Lankamuslim.org

One World One Ummah

Archive for ஜூலை 26th, 2009

மீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன் முடங்கிப்போன முஸ்லிம் – (பாகம் -8)

leave a comment »


எஸ்.எம்.எம் பஷீர்

ஏ.சி.எஸ் ஹமீத் அவர்கள் புலிகளைச் சந்தித்தபொழுது பிரபாகரனுடைய மிக முக்கிய நிபந்தனை வடகிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டு 6 வது திருத்தச்சட்டம் நீக்கப்படவேண்டும். மேலும் எம்மக்கள் மத்தியில் புரிந்துணர்வான சூழல் ஏற்படட்டும் ஜனாதிபதி பிரேமதாசாவைச் சந்திக்கலாம் என்று பிரபாகரன் கூறினார். (தகவல் அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை —அற்புதன்) அதேவேளை 09.05.1990 ம் ஆண்டு புலிகளின் அரசியல் கட்சியான விடுதலைப் பலிகளின் மக்கள் மன்னணி விடுத்த அறிக்கையில் மலையகத்தில் வாழும் தமிழ் மக்கள் அனைவரும் இலங்கைக் குடி மக்களே! அவர்கள் அனைவருக்கும் குடியரிமை உடனே வழங்கப்பட வேண்டும். மலையக மக்களை திருப்பி அனுப்புவதற்கு செய்யப்பட்ட ஒப்பந்தங்கள் அந்த மக்களை கலந்தாலோசிக்காமல் செய்யப்பட்டவை. ராஜீவ் –ஜே.ஆர் ஒப்பந்தம் இன்று செத்துவிட்டதைப் போலவே அந்தப் பழைய ஒப்பந்தங்களும் செல்லுபடியற்றவையாகும் என்று குறிப்பிட்டிருந்தனர். இந்தப் பின்னணியில் முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணியினதும், புலிகளினதும் ஒப்பந்த சரத்துக்களும் புலிகளின் நிர்த்தாட்சண்யமற்ற செயற்பாடுகளும் நோக்கப்படவேண்டும். இலங்கை–இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் புலிகளின் மக்கள் முன்னணியின் தலைவரான மாத்தையா என அழைக்கப்பட்ட மகேந்திரராஜா திருகோணமலையில் இடம்பெற்று ஒரு கூட்டத்தில் முஸ்லிம்களை அச்சுறுத்தும் அவர்களின் தனித்துவ அரசியலுக்கு எதிரான கருத்துக்களை பகிரங்கமாக முன்வைத்திருந்தார். மலையக மக்களின் குடியுரிமை குறித்தும் அவர்கள் திருப்பியனுப்பக்கூடாது (இந்தியாவிற்கு) என்று மே மாதம் 1990 ல் அறிக்கைவிட்ட புலிகள்தான் ஆகஸ்ட் மாதம் கிழக்கில் முஸ்லிம் மக்கள்மீதான படுகொலையையும் அக்டோபர் மாதம் வடமாகாண வெளியேற்றத்தினையும். தமிழ் மக்களுடன் பூர்வீகமாக வாழ்ந்த முஸ்லிம் மக்கள்மீது மேற்கொண்டனர்.
புலிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்திய ஏ.சி.எஸ் ஹமீத் அவர்கள் புலிகளின் நன்மதிப்பை பெற்றிருந்தமைக்கு முக்கிய காரணம் அவரது ராஜதந்திர அணுகுமுறைதான் என்றும் புலிகள் பின்னா குறிப்பிட்டனர். இவரது புலிகளுடனான கிழக்கு மாகாண சந்திப்பு குறிதது இக்கட்டுரையின் தொடர்ச்சியில் பின்னர் குறிப்பிட்டுக் காட்டவேண்டிய தேவையும் உள்ளது. இக்கால கட்டத்தில முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணி புலிகளுடன் ஒப்பந்தம ஒன்றினைச் செய்வதற்கு இந்திய –இலங்கை ஒப்பந்தத்திற்குப் பின்னர் செயற்பட்ட சம்பவங்கள் முஸ்லிம் அரசியல் குறிப்பாக வட, கிழக்கில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. ஆனால் இதன் பின்னணியிலுள்ள நோக்கங்கள், செயற்பாடுகள் ஒருபுறம் சமூகப் பாதுகாப்பையும் இன சௌகன்யத்தையும் எற்படுத்துவதற்காக செய்யப்பட்டாலும் மறுபுறத்தில் புலிகளின் தந்திரோபாய நலன்களுக்கு முஸ்லிம்களின் தலைமைததுவங்கள் எவ்வாறு பலியானார்கள்; என்ற கேள்வியும் எழுகின்றது. இந்திய—இலங்கை ஒப்பந்தத்திற்கு எதிரான குறிப்பாக ஜனாப் எம்.எச்.எம் அஷ்ரப் அவர்களின் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸின் எழுச்சிக்கு எதிரான அரசியல் எதிர்ப்பு நிலைப்பாடுகளை கட்டமைத்து தமிழ் தேசிய பாரம்பரிய கோட்பாட்டினை முன்னெடுக்கும் செயற்பாடுகளை புலிகள் மேற்கொண்டனர்.
முஸ்லிம்களுக்கான தனித்துவ கட்சி ஒன்றினை கட்டியெழுப்பவதற்கான முயற்சியில் குறிப்பாக கிழக்கினை அடிப்படையாகக்கொண்டு கொழும்பிலே பினனர் முஸ்லிம் காங்கிரஸில் பிரபல்யமான பலரை உள்வாங்கிய தொடாச்சியான கலந்துரையாடல்களை; மேற்கொண்டிருந்த பின்னணியையும் எம்.ஐ.எம் முகைதீன கொண்டவர். அவா பின்னர் உருவாக்கிய அரசியல் கட்சியான முஸ்லிம்.ஐக்கிய. ஐக்கிய விடுதலை முன்னணியின் சார்பில் எனக்கும் இன்னும் பலருக்கும் அனுப்பிய கடிதம் ஒனறில் குறிப்பிடுகையில்
“ எமது தீவிர செயற்பாடுகளின் விளைவாக தமிழீழ விடுதலைப் புலிகள் நேரடிப் பேச்சுவாhத்தைகளை நடாத்துவதற்கான அழைப்பினையும் எமக்கு விடுத்தனர். இதனை ஏற்று நாங்கள் இந்தியாவிற்கு மேற்கொண்ட விஜயத்தினையும் நடந்த பேச்சுவார்த்தைகளின் பெறுபேறுகளையும் நீங்கள் அறிவீர்கள். இக்கட்டத்தில் நாங்கள் மிகப் பெருமையுடனும் மகிழ்ச்சியடனும் கூறிக்கொள்ள விரும்புவது எங்களது பேச்சுவார்த்தையின் பின்னர் இன்றுவரை தமிழீழ விடுதலைப்புலிகளால் ஒரு சிறிய அளவிலான தாக்குதலும் எற்படவில்லை என்பதைத்தான். தங்களது கட்சி மகாநாட்டிற்கு முன்னோடியாக அனுப்பப்பட்ட இக்கடிதத்தில் மேலும் குறிப்பிட்டிருந்தது
வடக்கிலும், கிழக்கிலும் வாழும் முஸ்லிம்களாகிய எமக்கு தற்போதைய சூழ்நிலையில் எற்படக்கூடிய ஆபத்துக்களிலிருந்து எம்மைப் பாதுகாத்து, நிரந்தரமான அமைதிக்கும், உரிமைகளுக்கும், பாதுகாப்பிற்கும், முன்னேற்றத்திற்கும் உத்தரவாதம் அளிக்கக்கூடிய யதார்த்தபூர்வமானதும், துரதிருஸ்டி வாய்ந்ததுமான ஒரு கொள்கைத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்லவேண்டிய கடமைப்பாடு எங்களுக்கு இருந்தது. இதுபற்றிய ஒரு அக்கறையும், கவலையும் எங்களைப்போலவே இச்சமூதாயத்தின் புத்திஜீவிகளில் ஒருவரான உங்களுக்கும் இருந்தது. எமது சமூதாயத்தில் ஏற்கனவே ஒரு அரசியல்கட்சி (இங்கு முஸ்லிம் காங்கிரஸினரையே குறிப்பிடப்பட்டுள்ளது.) தன்னை நிலைப்படுத்திக் கொண்டுள்ளதை முழுமையாக தெரிந்திருந்தும் இன்னொரு கொள்கையினை முன்வைக்கும்போது இது முஸ்லிம்களை பிளவுபடுத்தும் முயற்சி என்ற அங்கலாய்ப்பினை பரவலாக ஏற்படுத்தும் என்பதனை பூரணமாக அறிந்திருந்தும் நாம் எமது சமூதாயத்தை குறிப்பாக வடக்கிலும், கிழக்கிலும் வாழும் முஸ்லிம்களை சரியான பாதையில் வழிநடாத்திச் செல்லவேண்டியது எமது கட்டாயக் கடமையென உணர்ந்தோம். இதன் விளைவாகவே முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணி உருவாகியது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
கிழக்கு மாகாணத்திலும் பொதுவாக இலங்கையிலும் பெரிதும் மதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் முதன்முதலில் தேர்தல் களத்தில் இறங்கிய டாக்டர் பதியுதீன் மஹ்மூத் அவர்களை தமது புலிகளுடனான பேச்சுவார்த்தைக் குழுவின் தலைமைத்துவத்திற்காக மு.ஐ.வி.முன்னணியினர் அணுகினர். இவர்களின் உள்நோக்கம் புலிகளின அங்கீகாரத்துடன், அஷரப் அவர்களின் அரசியல் எழுச்சியினை தடுத்து தங்களைப் பதிலீடு செய்வதுமாகும். இவ்வொப்பந்தம் புலிகள் –முஸ்லிம் ஒப்பந்தம் என்றும் கூறப்பட்டாலும் கிழக்கில் அஷரப்பின் எதிரணியினரால் முஸ்லிம்களின் மதிப்பைப் பெற்றிருந்த அக்காலகட்டத்தில ;அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த ஜனாப் பதியுதீன் அவர்களின் முகவரி அவர்களுக்கு கைகொடுத்ததாயினும இவ்வொப்பந்த அறிக்கையில் எம்.ஐ.எம் முகைதீனும், கிருஸ்னகுமாரும் (கிட்டு) ஒப்பமிட்டார்கள். எனவே இது உண்மையில் முகைதீன் –கிட்டு ஒப்பந்தமெனச் சொல்வதும் பொருத்தமாயிருக்கலாம். ஓப்பந்தத்திலுள்ள முக்கிய விடயங்கள் பாதுகாப்புக் குறித்த அச்சம்கொண்ட முஸ்லிம்களின் பகைப்புலத்தில் அதன் உள்ளடக்கம் முக்கியம் வாய்ந்ததாகவே கருதப்பட்டது. புலிகள் அஷரப்பின் எதிரணியினரின் அரசியலையும் முஸ்லிம்களின் பலவீனத்தையும் பயன்படுத்திக்கொண்டனர்.
இவ்வொப்பந்தத்தின்மூலம் புலிகளின் அடிப்படை இலக்கான தமிழர் பாரம்பரிய தாயகக்கோட்பாடான இலக்கினை ஆதரிபப்தென்றும் இலங்கையில் வாழும் முஸ்லிம் மக்கள் தமிழ் மொழி பேசுபவர்களாயினும் அவர்கள் தமிழ் தேசியத்திற்கு உட்படும் தனித்துவமான ஒரு இனக்குழு என இது அடிப்படையில் தனித்தேசிய அடையாளத்தினை முஸ்லிம்களால் அவ்வப்போது முன்வைக்கப்படும் சுய நிர்ணய உரிமைக் கோரிக்கையினை மறுப்பதாக அமைந்திருந்தது. ( They (Muslims ) are a distinct ethnic group falling within the totality of Tamil nationality ) இக்குழுவினர் இலங்கை திரும்பியதும் முதன்; முதல் எம்.ஐ.எம் முகைதீன் இந்தியப பிரதமரை யுத்த நிறுத்தம் செய்யுமாறு வேண்டுகோள் விடுத்ததுடன் வடகிழக்கு மாகாணங்கள் இணைந்திருக்கும் பிரகடனத்தினை வெளியிடுமாறும் ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தனாவிற்கு வேண்டுகோள் விடுத்தார்.

தொடரும்………
Advertisements

Written by lankamuslim

ஜூலை 26, 2009 at 8:49 பிப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

கிலாபத்தை மீண்டும் ஏற்படுத்துவது அனைவர் மீதும் கடமை

leave a comment »

வீரமிக்க இஸ்லாமிய வரலாறு பற்றியும் இஸ்லாமிய வரலாறு கண்ட வீரமிக்க இஸ்லாமிய போராளிகள் பற்றியும் இஸ்லாமிய கிலாபத் 1924ல் விழ்ச்சிக்கு காரணமான துரோகி முஸ்தபா  கமால் அதாதுர்  பற்றியும் இஸ்லாமிய கிலாபத்தை மீண்டும் ஏற்படுத்துவது அனைவர் மீதும் கடமை என்பதை கூறும் ஆங்கில பாடல்

Written by lankamuslim

ஜூலை 26, 2009 at 6:09 பிப

வகைப்படுத்தப்படாதது இல் பதிவிடப்பட்டது

ஈரானிய துணை ஜனாதிபதி பணி நீக்கம்

leave a comment »

ஜனாதிபதி எஸ்பான்டியர் ராஹிம் மாஷாயியை ஜனாதிபதி முகமட் அகமட்நிஜாட் பணி நீக்கம் செய்துள்ளார்.

ஈரானிய ஆன்மீகத் தலைவர் அயதுல்லா அல்-கொமேனியின் கட்டளைக்கு ஏற்ப ஜனாதிபதி இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஈரானிய ஆளும் கட்சியின் கொள்கைகளுக்கு புறம்பான வகையில் செயற்பட்ட காரணத்தினால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மாஷாயை பணி நீக்குவது தொடர்பில் கடந்த ஒருவார காலமாக ஆன்மீகத் தலைவர் அயதுல்லா கொமேனிக்கும், ஜனாதிபதிக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

சிரேஷ்ட துணை ஜனாதிபதி மாஷாய் அரசாங்கத்தின் கொள்கை நிலைப்பாடுகளை மதிக்காது செயற்பட்டு வருவதாக அயதுல்லா கொமேனி கடித மூலம் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி முஹமட் அஹமட்நிஜாடின், துணை ஜனாதிபதியை பணி நீக்கம் செய்துள்ளார்.

ஜனாதிபதிக்கு அயதுல்லா கொமேனி அனுப்பி வைத்த கடிதத்தின் பிரதி தேசிய தொலைக்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஈரானிய கடும்போக்குடைய பல்கலைக்கழக மாணவர்கள் துணை ஜனாதிபதியை பணி நீக்குமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது

virakesari

Written by lankamuslim

ஜூலை 26, 2009 at 3:08 பிப

உலக செய்திகள், பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

யாழ். மாநகரசபைத் தேர்தலில் இடம்பெயர்ந்த நிலையில் புத்தளம் மாவட்டத்தில் வசிக்கும் 4559 பேருக்கான வாக்காளர் அட்டைகள்

leave a comment »

யாழ். மாநகரசபைத் தேர்தலில் இடம்பெயர்ந்த நிலையில் புத்தளம் மாவட்டத்தில் வசிக்கும் 4559 பேருக்கான வாக்காளர் அட்டைகள் விநியோகம் செய்வதற்கு கிடைக்கப்பெற்றுள்ளதக மாவட்ட தபால் நிலைய பொறுப்பதிகாரி எம்.றியாஸ்டீன் தெரிவித்தார்.இதனடிப்படையில், புத்தளத்தில் 3766 பேரும் பாலாவியில் 469 பேரும் மதுரங்குளியில் 82 பேரும் கல்பிட்டியில் 46 பேரும் பத்துளுஓயாவில் 24 பேரும் வாக்களிக்கவென வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படவுள்ளன.

இம்மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் உரியவர்களின் முகவரிக்கு இந்த வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

இதேவேளை, புத்தளம் மாவட்டத்தில் யாழ். மாநகரசபைக்கு வாக்களிக்கவுள்ள வாக்காளர்களுக்கென 5 வாக்களிப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்படவுள்ளதாக மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி கிங்ஸ்லி பெர்னாண்டோ தெரிவித்தார்.

புத்தளம் ஸாஹிரா தேசியக் கல்லூரி, பாலாவி சிங்கள பாடசாலை, கல்பிட்டி அல் அக்ஷா தேசிய பாடசாலை, புளிச்சாக்குளம் உமர் பாரூக் வித்தியாலயம் என்பவற்றில் தலா ஒவ்வொரு வாக்குச் சாவடிகளும் தில்லையடி முஸ்லிம் வித்தியாலயத்தில் இருவாக்குச் சாவடிகளும் அமைக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

Written by lankamuslim

ஜூலை 26, 2009 at 12:51 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

வெள்ளவாயவில் 2 இளைஞர் சுட்டுக்கொலை

leave a comment »

மொனராகலை வெள்ளவாய தெமலிய பகுதியில் இரு இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.இவ்விருவரது சடலங்களும் நேற்று முன்தினம் வியாழக்கிழமை மாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

லுனுகம்வெகர, தனமல்விலவைச் சேர்ந்த கால்நடை பண்ணையாளர்களிடையே இடம்பெறும் தகராறு முற்றியே இந்தக் கொலைகள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இது தொடர்பாக விசேட பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வருவதுடன் அந்தப் பகுதியில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

கொல்லப்பட்டவர்களில் ஒருவர் லுனுகம்வெகர பகுதியில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவரெனத் தெரிவிக்கப்படுகிறது.

Written by lankamuslim

ஜூலை 26, 2009 at 12:40 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது