Lankamuslim.org

One World One Ummah

நெடியவன் படை எழுச்சி பெறுகின்றதா ?

leave a comment »

நெடியவன் புலிகளின் தலைவரின் அழிவின் பின்னர் நோர்வேயில் வசிக்கும் இராணுவ சிந்தனை கொண்ட அனைத்து தமிழ் புலி ஆதரவளார்களாலும்  புலிகளின் தலைவராக கருதப்படும் நபர்     தமிழீழத்தை அடைய ஒரே வழி இராணுவ வழி முறை மட்டும்தான் என்ற பிரபாகரனின் கொள்கையை ஒட்டுமொத்தமாக  பின்பற்றுகிற இராணுவ சிந்தனையாளர் ,  இவரின் உண்மை பெயர்  பேரின்பநாயகம் சிவபரன்  என்பதாகும் தனது 17 ஆவது வயதில் புலிகளின் மாணவர் அமைப்பிலும் தனது 18 ஆவது வயதில்  புலிகள் அமைப்பிலும்   முழுமையாக தன்னை இணைத்து கொண்டவர் தற்போது இவரின் வயது    33 என்று தெரிவிக்கபடுகின்றது .

கேபி அவரின் கைதின்  பின்னரான உருத்திரகுமார்  போன்ற தலைவர்களை மிதவாதிகளாகவும் , சந்தர்ப்ப வாதிகளாகவும் பார்க்கும் இவர். பிரபாகரனை  விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட சூரிய தேவனாக கொண்ட புலிகளின் இரகசிய புலனாய்வு அமைப்பு ஒன்றை கட்டமைத்து வருவதாக தெரிவிக்க படுகின்றது  தமிழர்கள் மத்தியில் இவரின் கடும் போக்கு கொண்ட  இராணுவ சிந்தனைகளுக்கு உடனடியாக வரவேற்பு கிடைக்காமையால் தனது நடவடிக்கைகளை இரகசியமாக மேற்கொண்டு வருவதுடன்  நாடுகடந்த தமிழீழ அரசுக்கான தேர்தலில் தனது அமைப்பின் உறுப்பினர்கள்  பலரை உருத்திரகுமாரின் நாடுகடந்த அரசின் உறுபினர்களாக வெற்றிகரமாக அனுப்பியுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது  இது ஜனநாயக முயற்சிகள் என்று தெரிவிக்கபடும் நாடுகடந்த தமிழீழ அரசுக்கான கட்டுமானத்துக்கு   மிக பெரிய சவாலாக  அமைய போதுமானது

Advertisements

Written by lankamuslim

மே 7, 2010 இல் 4:59 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: