Lankamuslim.org

Archive for ஒக்ரோபர் 2nd, 2010

அக்குறணையில் வாகன விபத்து: 18 வயது மாணவன் வபாத்

leave a comment »

அக்குறணையில் இன்று காலை 2.10.2010 இடம் பெற்ற மோட்டார் சைக்கிள் – பஸ் மோதலில் அக்குறணை அல் அஸ்ஹர் தேசிய கல்லூரி உயர் வகுப்பில் விஞ்ஞான பிரிவில் கல்வி கற்கும் 18 வயதுடைய முஹம்மத் சஹ்றான் என்ற மாணவன் பஸ்சின் சில்லுகளுகுள் சிக்குண்டு ஸ்தலத்தில் வபாத்தானார் இதில் மற்றொரு மாணவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் வபாத்தான மாணவர்  அக்குறணை அல் அஸ்ஹர் தேசிய கல்லூரியின் ஆசிரியை வஸ்லுன் பீ பீ யின் சிரேஷ்ட புதல்வர் ஆவார் கண்டி – மாத்தளை பிரதான வீதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது அக்குறணை அண்மைகாலமாக மிக மோசமான விபத்துகள் அதிகரித்து வருகின்றமை குறிபிடத்தக்கது

Advertisements

Written by lankamuslim

ஒக்ரோபர் 2, 2010 at 8:02 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அக்குறணையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் 20 கோடி ரூபா நட்டம்

leave a comment »

நாட்டில் கடந்த சில நாட்களாக தொடரும் அடைமழை காரணமாக நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் வெள்ள அபாயம் நிலவி வருகின்றது முக்கிய வர்த்தக நகரான அக்குறணையில் நேற்று இரவு ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் 20 கோடி ரூபா வரை நட்டமேற்பட்டுள்ளதாக உத்தேச மதிப் பீடுகள் தெவிக்கின்றன. கண்டி மாத்தளை பிரதான வீதியில் அக்குறணை துனுவில சந்தியை அண்மித்த பகுதிகளில் இந்த நட்டம் அதிகமாகவுள்ளது. இப் பகுதியினூடாகப் பாயும் பிங்கா ஓயா ஆறு கட்டுக் கடங்காது வீதியிற் புகுந்ததினால் வர்த்தகக் கடைகளும் ஏனைய நிறுவனங்களும் பலத்த சேதத்திற்குள்ளாகின விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 2, 2010 at 7:42 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது