Lankamuslim.org

Archive for ஒக்ரோபர் 11th, 2010

யாழ் பிரதி மேயர் பதவி முஸ்லிம் ஒருவருக்கு வழங்கப்படுமா ?

leave a comment »

கடந்த வருடம் நடைபெற்ற யாழ் மாநகர சபை தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்தர கூட்டணியுடன் UPFA இணைந்து போட்டியிட்டு ஈபிடிபி மற்றும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் வெற்றி பெற்றன அந்த தேர்தலில் ஐந்து முஸ்லிம்கள் மாநகர சபை உறுப்பினர்களாக தெரிவானார்கள் இதன்போது ஈபிடிபி மற்றும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் இடையே மேயர் பிரதி மேயர் தொடர்பாக இழுபறி நிலை ஏற்பட்டது.

துணை மேயர் பதவி தமக்கு வழங்கப்பட வேண்டும் என்று அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கோரியது இதன் பிரகாரம் ஒரு வருடம் வரை பிரதி மேயர் பதவியை ஈபிடிபி கொண்டிருக்கும் என்றும், அதன் பின்னர் பிரதி மேயர் பதவி அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உறுப்பினருக்கு வழங்கப்படும் என்று இணக்கப்பாடு காணப்பட்டு டகள்ஸ் தேவானந்தாவுக்கும் அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்றும் கைச்சாத்திடப்பட்டது

இந்த இணக்கப்பாடு தொடர்பாக அகில இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் றிசாத் பதியுதீன் அவர்களிடம் அன்று கேட்கப்பட்டபோது. ஒரு வருடம் வரை பிரதி மேயர் பதவியை ஈபிடிபி கொண்டிருக்கும் என்றும், அதன் பின்னர் பிரதி மேயர் பதவி தமது கட்சியை சேர்ந்த உறுப்பினருக்கு வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார் விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

ஒக்ரோபர் 11, 2010 at 5:57 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அரச காணிகளை மீண்டும் அளவையிடுமாறு ஜனாதிபதி உத்தரவு

leave a comment »

நாடளாவிய ரீதியில் உள்ள அரச காணிகள் அனைத்தையும் மீண்டும் அளவையிடுவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அளவையியல் திணைக்களத்திற்கு அறிவுறுத்தியுள்ளார். வடமேல் மாகாண அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார். இதன் பிரகாரம் குறிப்பாக நகர புறங்களில் உள்ள காணிகள் மீண்டும் அளவை நடவடிக்கைளுக்கு உட்படுத்தப் படலாம் என்று தெரிகின்றது

அளவை நடவடிக்கைளுக்காக திணைக்களத்தில் உள்ள அதிகாரிகள் போதுமானதாக அமையாத பட்சத்தில், தனியார் அளவையியலாளர்களை ஈடுபடுத்திக்கொள்ளுமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த அளவை நடவடிக்கைகள் தொடர்பில் துரிதமாக தமக்கு அறிக்கையொன்றையும் சமர்ப்பிக்குமாறு அவர் பணித்துள்ளார். அரச காணிகள் தனியார் தரப்பினரால் கைப்பற்றப்பட்டுள்ளதனால் மீண்டும் காணி அளவை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Written by lankamuslim

ஒக்ரோபர் 11, 2010 at 3:12 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இஸ்லாமிய இயக்கங்களை பயங்கரவாத அமைப்பாக அடையாளப்படுத்த முயற்சி

leave a comment »

இஸ்லாமிய இயக்கங்கள் மத்தியில் உள்ள கருத்து முரண்பாடுகளை பயன்படுத்தி முஸ்லிம் தவா அமைப்புகளுக்கு தாலிபான் மற்றும் அல் கைதா இயக்க சாயம் பூச நம்மவர்கள் சிலரே முற்படுவது முஸ்லிம் சமுகத்திற்கு பெரும் பாதிப்பினை ஏற்படுத்தும் என அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் அல் ஹாஜ் ஏ. எச் .எம் பௌசி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஜமாஅதே இஸ்லாமி, தவ்ஹீத் ஜமாஅத் ஏன் அகில இலங்கை ஜம்மியத்துல்  உலமாவைக் கூட அல் கைதா மற்றும் தாலிபான் இயக்கம் என கூறி வருகின்றார்கள் இவ்வாறு அநியாயமாக இயக்கங்களைக் காட்டிக் கொடுக்க முற்பட் டுள்ளதால் பெரும்பான்மை மக்கள் மத்தியில் எம் சமூகத்தை பற்றி சந்தேகங்கள் வளர்க்க படுகின்றது விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 11, 2010 at 10:30 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஒட்டமாவடி பிரதேசத்தில் ஆணைக்குழு

leave a comment »

இலங்கையில் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள படிப்பினைகள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான அமர்வு இன்று ஞாயிற்றுகிழமை இரண்டாம் நாள் முஸ்லிம்கள் வாழும் ஓட்டமாவடி பிரதேசத்தில் நடைபெற்றது. ஓட்டமாவடி பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்ற இந்த அமர்வில் சாட்சியமளிப்பதற்கு பெண்கள் உட்பட கணிசமான முஸ்லிம்களும் சில தமிழர்களும் சாட்சியமளித்தனர்.

குறிப்பாக இம்மாவட்டத்தில் காணி தொடர்பாக தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் தொடர்பாக தாம் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவே முஸ்லிம்கள் அமைப்பு ரீதியாகவும், தனிப்பட்ட ரீதியாகவும் தமது சாட்சியங்களில் குறிப்பிட்டிருந்தனர் விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 11, 2010 at 10:05 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மல்வானை அல்முபராக் தேசிய கல்லூரியில் ஆசிரியர் பற்றாக்குறை

leave a comment »

கம்பஹா மாவட்டத்தில் உள்ள ஒரே முஸ்லிம் தேசிய பாடசாலையான மல்வானை அல்முபாரக் தேசிய கல்லூரியில் ஆசிரியர் பற்றாக் குறை தொடர்வதாகவும் இதனால் பாடசாலையின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப் பட்டிருப்பதாகவும் பாடசாலை உயர்தர வகுப்பு மாணவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

இது தொடர்பாக பாடசாலை மாணவன் ஒருவர் கூறுகையில் எமது பாடசாலையில் நீண்ட காலமாக ஆசிரியர் பற்றாக்குறை தொடர்ந்து வருகின்றது இது மட்டுமின்றி ஒரு நாளையில் கற்பிக்கப்படுவதோ மூன்று தொடக்கம் ஐந்து வரையான பாடங்களே இதனால் மாணவர்களின் கல்வித் தரம் குறைவடைந்து வருகின்றது. இது எமது எதிர் காலத்தை கேள்விக்குறியாக்கும் விடயமாகும்” எனத் தெரிவித்தார் விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 11, 2010 at 10:00 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

யாழ்ப்பாணத்தில் 30 வருடங்களின் பின் முஸ்லிம் கலை நிகழ்ச்சி ஆனால்

leave a comment »

யாழ்ப்பாணம் கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் முஸ்லிம் மஸ்லிஸ் ஏற்பாடு செய்த முஸ்லிம் கலை விழா கலாசாலையில் இடம்பெற்றுள்ளது . இந்நிகழ்வில் அதிதிகளாக கைத்தொழில் வர்த்தக அபிவிருத்தி அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாறூக் யாழ்ப்பாண அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் அமீன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வின் போது ஆசிரிய மாணவி சுஜானா எழுதிய செதுக்கப்படாத சிற்பங்கள் கவிதைத் தொகுதி ஒன்றும் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது . இங்கு மாணவ ஆசிரியர்களின் வில்லுப்பாட்டு, நடனம், பாடல், நாடகம் உட்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. அத்துடன் இதன்போது அதிதிகளுடன், கலாசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டனர். 30 வருடங்களின் பின்னர் யாழ்பாணத்தில் முஸ்லிம் கலை விழா ஒன்று இடம்பெற்றுள்ளது

இது பற்றி கருத்து தெரிவித்துள்ள எமது யாழ்ப்பாண செய்தியாளர் இங்கு இஸ்லாமியி உடையில் நிகழ்சிகள் நடைபெற்றிருந்தாலும் கோப்பாய் ஆசிரிய கலாசாலை முஸ்லிம் பெண்களுக்கான உடை முழுமையாக இஸ்லாமிய வடிவமைப்பில் இல்லை என்றும் இரு கைகளையும் முழுமையாக மூடாத உடைதான் நடைமுறையில் இருப்பதாகவும்   அந்த உடையுடன் சில கலை நிகழ்வுகளில் முஸ்லிம் யுவதிகள் பங்கு பற்றியதாகவும் தெரிவித்துள்ளார். இங்கு இலங்கையின் பல பாகங்களில் உள்ளவர்கள் கல்வி பயில்கின்றனர் என்பது குறிபிடத்தக்கது

Written by lankamuslim

ஒக்ரோபர் 11, 2010 at 9:40 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது