Lankamuslim.org

One World One Ummah

Archive for ஒக்ரோபர் 5th, 2010

சவூதி அரேபியா தடை இலங்கை அரசு மறுப்பு

leave a comment »

சவூதி அரேபிய செய்திப் பத்திரிகையில் சவூதி அரேபிய அரசு இலங்கையில் இருந்து வேலையாளர்களை சேர்த்துக் கொள்வதனை நிறுத்திக் கொண்டதென வெளியிட்ட அறிக்கைக்கு இலங்கை அரசாங்கம் முற்றாக மறுப்புத் தெரிவித்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன

Advertisements

Written by lankamuslim

ஒக்ரோபர் 5, 2010 at 12:23 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இலங்கை முஸ்லிம்கள் மத்தியிலும் சமூக விரோத செயல்கள் அதிகரித்துள்ளதா ?

leave a comment »

சம்மாந்துறை, நெய்னாகாடு பகுதியில் அழுகிய நிலையில் கடந்த புதன்கிழமை கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், குறித்த பெண்ணை படுகொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் சம்மாந்துறையைச் சேர்ந்த இருவரை கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்ததாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

கொலை செய்யப்பட்ட பெண் சம்மாந்துறை கீச்செட் ஒழுங்கையைச் சேர்ந்த சுறைனா என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பெண்ணின் கழுத்தை துணியினால் நெரித்து கொலை செய்த பின்னர் அவரின் 2 வயது குழந்தையின் வாயில் துணியை அடைத்து படுகொலை செய்து ஆற்றில் போட்டதாக விசாரணைகளின் போது சந்தேகநபர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர் விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 5, 2010 at 11:28 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இலங்கை பணியாளர்களுக்கு சவூதி அரேபியா தடை ?

leave a comment »

இலங்கைப் பணியாளர்களை பணிக்கமர்த்துவதைத் தடைச் செய்ய சவூதி அரேபியா அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அந்நாட்டுப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.சவூதி அரேபிய வர்த்தமானியில் இது குறித்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனங்கள் புதிதாக எந்த ஒரு இலங்கையரையும் வேலைக்கமர்த்தும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடக் கூடாது என அரபு இராச்சியத்தின் வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. அரபு இராச்சியத்தின் இலங்கைத் தொழிலாளர் ஒன்றியம், இலங்கைத் தொழில் அலுவலகம் என்பவற்றுக்கு இடையில் நிலவும் முரண்பாடு காரணமாக இந்நிலை உருவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Written by lankamuslim

ஒக்ரோபர் 5, 2010 at 10:52 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இலங்கை இந்திய கூட்டு ரோந்து

leave a comment »

பாக்கு நீரிணையிலும் மன்னார் குடாவிலும் இந்திய கடலோரக் காவற் படை கூட்டு தொடர்பாடல் ரோந்து நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. பிராந்தியத்தில் அமைதியை பேணுவதற்காக இந்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக எக்ஸ்பிரஸ் செய்திச் சேவை கடந்த திங்கட்கிழமை தெரிவித்தது.

சென்னையில் சில மாதங்களுக்கு முன்னர் இலங்கைக் கடற்படையுடன் கூட்டு ரோந்தை மேற்கொள்வதற்கான சாத்தியம் குறித்து உயர் மட்ட கலந்தாலோசனை இடம்பெற்றிருந்தது. இந்தச் சந்திப்பை தொடர்ந்து இலங்கைக் கடற்படையுடன் கூட்டு தொடர்பாடல் ரோந்து நடவடிக்கைகளை இந்திய கடலோரக் காவற் படை ஆரம்பித்திருக்கிறது விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 5, 2010 at 10:37 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

வீசா முடிந்தும் தங்கியிருந்த பங்களாதேஷ் பிரஜைகள் கைது

leave a comment »

கண்டி மாவட்டத்தில் பேராதெனியாவை அண்மித்த பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றில் வீசா முடிவடைந்த பின்னரும்   தங்கியிருந்ததாகக் கூறப்படும் பங்களாதேஷ் பிரஜைகள் 10 பேரை கண்டி பொலிஸார் நேற்று  கைது செய்துள்ளனர்.

கண்டி பிரதேசத்தில் வீடு ஒன்றில் இவர்கள் தங்கியிருந்ததாக பொலீஸார் கூறுகின்றனர். கைது செய்யப்பட்ட 10 பங்களாதேஷ் பிரஜைகளிடம்     பொலிஸார்  விசாரணை மேற்கொண்ட பின்னர்  இவர்களை  கண்டி பிரதம நீதவான் மன்றில் ஆஜர் செய்யவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றது

Written by lankamuslim

ஒக்ரோபர் 5, 2010 at 10:20 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது