Lankamuslim.org

Archive for ஒக்ரோபர் 2010

அக்குறணை நகரில் கட்டிடங்களை அகற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது

leave a comment »

இணைப்பு 2

அக்குறணை நகரில் சட்ட விரோத கட்டிடங்கள் என்று அடையாளப்படுத்தப்பட்ட நிர்மாணங்களை உடைத்து அகற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளது என்று எமது தெரிவிக்கின்றார் தற்போது இந்த நடவடிக்கை மீண்டும் மேற் கொள்ள நகரை அண்மித்துப் பாயும் ‘பிங்காஒயா’ என்று அழைக்கப்படும் ஆறு பெருக்கெடுப்பதே காரணம் எனவும் அது பெருக்கெடுப்பதற்கு சட்ட விரோத கட்டிடங்களே காரணம் என்றும் இனம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் படுகின்றது

சுற்றாடத்துறை பிரதி அமைச்சர் பைஸர் முஸ்தபா எடுத்த முயற்சியின் பலனாக பொது மக்களுக்கு குறைந்த நஷ்டங்கள் உண்டாகும் விதத்தில் கட்டிடங்களை உடைப்பதாக அமைச்சரின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

ஒக்ரோபர் 31, 2010 at 6:59 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

தமிழ் முஸ்லிம் உறவு பற்றி லண்டனில் கலந்துரையாடல்

leave a comment »

Sri Lanka Democracy Forum (SLDF) மற்றும் The Sri Lanka Islamic Forum‐UK (SLIF‐UK) ஆகிய லண்டனில் இயங்கும் அமைப்புகள் இணைந்து ‘வடமாகாண முஸ்லிம் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு 20 ஆண்டுகளின் பின்னர் தமிழ் முஸ்லிம் உறவு’ என்ற தலைப்பில் கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.

இதன் பிரதான பேச்சாளராக இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் தலைவர் ஹஜ்ஜுள் அக்கபர் மற்றும் பேச்சாளர்களாக ரிசா எஹிய, ராஜேஷ்குமார் ,ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர் இந்த கலந்துரையாடல் நஜா முஹமட் தலைமையில் நடைபெற்றுள்ளது என்று எமது லண்டன் செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார் எனினும் வடமாகாண முஸ்லிகள் தொடர்பான இந்த நிகழ்வில் வடமாகான முஸ்லிம்கள் பிரதான எந்த பாத்திரத்தையும் வகிக்க வில்லை என்று விமர்சிக்க பட்டதாக மேலும் அவர் தெரிவித்துள்ளார்

சமாதானம, புரிந்துணர்வு, பொருளாதார மேம்பாடு, அரசியல் தீர்வு ஆகியவற்றை முன்னெடுக்க சமூகங்களிடையே சிதைந்துபோன சமூக உறவுகளை கட்டியெழுப்பல் அவசியம். இலங்கையை இன்று எதிர்கொள்ளும் ஜனநாயகம, நீதி, சிறுபான்மை மக்களின் உரிமைகள் போன்ற அடிப்படை அரசியல் பிரச்சினைகளை எதிர்கொள்ள இனங்களுக்கான உறவுகள் கட்டியெழுப்பப்படுவது அவசியம் என்ற எண்ணக் கருவை சுமந்ததாக இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது

Written by lankamuslim

ஒக்ரோபர் 31, 2010 at 12:23 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அவர்களும் இவர்களும் ஒன்றேயானால் மக்கள் யார்?

leave a comment »

எஸ்.எம்.எம்.பஷீர்- பாகம் நான்கு

கிழக்கு மாகாணத்திலே தமிழர் இயக்கங்கள் முளைவிட்டு கிளைவிட்டு வளர்ந்த காலங்களில் அரசியல் செய்து கட்சி உருவாக்கிய அஸ்ரப் தான் உருவாக்கிய கட்சியை ஒரு இயக்கம் என்று குறிப்பிடவில்லை ,”இயக்கம்” என்ற சொல்லே அவருக்கு அலேர்ஜியாக (Allergy) இருந்தது. ஆனால் ஹக்கீமுக்கு தனது கட்சியை இயக்கம் என்று சொல்லி உணர்வு வலுச்சேர்ப்பதில் ஒரு அலாதி பிரியம் இருந்து வருகிறது. அடிக்கடி தாம் ஒரு இயக்கத்தின் தலைவர் என்று முஸ்லிம் காங்கிரசை குறிப்பிட்டுள்ளார். (இலங்கையில் தமிழர் இயக்கங்களை விடுவோம் மாறாக இயக்கத்தலைவர் என்ற வகையில் பாலஸ்தீன ஹமாஸ் அல்பாதா இயக்கம் ஞாபகத்துக்கு வந்தால் மன்னிக்கவும்)

“முஸ்லிம் சமுதாயத்தின் தன்மானத்திற்கு ஆப்பு வைத்த இந்த நபர்கள் இவ்வளவு காலமும் முஸ்லிம் சமுதாயத்துக்கு செய்ய முடியாது போனவற்றை தற்போது ஆட்டம் கண்டுள்ள அரசியல் சூழ் நிலையில் எவ்வாறு `சாதிக்க’ப் போகின்றார்கள்? இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 31, 2010 at 12:02 பிப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

சுற்றுல்லா பயணிகள் போர்வையில் தங்கியிருந்த 200 பேர் கைது

leave a comment »

சுற்றுல்லா பயணிகள் என்ற போர்வையில் விஸாபெற்று இலங்கைக்குள் பிரவேசித்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகத் தெரிவித்து 200 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.இந்தியா, சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் விசேட அறிவுறுத்தலின் பேரில் விசேட குழுவொன்று நாடு முழுவதும் சோதனை மேற்கொண் டது.

இந்தியாவில் இருந்து வந்து வடக்கு கிழக்கில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்ட 74 பேரையும் இந்த விசேட குழு கைது செய்துள்ளது விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 31, 2010 at 10:26 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கடத்தப்பட்டுள்ள ராசிக் தொடர்பாக புத்தளம் ஜம்இய்யதுல் உலமா

leave a comment »

புத்தளம் பெரிய பள்ளிவாசல் Grand Mosque மற்றும்  புத்தளம் மாவட்ட ஜம்இய்யதுல் உலமா ஆகியவற்றுடன் இன்னும் பல அமைப்புகள் இணைந்து CTF என்ற நிறுவனத்தின் ஸ்தாபகர்களில் ஒருவரான P.ராசிக் கடத்த பட்டுள்ளமை தொடர்பாக புத்தளம் வாழ் மக்களை அவரை மீட்டெடுக்க ஒன்றிணையுமாறு கோரும் துண்டுப் பிரசுரம் ஒன்று நேற்று புத்தளத்தில் விநியோகிக்க பட்டுள்ளது      அந்த   துண்டு பிரசுரம் இங்கு முழுமையாக இணைக்கப்படுகின்றது

கடத்தப்பட்டுள்ள சமூகநல ஆர்வலர் P.ராசிக் அவர்களை மீட்டெடுக்க ஒன்றிணைவோம்! -அன்புள்ள பொதுமக்களே! அஸ்ஸலாமு அலைக்கும்.
நாங்கள் முஸ்லிம்கள். சர்வ சக்தனான அல்லாஹ்வையும், அவனது இறுதித் தூதரையும், மறுமை நாளையும் ஆழமாக விசுவாசித்திருப்பவர்கள். இஸ்லாம் கற்றுத் தந்த விழுமியங்களை, பண்பாடுகளை, கலாச்சாரப் பாரம்பரியங்களை, மனிதநேய மாண்புகளை முடிந்த அளவு ஏற்று, விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 30, 2010 at 8:12 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

நவம்பரில் வரவுசெலவுத் திட்டம் சிகரெட், சாராய விலை அதிகரிப்பு

leave a comment »

வரவுசெலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில், பணப்பற்றாக்குறையை எதிர்நோக்கியிருக்கும் திறைசேரியின் வருமானத்தை அதிகரித்துக் கொள்ளும் முயற்சியாக சிகரெட், மதுபானத்திற்கான வரிகளை அரசாங்கம் அதிகரித்திருக்கிறது. சிகரெட்டுக்கான வரி ஒரு ரூபாவாகவும் 100 சதவீத மதுசார செறிவுள்ள மதுபானங்கள் லீற்றர் 50 ரூபாவாலும் வியாழன் நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் வடிசாராயத்தின் சில்லறை விற்பனை விலை போத்தல் 25 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சின் நிதிக்கொள்கைகளுக்கான பணிப்பாளர் நாயகம் எஸ்.ஆர். ஆட்டிகலவை மேற்கோள்காட்டி லங்கா பிஸ்னஸ் ஒன்லைன் இதனைத் தெரிவித்திருக்கிறது. இந்த வரி அதிகரிப்பின் மூலம் இந்த வருடத்துக்கான மேலதிக வரி வருவாய் 400450 மில்லியன் ரூபாவாக இருக்குமென எதிர்பார்க்கப்படுவதாக ஆட்டிகல கூறியுள்ளார் விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 30, 2010 at 1:42 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் பெயர் மாற்றுகின்றதாம் !

leave a comment »

அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் பெயர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என மாற்றப்படவுள்ளதாம் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாருக் தெரிவித்துள்ளார். நாட்டில் உள்ள சகல இன மக்களையும் உள்வாங்கும் நோக்கிலேயே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என பெயர் மாற்றப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்துள்ளார் .

இதன் பிரதான தளமாக வன்னியே உள்ளது எனினும் இடம் பெயர்ந்து புத்தளத்தில் வாழும் முஸ்லிம்களின் வாக்கு வங்கியில் இந்த கட்சி தங்கியுள்ள நிலையில் இடம் பெயர்ந்து புத்தளத்தில் வாழும் முஸ்லிம் களில் பெரும் பாலானவர்கள் புத்தளத்தை தமது நிரந்தரமான வாழ்விடமாக பதிவு செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ள படும் இந்த வேளையில் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தனது வாக்கு வங்கியை பலப்படுத்தும் நோக்குடன் இந்த பெயர் மாற்றத்தை செய்யவுள்ளது என்று எமது புத்தளம் செய்தியாளர் தெரிவிக்கின்றார் விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 29, 2010 at 10:27 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது