Lankamuslim.org

One World One Ummah

Archive for திசெம்பர் 2009

இலங்கையில் ஜனாதிபதி ஆட்சி முறையும், இதுவரை நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களும். பாகம்-3

leave a comment »

[lanka.jpg]

பி.எம். புன்னியாமீன்

1 ஆவது ஜனாதிபதித் தேர்தல்

1978ஆம் ஆண்டு அரசியலமைப்பின் 30ம் உறுப்புரையின் 2ம் பந்தியில் குடியரசின் ஜனாதிபதியை ஆறாண்டுகளைக் கொண்ட பதவிக் காலத்துக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்படல் வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை அரசியல் வரலாற்றில் முதலாவது ஜனாதிபதித் தேர்தல் 1982.10.20ம் திகதி நடைபெற்றது. இத்தேர்தலின் நியமனப்பத்திரங்கள் 1982 செப்டம்பர் 17ம் திகதி கொழும்பு மாநகர சபை மண்டபத்தில் காலை 8.00 மணி முதல் 11 மணிவரை தேர்தல் ஆணையாளர் திரு. சந்திரானந்த டி. சில்வா அவர்களினால் ஏற்றுக் கொள்ளப்பட்டன. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளினூடாக 6 வேட்பாளர்கள் நியமனப்பத்திரங்களைத் தாக்கல் செய்தனர். விரிவாக பார்க்க

Advertisements

Written by lankamuslim

திசெம்பர் 31, 2009 at 7:55 பிப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

இரா.சம்பந்தனுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்குமிடையில் சந்திப்பு

leave a comment »

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தனுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்குமிடையில் நேற்றிரவு அலரி மாளிகையில் சந்திபொன்று இடம்பெற்றுள்ளது.ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவை பெறும் வகையில் இதற்கான அழைப்பு ஜனாதிபதியினால் விடுக்கப்படடிருந்ததாக தெரிய வருகின்றது. இச்சந்திப்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தனக்கு அதரவு வழங்குமாறு கோரியதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இது தொடர்பாக கொண்டுள்ள நிலைப்பாட்டை அக்கட்சியைச் சார்ந்தவர்கள் எடுத்துக் கூறியதாகவும் தெரியவருகின்றது.

Written by lankamuslim

திசெம்பர் 31, 2009 at 6:51 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

முசலியில் மீளக்குடியேறிய முஸ்லிம்கள் வெள்ளத்தினால் பாதிப்பு

leave a comment »

தற்போது பெய்துவரும் மழையின் காரணமாக மன்னார், முசலிப் பிரதேசத்தில் மீளக்குடியேறிய முஸ்லிம்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அகதிகளாக விரட்டப்பட்டு 19 வருடங்களின் பின்னர் மீளக்குடியேறுகின்ற மன்னார், முசலி முஸ்லிம்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர். மின்சாரம், போக்குவரத்து, மற்றும் மலசல கூடங்கள் இன்மை போன்ற பல்வேறு பிரச்சினைகளுடன் வாழுகின்ற இம்மக்கள் தற்போது பெய்துவருகின்ற மழையினாலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

1990ம் ஆண்டு வெளியேற்றப்படும் போது சுமார் 4200க்கும் அதிகமாக காணப்பட்ட குடும்பங்கள்  தற்போது 10,000 க்கும் அதிகமாக காணப்படுகின்றன. இவர்களில் தற்போது 1526 குடும்பங்கள் மீளக்குடியேறியுள்ளனர். விரிவாக பார்க்க

Written by lankamuslim

திசெம்பர் 31, 2009 at 3:34 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

எதிர்க்காட்சிகள் தேர்தல் பிரசாரம் நடத்த மட்டு. மாநகர முதல்வர் மறுப்பு

leave a comment »

எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவின் தேர்தல் பிரசாரத்திற்கு மட்டக்களப்பு நகரில் மைதானம் வழங்க மாநகர முதல்வர் சிவகீத்தா பிரபாகரன் மறுப்பு தெரிவித்துள்ளார். எதிர்வரும் 5ஆம் திகதி பிற்பகல் 1.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை காந்தி சிலை சதுக்கத்தில் தேர்தல் பிரசாரக் கூட்டம் நடத்துவதற்கு அனுமதி வழங்குமர்று கோரி ஜெனரல் சரத் பொன்சேகாவின் மட்டக்களப்பு மாவட்ட அதிகாரம் பெற்ற தேர்தல் முகவர் சேகுதாவூத் பஷீர் (மாகாண சபை உறுப்பினர்) மாநகர ஆணையாளரிடம் எழுத்து மூலம் விண்ணப்பம் செய்திருந்தார்.

மாநகர ஆணையாளரிடம் இதற்கு விண்ணப்பம் செய்திருந்த போதிலும், அதற்கான பதிலை மாநகர முதல்வரே தங்களுக்கு எழுத்து மூலம் வழங்கியுள்ளதாக சேகு தாவூத் பஷீர் தெரிவித்தார். “குறிப்பிட்ட இடத்தில் முன்கூட்டியே நிகழ்வுகள் நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதால் தரமுடியாமைக்கு வருந்துகின்றேன்” என மாநகர முதல்வர் தனது பதிலில் தெரிவித்துள்ளதாக சேகு தாவூத் பஷீர் மேலும் தெரிவித்தார்.

வீரகேசரி

Written by lankamuslim

திசெம்பர் 31, 2009 at 3:05 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கல்முனை மாநகர சபை மேயர் எச்.எம்.எம்.ஹரீஸை வழிமறித்துத் தாக்க முற்பட்டதாகக் கூறப்படுகிறது

leave a comment »

Imageதேசிய காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் துல்கத் நஸீம் மற்றும் அவரது சகாக்கள் மீது மக்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் ஒன்று நேற்றுக் காலை கல்முனையில் இடம்பெற்றதாக தெரிகிறது  இது தொடர்பாக கல்முனை மேயர் ஹரீஸ் கூறியவை வருமாறு கல்முனை மாநகர சபையின் வரவு  செலவுத் திட்டம் மீதான விவாதத்தை ஆரம்பித்து வைப்பதற்காக நான் இன்று (நேற்று) காலை 10 மணிக்கு அலுவலகத்திற்கு வந்து கொண்டிருந்தேன். அப்போது தேசிய காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் துல்கர் நஸீம், அவரது சகாக்கள் சிலரை அழைத்து வந்து என்னை வழிமறித்துத் தாக்க முற்பட்டார். இதைக் கேள்விப்பட்ட மக்கள் ஒன்றுதிரண்டு வந்து நஸீம் மீது தாக்குதல் நடத்தினர். அவர் சிறிது நேரம் மாநகர சபை அலுவலக அறையில் அடைத்து வைக்கப்பட்டு மக்களால் முற்று கையிடப்பட்டிருந்தார்.சம்பவம் இடம்பெற்ற அரைமணி நேரம் கழித்துப் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்தனர். “துல்கர் நஸீமை கைதுசெய்யாவிட்டால் நாம் இங்கிருந்து போகமாட்டோம்”  என்று மக்கள் கூறினர். இதனால், பொலிஸார் அவரைக் கைது செய்தனர். என்ற தகவல் வெளியாகியுள்ளது

Written by lankamuslim

திசெம்பர் 31, 2009 at 12:10 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

சச்சிதானந்தன் மற்றும் ஜேயாகராஜன் ஆகியோர் எதிர் கட்சி கூட்டணியில் இணைவு!

leave a comment »

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முக்கியஸ்தர்களான சச்சிதானந்தன் மற்றும் ஜேயாகராஜன் ஆகியோர் எதிர் கட்சி கூட்டணியில் இணைந்து கொண்டுள்ளனர்.நேற்று கொழும்பில் நடைபெற்ற விசேட செய்தியாளர் மகாநாட்டில் கலந்து கொண்ட இவர்கள் இருவரும் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவு வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.சச்சிதானந்தன் தற்போதைய அரசாங்கத்தின் பிரதி கல்வி அமைச்சராக பதவி வகித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தெரிவு செய்யப்பட்ட 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 2 தேசிய பட்டடியல் உறுப்பினர்களுடன் இருந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 4 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட கட்சியாக பலவீனமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. முன்னதாக தொழிலாளர் காங்கிரசில் இருந்து வடிவேல் சுரேஸ்,பைசர் முஸ்தபா,புத்திரசிகாமணி ஆகிய மூன்று பேர் வெளியேறி அரசாங்கத் தரப்பிற்கு தனிப்பட்ட முறையில் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.தற்போது மேலும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் மத்திய குழு உறுப்பினரும் கட்சியில் இருந்த வெளியேறியுள்ளமை கட்சியை பலவீனப்படுத்தியுள்ளதாக அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதேவேளை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 19 முக்கிய அமைச்சர்கள் எதிர் கட்சிக் கூட்டணியில் இணைந்து கொள்ளவுள்ளதாக மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

Written by lankamuslim

திசெம்பர் 31, 2009 at 12:12 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

யாழ்ப்பாண முஸ்லிம்கள் மீதான வலம்புரி நாளேடின் இரண்டாவது தாக்குதல்- “நாய்களின் தலை”

leave a comment »

யாழ்ப்பாண முஸ்லிம்கள் வலம்புரி நாளேடின் செய்திக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ் ஐந்து சந்தியிலும் யாழ் நகரிலும் வலம்புரி பத்திரிகையை தீயிட்டுக் கொளுத்தி தமது எதிப்பை வெளிட்டனர் யாழ்ப்பாணம் ஐந்து சந்தியில் அமைந்திருக்கும் முஸ்லிம் கொத்து ரொட்டிக் கடை ஒன்றில் நாய் இறைச்சி கண்டுபிடிக்கப்பட்டதாக வலம்புரி நாளிதழிதல் 28.12.2009 ஆசிரியர் தலைப்பு  “நாய்களின் தலை” என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டது  யாழ்ப்பாணத்தில் வெளிவந்த வலம்புரி நாளேட்டில், ஐந்து சந்தியில் இயங்கி வரும் முஸ்லிம் கொத்துரொட்டிக் கடையொன்றில் நாய் இறைச்சி கண்டுபிடிக்கப்பட்டதாக செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இதுபற்றி எஸ் . முஹம்மத் சர்ராஜ் குறிபிடும்போது இது யாழ்ப்பாண முஸ்லிம்கள் மீதான வலம்புரி நாளேடின் இரண்டாவது திட்டமிட்ட பொய்யான தாக்குதல் இந்தமுறை  முஸ்லிம்களில் கொத்துரொட்டிக் கடை பற்றி குறிபிட்டுள்ளது என்றார்

இதனால் யாழ் நகர்ப் பகுதி யாழ் ஐந்து சந்தி போன்ற இடங்களில் திரண்ட நூறுக்கும் அதிகமான முஸ்லிம் வணிகர்கள், வலம்புரி நாளிதழிற்கு எதிரான பதாகைகளை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு அதன் இதழ்களை தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர். இது தொடர்பாக முகமதியா ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகிகளால் இன்று அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது

ஆசிரியர்

Written by lankamuslim

திசெம்பர் 30, 2009 at 9:28 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது