Lankamuslim.org

Archive for மார்ச் 2010

வதை முகாம்களில் சிதைக்கபட்ட பெண் Dr.ஆபியா சித்தீக்கி

leave a comment »

7 வருடங்கள் வதை முகாம்களில். Dr.ஆபியாவை நிர்வாண படுத்தி அல் குர்ஆனை நிலத்தில் வீசி அதன்  மீது நடக்கு மாறு வதைத்துள்ளார்கள் மறுக்கும் போது மிகவும் கடுமையாக அடிப்பார்கள் என்று Dr.ஆபியாவின் தாய் கூறியுள்ளார்.

Dr.ஆபியா சித்தீக்கி மர்மமான முறையில் கடத்தப்பட்டு காணாமல் போனார் இந்த அராஜகம் நடைபெற்று நேற்றுடன் 7 வருடங்கள் ஆகியுள்ளது Dr.ஆபியா 2003 மார்ச் 30ல் பாகிஸ்தானில் மர்மமான முறையில் கடத்தப்பட்ட அவர் அமெரிக்க கட்டுபாட்டில் இயங்கும் ஆப்கானிஸ்தான் பக்ரம் (Bagram) சிறையில் அடைக்கப்பட்டு மிக கடுமையாக சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் . இங்கு அமெரிக்க , பாகிஸ்தானிய ஏஜண்டுகளால் மோசமான முறையில் பாலியல் வதைகளுக்கு ஆளானார் இந்த பயங்கரவாத அமெரிக்க கொடுமையை 2008 ஜுலை 06ஆம் திகதி பிரபல முன்னால் பிரிட்டிஷ் பத்திரிகையாளர் இவோன் ரெட்லி அம்பலத்துக்குக் கொண்டுவந்தார். வெளி உலகம் அறிந்து விட்டதால் அமெரிகாவுக்கு கொண்டு சென்று வழக்கு தொடர்ந்துள்ளனர் இந்த அமெரிக்க பயங்கரவாதிகள் விரிவாக பார்க்க…

Advertisements

Written by lankamuslim

மார்ச் 31, 2010 at 9:57 பிப

உலக செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இஸ்லாமிய வங்கி பிரிவு குறித்து பாடசாலை மாணவர்களுக்கு விளக்கம்

leave a comment »

இலங்கை வங்கி  அறிமுகப்படுத்தியுள்ள புதிய இஸ்லாமிய வங்கிப் பிரிவின் பணிகள் குறித்து பாடசாலை மாணவர்களுக்கு விளக்கமளிக்கும் வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படு த்தப்பட்டு வருகின்றது. அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை மாணவர்களுக்கு விளக்கமளிக்கும் வைபவம் அதிபர் ஏ. சீ. சைபுதீன் தலைமையில் நடைபெற்றது. அல் முனீறா பெண்கள் உயர்தரப் பாடசாலை மாணவியருக்கு விளக்கமளிக்கும் வைபவம் அதிபர் கே. எம். சுபையிர் தலைமையில் நடைபெற்றது.

மேற்படி வைபவங்களில் தலைமைக் காரியாலய இஸ்லாமிய வங்கிப் பிரிவு முகாமையாளர் எஸ். எம். அப்துல்லா, இலங்கை வங்கி அட்டாளைச்சேனை கிளை முகாமையாளர் ஏ. சீ. கியாஸ்தீன் ஆகியோர் கலந்து கொண்டு விளக்கமளித்தனர். அம்பாறை மாவட்டத்திலுள்ள 11 இலங்கை வங்கிக் கிளைகளில் ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய இஸ்லாமிய வங்கிப் பிரிவில் இணைந்து கொள்ளும் வாடிக்கையாளர்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் இலங்கை மத்திய வங்கியின் முறையான அனுமதியுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள இஸ்லாமியப் பிரிவு குறித்து எவரும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை எனவும் முகாமையாளர் எஸ். எம். அப்துல்லா கூறினார். – தினகரன்

Written by lankamuslim

மார்ச் 31, 2010 at 10:50 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இஸ்லாமிய விஞ்ஞானம் பற்றி நூல் எழுதியுள்ளார் டாக்டர் ஜெயலத் ஜயவர்தன

leave a comment »

மனித உரிமைகள் செயல் பாட்டாளரும்   , முன்னால் அமைச்சரும் ,பாராளுமன்ற உறுப்பினருமான டாக்டர் ஜெயலத் ஜயவர்தன அன்மை காலமாக இஸ்லாம் பற்றி கற்பதில் ஆர்வம் காட்டி வருவதாக தெரிவிக்க படுகின்றது தற்போது இவர் நவீன இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 31, 2010 at 10:01 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஸ்ரப்ரேனிற்சா இனப்படுகொலைக்கு- மன்னிப்பு கேற்க கூட தயங்கும் செர்பியா

leave a comment »

ஸ்ரப்ரேனிற்சா இனப்படுகொலை- மன்னிப்பு!!
ஸ்ரப்ரேனிற்சாவில் 1995ம் ஆண்டில் ஏழாயிரத்துக்கும் அதிகமான முஸ்லிம்கள் பொஸ்னியாவின் செர்பியப் படைகளால் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு மன்னிப்புக் கோரும் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றுவது குறித்து செர்பிய  நாடாளுமன்றம் ஆராயவுள்ளது.

ஜெனோசைட் எனப்படும் இனப்படுகொலை தாக்குதல்களை நிறுத்துமாறு கோரும் இந்தத் தீர்மானம் செர்பியாவின் தேசியவாதக் கட்சிகளை திருப்திப்படுத்தக்கூடியது. அத்தோடு சர்பியா அதன் அண்டை நாடுகளுடன் ஏற்படுத்தக்கூடிய மீள் இணக்கப்பாட்டு முயற்சிகளில் முக்கியமான ஒரு நடவடிக்கையாக இந்தத் தீர்மானம பார்க்கப்படுகிறது. ஸ்ரப்ரேனிற்சா படுகொலைகள் நிகழ்ந்து ஒரு தசாப்பதத்துக்கும் அதிகமான காலம் கடந்துள்ள போதிலும் சர்பியாவைப் பொறுத்தவரை பொஸ்னிய யுத்தம் இன்றும் பெரும் சர்ச்சைக்குரிய விடயங்களில் ஒன்றாக காணப்படுகின்றது. இந்த போர்க்காலத்தின் போது, பல மோசமான கொடூரங்கள் செர்பியாவின் பெயரிலேயே புரியப்பட்டுள்ளதை அவர்களின் நாடு ஏற்றுக்கொண்டே ஆகவேண்டுமென்று அங்குள்ள பலரதும் கருதுகின்றனர். விரிவாக பார்க்க…

Written by lankamuslim

மார்ச் 30, 2010 at 11:13 பிப

உலக செய்திகள் இல் பதிவிடப்பட்டது

போலீஸ் தடுப்பு காவலில் ஸாராஹ் மாலினி பெரேரா

leave a comment »

இணைப்பு-4

ஸாராஹ் மாலினி பெரேராவின் சட்டத்தரணி அலெக்ஸ்  பெர்னாண்டோ இன்று உயர் நீதி மன்றத்தில் உடனடியாக  ஸாராஹ்வை விடுதலை செய்ய கோரும் வழக்கு ஒன்றை செய்வார் என்று   ஸாராஹ்வின் சகோதரி மர்யம் தெரிவித்துள்ளார் , அவர் மேலும் கூறுகையில் போலீசார் ஸாராஹ்வுக்கு எதிரான எந்த குற்றசாட்டையும் முன்வைக்க முடியாத நிலையில் இருப்தாகவும் அவர் தெரிவித்துள்ளார் இன்றுடன் 9 வது  நாளாக  தடுப்பு காவலில் வைக்க பட்டிருப்பது குறிபிடதக்கது

இவர்  இலங்கையை சேர்ந்த பௌத்த மத குடும்பத்தில் பிறந்து பௌத்த குடும்பத்தில் வளர்ந்த சிங்கள இன பெண் இவர் இஸ்லாத்தை டிஸ்கவர் இஸ்லாம் நிகழ்ச்சிகளின் ஊடாக் கற்றதன் மூலம் 1999 இல் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார் இவர் தற்போது பஹ்ரைன் நாட்டின் பாடசாலை ஒன்றின் ஆசியராக தொழில் புரிகிறார்

இவர் விடுமுறையில் இலங்கை வந்த போது தான் எழுதி முடித்திருந்த இஸ்லாம் மற்றும் ஏனைய மதங்கள் பற்றி ஒப்பிட்டு ஆய்வு கொண்ட இரண்டு புத்தகங்களை சிங்கள மொழியில் பதிப்பு செய்துள்ளார் இந்த புத்தகங்கள் பௌத்த மதத்தை நித்திப்பதாக கூறி மிரிஹான போலீஸ் நிலையத்தில் தடுத்து வைக்கபட்டுள்ளார்

Written by lankamuslim

மார்ச் 30, 2010 at 9:38 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

முல்லைத்தீவு முஸ்லிம்கள் மறக்கப்பட்ட ஒரு சமூகம்

with 4 comments

M.ஷாமில் முஹம்மட்

1990 ல் வடமாகாணத்தின் யாழப்பாணம், முல்லைதீவு ,வவுனியா, மன்னார் ,கிழிநொச்சி ஆகிய ஐந்து மாவட்டங்களிலிருந்தும் சுமார் ஒரு இலட்சம் வரையிலான முஸ்லிம்கள் அவர்களின் பாரம்பரிய பிரதேசங்களிலிருந்து புலிகளால் விரட்டியடிக்கப்பட்டார்கள். இவற்றில் முல்லைத்தீவு முஸ்லிம்கள், வவுனியா முஸ்லிம்கள் பற்றிய செய்திகள் , விபரங்கள் பெரிதாக இடம்பெறவில்லை என்றுதான் கூறவேண்டும் பொதுவாக வடமாகாண முஸ்லிம்கள் என்று விழிக்க பட்டாலும் முல்லைத்தீவு முஸ்லிம்கள், வவுனியா முஸ்லிம்கள் என்று தனியாக அணுகுவது அவர்களை பற்றிய கூடிய தகவல்களை பகிர்ந்து கொள்ளவதற்கு உதவும் இந்த கட்டுரையில் முல்லைத்தீவு முஸ்லிம்கள் பற்றிய விபரங்களை பார்போம் , வவுனியா முஸ்லிம்கள் பற்றிய கட்டுரை ஒன்றை தனியாக எழுதவேண்டி இருப்பதால் அதை வேறு ஒரு கட்டுரையில் பார்போம்

முல்லைத்தீவு இலங்கையின் வடகீழ்க் கரையில், வடமாகாணத்தில் அமைந்துள்ளது. இதன் எல்லைகளாக யாழ்ப்பாணம் கிளிநொச்சி, மன்னார், வவுனியா, திருகோணமலை அமைந்திருக்கின்றது . முல்லைத்தீவு புலிகளின் இராணுவ முக்கியத்துவம் பாய்ந்த இடமாக இருந்ததும் இறுதி யுத்தம் நடைபெற்ற இடமாக இருந்தமையும் குறிப்பிடத்தக்கது. வட மாகாணத்தின் முஸ்லிம்கள் வாழ்ந்த மற்றொரு மாவட்டமான முல்லைத்தீவு இங்கு 1990 இல் முஸ்லிம்கள் வெளியேற்ற படும்போது சுமார் 7000 ஆயிரம் பேர் வரை வாழ்ந்துள்ளனர் விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 30, 2010 at 8:35 பிப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

அரசியல் கள நகர்வுகள் ஒரு மினி பார்வை

leave a comment »

ராஜகிரியவில் இன்று ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் பிரசார மேடையை அகற்றுவதற்கு பொலிஸார் முற்பட்ட வேளையில், பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

‘உதயன்’ மற்றும் ‘சுடரொளி’ ஆகிய பத்திரிகைகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கு தீர்மானித்திருப்பதாக சமூகசேவைகள் மற்றும் சமூக நலன்புரித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்

இளைஞர்களிடம்
இருக்கவேண்டிய மிகப் பெரிய பலம் அறிவேயன்றி ஆயுதங்கள் அல்ல. கடந்த சில தசாப்தங்களாக சில தேசியத் தலைவர்கள் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் பெறுமதியான உயிர்களை இல்லாதொழிக்கும் வகையில் அவர்களை தவறான வழியில் இட்டுச் சென்றதால் அவர்கள் ஆயுதங்கள் எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார்

யாழ்ப்பாணத்தில்
இடம்பெயர்ந்துள்ள மக்களுக்காக இராணுவத்தினரால் நிர்மாணிக்க ப்பட்டுள்ள 437 வீடுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் கையளிக்கப்படவுள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்

ஊடகங்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறைகளை உடனடியாகத் தடுத்து நிறுத்துமாறு வலியுறுத்தி ஊடகவியலாளர்கள் இன்று கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக அமைதிப் போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர் .

குவைத்திலிருந்து
108 இலங்கையர்கள் நேற்று நாடு திரும்பியுள்ளனர். வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பெற்று குவைத்துக்குச் சென்று அங்கு , நிர்க்கதியானோரே இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர்.

எதிர்வரும் 5 ஆம் திகதிக்கு முன்னர் சுவரொட்டிகள் சகலதும் அகற்றப்படும் பொதுத் தேர்தல் தொடர்பாக ஒட்டப் பட்டுள்ள சுவரொட்டிகள், பதாதைகள் மற்றும் கட்அவுட்களை அகற்றும் பணி தொடர்ந்தும் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக தேர்தல்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ண தெரிவித்துள்ளார்

வன்னியில் இறுதி யுத்தத்தின் போது வங்கிகளின் பெட்டகங்களிலிருந்து கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் தங்க நகைகள் என்பன பாதுகாப்பாகவுள்ளதாக ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகரும் கம்பஹா மாவட்ட ஐக்கிய மக்கள் முன்னணியின் தலைமை வேட்பாளருமான பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Written by lankamuslim

மார்ச் 30, 2010 at 8:30 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது