Lankamuslim.org

One World One Ummah

Archive for ஒக்ரோபர் 6th, 2010

கிழக்கு மாகாணத்துக்கு 212 ஆசிரியர்கள் நியமனம்

leave a comment »

இந்நிலையில் கிழக்கு மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்ளை பூர்த்தி செய்வதற்காக 212 கற்பித்தல் டிப்ளோமா பட்டம் பெற்ற ஆசிரியர்களுக்கு இன்று 06 ஆம் திகதி நியமனம் பெறவுள்ளதாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.நிஸாம் தெரிவித்துள்ளார்

தமிழ்மொழி மூலம் 164 ஆசிரியர்களும், சிங்களமொழி மூலம் 48 ஆசிரியர்களும் மாகாணத்திலுள்ள கஸ்ட அதிகஸ்ட பிரதேச பாடசலைகளுக்கு நியமனம் பெறவுள்ளனர். இவ்வாசிரியர்களில் தமிழ்மொழி மூலமனோர் கல்முனை மாவட்டத்திற்கும், சிங்களமொழி மூலனோர் அம்பறை நகர் பிதேசத்திற்கும் நியமனம் செய்யப்படமாட்டார்கள் என்று தெரிய வருகின்றது இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு இன்று 6 ஆம் திகதி புதன்கிழமை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெறவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார் .

Advertisements

Written by lankamuslim

ஒக்ரோபர் 6, 2010 at 1:00 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மன்னாரில் முஸ்லிம் திணைக்களத்தின் நடமாடும் சேவை

leave a comment »

மன்னார் மாவட்டத்தில் மீள்குடியேற்றம் இடம்பெற்று வரும் கிராமங்களில் முஸ்லிம் திணைக்களத்தின் நடமாடும் சேவையொன்றை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளபடவுள்ளதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாருக் தெரிவித்துள்ளார்

மன்னார், முசலி பிரதேச செயலகப் பிரிவில் உள்ள 22ஆம் இலக்க கிராம உத்தியோகஸ்தர் பிரிவில் தற்போது முஸ்லிம்கள் மீள்குடியேறிவருகின்றனர். அங்குள்ள மஸ்ஜிதுகள் புனர் நிர்மாணம் செய்யவது இன்றியமையாதது அந்த மஸ்ஜிதுகளை முஸ்லிம் சமய திணைக்களத்தில் பதிவு செய்வதுடன், ஏனைய பிரச்சினைகளுக்கான தீர்வை பெற்றுக் கொடுப்பது குறித்தும் இந்த நடமாடும் சேவை பயன்படுத்தட்ட என்றும் கூறியுள்ளார் மன்னார் மாவட்டத்தில் நூறு வரையிலான மஸ்ஜிதுகள் இன்றும் கைவிடப்பட்ட நிலையில் இருப்பது குறிபிடத்தக்கது

Written by lankamuslim

ஒக்ரோபர் 6, 2010 at 11:22 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

புத்தளம் பாடசாலைகளுக்கு இந்தியாவின் பஸ்கள்

leave a comment »

புத்தளத்துக்கு நேற்று முன்தினம் விஜயம் இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே.காந்தி புத்தள புறநகர் பகுதியில் அமைந்துள்ள இரு பாடசாலைகளுக்கு 40 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு பஸ் வண்டிகளை அன்பளிப்பாக வழங்கியுள்ளார் இதன் போது வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சர் றிசாத் பதியுதீன் , பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர் இங்கு உரையாற்றிய இந்திய உயர் ஸ்தானிகர் இந்திய இலங்கைக்கு எந்த வகையான உதவிகளையும் வழங்க தயாராக இருப்தாக தெரிவித்துள்ளார் அதேவேளை அண்மையில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்த இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே.காந்தி மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலைக்கும் பஸ்வண்டி ஒன்றை வழங்கியுள்ளார்

Written by lankamuslim

ஒக்ரோபர் 6, 2010 at 10:47 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது