Lankamuslim.org

Archive for செப்ரெம்பர் 2010

பாபர் மஸ்ஜித் நிலத்தை மூன்றாக பிரிக்க வேண்டுமாம்: உயர் நீதிமன்றம்

with 3 comments

இணைப்பு -2

இந்தியாவின் உத்திரப்பிரதேசத்தில் இருக்கும் அயோத்தியில் பாபர் மஸ்ஜித் இருந்த நிலத்தை மூன்றாக பிரித்து ஒரு பகுதி முஸ்லீம்களுக்கும், இரண்டாவது பகுதி நிர்மோகி அகாரா என்கிற இந்து சாதுக்களின் அமைப்புக்கும், மூன்றாவது பகுதி ராமர் கோவில் கட்டுவதற்கான  அமைக்கப்பட்டுள்ள அமைப்புக்கும்  அளிக்கும்படி அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ கிளை தீர்ப்பளித்திருக்கிறதாம் இதன் படி பாபர் மஸ்ஜித்தின் நிலமான 2,400 சதுர அடி நிலம் மூன்றாகப் பிரிக்கப்படும்.இதின் இரண்டு பகுதி இந்துக்களுக்கும் ஒரு பகுதி முஸ்லிம்களுக்கும் வழங்கப்படுமாம்

நீதிபதிகள் தரம்வீர் சிங் சர்மா, சுதிர் அகர்வால், சிப்கத் உல்லா கான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று இந்தத் தீர்ப்பை வழங்கியது ஒவ்வொரு நீதிபதியும் தனித்தனியே வெவ்வேறு தீர்பை வழங்கியுள்ளனர்  இவர்களில் இரண்டு நீதிபதிகள் இந்த தீர்ப்பை அளித்திருப்பதாகவும் மூன்றாவது நீதிபதி இதற்கு மாறான தீர்ப்பை அளித்திருப்ப தாகவும்  செய்திகள் தெரிவித்திருக்கின்றன.

பாபர் மசூதிக்குள் ராமர் சிலை வைக்கப்பட்டிருக்கும் இடம் தான் ராமர் பிறந்த இடம் என்றும், அந்த இடத்தில் பாபர் மசூதியை கட்டியதாகவும் இரண்டு நீதிபதிகள் தமது தீர்ப்பில் தெரிவித்துள்ளனர். ஆனால் இந்த கருத்துடன் மூன்றாவது நீதிபதி உடன்படவில்லை என்பது குறிபிட தக்கது விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

செப்ரெம்பர் 30, 2010 at 7:16 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

உள்ளூராட்சி உத்தேச மாற்றங்கள் தொடர்பான நகல் இன்றி கலந்துரையாடல் !!

leave a comment »

கலாநிதி அனீஸ்

உள்ளூராட்சித் தேர்தல் முறையின் உத்தேச புதிய மாற்றங்கள் அடங்கிய சட்டமூலம் ஒன்று பாராளுமன்றத்தில் விரைவில் சமர்பிக்கபடவுள்ளது இது தொடர்பாக ஸ்ரீ லங்கா முஸ்லிம்க வுன்சில் கடந்த 28ஆம் திகதி விசேட கலந்துரையாடன் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது இந்த கலந்துரையாடலின் முஸ்லிம் நிறுவனங்கள், இயக்கங்களின் பிரதிநிதிகளையும் ஆர்வமுள்ளவர்களையும் கலந்து கொள்ளுமாறு வேண்டியது.

அதன் படி ஹோட்டல் ரண்முத்துவில் நடைபெற்றது பலரும் கலந்து கொண்டனர் ஆனால் அங்கு உள்ளூராட்சித் முறையின் உத்தேச புதிய மாற்றங்களை கொண்ட உத்தேச நகல் கிடைக்காமையால் அது கொண்டுள்ள சாதக பாதக மாற்றங்கள் விவாதிக்க முடியாத நிலை காணப்பட்டது எனினும் அங்கு உரையாற்றிய ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சில் தலைவர் N.M.அமீன் இதில் சிறுபான்மை மக்களுக்கு பாதகமான விடையங்கள் இருப்தாக அறிய முடியவில்லை என்றும் உள்ளூராட்சித் மாகாண சபை அமைச்சர் அதாவுல்லாஹ் சிறுபான்மையினர் நலன்கள் தொடர்பில் அக்கறையுடன் செயல்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது என்றும் தெரிவித்துள்ளார் விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 30, 2010 at 10:27 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பொன்சேகாவின் நாடாளுமன்ற உறுப்புரிமை பறிக்கப்படும்: கெஹலிய

leave a comment »

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் பாராளுமன்ற உறுப்புரிமை பறிக்கப்படும் என ஊடகத் துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். இன்று பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். இராணுவத்துக்கு அபகீர்த்தி ஏற்படுத்தியமை, கேள்விப் பத்திர நடைமுறைக்குப் புறம்பாக ஆயுதக் கொள்வனவில் ஈடுபட்டமை உட்பட 4 குற்றச்சாட்டுக்கள் பொன்சேகா மீது சுமத்தப்பட்டிருந்தன விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 30, 2010 at 10:20 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இந்த முறை ஹஜ் ஒழுங்குகளை செய்ய 96 முகவர்கள்

leave a comment »

இம்முறை ஹஜ் கடமையை  நிறைவேற்ற மக்காவுக்கு அழைத்துச் செல்ல இலங்கையில் 96 ஹஜ் முகவர்களுக்கு முஸ்லிம் சமய கலாசாரத் திணைக்களம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. மேல் மாகாண ஆளுனர் அலவி மெளலானா தலைமையிலான இக் குழுவில் பிரதி அமைச்சர் பைஸல் முஸ்தபா, முன்னாள் உப மேயர் அஸாத் சாலி, ஆகியோர் உறுப் பினர்களாகச் சேவையாற்றுகின்றனர். ஹஜ் கட்டணமாக ஹஜ் முகவர்கள் ஆகக்கூடியதாக 3,25,000 ரூபா கட்டணத்தை அறவிட வேண்டு மென அரச ஹஜ் குழு தெரிவித்துள்ளது

அங்கீகரிக்கப்பட்டுள்ள 96 ஹஜ் முகவர் நிறுவனங்கள் அல்லாத வேறு முகவர் நிறுவனங்களுடன் செய்யும் தொடர்புகளுக்கு முஸ்லிம், சமய கலாசாரத் திணைக்களம் எவ்வித பொறுப்பும் ஏற்காது என்று திணை க்களப் பணிப்பாளர் வை. எல். எம். நவவி அறிவித்துள்ளார்.

Written by lankamuslim

செப்ரெம்பர் 30, 2010 at 9:01 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

நாளை பாபர் மஸ்ஜித் வழக்கின் தீர்ப்பு

leave a comment »

பாபர் மஸ்ஜித் திர்ப்புக்கு இடைக்கால தடை கோரிய மனு நேற்று உச்ச நீதின்றத்தில் 2 வது முறையாக விசாரனைக்கு வந்தது. இதன்போது இந்த மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் அலஹாபாத் உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பை அளிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது. இதனைத் நாளை 30 ஆம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு பாபர் மஸ்ஜித் வழக்கில் தீர்ப்பு வழங்கப் போவதாக உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது இதை தொடர்ந்து பல சகாப்தங்களா எதிர்பார்க்கப்பட்ட வழக்கின் தீர்ப்பு நாளை வழங்கப்டவுள்ளது

Written by lankamuslim

செப்ரெம்பர் 29, 2010 at 4:59 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கல்முனையில் ஆர்ப்பாட்டம்

leave a comment »

இன்று புதன்கிழமை கல்முனை ஆதார வைத்தியசாலையின் முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது கல்முனை ஆதார வைத்தியசாலை பணிப்பாளரை இடமாற்றக் கோரி இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது. கல்முனை ஆதார வைத்தியசாலையின் விழிப்புணர்வு குழவினரால் நடத்தப்பட்ட இவ் ஆர்ப்பாட்டத்தில், மழையையும் பொருட்படுத்தாமல் பெருமளவிலான பொதுமக்கள் கலந்துகொண்துள்ளனர். காலை 9.30 மணி அளவில் ஆரம்பமாகி இடம்பெற்றுள்ளது. இதேநேரம் இந்த ஆர்ப்பாட்ட இடத்துக்கு வருகை தந்த அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பியசேன, வைத்திய பணிப்பாளருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததாக கூறி அவருக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டுள்ளது

Written by lankamuslim

செப்ரெம்பர் 29, 2010 at 3:00 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அணு உலை அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் பற்றி ஆராய விஞ்ஞானிகள் குழு

leave a comment »

2020ல் இலங்கையின் அணுசக்தி ஊடாக மின்சாரம் உற்பத்தி செய்வதற்காக அணு உலையொன்றை அமைப்பதற்கான சாத்தியக் கூற்றை ஆராய்வதற்காக ஐந்து விஞ்ஞானிகளை உள்ளடக்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டு ள்ளது. இந்தக் குழு ஆறு மாதங்களுக்குள் தனது அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளதோடு அதன் பிரகாரம் அடுத்த கட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் மின்சக்தி எரிசக்தி அமைச்சர் பாடலி சம்பிக ரணவக்க கூறினார்

அண்மையில் வியன்னாவில் நடைபெற்ற உலக அணுசக்தி அதிகார சபையின் வருடாந்த அமர்வு தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 29, 2010 at 10:11 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது