Lankamuslim.org

Archive for ஓகஸ்ட் 2009

மொஹமட் சலீம் என்ற ஒரு முஸ்லிம் புலி சந்தேக நபர் இரண்டு தடவைகள் மீடியாக்களால் கைதுசெய்யப்பட்டுள்ளார்

leave a comment »

LTTE

புலிகளின் செயற்பாட்டாளர்  ஒருவர் இன்று பாதுகாப்புத் தரப்பினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் மன்னார் மற்றும் வில்பத்து காடுகளில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் புலி இயக்க உறுப்பினர்களுக்கான உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை விநியோகித்து வந்தவரென்று தெரிவிக்கப்படுகிறது. இவர் புத்தளம் மாவட்டம் வண்ணாத்திவில்லுப் பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இவர் வில்பத்துப் பகுதியில் 2002ம் ஆண்டு வேட்டைக்குச் சென்றிருந்தபோது புலிகளால் பிடித்துச் செல்லப்பட்டு பின்னர் இறுதி சண்டையின்போது வெள்ளை முள்ளிவாய்க்கால் பகுதியிலிருந்து தப்பி வந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட்  25, 2009 அன்று கைதுசெய்யப்பட்டு வண்ணாத்திவில்லு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட மொஹமட் சலீம் என்ற  இளைஞர் பற்றிய தகவல் மீண்டும் இன்று  ஆகஸ்ட்  31, 2009 இன்று இரண்டாவது தடைவையாக வெளிவந்துள்ளது  ஆக மொஹமட் சலீம் என்ற நபர் இரண்டு தடவைகள் மீடியாக்களால் கைதுசெய்யப்பட்டுள்ளார்    உண்மை என்னெவன்றால்  ஆகஸ்ட்  25, 2009 அன்று கைதுசெய்யப்பட்டு இன்று அந்த கைது பற்றி உத்தியோக பூர்வமாக அறிவிக்கபட்டுள்ளது என்பதுதான்.

Advertisements

Written by lankamuslim

ஓகஸ்ட் 31, 2009 at 9:42 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கிழக்குமாகாண ஆளுனரின் பதிலுக்கு பாராளுமன்ற உறுப்பினறும் முஸ்லிம் காங்ரஸ் தலைவருமான ரவூப் ஹகீம் அளித்த பதில்கள்

leave a comment »

SLMC

இங்கு கிளிக் செய்யவும்

Written by lankamuslim

ஓகஸ்ட் 31, 2009 at 4:06 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

வடக்கில் மீட்கப்பட்ட பிரதேசங்களில் புதிதாக சிங்கள மக்களை குடியேற்றும் திட்டம் அரசாங்கத்திடம் இல்லை

leave a comment »

வடக்கில் மீட்கப்பட்ட பிரதேசங்களில் புதிதாக சிங்கள மக்களை குடியேற்றும் எந்தத் திட்டமும் அரசாங்கத்திடம் இல்லை. அங்கு முன்னர் வாழ்ந்துவந்த மக்கள் சகல வசதிகளுடனும் அவர்களது இடங்களி லேயே மீள்குடியமர்த்தப்படுவார்கள்.
ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன இவ்வாறு விளக்கம் அளித்துள்ளார்.
மீட்கப்பட்ட பிரதேசங்களில் சிங்கள மக்களைக் குடியமர்த்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என ஸ்ரீ.சு.க. மக்கள் பிரிவுத் தலைவர் மங்கள சமரவீர தெரிவித்த கருத்தை மறுத்துள்ளார் ஊடகத்துறை அமைச்சர்.

Written by lankamuslim

ஓகஸ்ட் 31, 2009 at 1:01 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இலங்கைத் தமிழ்ப் பெண் ஒருவர் விசா இல்லாமல் பிரிட்டன் பயணம்

leave a comment »

இலங்கைத் தமிழ்ப் பெண் ஒருவர் விசா இல்லாமல் கொழும்பிலிருந்து பிரிட்ட னுக்குச் செல்வதற்கு கொழும்பிலுள்ள பிரிட்டிஷ் தூதரகம் உதவி செய்தமை தெரியவந்திருப்பதாக இலங்கை அரசு தெரி வித்திருக்கின்றது.
குறித்த யுவதி பயங்கரவாதச் செயல்களுடன் தொடர்புபட்டவரா, பிரிட்டிஷ் தூதரகம் இவ்வாறு மேலும் பலருக்கு விஸா இன்றிச் செல்வதற்கு அனுமதி வழங்கி யுள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை கள் நடைபெறுகின்றன.

அங்கையற்கன்னி கிருஸ்ணபிள்ளை என்ற 40 வயது பெண்ணுக்கே பிரிட்டிஷ் தூதரகம் இவ்வாறு உதவியுள்ளது என வாராந்த அமைச்சரவை மாநாட்டில் ஜனாதிபதி தெரிவித்ததுடன் இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு வெளிவிவகார அமைச்சரைப் பணித்தார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பிட்ட பெண் பிரிட்டனின் ஹீத்ரு விமான நிலையத்துக்குச் செல்வதற்கு உதவுமாறு பிரிட்டிஷ் விமான நிலைய அதிகாரிகளைக் கோரும் கடிதமொன்றை, கொழும்பிலுள்ள பிரிட்டிஷ் தூதரகம் வழங்கியுள்ளமை தெரியவந்துள்ளதாக அரச வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பிரிட்டன் எல்லை முகவர் அமைப்பைச் சேர்ந்த இராஜதந்திர அந்தஸ்துள்ள சோர்னா குருக்ஸ் என்னும் அதிகாரியே குறிப்பிட்ட பெண்ணுக்கு உதவினார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்த  பெண்ணுக்கு விசாவை பிரிட்டிஷ் தூதரகம் வழங்கவில்லை. அதேவேளை, அவர் நேரடி விமானத்தில் அந்த நாட்டுக்குச் செல்வதற்கான உதவிகளைத் தூதரகம் செய்துள்ளது. அவருக்கு உதவுவதற்காக இராஜதந்திரியொருவரைத் தூதரகம் விமான நிலையத்துக்கு அனுப்பி வைத்துள்ளது என்றும் அரச வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Written by lankamuslim

ஓகஸ்ட் 31, 2009 at 12:56 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஊடகவியலாளர் ஜே.எஸ். திஸ்ஸாநாயகம் உயர் நீதிமன்றம் 20 வருட சிறைத்தண்டனை தீர்ப்பு

leave a comment »

பயங்கரவாதத் புலனாய்வு   பிரிவினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள  ஊடகவியலாளர் ஜே.எஸ். திஸ்ஸாநாயகம் தொடர்பான வழக்கு விசாரணை இன்றைய தினம் உயர்நீதிமன்றத்தில் நடத்தப்பட்டது.

வழக்கு விசாரணையையடுத்து  உயர்நீதிமன்றம் அவருக்கு 20 வருட கால சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

இலங்கையின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படும் வகையிலான ஆக்கங்களை ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறியே அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

பயங்கரவாதத் புலனாய்வு பிரிவினால்  கைது செய்யப்பட்ட இவர் , விசாரணைக்காக  ஒரு வருடத்துக்கு மேலாக  தடுத்து வைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

உயர்நீதிமன்றம் அவருக்கு விதித்த 20 வருட கால சிறைத்தண்டனை எதிர்த்து அவரின் குடும்பம் மேல்  முறையீடு செய்ய தீர்மானித்திருப்பதாக தெரியவருகிறது

Written by lankamuslim

ஓகஸ்ட் 31, 2009 at 12:33 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கி.முஸ்லிம் ஆயுதக் குழுக்களுக்கு மீண்டும் ஒரு பொது மன்னிப்புக் காலம்

leave a comment »

வீரகேசரியில் இன்று வந்த தகவல் இதன் உண்மை தன்மை தேடப்படுகிறது:

guns

கிழக்கில் இயங்கி வரும் முஸ்லிம் ஆயுதக் குழுக்களுக்கு மற்றுமொரு பொதுமன்னிப்பு காலம்  வழங்கப்படவுள்ளதாக பாதுகாப்பு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூன்று வாரங்களுக்கு முன்னர் ஆயுதங்களைக் களையுமாறு முஸ்லிம் ஆயுதக் குழுக்களுக்கு பாதுகாப்பு தரப்பினர் அழைப்பு விடுத்திருந்தனர்.

ஆயுதங்களைக் களையுமாறு முஸ்லிம் ஆயுதக் குழுக்களுக்கு விடுக்கப்பட்ட சகல கோரிக்கைகளும் நிராகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

முஸ்லிம் ஆயுதக் குழுக்கள் தொடர்பிலான புலனாய்வு விசாரணைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான பிரதிக் காவல்துறை மா அதிபர் எடிசன் குணதிலக்க தெரிவித்துள்ளார்.

கிழக்கில் இயங்கி வரும் முஸ்லிம் ஆயுதக் குழுக்களிடம் பெருமளவு ஆயுதங்கள் உள்ளன எனவும், சொற்ப அளவிலான ஆயுதங்களே இதுவரையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்படுகிறது.

வீரகேசரியில் இன்று வந்த தகவல் இதன் உண்மை தன்மை தேடப்படுகிறது முன்னரும் தமிழ் சிங்கள பத்திரிகைகள் கிழக்கில் தமிழ், சிங்கள, முஸ்லிம் ஆயுத குழுக்கள்  ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் என்ற பொதுவான அரச படையினரின் அறிவித்தலை முஸ்லிம் ஆயுத குழுக்கள்  ஆயுதங்களை ஒப்படைக்க அரச படையினர் கால எல்லை விதித்துள்ளதாக பரப்புரை செய்தமை குறிபிடதக்கது.

Written by lankamuslim

ஓகஸ்ட் 30, 2009 at 11:24 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

“நாங்கள் தமிழர்கள் ,நாங்கள் சிங்களவர்கள் ,நாங்கள் முஸ்லிம்கள் எனக் கூறி இனி இனவாத அரசியல் செய்ய முடியாது”

leave a comment »

அக்கரைப்பற்றில் ஜனாதிபதி மஹிந்த

படம்:- தினகரன் -இந்திரஜித் பெரேரா

படம்:- தினகரன் -இந்திரஜித் பெரேரா

“நாங்கள் தமிழர்கள் ,நாங்கள் சிங்களவர்கள் ,நாங்கள் முஸ்லிம்கள் எனக் கூறி இனி  இனவாத  அரசியல் செய்ய முடியாது. இதனைத் தவிர்த்து நாட்டை முன்னேற்றக் கூடிய தீர்மானங்களை சிந்தித்து மேற் கொள்ள வேண்டும்.

அமைச்சர் ஏ. எல். எம். அதாவுல்லாவின்   தேசிய காங்கிரஸ் கட்சியின் தேசிய மாநாடும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வாழ்த்தும்  மக்கள் பேரணிக் கூட்டமும் நேற்று அக்கரைப்பற்று பொது விளையாட்டரங்கில் நடைபெற்றன.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தேசிய காங்கிரஸ் தலைவர்  அமைச்சர் ஏ. எல். எம். அதாவுல்லா விருது வழங்கி கெளரவித்தார். மாநாட்டில் கட்சியின் இதழான ‘பரிவட்டம்’ உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைக்கப்பட்டது.

இந்த மாநாட்டில் ஜனாதிபதி தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது:

இந்த நாட்டில் வாழும் முஸ்லிம்கள் எமது சகோதரர்கள் போல் வாழ்கின்றனர். நாம் எல்லோரும் ஒரு தாயின் மக்கள் எம்மத்தியில் எந்தவித பேதமும் இருக்க முடியாது. நாட்டில் சிறுபான்மையினர் என எவரும் இனி  இல்லை.இந்த தேசத்தின் மீது அக்கறை காட்டும் அனைவரும் இலங்கை மாதாவின் பிள்ளைகள் தான் என்னைப் பொறுத்த வரை நான் முதலாவது  இரண்டாவது  மூன்றாவது என நேசிப்பது தாய் நாட்டைத் தான். அது போல் சகலரும் விசுவாசகமாக நடந்து கொள்ள வேண்டும் புத்தியுடன் செயல்பட வேண்டும் .குறுகிய எண்ணம் இருக்கக் கூடாது.என்றும் குறிப்பிட்ட அவர் முஸ்லிம்கள் தொடர்ந்தும் தன் மீது நம்பிக்கை வைத்திருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்

முப்பது வருடகால பயங்கரவாதம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு இன்று நாட்டில் சந்தேகமின்றி அச்சமின்றி சகலரும் வாழும் நிலை உருவாகியுள்ளது. காத்தான் குடி பள்ளிவாசலில் இடம்பெற்றது போன்ற துர்ப்பாக்கிய சம்பவங்கள் இனி எங்கும் நடக்காது.

கிழக்கில் வயலுக்குத் தொழிலுக்குப் போகின்றவர்களும், பாடசாலைக்குப் போகின்ற மாணவர்களும் கூட அச்சத்துடனும் பயத்துடனும் வாழ்ந்த காலம் இருந்தது. இன்று அந்நிலை இல்லை.

முஸ்லிம் மக்கள் என்னிடம் கேட்டதை யெல்லாம் நான் நிறைவேற்றியுள்ளேன். இன்று எமது அரசில் உள்ள சகல முஸ்லிம்களும் அமைச்சர்கள் என்பதை மறக்கக் கூடாது.

கிழக்கில் தனியான மாகாண சபையொன்று இப்போது இயங்குகிறது. ஒலுவில் துறைமுகம் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. இது உங்களுக்கான பெரும் வரப்பிரசாதம் ஆகும்.

நான் முஸ்லிம்களின் மத வழிபாட்டுக்குத் தடைபோடுவதாக பலர் பொய்ப் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். அதனை நீங்கள் நம்பவேண்டாம். இலங்கை வானொலியில் ஒரு நாளைக்கு ஐந்து தட வைகள் ‘பாங்கு’ சொல்வதற்கு வழிவகை செய்தவன் நானே என்பதை மறந்துவிட வேண்டாம். நான் உங்கள் உற்றதோழன் நீங்கள் என்னை நம்பலாம்.

இந்த மாகாணம் 30 வருடங்களாக பாதிக்கப்பட்டு இன்று முழு மாகாணத்தி லும் அபிவிருத்திகள் இடம்பெறுகின்றன. உங்கள் வெற்றி உங்கள் பிள்ளைகளின் வெற்றியும் நாட்டின் வெற்றியுமாகும்.

நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த அழகிய தேசத்தை ஒரேகொடியின் கீழ் கட்டியெழுப்புவோம் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

செய்திகளின் தொகுப்பு

Written by lankamuslim

ஓகஸ்ட் 30, 2009 at 11:50 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது