Lankamuslim.org

One World One Ummah

Archive for ஜனவரி 2010

கிலாபத் அழிக்கபட்டு இன்றுடன் 85 வருடங்களும் 334 நாட்களும்

with one comment

கலீபா அப்துல் மஜீத்

86 வது வருடதிற்கு   இன்னும் 31 நாட்கள் இருகின்றன

1924 மார்ச் 3 இம் திகதி  திங்கள்  கிழமை காலை வேளையில் கிலாபத் உலகை விட்டும் அழிக்கபட்டது இறுதியாக துருக்கியில் இஸ்லாமிய சாம்ராஜியதின் கலிபாவாக இருந்தவர் தான் இந்த படத்தில் இருக்கும் கலீபா அப்துல் மஜீத் இவர் கிலாபத் அழிக்கபட்டு ஒரு மணித்தியால அவகாசத்தில் குடும்பத்துடன் நாடு கடத்தபட்டார் இந்த சாம்ராஜிய அழிப்பை செய்தவன் முஸ்தபா கமால் அதா துர்க் என்ற இஸ்லாமிய சாம்ராஜிய துரோகி, முஸ்லிம் உம்மாஹ் அனாதையானது, கிலாபத் சாம்ராஜியம் கனவு தேசமானது, மேற்கு மேலாதிக்கம் கண்ட கனவு நிஜமானது, முஸ்லிம் உம்மத் துடித்தது ,அரசியல் அனாதையானது , ஆனால் சோர்வடைந்து ஒடி ஒதுங்கி இருக்க வில்லை மறு கணமே மீண்டும் சிந்தித்து செயல்பட புறபட்டது பயணம் மிகவும் நீண்டது இன்றும் தொடர்கின்றது விரிவாக பார்க்க…

Advertisements

Written by lankamuslim

ஜனவரி 31, 2010 at 11:42 பிப

இஸ்லாம் பொதுவானவை இல் பதிவிடப்பட்டது

எதிர்வரும் ஏப்ரல்மாதம் 9ம் திகதி பொதுத்தேர்தல் நடத்தப்படும் ?

leave a comment »

https://i2.wp.com/www.electoralgeography.com/new/en/wp-content/gallery/srilanka2005/2005-sri-lanka-presidential.gifஎதிர்வரும் ஏப்ரல்மாதம் 9ம் திகதி பொதுத்தேர்தல் நடத்தப்படும் என திவயின செய்தி வெளியிட்டுள்ளது சுதந்திரத்  தினத்திற்கு மறுநாள் நள்ளிரவு பாராளுமன்றம் கலைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்க ப்படுகிறது.  சிங்களத் தமிழ் புத்தாண்டுக்கு முன்னர் தேர்தலை நடத்துவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகவும் சுட்டிக் காட்டப்படுகிறது புத்தாண்டு காலத்தில் தேர்தல் நடத்தப்பட்டால் அதன் மூலம் பல்வேறு பாதிப்புக்கள் எற்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் இதனால் மக்களுக்கு இடையூறு அற்ற வகையில் தேர்தல்களை நடத்த தீர்மானிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Written by lankamuslim

ஜனவரி 31, 2010 at 11:38 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

சிவசங்கர் மேனன்- கருணாநிதி சந்திப்பு!

leave a comment »

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் தமிழக முதல்வர் மு.கருணாநிதி அவர்களை சந்தித்து இலங்கை விடயம் தொடர்பாக பேச்சு நடாத்தியுள்ளார். மேனன் இலங்கைக்கு வரவுள்ள நிலையில் முதல்வர் கருணாநிதியை சந்தித்து பேச்சுநடாத்தியுள்ளார். இந்திய அரசு இலங்கையுடன் இணைந்து புனர்வாழ்வு, புனரமைப்பு, மீள்குடியேற்றம் தமிழர்களுக்கான அதிகாரபரவால்க்கல் உட்பட பல்வேறு விடயங்கள் என்பனவற்றை இந்தியா முன்னெடுத்து வருவதாகவும் கருணாநிதியிடம் மேனன் தெரிவித்துள்ளார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் கருணாநிதி, சிவசங்கர் மேனன் பதவியேற்று கொண்டதன் பின்னர் இடம்பெற்ற முதல்  சந்திப்பாகும், இதன்போது பல்வேறு விடயங்கள் குறித்து பேசப்பட்டதாகுவம் தெரிவித்தார்.

முதவ்வருடன் இடம்பெற்ற சந்திப்பு குறித்து மேனன் அவர்கள் தெரிவிக்கையில், மீனவர் பிரச்சினை, இலங்கையின் வடக்கே இடம்பெயர்ந்துள்ள மக்களின் மீள்குடியேற்றம் என்பனவற்றுக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும் என்றும் கோரியதாகவும் தெரிவித்துள்ளார்.

Written by lankamuslim

ஜனவரி 31, 2010 at 11:24 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

யார் யாரோவெல்லாம் எம்மில் சவாரி செய்ய ..

leave a comment »

http://kingston21.files.wordpress.com/2009/04/josh_confusion1.jpg

எஸ். எம்.எம். பஷீர்

சுமார் ஒன்றரை மாதத்திற்கு  முன்பாக நான் எழுதிய “ஹீரோ டு ஜீரோ” (From Hero to Zero) என்ற கட்டுரையில் குறிப்பிட்ட மேற்குலக சக்திகளின் பின்னணிகள் பற்றிய அனுமானங்கள் பல என்று ஆதாரங்களாகி வருகின்றன. அந்தப் பின்னணியில் இன்னுமொரு புதிய செய்தி இலண்டனில் இருந்து வெளிவரும் தெளிக்ராப் (The Daily Telegraph) எனும் பத்திரிக்கை செய்தியுமாகும். அதாவது முன்னாள் பிரித்தானிய மரபுவாதக் கட்சியின் அதன் இன்றைய தலைவரான டேவிட் கமரூன் (David Cameron) பாரிய லண்டன் நகர மேயராகவிருக்கும் போரிஸ் ஜோன்சனின் (Boris Johnson) ஆகியோருக்கு ஆலோசகராகவிருந்த ஜேம்ஸ் மக்ராத்(James McGrath) என்பவர் ஜெனரல் பொன்சேகாவுக்கு அவரது தோல்வியின் பின்னரான ஹோட்டல் பத்திரிகை பேட்டி, அதனை தொடர்ந்த மகிந்தவுக்கு எதிரான அறிக்கைகளுக்கு பின்னனியிலிருந்தார். அப்பத்திரிக்கை மேலும் குறிப்பிடுகையில் ஜெனரல் பொன்சேகா இத்தேர்தலில் வெற்றியடைந்திருந்தால் அதன் புகழ் இவருக்கே சாரும், ஏனெனில் இவர் ஒரு மாதமாக பொன்சேகாவின் பிரச்சார செயற்பாட்டின் உபாய வகுப்பாளராக இலங்கையில் செயற்பட்டிருந்தார் என்ற விரிவாக பார்க்க…

Written by lankamuslim

ஜனவரி 31, 2010 at 11:14 பிப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

இந்திய பாதுகாப்பு ஆலோசகர் மேனன் கொழும்பு வருகை

leave a comment »

இந்தியாவின் புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகராகப் பொறுப்பேற்றுள்ள சிவ்சங்கர் மேனன் விரைவில் கொழும்பு வரவுள்ளதாக புதுடில்லி அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த நாராயணன் அண்மையில் மேற்குவங்க மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டதை அடுத்து, புதிய ஆலோசகராக சிவ்சங்கர் மேனன் நியமிக்கப்பட்டார்.

இதற்கிடையே ஜனாதிபதி தேர்தல் நடைபெற்று மீண்டும் ராஜபக்ஷ பொறுப்பேற்றுள்ள நிலையில், சிவ்சங்கர் மேனனின் கொழும்பு வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

அவரது கொழும்பு பயணத்தின்போது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படுவதுடன், நலன்புரி மையங்களில் உள்ள தமிழர்களை மீள்குடி யேற்றுவது, அவர்களுக்கான புனர்வாழ்வுக் கான நடவடிக்கைகளை வேகப்படுத்துவது குறித்தும் மேனன் முக்கிய ஆலோசனையில் ஈடுபடுவார் என்று கூறப்படுகிறது.

மேனனின் வருகையை அடுத்து, இலங்கையிலிருந்து முக்கிய அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்று புதுடில்லி சென்று அடுத்தக்கட்ட  ஆலோசனைகளில் ஈடுபடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன

Written by lankamuslim

ஜனவரி 31, 2010 at 7:32 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பலஸ்தீன் அகதிகளுக்கு உங்கள் உதவி தேவைப்படுகின்றது

leave a comment »

அனைத்துக் கனேடியர்கள் சார்பிலும்  மத்திய கிழக்கில் நீதியும் அமைதியும் நிலைநிறுத்தப்படும் வகையில் UNRWA உடன் ‘கனேடியன் எய்ட்’ (CANADIAN AID) அமைப்பை மீண்டும் இணைத்துக்கொள்வது தொடர்பில் உங்கள் பெறுமதியான நேரத்தில் முப்பது விநாடிகளைச் செலவிட்டு விரைந்து செயலாற்ற முன்வாருங்கள் என Canadians for Justice and Peace in the Middle East எனும் அமைப்பு அழைப்புவிடுக்கின்றது.

கடந்த வாரம் (டிசம்பர் 2010) பல தசாப்த காலமாக ஐ.நா.வின் நிவாரணப் பணிகளுக்கான முகவர்நிலையத்துக்கு இதுவரை காலமும் வழங்கப்பட்டுவந்த உதவிகள் யாவும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகக் கனடாவின் ஹார்பர் அரசாங்கம் எவ்வித ஆர்ப்பாட்டமுமின்றி அறிவித்துள்ளது.

1949 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட UNRWA உலகெங்கிலுமுள்ள பலஸ்தீன் அகதிகளுக்கு நிவாரண உதவிகளை வழங்கிவரும் மிகப் பிரதானமான அமைப்பாகத் தொழிற்பட்டு வருகின்றது. ஹார்பர் அரசின் இந்தத் தீர்மானம், பலஸ்தீன் அகதிகளுக்கு உதவுவது தொடர்பில் பாரம்பரியமாக மனிதாபிமான அடிப்படையில் ஆதரவு வழங்கிவரும் கனடாவின் நடுநிலைமைப் போக்கினைத் தகர்த்தெறிவதாக அமைந்துள்ளது. விரிவாக பார்க்க..

Written by lankamuslim

ஜனவரி 31, 2010 at 6:21 பிப

பலஸ்தீன் இல் பதிவிடப்பட்டது

ஹமாஸ் உயர் பீட உறுப்பினர் இஸ்ரேல் உளவு ஏஜண்டுகளால் துபாயில் படுகொலை

leave a comment »

http://poralikall.files.wordpress.com/2010/01/mahood3.jpgபலஸ்தீன் விடுதலை  போராட்டத்தின் முக்கிய போராளிகளில்  ஒருவரும் ஹமாஸ்  இராணுவ கட்டமைப்பான  இஸ்ஸத்தீன் அல் கஸ்ஸாமின் உயர் நிலை உறுப்புரிமை பெற்றவருமான   மஹ்மூத் அப்துறவூப் அல் மப்ஹூஹ் -Mahmoud Abdul Raouf al-Mabhouh- துபாயி  நாட்டில் இவர்  தலையில் நவீன கருவி ஒன்றினால் மின்சாரம் செலுத்தபட்டு கொலை செய்யபட்டார்       இந்த  கொலையின்  பின்னணியில் இஸ்ரேல் உளவு பிரிவான  மொசாட்-Mossad-இருபதாக  ஹமாஸ் அறிவித்துள்ளது.

இஸ்ரேல் அடக்கு முறைக்கு எதிரான    முதல் இன்திபாழாவின் போதும்  இஸ்ரேல் ஆக்கிரமிப்பு இராணுவத்தை  சேர்ந்த இருவரை கைப்பற்றிய நடவடிக்கைகளிலும் தீவிரமாக பங்காற்றியுள்ளார் இவர் 1989 முதல் சிரியாவில் வாழ்ந்து வந்தார். விரிவாக பார்க்க..

Written by lankamuslim

ஜனவரி 30, 2010 at 11:40 பிப

பலஸ்தீன் இல் பதிவிடப்பட்டது