Lankamuslim.org

Archive for ஒக்ரோபர் 10th, 2010

மாத்தளையில் தப்லீக் ஜமாஅத் இஜ்திமா நடைபெறுகின்றது

leave a comment »

மாத்தளை நகரில் நேற்றும் இன்றும் தப்லீக் ஜமாஅத் அமைப்பு ஏற்பாடு செய்யதுள்ள இஜ்திமா நடைபெற்றுவருகின்றது இந்த இஜ்திமா இரண்டு பகுதியாக நடைபெற்று வருகின்றது நேற்று மாலை 3.30 மணி தொடக்கம் இரவு 8.30 மணிவரை மாத்தளை டவுன் மஸ்ஜித்திலும் இன்று மாலை 3.30 மணி தொடக்கம் இரவு8.30 மணிவரை மாத்தளை நாட்டு பள்ளி -மஸ்ஜித்திலும் நடைபெற்று வருகின்றது நேற்றும் இன்றும் 4000 வரையிலானவர்கள் கலந்து கொண்டுள்ளதாக எமது மாத்தளை தகவல்கள் தெரிவிக்கின்றன

Advertisements

Written by lankamuslim

ஒக்ரோபர் 10, 2010 at 7:50 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கிண்ணியா ஆற்றில் தவறி விழுந்து சிறுவன் வபாத்

leave a comment »

கிண்ணியா, சிறிய ஆறு ஒன்றில் தவறி விழுந்து நான்கு வயது சிறுவனொருவன் வபாத்தாகியுள்ளார். இந்த சம்பவம் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில், பௌசுல் நிஹார் என்ற சிறுவனே வபாத்தாகியுள்ளார். கிண்ணியா சிறிய கட்டு  பாலத்தினூடாகப் பயணித்துக்கொண்டிருக்கும் போதே இந்த சிறுவன் தவறி விழுந்து நீரில் மூழ்கிய நிலையில் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் கிண்ணியா பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கிண்ணியா செய்திகள் தெரிவிக்கின்றன

Written by lankamuslim

ஒக்ரோபர் 10, 2010 at 7:45 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இலங்கையில் இந்திய, சீன பாதுகாப்பு தரப்பினர்

leave a comment »

இலங்கை வந்துள்ள இந்தியாவின் நான்கு யுத்தக் கப்பல்களில் மூன்று நேற்று சனிக்கிழமை காலை பத்தரை மணியளவில் திருகோணமலைத் துறைமுகத்தை வந்தடைந்ததாகப் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன . ஐ.என்.எஸ்.வீர், ஐ.என்.எஸ். ஷர்துல் மற்றும் ஐ.என்.எஸ்.வருணா ஆகிய இந்திய யுத்தக் கப்பல்களே திருகோணமலையை வந்தடைந்துள்ளன.

ஐ.என்.எஸ்.தரங்கிணி என்ற கப்பல் கொழும்புத் துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளது. இலங்கைக் கடற்படையினருடன் பயிற்சிகளை மேற்கொள்ளும் நோக்குடன் இந்திய யுத்தக் கப்பல்கள் வந்துள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் கூறியுள்ளன . நான்கு கப்பல்களிலும் 160 இந்தியக் கடற்படையினர் வந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. எதிர்வரும் 15 ஆம் திகதிவரை இந்திய, இலங்கை கடற்படையினரின் கூட்டுப் பயிற்சி இலங்கைக் கடற்பரப்பில் இடம்பெறுமென்றும் அவ்வட்டாரங்கள் கூறின. இதேவேளை சீனா தேசிய புலனாய்வுத்துறை NIC அதிகாரிகள் கடந்த கிழமை கொழும்பை வந்தடைந்துள்ளனர் என்று அறிய முடிகின்றது இவர்கள் அண்மையில் மட்டகளப்பில் இடம்பெற்ற வெடிமருந்து வெடிப்பு தொடர்பாக ஆய்வுகளை மேற்கொள்வதாக தெரியவருகின்றது

Written by lankamuslim

ஒக்ரோபர் 10, 2010 at 7:22 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

யாழ் பெரிய மொஹிதீன் மஸ்ஜித் 20ஆண்டுகளின் பின்னர் வழமைக்கு திரும்பியுள்ளது

leave a comment »

யாழ்ப்பாண மானிப்பாய் வீதியில் அமைந்துள்ள பெரிய மொஹிதீன் மஸ்ஜித் என்று அழைக்கப்படும் ஜும்மாஹ் மஸ்ஜித் கடந்த வெள்ளிகிழமை 8 ஆம் திகதி 20ஆண்டுகளின் பின்னர் தனது முதல் ஜும்மாஹ் தொழுகையை மீண்டும் ஆரம்பித்துள்ளது ஐந்து வேலை தொழுகை உட்பட அனைத்து மஸ்ஜிதின் நடவடிக்கைகளும் வழமைக்கு கொண்டுவர பெரிய மொஹிதீன் மஸ்ஜித்தின் நிர்வாக சபை ஏற்பாடுகளை செய்துவருகின்றது

1990 ஆம் ஆண்டில் யாழ்ப்பாண முஸ்லிம்களின் அனைத்து அசையும் அசையாத சொத்துகளையும் கொள்ளையிட்ட புலிகள் பலவந்தமாக முஸ்லிம்களை ஆயுத முனையில் வெளியேற்றினர் அதுவரையும் யாழ்ப்பாண குடாநாட்டில் 20 கும் அதிகமான மஸ்ஜிதுகள் இயங்கிவந்தன கடந்த 19 வருடங்களாக கைவிடப்பட்டிருந்த மஸ்ஜிதுகள் கடந்த இரு வருடங்களாக ஒன்றன் பின் ஒன்றாக இயங்க ஆரம்பித்து வருகின்றது தற்போது , டவுன் மஸ்ஜித் Town Mosque, கே ,கே வீதி மஸ்ஜித் , முஹமதியா மஸ்ஜித் , யாழ் பெரிய மஸ்ஜித் Grand Mosque, பெரிய மொஹிதீன் மஸ்ஜித் விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 10, 2010 at 8:47 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இணக்கபுள்ளிகளும் இனச்சமன்பாடும் : யாழ் முஸ்லிம்களின் அரசியல் அனுபவங்கள்

leave a comment »

எஸ்.எம்.எம்.பஷீர்

மு.கார்த்திகேசன் மறைந்த 33வது ஆண்டு நினைவையொட்டி “கம்யூனிஸ்ட் கார்த்திகேசன் – நகைச்சுவை – ஆளுமை – தீர்க்கதரிசனம்”என்ற நூல் பற்றிய ஆய்வரங்கு இன்று கொழும்பில் நடைபெறும் வேளையில் யாழ் முஸ்லிம் சமூகம் புலிகளின் இன வெறியின் பால் வெளியேற்றப்பட்டு மீண்டும் அங்கு சென்று தமது அரசியல் அந்தஸ்தினை பெற்று மீண்டும் வாழும் வாய்ய்பு ஏற்பட்டுள்ள நிலையில் இன வேறுபாடற்று திரிகரண சுத்தியுடன் நேர்மையான அரசியல் செய்து ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக முஸ்லிம் மக்களின் தோழனாக வாழ்ந்து மறைந்த கம்முனிஸ்ட் கார்த்திகேசு அவர்களின் இனங்களுக்கிடையிலான சமன்பாட்டினை நினைவில் கொண்டு யாழ் முஸ்லிம் அரசியல் பற்றிய ஒரு சிறு குறிப்பு இது.

கமுனிஸ்ட் காரத்திகேசு என அறியப்பட்ட கார்த்திகேசு ஆசிரியர் சட்டத்தரணி சுல்தானை யாழ் நகரபிதாவாக்க அரும் பாடுபட்டார். முதன் முதலில் 1955ல் ஓரு முஸ்லிம் யாழ்மகனை மாநகரசபையில் நகரபிதாவாக கொன்டுவந்த பெருமை அவரையே சாரும். சுல்தான் அகில இலங்கை நகர பிதாக்களுக்கான மாநாடு கொழும்பில் நடைபெற்றபோது அம்மாநாட்டில் உத்தியோக மொழியாக சிங்களம் மாற்றப்பட வேண்டும் என்ற விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 10, 2010 at 8:32 முப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

கொழும்பில் அப்புறப்படுத்தப்படும் குடும்பங்களுக்கு வீடுகள்

leave a comment »

கொழும்பு நகரிலிருந்து 65 ஆயிரம் குடும்பங்களை அப்புறப்படுத்துவதற்கு பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது இதன் பிரகாரம் இந்த குடும்பங்களுக்கு பாதுகாப்பு அமைச்சு தொடர்மாடி வீடுகளை அமைத்து கொடுக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது இந்த தொடர்மாடி வீட்டு திட்டம் இலங்கை வங்கியின் 10 பில்லியன் கடன் உதவியுடன் நிர்மாணிக்கப்படவுள்ளது ஒரு குடும்பத்துக்கான வீடு ஒன்றை

நிர்மானிக்க 25 இலட்சம் வரை செலவாகும் என்றும் இந்த குடும்பங்கள் தற்போது இருக்கும் காணிகள் நாட்டின் அபிவிருதிக்கு பயன்படுத்தப் படும் என்றும் அதனால் கிடைக்கும் வருமானம் இலங்கை வங்கிக்கு திருப்பி செலுத்தபடும் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபாய தெரிவித்துள்ளார் ஆனால்விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 10, 2010 at 8:31 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

முதலாவது ஹஜ் குழு 17ல் பயணமாகவுள்ளது

leave a comment »

இம்முறை  ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்கான முதலாவது ஹஜ் குழு இலங்கையில் இருந்து எதிர்வரும் 17 ஆம் திகதி பயணமாகவுள்ளது . இலங்கையில் 5800 பேருக்கு மட்டும் ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்கான அனுமதி சவுதி வழங்கியுள்ளது, பயணமாகவுள்ளது முதலாவது ஹஜ் குழுவில் சுமார் 300 பேர் உள்ளதாக முஸ்லிம் சமய கலாசாரத் திணைக்களப் பணிப்பாளர் வை. எல். எம். நவவி தெரிவித்துள்ளார்

ஹஜ் குழுத் தலைவரும் மேல் மாகாண ஆளுநருமான அலவி மௌலானா தலைமையில் முதலாவது ஹாஜிகள் குழுவை வழியனுப்பும் நிகழ்வு இடம்பெவுள்ளது இதேவேளை ஹாஜிகளின் நலன்களைக் கவனிப்பதற்காக திணைக்கள அதிகாரிகள் 4 பேரும் 6 மருத்துவர்களும் பயணமாக உள்ளதாக பணிப்பாளர் குறிப்பிட் டுள்ளார்

Written by lankamuslim

ஒக்ரோபர் 10, 2010 at 8:21 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது