Lankamuslim.org

One World One Ummah

Archive for ஒக்ரோபர் 9th, 2010

ஒரு தாயையும் அவரின் 2 பிள்ளைகளையும் காணவில்லை ?

leave a comment »

கல்முனை நற்பிட்டிமுனை கிராமத்தைச் சேர்ந்த ஒரு தாயையும் அவரின் 2 பிள்ளைகளையும் கடந்த திங்கட்கிழமை முதல் காணவில்லை என கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நற்பிட்டிமுனை ஜும்ஆ மஸ்ஜித் வீதியைச் சேர்ந்த 25 வயதான சீனித்தம்பி நசீரா என்ற தாயையும் அவரது 5 வயதான அஜ்மீர் என்ற மகனையும் 3 வயதான உசைனா என்ற மகளையுமே கடந்த திங்கட்கிழமை மாலை 2.00 மணியிலிருந்து காணவில்லை என அவரது சகோதர் ஒருவர் கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்துள்ளார் என்று செய்திகள் தெரிவிகின்றன இது தொடர்பான அறிவித்தல் கல்முனை பிரதேசத்திலுள்ள சகல மஸ்ஜித்களிலும் அறிவிக்கப்பட்டுள்ளது .இப்பெண்ணின் கணவர் வெளிநாடு ஒன்றில் தொழில் புரிகின்றார்

Advertisements

Written by lankamuslim

ஒக்ரோபர் 9, 2010 at 10:31 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

எமது இணையத்தள நிர்வாக அறிவிப்பு

with one comment

தவிர்க்க முடியாத காரணங்களால் கடந்த சில தினங்களாக  எமது இணையத்தளங்கள் தகவல்களை வழங்குவதில் தாமதங்கள் ஏற்பட்டது மேலும்  வரும் சில தினங்களுக்கு  தகவல் பதிவேற்றங்களில் தாமதங்கள் ஏற்படலாம் என்பதை அறியத் தருகின்றோம் இன்ஷா அல்லாஹ் விரைவில்  வழமைக்கு திரும்பும்

Written by lankamuslim

ஒக்ரோபர் 9, 2010 at 9:49 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது