Lankamuslim.org

One World One Ummah

Archive for ஓகஸ்ட் 1st, 2009

பொலிஸார், படையினரை தவிர வேறு எவரும் ஆயுதங்கள் வைத்திருக்க அனுமதிக்கப்படமாட்டாது

leave a comment »

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று முதலாம் திகதி முதல் பொலிஸ் மற்றும் பாதுகாப்பு படையினரைத் தவிர வேறு எவரும் ஆயதங்களை வைத்திருக்க அனுமதிக்கப்படமாட்டார்கள் என கிழக்கு பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் எடிசன் குணதிலக்க தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் வர்த்தகர்கள் மற்றும் தொழில் அதிபர்கள் கலந்துகொண்ட கூட்டமொன்றில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஈ.பி.டி.பி., புளொட், ஈ.பி.ஆர். எல்.எப். (பத்மநாபா அணி), ரி.எம்.வி.பி.ஆகிய அமைப்புகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்த இக்கூட்டத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய பிரதி பொலிஸ் மா அதிபர் எடிசன் குணதிலக்க, வர்த்தகர்கள் தொடர்ந்தும் கப்பம் கொடுப்பதையும், மதுபான முகவர்களும் வியாபாரிகளும் தமது தரகுகளை கொடுப்பதற்காக அதிக விலைக்கு மதுபான வகைகளை விற்பனை செய்வதையும் நிறுத்திக்கொள்ளவேண்டும். இல்லையேல் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க நேரிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisements

Written by lankamuslim

ஓகஸ்ட் 1, 2009 at 4:57 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஆபாசப்பட இணையத்தளங்களை கண்காணிக்க குழுவொன்று நியமனம்

leave a comment »

ஆபாசப் படங்களைப் பிரசுரிக்கும் இணையத்தளங்களைக் காண்காணிப்பதற்காகக் குழுவொன்றை இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழு நியமித்துள்ளது.

ஆபாசப் படங்களைக் கொண்ட இணையத்தளங்கள் தொடர்பாகத் தொடர்ந்து விழிப்புடன் செயற்படுவதற்குத் தொலைபேசி, இணையச் சேவைகளை வழங்கும் கம்பனிகள் இணக்கம் தெரிவித்திருப்பதாக தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழு கூறியுள்ளது. அத்துடன், இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடும் இணையத்தளங்களைக் கட்டுப்படுத்தவும் அவை இணங்கியுள்ளன. ஏற்கனவே இந்த நடவடிக்கைகளை மேற்கொண்ட 12 இணையத்தளங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பாக கண்காணிப்புக் குழுவொன்று அமைக்கப்பட்டிருப்பதாகவும் இக்குழுவின் உறுப்பினர்கள் ஆபாசப் படங்களைக் காண்பிக்கும் இணையத்தளங்கள் தொடர்பாக விழிப்புடன் செயற்பட்டு ஆணைக்குழுவுக்குப் பரிந்துரை செய்வார்கள் என்றும் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் பிரியந்த காரியப்பெரும நேற்று வெள்ளிக்கிழமை கூறியுள்ளார்.

இதேவேளை, தமது பிள்ளைகள் தொடர்பாகவும் இணையத்தளத்தில் அவர்களின் செயற்பாடு குறித்தும் அதிகளவு கவனத்துடன் இருக்குமாறு பெற்றோரிடம் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது

Written by lankamuslim

ஓகஸ்ட் 1, 2009 at 4:54 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

யாழ்ப்பாணம் சுற்றுலாப்புரியாக மாற்றப்படும் : அமைச்சர் பைசல் முஸ்தபா

leave a comment »

https://i0.wp.com/www.geocities.com/vhgs_aust/jaffna.jpg

யாழ்ப்பாணம் சுற்றுலாப்புரியாக மாற்றப்பட உள்ளதாக சுற்றுலா மேம்மாட்டு அமைச்சர் பைசல் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

ஹிக்கடுவ கரையோரப் பகுதி சுற்றுலாத் தள அங்குரார்ப்பண வைபவத்தில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

“முன்னாள் யுத்த களமாக அன்றி யாழ்ப்பாணத்தின் பல்வகை சிறப்பம்சங்கள் குறித்துப் பிரசாரம் செய்வதன் மூலம் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளைக் கவர முடியும்.

வடக்கு கிழக்கிலும் இவ்வாறான நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய அரசாங்கம் அதிக நாட்டம் காட்டி வருகிறது.

பிரித்தானியா, கனடா போன்ற நாடுகளில் உள்ள புலம் பெயர் தமிழர்கள் யாழ்ப்பாணத்திற்கு வருகை தர அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதன் மூலம் சுற்றுலாப் பயணிகளைக் கவர முடியும்” என்றார்.

Written by lankamuslim

ஓகஸ்ட் 1, 2009 at 4:48 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பேருவளையில்: முஸ்லிம்களுக்கும் கிடைத்த மிக உயர்ந்த அவமான பரிசு

leave a comment »

பேருவளையில் 31/7/2009  பிரதான சந்தேக நபரை கைது செய்ய கோரி  ஜும்மா தொழுகையின் பின் ஆயிர கணக்கானவர்கள் ஆர்பாட்டம் நடத்தினர்   இதில் கலந்துகொண்டவர்கள் காதிரியா கட்டளைகளை பின்பற்றும் புஹாரி தரீக்கா தலைவரை  கைது செய்ய கோரி கோசமிட்டனர்  கடந்த 24-7-2009 அன்று இரவு 12 மணி அளவில் பேருவளையில் உள்ள மஸ்ஜிதுர் ரஹ்மான் ஜும்மா பள்ளிவாசலுக்குள் புகாரி தரீகாவை சேர்ந்த கும்பல்   வாழ்களுடன் நுழைந்து பள்ளிவாசலில் இருந்த சுமார் 20 பேரை வெட்டி தாக்கினர். இத்தாக்குதலில் பலர் பலத்த காயமடைந்தனர். இதில்    இருவர்  சம்பவ இடத்திலேயே பலியாகினர்

இது வரையில் 131 பேர் வரை கைதானதாகவும் சரன் அடைந்ததாகவும்    போலீஸ் கூறுகிறது இவர்கள் களுத்துறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தபட்டனர்   இவர்களை ஆகஸ்ட் மாதம் 6ம்  திகதி வரை தடுப்புகாவளில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார் இலங்கை வரலாற்றில் ஒரு குறித்த கொலை சம்பவத்துடன் தொடர்புதைய 130 பேர் வரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தபட்டது இதுதான் முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது    இது முஸ்லிம்களுக்கும் கிடைத்த மிக உயர்ந்த அவமான பரிசு , உலகை ஆண்ட, ஆளவந்த இஸ்லாம் நீதியின்  வளிகாட்டல்   அல்-குர்ஆன் அதை பின்பற்றுவதாக கூறும் சமுதாயம் இஸ்லாம் அல்லாத சக்திகளிடம்  தமக்கு மத்தில் ஏட்பட பிரச்சனைக்கு   நீதி வேண்டி கையேந்துகிறது  மண்டியிடுகிறது.
“நீங்கள் ஏதேனுமொரு விவகாரத்தில் பிணங்கிக் கொண்டால், அதனை அல்லாஹ்வின் பாலும் அவனுடைய ரஸுலின் பாலும் மீட்டி விடுங்கள். நீங்கள் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்புகின்றவர்களாக இருந்தால் (அவ்வாறு செய்யத் தவற மாட்டீர்கள்) இதுவே மிகச் சிறந்ததும், மிக்க அழகான முடிவுமாகும்” (4:59).

“(நபியே!) உமது இறைவனின் மீது சத்தியமாக (மூமின்களாகிய) அவர்கள் தங்களுக்குள் ஏற்பட்ட சச்சரவில் உம்மை நீதிபதியாக அங்கீகரித்து, நீர் செய்யும் தீர்ப்பைத் தங்கள் மனங்களில் எத்தகைய அதிருப்தியுமின்றி அங்கீகரித்து முற்றிலும் வழிபடாத வரையில் அவர்கள் (உண்மை) மூமின்களாக ஆக மாட்டார்கள்” (4:65).

முஸ்லிம் சமுதாயம் உலகளாவிய இஸ்லாமிய கிலாபத் நோக்கி முன்னேருவதுதான் இதற்கான ஓரே  வலி.

Written by lankamuslim

ஓகஸ்ட் 1, 2009 at 12:46 பிப

கட்டுரைகள், முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

தலிபான்களைப் போல் அரசு செயற்படுகின்றது

leave a comment »

* மங்கள சமரவீர தெரிவிப்பு

தலிபான்களைப் போல் மகிந்த ராஜபக்ஷவின் அரசு செயற்பட்டு வருகின்றது. இன்று வயது வந்தவர்களுக்கான திரைப்படங்களைத் தடை செய்துள்ள அரசு நாளை ஆபாசப்படங்கள் இருப்பதாகக் கூறி சிகிரியா குகைக்கு குண்டு வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லையென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவுத் தலைவரும் எம்.பி.யுமான மங்கள சமரவீர தெரிவித்தார்.

இராஜகிரியவிலுள்ள அவரது கட்சித் தலைமையகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Written by lankamuslim

ஓகஸ்ட் 1, 2009 at 10:44 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது