Lankamuslim.org

One World One Ummah

Archive for ஒக்ரோபர் 8th, 2010

உள்ளூராட்சிமன்ற தேர்தல் திருத்தச் சட்டமூலம் இம்மாதம் பாராளுமன்றம் வரும்

leave a comment »

உள்ளூராட்சிமன்ற தேர்தல் திருத்தச் சட்டமூலத்தை இம்மாத இறுதிக்குள் பாராளுமன்றில் சமர்பிக்கவுள்ளதாக உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் பிரதி அமைச்சர் இந்திக்க பண்டாரநாயக்கத் தெரிவித்துள்ளார். அடுத்த வருட ஆரம்பத்தில் நிச்சயமாக உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடைபெறுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி சபைகள் பலவற்றின் பதவிக்காலம் நிறைவடைந்துள்ள போதிலும் கடந்த காலங்களில் அடுத்தடுத்து தேர்தல் நடைபெற்றமையால் எதிர்வரும் தேர்தலை அடுத்த வருடம்வரை ஒத்திவைத்துள்ளதாக பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்

Advertisements

Written by lankamuslim

ஒக்ரோபர் 8, 2010 at 1:54 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

யாழ்ப்பாணத்தில் 180 சிங்களக் குடும்பங்கள்

leave a comment »

முப்பது வருடங்களின் பின்னர் யாழ்ப்பாணத்தில் மீளக்குடியமர்வதற்கென 180 சிங்களக் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 500 பேர் வருகை தந்துள்ளனர்.நகரில் உள்ள பøழய ரயில் நிலையத்திலும் வேறுபல இடங்களிலும் தற்காலிக மாகத் தங்கி உள்ள இவர்கள் தம்மை நிரந்தர இடம் ஒன்றில் குடியமர்த்துமாறு அரச அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். நிரந்தரமாகக் குடியேறாமல் திரும்பப் போவதில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

1980ஆம் ஆண்டுக்கு முன்னர் இந்தக் குடும்பத்தினர் யாழ்ப்பா ணத்தில் வாழ்ந்த போதும், அவர்களுக்கான நிரந்தர இருப்பிடங்கள் எவையும் இருக்கவில்லை. வாடகை வீடுகளிலேயே தங்கி இருந்துள்ளனர். இவர்களை மீளக்குடியமர்த்துவது தொடர்பில் தம்மிடம் உடனடித் திட்டங்கள் எவையும் இல்லை என்று யாழ். அரச அதிபர் இமெல்டா சுகுமõர் தெரிவித்தார். இவர்களது வருகை குறித்துத் தமக்கு எதுவும் தெரியாது என வடமாகாண ஆளுநரும் தெரிவித்துள்ளார் விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 8, 2010 at 1:14 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

வடக்கில் அபிவிருத்தி திட்டங்களுக்கு இந்திய அடிக்கல்

leave a comment »

உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வரவுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா வடக்கில் இந்திய அரசின் உதவியினால் முன் னெடுக்கப்படவுள்ள பல்வேறு அபிவிருத்தி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவுள்ளார். எதிர்வரும் 29 ஆம் திகதி வட மாகாணத்திற்கு விஜயம் செய்யவுள்ள அவர் வீடமைப்புத் திட்டம், ரயில் பாதைகள் அமைக்கும் வேலைத்திட்ட ங்களுக்காக அடிக்கல் நாட்டவுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி தெரிவித்துள்ளார்

வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறிக்கும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே. காந்திற்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது. யாழ். அரசாங்க அதிபர் காரியாலயத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போதே மேற்படி விடயங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 8, 2010 at 1:02 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது