுத்துவதற்கென சரத் பொன்சேகா நேற்று திங்கட்கிழமை வெலிக்கடை சிறையிலிருந்து நீதிமன்றுக்கு அழைத்து வந்த போது நீதிமன்ற வளாகத்தில் வைத்து அங்கு கூடியிருந்த ஆதரவாளர்களை பார்த்து மேற்கண்டவாறு கூறியுள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 12, 2010 at 8:50 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது