Lankamuslim.org

One World One Ummah

புத்தளத்தில் 560 வறிய குடும்பங்களுக்கு வீடுகள் !

with one comment

புத்தளம் மாவட்டத்தின் கல்பிட்டி பிரதேச செயலகப் பிரிவில் வசிக்கும் வறிய குடும்பங்களைச் சேர்ந்த 294 குடும்பங்களுக்கு உலக வங்கி நிதியில் வீடுகள் அமைப்பதற்கான முதல் கட்ட காசோலை வழங்கும் நிகழ்வு நேற்று கல்பிட்டி சியாப் மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது

முன்னால் மீள் குடியேற்ற அமைச்சர் ரிஷாத் பதியுதீன் முயற்சியால் வட மாகாணத்தில் இருந்து புலிகளால் வெளியேற்ற பட்டு  புத்தளத்தில் வசிக்கும் முஸ்லிம்ளுக்கு உலக வங்கியின் உதவியுடன் வீடுகளை நிர்மாணித்து கொடுக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்க பட்டபோது  ,  முன்னால்  பிரதி அமைச்சர் பாயிஸ் ஆகியோரின் முயற்சியால் புத்தளம் தேர்தல் தொகுதியில் வாழ்ந்து வரும் மிகவும் வறிய குடும்பங்களுக்கும் வீடுகளை நிர்மாணித்து வழங்க உலக வங்கி இணங்கியது இதன் பிரகாரம் 600 வீடுகளை புத்தளம் மாவட்டம் புத்தளம் தேர்தல் தொகுதியில் இருக்கும் மிகவும் வறிய குடும்பங்களுக்கு நிர்மாணித்து கொடுக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டது விரிவாக பார்க்க


எனினும்  உலக வங்கியின் இத்திட்டத்திற்கு புத்தளம் தேர்தல் தொகுதியில் 560 வறிய குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு, அவற்றில் புத்தளம், வண்ணாத்திவில்லு, முந்தல் ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 266 குடும்பங்களுக்கான கொடுப்பனவுகள் ஏற்கனவே புத்தளத்தில் இடம்பெற்ற நிகழ்வின் போது மீள்குடியேற்ற அமைச்சர் மில்ரோய் பெர்ணான்டோவினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது .

நேற்று  கல்பிட்டி பிரதேச செயலகப் பிரிவில் வசிக்கும் வறிய குடும்பங்களைச் சேர்ந்த 294 குடும்பங்களுக்கு  வீடுகள் அமைப்பதற்கான முதல் கட்ட காசோலை வழங்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது இப்பிரிவில் வசிக்கும் தமிழ், முஸ்லிம், சிங்களக் குடும்பங்களுக்கு முதற்கட்ட கொடுப்பனவாக ஐம்பதாயிரம் ரூபாய்க்கான காசோலைகள் வழங்கப்பட்டுள்ளன . இந்நிகழ்வில் புத்தளம் மாவட்டச் செயலாளர் எம். கிங்ஸ்லி பெர்ணான்டோ பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பயணாளர்களுக்குக் காசோலைகளை வழங்கி வைத்தார். உலக வங்கியின் வீட்டுத்திட்ட புத்தளம் மாவட்ட அலுவலகத்தின் திட்டப்பணிப்பாளர் எம். யாசின் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது ஒரு வீட்டுக்கு மூன்று இலட்சத்து இருபத்தையாயிரம் ரூபாய் வழங்கப்படுகின்றது.

ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டவர்களை பட்டியலில் இருந்து நீக்கிவிட்டு தமக்கு தேவையான பெரும் பான்மை இனத்தை  சேர்ந்தவர்களை  பட்டியலில் இனைத்து கொள்வதற்கு புத்தள பிரதேசத்தில் அதிகாரமுடைய ஒரு பிரதான அரசியல் வாதி முயன்று வருவதாக தகவல்கள் ஆரம்பத்தில் வெளியானமை குறிபிடத்தக்கது

Advertisements

Written by lankamuslim

செப்ரெம்பர் 18, 2010 இல் 6:11 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஒரு பதில்

Subscribe to comments with RSS.

  1. எங்கட ஊர்லயும் இப்டி குடுத்தா ரொம்ப நல்லம் ஏழைகள் வாடகை வீட்ல இருக்க மாட்டாங்க

    sathath

    மே 14, 2018 at 2:21 முப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: