Lankamuslim.org

Archive for மே 2010

மனிதாபிமான உதவி கப்பல்கள் மீது இஸ்ரேலிய பயங்கரவாத வெறியாட்டம்

leave a comment »

காஸாவுக்கு நிவாரண் பொருட்களை ஏற்றி சென்ற கப்பல்களை இஸ்ரேல் பயங்கரவாதிகள் தாக்கி பலரை கொலைசெய்துள்ளனர்: முற்றுகைக்கு உள்ளாகியுள்ள காஸா மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குமுகமாக சைப்ரஸ் நாட்டின் துறை முகத்திலிருந்து நிவாரண உதவிப் பொருட்கள் கொண்ட ஒன்பது கப்பல்கள் கொண்ட நிவாரண தொகுதியை  காஸாவில் இருந்து 65 K.M தூரத்தில் சர்வதேச கடற்பரப்பில் வைத்து  இஸ்ரேலிய பயங்கரவாத கடற்படையும்  , விமான படையும் சுற்றிவளைத்து இவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது இதில் 6 கப்பல்கள் தாக்கப்பட்டுள்ளது ,15 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் பலர் காயம் அடைத்துள்ளதாகவும் இஸ்ரேல் பயங்கரவாத இராணுவம் சற்று முன்னர் அறிவித்துள்ளது ஆனால் கொல்லப்பட்டுள்ளவர்கள் 20 விடவும் அதிகம் என்று  இஸ்ரேல ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த கப்பல் தொகுதி நேற்று புறப்பட்டு இன்று அதிகாலை காஸாவை அடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது இந்த கப்பல் தொகுதி முற்றுகைக்கு உள்ளாகியுள்ள காஸா மக்களுக்கு தேவையான மருந்து மற்றும் உணவு பெருட்களை ஏற்றி சென்றுள்ளது மிக மோசமாக தாக்கப்பட்டுள்ள மனிதாபிமான நிவாரண உதவியாளர்கள் 50 நாடுகளிலிருந்து 800 பிரதிநிதிகள் கொண்ட பிரீடம் போளோடில்லா Freedom Flotilla Convoy Video விரிவாக பார்க்க..

Advertisements

Written by lankamuslim

மே 31, 2010 at 4:51 பிப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் துப்பாக்கிச் சூட்டிலிருந்து உயிர் தப்பியுள்ளார்

with one comment

இவர் டாக்டர் ஸாகிர் நாயிக்குடன் Concept of God in Hinduism & Islam என்ற தலைப்பில் சிறந்த மிகவும் பிரபல்யமான கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டுள்ளார் என்பது குறிபிட தக்கது

சர்வதேச வாழும் கலை அமைப்பின்  இஸ்தாபகர் ஸ்ரீ ஸ்ரீ  ரவிசங்கர் துப்பாக்கிச் சூட்டிலிருந்து உயிர் தப்பியுள்ளார்  கொலை செய்ய வந்தவன் யார், இதற்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசாரால் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது “இச்சம்பவத்தில் தீய சக்திகளுக்கு தொடர்புள்ளது’ என்று ரவிசங்கர் தெரிவித்தார். நேற்று நிகழ்ச்சி முடிந்த பின், ரவிசங்கர் காரில் ஏறுவதற்காக வெளியில் வந்தார். அப்போது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர், ரவிசங்கரை நோக்கி   சுட்டுள்ளான். துப்பாக்கியால் சுட்டவனை ஆசிரம பாதுகாவலர் மற்றும் பக்தர்கள் சேர்ந்து பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்தாகவும் ஆசிரம வட்டாரம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ; நான் அமைதியையும், ஆன்மிகத்தையும் பரப்பி வருகிறேன் . இது தான் எனது இலட்சியம். எனக்கென எதிரிகள் யாரும் இல்லை. எனது ஆசிரமத்தில் நடந்த சஸ்தாங் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒருவர் தான் என் மீது தாக்குதல் நடத்தியிருக்கலாம் என நினைக்கிறேன். இந்த தாக்குதலுக்கான காரணம் என்னவென்று எனக்கு தெரியவில்லை. மற்ற மத ரீதியிலான அமைப்பினர் யாரும் இந்த தாக்குதலில் ஈடுபட்டிருக்கவில்லை என்று கூறியுள்ளார் . என்று இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன

Written by lankamuslim

மே 31, 2010 at 11:51 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கிழக்கு மாகான முஸ்லிம்களின் கல்வி பின்னடைதுள்ளது

leave a comment »

கல்முனை சமூக முனேற்ற ஆய்வு மையம் கடந்த வாரம் வெளியிட்டுள்ள அறிக்கையில்  கடந்த காலங்களுடன் ஒப்டுகையில் கிழக்கு மாகான முஸ்லிம்களின்  கல்வி பின்னடைதுள்ளது என்று தெரிவித்துள்ளது இந்த  ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கல்விக்கான வசதி வாய்புகள் குறைத்தன காலங்களில் கல்வியில் கிழக்கு மாகான முஸ்லிம் மாணவர்கள் பெற்ற பெறுபேறுகள் கடந்த ஐந்து வருடங்களாக பின்னடைதுள்ளது என்று தெரிவித்துள்ளது சுனாமியின் பின்னர் எமது சமுதாயத்தில் ஏற்பட்டிருக்கும் கல்வி வறுமையை போக்குவதற்கு புத்திஜீவிகள் , பொது அமைப்புகள் , சமூக நலன் விரும்பிகள் ஒன்றிணைத்து செயல்படவேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கின்றோம் சில ஆண்டுகளுக்கு முன்னர் வளங்கள் கொண்ட பாடசாலைகள் குறைவாக இருந்தது ஆசிரியர்கள் பற்றாக்குறை காணப்பட்டது , மாலை நேர வகுப்புகள் பெரிதாக இருக்கவில்லை ஆனால் மாணவர்கள் பெற்ற பெறுபேறுகள் சிறப்பாக இருந்தது என்று கூறும் இந்த அமைப்பு முஸ்லிம்களின்  கல்வி பின்னடைவுக்கு பல காரணங்கள் இருந்தாலும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வரிசைப்படுத்தப்பட்ட சில அடிப்படையான காரணங்கள் என்று அந்த அமைப்பு சில வற்றை சுட்டி காட்டியுள்ளது இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 31, 2010 at 10:37 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ரைம்ஸ் ஒவ் இந்தியா’வுக்கு ‘Times of India’ ஜனாதிபதி நேற்று வழங்கிய பேட்டியில் இருந்து

leave a comment »

ரைம்ஸ் ஒவ் இந்தியா’வுக்கு ‘Times of India’ ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று  அளித்த பேட்டியில் இப்படிக் கூறியுள்ளார்.

ரைம்ஸ் ஒவ் இந்தியா’ யாவின் நிரூபர்    ஒருநாள் முழுவதும் கடும் வேலைக்குப் பின் எப்படி ஆறுகிறீர்கள், படங்கள் பார்பதுண்டா ? என்று வினவியதற்கு -இந்திப் படம் பார்த்து மகிழ்கிறேன். அண்மையில் சாருக்கானின் படமான “எனது பெயர் கான்’ என்ற படத்தைப் பார்த்தேன். இது மேற்குலகில் முஸ்லிம்கள் படும் இன்னல்களை மிகவும் நன்றாக விவரிக்கின்றது. எம்மை மனித உரிமைகளை மீறுகிறோம் என்று குறை கூறுபவர்கள் இக்குற்றத்தையே தமது சொந்த நாடுகளில் செய்கிறார்கள் என படத்தைப் பார்த்த பின் நினைவில் கொள்கிறேன்-  Shahrukh Khan’s film “My Name Is Khan.” It has captured the discrimination of Muslims in the West so well. I remember thinking after watching the film that people who are accusing us of human rights violations are themselves doing so in their own country என்று  தெரிவித்துள்ளதுடன் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 31, 2010 at 9:52 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கிளிநொச்சி கணேசபுரத்தில் மனிதப்புதைகுழி

leave a comment »

கிளிநொச்சி நகரை அண்டிய கணேச புரத்தில் மனிதப் புதைகுழி இருப்பது குறித்து வெளியான தகவலை அடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மலசலகூடக் குழியைத் துப்புரவு செய்ய முற்பட்ட வேளை, அங்கு கறுப்புப் பொலித் தீனால் கட்டப்பட்ட நிலையில் சடலங்கள் இருப்பதை வீட்டின் உரிமை யாளர் கண் டுள்ளார். இதுகுறித்து உரிமையாளரான நவரத் தினம் என்பவர் கிராம சேவையாளரின் உத வியுடன் பொலிஸில் முறைப்பாடு செய் துள்ளார். இந்த முறைப்பாட்டை அடுத்து கிளி நொச்சி நீதிவான் எஸ். சிவகுமார் சடலங் கள் இருப்பதாகக் கூறப்படும் மலசலகூடக் குழியை (புதைகுழியை) நேற்று நேரில் சென்று பார்வையிட்டார். சம்பவ இடத் தில் நீதிவான் விசாரணையும் நடத் தினார். கிளிநொச்சி வைத்தியசாலை டாக்டரும் அங்கு பிரசன்னமாகி இருந்தார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 31, 2010 at 9:04 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

வானாறு முஸ்லிம் கிராமத்தை கந்தளாய் பிரதேசசெயலர் பிரிவுடன் இணைக்க வேண்டாம்

leave a comment »

திருமலை கிண்ணியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட வானாறு முஸ்லிம் கிராமத்தை திருமலை மாவட்டத்திலுள்ள கந்தளாய் பிரதேசசெயலர் பிரிவுடன் இணைப்பதற்கு அங்கு வாழும் முழு முஸ்லிம்களும் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர் என்று தெரிவிக்க படுகின்றது  கந்தளாய் பிரதேசசெயலகம் சிங்களவர் பெரும்பான்மையாக வாழும் ஐந்து பிரதேச செயலகங்களுள் ஒன்று. வானாறு கிராமம் கிண்ணியா பிரதேச செயலகத்தின்கீழ் வருகிறது. கிண்ணியா பிரதேச செயலகம் பெரும்பான்மையாக முஸ்லிம்களைக் கொண்டுள்ளது. திருமலை மாவட்டத்தின் 11 பிரதேச செயலகங்களுள் சேருவில, கந்தளாய், கோமாரங்கடவல, மொரவேவா, பதவியா ஆகிய ஐந்து பிரதேச செயலகப் பிரிவுகளும் பெரும்பான்மையாக சிங்களவர்களைக் கொண்ட பிரதேசசெயலகப் பிரிவுகளாகும். வானாறு முஸ்லிம் கிராமத்தை கந்தளாய் பிரதேச செயலகத்துடன் இணைப்பதன் உள்நோக்கம் தங்களுடைய பகுதியில் பெருமெடுப்பிலான சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்வதற்காகவே இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 30, 2010 at 8:44 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

Webster Tarpley: பாகிஸ்தானில் இடம்பெறும் கொலைகளை செய்வது அமெரிக்கா

leave a comment »

Webster Tarpley அமெரிக்க புலனாய்வு எழுத்தாளரும் ஊடகவியலாலருமான இவர் பாகிஸ்தான் மக்கள் சந்தைகளிலும் , பொது இடங்களிலும் கொல்லபடுவது அமெரிக்காவினால் என்று கூறுகின்றார்

அமெரிக்க புலனாய்வு எழுத்தாளரும் ஊடகவியலாலருமான வேப்ச்ட்டர் தர்ப்லே- Webster Tarpley – பாகிஸ்தானில் நடைபெறும் குண்டு வெடிப்புகளுக்கு காரணம் அமெரிக்கா என்றும் பிளக் வேட்டர் -Black-Water என்ற அமெரிக்காவின் தனியார் இராணுவம் இந்த குண்டுகளை வைப்பதாகவும் தொடர்ந்தும் குற்றம் சாட்டிவருகின்றார் அமெரிக்கா பாகிஸ்தானில் தனது நலன்களை பேணும் இராணுவ குழுக்களை உருவாக்கியுள்ளதாகவும் அவற்றை பயன் படுத்தி அழிவு நாசவேலைகள் செய்வதாகவும் பாகிஸ்தானில் பரவலான குற்றசாட்டுகள் உள்ளன Webster Tarpley சில மாதங்களுக்கு முன்னர் வழங்கியுள்ள அவரின் பேட்டியை இங்கு பார்க்கவும் வீடியோ

Written by lankamuslim

மே 30, 2010 at 7:57 பிப

அப்கான் இல் பதிவிடப்பட்டது