Lankamuslim.org

Archive for செப்ரெம்பர் 2009

கோபால்சாமி வைகோ ஒரு இந்திய தேசத் துரோகி இல்லையா ?

leave a comment »

புலிகளுடன் தொடர்பு கொண்டு இந்திய இராணுவத்துக்கு எதிராக செயல்பட்ட கோபால்சாமி  வைகோ ஒரு இந்திய தேசத் துரோகி இல்லையா ?
ஒரு இந்திய முஸ்லிம் கஷ்மீருக்கு சுற்றுலா சென்று வந்தாலே முஸ்லிம் பயங்கரவாதி இந்திய தேசத் துரோகி என முத்திரை குத்தும் தமிழ் நாட்டு இனவாத  ஊடகங்களுக்கும் சினிமாத் (கூத்தாடிகள்)  துறைக்கும் இந்திய பாசிச பாதுகாப்பு படைக்கும்  இது  ஒரு இந்திய தேசத் துரோகமாக தெரியவில்லையா ?

1.

2.

3.

Advertisements

Written by lankamuslim

செப்ரெம்பர் 30, 2009 at 11:50 முப

உலக செய்திகள் இல் பதிவிடப்பட்டது

யாழில் பொலிஸ் சேவைக்கு 880 பேர் முதற்கட்டத் தெரிவு

leave a comment »

https://i2.wp.com/nimg.sulekha.com/Others/original700/sri-lanka-police-2009-6-12-10-24-14.jpg

யாழ். மாவட்டத்தில்   இளைஞர், யுவதிகளை பொலிஸ் சேவைக்கு இணைக்கும் செயற்றிட்டத்தில் 880 பேர் முதல் கட்டமாக தெரிவு செய்யப்பட்டு இன்று செவ்வாய்க்கிழமை யாழ். செயலகத்தில் நேர்முகத் தேர்வும் எழுத்துப் பரீட்சையும் இடம்பெற்றன.

யாழ். மாவட்டத்தில் பொலிஸ் சேவையில் இணைவதற்கு 400 பெண்கள் அடங்கலாக 6500 பேர் விண்ணப்பித்த போதும் 880 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். மற்றையவர்கள் வயது கூடியவர்கள் மற்றும் திருமணமானவர்கள் என்பதால் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என யாழ். உதவி பொலிஸ் அத்தியட்சர் மாரப்பன தெரிவித்தார்.

பொலிஸ் சேவையில் இணைப்பதற்காக யாழ்ப்பாணம், சாவகச்சேரி, பருத்தித்துறை, தெல்லிப்பழை, ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையங்களில் முதற்கட்ட தேர்வு இடம்பெற்றது. யாழ். குடாவில் சேவையில் ஈடுபடுத்துவதற்கு 500 இளைஞர், யுவதிகள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.

virakesari

Written by lankamuslim

செப்ரெம்பர் 30, 2009 at 11:21 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

M.L.A.M ஹிஸ்புல்லாஹ் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் பிற்போடப்படவுள்ளது.

leave a comment »

கிழக்கு மாகாணசபையில் நேற்று   சுகாதார அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராக கொண்டு வரவிருந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் விவாதத்திற்கு எடுக்கப்படவில்லை .

கட்சி தலைவர்களுக்கு இடையில் இணக்கமின்மை காரணமாக இந்த விவாதம் இன்று நடைபெறவில்லை. அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தின் பிறிதொரு தினத்திற்கு அந்த விவாதம் பிற்போடப்படவுள்ளது.

கிழக்கு மாகாண சுகாதார தொண்டர் நியமன விடயத்தில் தலையிட்டமை உட்பட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் ஹிஸ்புல்லாஹ் மீது சுமத்தப்பட்ட நிலையில் அவர் மீது ஐக்கிய தேசியக்கட்சி நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வந்துள்ளது.

எனினும் இந்தக் குற்றச்சாட்டை ஹிஸ்புல்லாஹ் மறுத்துள்ளார்.

Written by lankamuslim

செப்ரெம்பர் 30, 2009 at 10:33 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

தமிழ் முஸ்லிம் உறவில் விரிசலை ஏற்படுத்த சதி – நவமணி

leave a comment »

TigerJumping

  • கல்முனை நகரின் ஹிஜ்ரா வீதியை பாரதி வீதி என  பெயர் மாற்றம்
  • பெரிய நீலாவணையில்  கல்முனை வரவேற்கின்றது என்ற வரவேற்பு போட்டு நீக்கம்

அம்பாறை  மாவட்டத்தில் வளர்ந்து வரும் தமிழ் முஸ்லிம் உறவைச் சீர்குலைப்பதற்காக இனக்கலவரமொன்றைத் தூண்டி விடுவதற்கான மறைமுகமான சதியொன்று இடம்பெற்று வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

போராளிகளாக இருந்து ஜனநாயக நீரோட்டத்துக்கு வந்துள்ள தேசிய அரசியல் கட்சி ஒன்றில் அங்கம் வகிக்கும் ஒரு குழுவினரின் கடந்த சில மாதங்களாக மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான சம்பவங்களே இச்சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை கட்டியெழுப்பும் வகையில் செயற்பட்டு வருவதனை விரும்பாத சக்திகள் அவரை அம்பாறை மாவட்டத்துக்கு வரக்கூடாதென்றும் அவரது கட்சி அலுவலகங்கள் திறக்கப்படக்கூடாது எனவும் கூறி மாவட்டத்தில் பேரணி ஹர்த்தால்களை நடத்தி மாவட்டத்தில் குழப்ப நிலையை உருவாக்கி வருகின்றனர்.

அம்பாறை மாவட்டத்தைச் சாராதவர்கள் தலைமைத்துவம் வழங்கி நடத்தும் இந்தச் செயற்பாடுகளில் முக்கியமாக கல்முனை நகரின் ஹிஜ்ரா வீதியை பாரதி வீதி என  மாற்றியுள்ளதோடு பெரிய நீலாவணையில் போடப்பட்டிருந்த கல்முனை வரவேற்கின்றது என்ற விளம்பரப் பலகையும் இவர்களால் சில தினங்களுக்கு முன் உடைத்தெறியப்பட்டுள்ளது. (கருணா அவர்கள் முன் நின்று இதனை அகற்றினார்-என மீன்மகள் என்ற இணையதளம் குறிப்பிட்டுள்ளது ) ஹிஜ்ரா வீதி பாரதி வீதி என மாற்றப்பட்டது தொடர்பான கல்முனை மேயர் எம்.எச்.எம். ஹரிஸிடம் நவமணி வினவியபோது இது தொடர்பாக மாநகர சபையில் எத்தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்றும் இது தொடர்பாக பொலிசில் தான் முறைப்பாடு செய்திருப்பதாகவும் கூறினார்.

பெரிய நீலாவணையில் போடப்பட்டிருந்த வரவேற்பு பலகை உடைக்கப்பட்டது தொடர்பாகவும் பொலிசில் முறைப்பாடு செய்துள்ளதாக மேயர் ஹரிஸ் தெரிவித்தார்.
கல்முனை மாநகர சபை ஒருபோதும் தமிழ் மக்களுக்கு பாரபட்சம் காட்டிச் செயற்பட்டதில்லை எனச் சுட்டிக் காட்டிய அவர் கல்முனையில் வாழும் 30சதவீதமான தமிழர்களுக்கு அவர்களது விகிதாசாரத்திற்கேற்ப நிதி மற்றும் வளங்கள் ஒதுக்கப்பட்டு வருவதாகவும் இதற்கு மாநகர சபையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் உறுப்பினர்கள் சாட்சி பகர்வர் என்றும் கூறினார்.
இரு சமூகங்களும் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டிய நிலையில் பிரிவினையை உருவாக்க முயற்சிப்பது ஏன் என்று புரியாததாகவுள்ளதாகவும் அவர் கூறினார். இக்குழுவின் இம் மாவட்டத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளை பலவந்தமாக மூடச்செய்வதுடன் எழுச்சிக் கூட்டமென்ற பெயரில் முஸ்லிம்களுக்கெதிரான நச்சு விதைகளை விதைத்து வருவதாகவும் தகவல்கள் தெரிவித்து வருகின்றன.

அவ்வாறான மிக முக்கிய கூட்டமொன்று கடந்த 17ம் திகதி நாவிதன் வெளி பிரதேசத்தில் உள்ள விவேகானந்தா மகாவித்தியாலயத்தில் நடத்தப்பட்டதாகவும் இதில் அரச உயர் அதிகாரிகள் பலவந்தமாக அழைத்துச் செல்லப்பட்டு உரையாற்ற வைக்கப்பட்டதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

30 வருடகால யுத்தத்தின் பின்னர் கிழக்கு உதயம் திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தில் பிரதான வீதிகள் கார்பட் இடப்பட்டு வீதி அமைப்பு முற்றாக மாற்றியமைக்கப்படுகிறது. இந்நிலையில் இக் கூட்டம் நடாத்திய ஹர்தால் காரணமாக வீதிகளில் டயர் போட்டு எரிக்கப்பட்டமையால் வீதிகள் யாவும் சேதமாக்கப்பட்டுள்ளன.
மக்களின் விருப்பத்திற்கு மாறாகவே அவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபடுகின்றனர் என அறிய முடிகிறது. அதன் காரணமாக வீதியால் செல்லும் முஸ்லிம் மக்கள் அச்சத்துடன் செல்லவேண்டியுள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்று வரும் இவ் வன்முறைகள் தொடர்பாக தமிழ் புத்தி ஜீவிகள் கருத்து தெரிவிக்கையில் முப்பது வருடமாக இடம்பெற்ற வன்முறைகள், இனமுறண்பாடுகள், சந்தேகப்பார்வைகள் என்பவற்றில் இருந்து மக்கள் விடுபட்டு சந்தோசமாக இருந்து வருகையில் அரசியல் இலாபத்திற்காகவும் அதிகார மோகத்திற்காகவும் இனங்களை பிரித்துவைக்கும் நாடகமொன்று அரங்கேற்றப்படுகிறது.
கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் மிகவும் நல்லவர். ஆவரிடம் இன ரீதியான சிந்தனை இல்லை அவ்வாறான ஒருவர் கிழக்கில் முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் இணைந்து மாகாண சபைக்கான அதிகாரங்களை பெற்றுக் கொள்ள போராடுகின்றார். ஆனால், அவரது முனனைய சகபாடிகள் அவரை குறை கண்டு தூசிக்கின்றனர். இதில் என்ன நியாயம் இருக்கின்றது.

Written by lankamuslim

செப்ரெம்பர் 29, 2009 at 8:52 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

சர்வதேச யுத்தக் குற்ற நீதிமன்றத்தின் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது

leave a comment »

https://i2.wp.com/farm4.static.flickr.com/3164/3048639468_a1b5e38d06.jpg

உலகின் வல்லரசு   நாடான அமெரிக்கா ஏற்றுக்கொள்ளாத சர்வதேச யுத்தக் குற்ற நீதிமன்றத்தின் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. -அமெரிக்கா சர்வதேச மட்டத்தில் மனித உரிமை மிரல்களை சிறப்பாக செய்து வரும் நாடு ஈராக்கில் மட்டும் பத்து லச்சத்திற்கும் அதிகமான முஸ்லிம் மக்களை கொலை செய்த பொறுமை அமெரிக்காவையே   சாரும்-         கடந்த காலங்களில் யுத்தக் குற்ற நீதிமன்றத்தை ஏற்றுக் கொள்ளுமாறு ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐக்கிய நாடுகள் அமைப்பு இலங்கைக்கு தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும், யுத்த குற்ற நீதிமன்றத்தினை இலங்கை அரசாங்கம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Written by lankamuslim

செப்ரெம்பர் 29, 2009 at 11:09 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

புத்தளம் பிரதேச செயலளார்,மாவட்ட செயலகத்திலிருந்து பணியாற்றுகின்றார்

leave a comment »

புத்தளம் பிரதேச செயலாளர் ஏ.சீ.எம்.நபீலுக்கு,மாவட்டத்தின் பிரதி அமைச்சர் ஒருவரினால் விடுக்கப்பட்ட அச்சுறுத்தலையடுத்து திங்கட்கிழமை முதல் பிரதேச செயலகத்துக்கு வருவதை தவிர்த்து புத்தளம் மாவட்ட செயலகத்தில் தமது வரவை பதிவு செய்ய ஆரம்பித்துள்ளார்.

Written by lankamuslim

செப்ரெம்பர் 28, 2009 at 11:39 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஆதார வைத்தியசாலையில் வைத்தியர்கள் இன்மையால் மோதல்

leave a comment »

https://i2.wp.com/media.artdiamondblog.com/images2/HavanaEyeHospital.jpg

திருகோணமலை கிண்ணியா ஆதார  வைத்தியசாலையில் நேற்றுமுன்தினம் இரவு பெண் நோயாளியின் உறவினர்களுக்கும், ஆண் தாதிகளுக்குமிடையே ஏற்பட்ட கைகலப்பில்  இருவர் காயமடைந்தர். கருச்சிதைவு ஏற்பட்ட பெண் யொருவரை கிண்ணியா ஆதார வைத்தியசாலையில் அனுமதிப்பதற்காக சென்றபோது அங்கு எந்தவொரு வைத்தியரும் கடமையில் இருக்கவில்லை. இந்நோயாளி பின்னர் தனியார் மருத்துவ நிலையத்துக்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கு போதிய வசதியின்றி மீண்டும் மருத்துவமனையில் மயக்கமுற்ற நிலையில் அனுமதிக்கப்பட்டார். அப்போதும் வைத்தியர்கள் இருக்கவில்லை. இந்நிலையில், கோபமுற்ற நோயாளியின் உறவினர்களுக்கும் அங்கு கடமையிலிருந்த ஆண் தாதிகளுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட கைகலப்பில்  இருவர் காயமடைந்தர் பின்னர்  நோயாளியின் உறவினர் இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

Written by lankamuslim

செப்ரெம்பர் 28, 2009 at 8:58 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது