Lankamuslim.org

Archive for ஓகஸ்ட் 2010

ஹஜ் முகவர்களுக்கான அறிவுறுத்தல்கள் அடங்கிய நூல் தயாரிக்கபடுள்ளது

leave a comment »

ஹஜ் முகவர்களுக்கான அறிவுறுத்தல்கள் அடங்கிய நூல் ஒன்று தயாரிக்கபடுள்ளது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரைக்கமைய ஹஜ் முகவர்களுக்கான அறிவுறுத்தல்கள் அடங்கிய நூலை தயாரிப்பதற்காக சட்டத்தரணி என்.எம்.சஹீட்டை ஹஜ் குழு தலைவர் அலவி மெளலானா கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் நியமித்திருந்தார் என்று தகவல்கள் தெரிவிகின்றன

இவ்வழிகாட்டி நூலில் ஹஜ் முகவர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் எவ்வாறு அமைய வேண்டும், ஹஜ் முகவர்களாக செயற்படுவதற்கு எவ்வாறான தகுதிகளைக் கொண்டிருக்க வேண்டும், ஹஜ் விவாகாரம் தொடர்பில் ஹஜ் குழு மற்றும் முஸ்லிம் சமய விவகார திணைக்களம் எவ்வாறு செயற்பாட வேண்டும்விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

ஓகஸ்ட் 31, 2010 at 2:13 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மேர்வின் சில்வா குற்றம் அற்றவர் என அறிக்கை

leave a comment »

சமுர்த்தி ஊழியர் முஹமட் நிசாம் என்பவரைமரத்தில் கட்டியது தொடர்பாக மேர்வின் சில்வா மீது விசாரணை நடத்த லங்கா சுதந்திர கட்சியினர் நியமித்த குழு அவர் குற்றம் அற்றவர் என தெரிவித்துள்ளது என்று செய்திகள் தெரிவிகின்றன.

முன்னாள் பெருந் தெருக்கள் அபிவிருத்தி அமைச்சர் மேர்வின் சில்வா சமுர்த்தி அதிகாரியை மரத்தில் கட்டியதாக கூறப்படுவதற்கு எதுவிதமான ஆதாரமும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை வேலையினை சரிவர செய்யாதவருக்கு வழங்கும் தண்டனை இவ்வாறு அமையுமென அதிகாரியின் அனுமதியுடன் தான் உதாரணம் ஒன்றை செய்து காட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் குற்றம் அற்றவர் என குறிப்பிட்ட குழு ஜனாதிபதியிடம் அறிக்கை சமர்பித்துள்ளது என அமைச்சர் மைதிரிபால சிறி சேன தெரிவித்துள்ளார்

Written by lankamuslim

ஓகஸ்ட் 31, 2010 at 1:54 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இலங்கைப் பெண்ணைத் துன்புறுத்திய தம்பதியர் கைது

leave a comment »

இலங்கை பணிப்பெண் மீது 24 ஆணி அடித்து துன்புறுத்தியதாக கூறப்படும் 35 வயதாகிய ஆணையும் 29 வயதாகிய அவரது மனைவியையும் சவுதி அரேபியா பொலிஸார் கைது செய்துள்ளனர். இதேவேளை கைது செய்யப்பட்ட தம்பதியினர் தமது குற்றத்தினை ஒப்புக்கொண்டுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிகின்றன

கடந்த 28 ஆம் திகதி பாதிப்புக்குள்ளாகிய பெண் மணிக்கு நியாயத்தினை பெற்றுத்தருமாறு இலங்கைத் தரப்பு, சவுதி அரேபியாவிடம் வேண்டியமை  குறிப்பிடத்தக்கது.

Written by lankamuslim

ஓகஸ்ட் 30, 2010 at 6:17 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

எல்லை மீள் நிர்ணயக் குழுவுக்கு 1500 மகஜர்கள் கிடைத்துள்ளன

leave a comment »

எல்லை நிர்ணயக் குழு புதிதாக பிரதேச செயலாளர் பிரிவுகள் கிராம உத்தியோகஸ்தர் பிரிவுகள் போன்றவற்றை புதிதாக உருவாக்க உருவாக்கப்பட்ட எல்லை மீள் நிர்ணயக் குழு பொது மக்களுடமிருந்தும் சமூக அமைபுகளிடமிருந்தும் 1500 மகஜர்களை பெற்றுக்கொண்டுள்ளது

ஏற்கனவே இக்குழுவானது மாவட்டச் செயலாளர்கள், பிரதேசச் செயலாளர்கள் மற்றும் கிராமசேவகர்களுடன் கலந்துரையாடியுள்ளதுடன் அவர்களது ஆலோசனைகளையும் பெற்று வருகிறது. அத்துடன் முக்கிய அமைப்புக்கள் தொழிற்சங்கங்கள் ஆகியவற்றிடமிருந்தும் ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளன விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 30, 2010 at 1:03 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

W.I.C.S- சர்வதேச இஸ்லாமிய அழைப்பு சமுகத்தின் ஆய்வுச் சுற்றுல்லா

leave a comment »

லிபிய அரசால் உருவாக்கப்பட்ட  சர்வதேச இஸ்லாமிய அழைப்பு  சமுகம் -World Islamic Call Society- என்ற அமைப்பின் இலங்கைக் கிளை வடமாகாணத்தில் முஸ்லிம்களின்  மீள்குடியேற்றம், அங்கு இருக்கும் மஸ்ஜிதுகள்   மற்றும் முஸ்லிம் பாடசாலைகள் பற்றிய ஆய்வு ஒன்றை மேற்கொள்வதற்காக வடமாகாணம் சென்றுள்ளனர் என்று அறிவிக்கபடுகின்றது .

இதன் போது யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, நயினாதீவு, சாவகச்சேரி, கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய இடங்களுக்கு அவர்கள் விஜயம் செய்துள்ளனர். யாழ்ப்பாணம் விஜயம் செய்த அந்த நிறுவனம்   யாழ் ஒஸ்மானியா  கல்லூரியில் இப்தார் நிகழ்ச்சி ஒன்றையும் ஏற்பாடு செய்து  அங்கு மீள்குடியேறிய வரும்  மக்களுக்கு உலர் உணவுப் பொதிகளையும்   வழங்கியுள்ளனர்.

Written by lankamuslim

ஓகஸ்ட் 30, 2010 at 12:17 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

‘இருப்புக்காகப் பிரார்த்திப்போம்’ காங்கேயனோடையில் வெளியிடப்பட்டுள்ள துண்டுப்பிரசுரம்

leave a comment »

இன்று வெளியடப்பட்டுள்ள இந்த துண்டுப்பிரசுரம் காத்தான்குடி காங்கேயனோடை முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் முஸ்லிம் கிராம பிரச்சினையை எடுத்து காட்டுவதாக அமைத்துள்ளது.

ஆரையம்பதிக்கு மேற்கே உள்ள காங்கேயனோடைக்கும் மாவிலங்கத்துறைக்கும் இடையிலுள்ள காணியில் முஸ்லிம்களுக்கென ஒரு  மாதிரிக் கிராமத்தை அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும், இதனை உடனடியாக தடுக்குமாறு  அண்மையில் தமிழ் குழு ஒன்றினால் கிழக்கு மாகாண முதலமைச்சரை கோரும் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது  இது தொடர்பில் பதிலளித்துள்ள கிழக்கு மாகாண முதலமைச்ச முஸ்லிம் மக்களுக்கான மாதிரிக் கிராமம் அமைக்கப்படுவதை யாராலும் தடுக்க முடியாதுவிரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 29, 2010 at 9:42 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு தீர்க்கமான சக்தியாக தன்னை நிலை நிறுத்தியுள்ளது ?

leave a comment »

இரண்டு வாரத்தில் புதிய அரசியலமைப் திருத்தங்கள்

அரசியலமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தங்கள் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் பாராளு மன்றத்தில் சமர்பிக்கப்படும் என சிரேஷ்ட அமைச்சர் டினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக இந்த வாரத்தில், புதிய திருத்தங்கள் தொடர்பாக அமைச்சரவை ஆராய்ந்து அவற்றை ஜனாதிபதியிடம் அனுப்பிய பின்னர், அவற்றை உயர் நீதிமன்றத்தின் ஆலோசனைகளுக்காக ஜனாதிபதி அனுப்பி வைப்பார் எனவும் அமைச்சர் டினேஷ் குணவர்தன கூறியுள்ளார்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு தீர்க்கமான சக்தியாக

அரசியலமைப்பு மாற்றம் மற்றும் ஜனாதிபதி பதவிக் கால நீடிப்பு ஆகிய விடயங்களில் அரசாங்கத்தை ஆதரிக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது இதன் மூலம் அரசாங்கம் பாராளுமன்றத்தில் எதிர்பார்த்திருந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலம் மிகவும் பலமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது விரிவாக பார்க்க

Written by lankamuslim

ஓகஸ்ட் 29, 2010 at 12:11 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது