Lankamuslim.org

Archive for ஒக்ரோபர் 1st, 2010

நீதி செத்துப் போனது- பாபர் மஸ்ஜித் தீர்ப்பு தொடர்பாக TNTJ அறிக்கை!

leave a comment »

பாபர் மசூதி தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பின் மூலம் நீதியை சாகடித்து ஆழ குழிதோண்டி புதைத்திருக்கிறது. எந்த விதமான சட்ட விதிகளையும் பின்பற்றாமல் கட்டப்பஞ்சாயத்து பாணியில் இத் தீர்ப்பு அமைந்திருக்கிறது. ஒரு இடம் யாருக்கு உரியது என்பதை முடிவு செய்ய அந்த இடத்திற்கான ஆவணத்தையும், அனுபோகத்தையும் மட்டுமே அடிப்படையாகக் கொண்டு தீர்ப்பளிக்க வேண்டும் என்பதுதான் இந்தியாவிலும், உலகம் முழுவதும் உள்ள சிவில் சட்டமாகும்.

ஆவணத்தின்படியும், அனுபோக பாத்தியதையின் அடிப்படையில் அந்த இடம் முஸ்லிம்களுக்கு உரியது என்பது உலகம் அறிந்த உண்மை. பள்ளிவாசலில் 1949ல் சிலை வைத்ததும், 1992ல் பாபர் மசூதியை இடித்து தள்ளியதையும் உலகம் பார்த்துக் கொண்டிருந்ததால் இந்த தீர்ப்பை அறியும் உலக மக்கள் இந்தியாவில் அறவே நீதி இல்லை; சிறுபான்மை மக்களுக்கு உரிமை இல்லை என்ற முடிவுக்கு வருவார்கள் விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

ஒக்ரோபர் 1, 2010 at 11:04 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கடவுச்சீட்டில் இன்று முதல் மாற்றம்

leave a comment »

இலங்கைக் கடவுச்சீட்டில் இன்று முதல் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி A மற்றும் N என்ற தொடர் இலக்கங்கள் கொண்ட கடவுச் சீட்டுக்களைப் பயன்படுத்துபவர்கள் மீண்டும் புதிய கடவுச்சீட்டைப் பெற வேண்டுமென திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

இதற்கு விண்ணப்பிக்க புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதுடன், குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தில் அதனைப் பெற்றுக்கொள்ள முடியும். A மற்றும் N தொடர் இலக்கம் கொண்ட கடவுச் சீட்டு வைத்திருப்பவர்கள் இரண்டு புகைப்படங்கள் கடவுச் சீட்டின் பிரதி என்பவற்றுடன் ஒரு பக்கத்தையுடைய விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து கையளித்தால் வேண்டும் விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 1, 2010 at 10:49 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது