Lankamuslim.org

One World One Ummah

Archive for ஜூலை 25th, 2009

பாபர் பள்ளி ஆவணங்கள் கானாமல் போனதை கண்டித்து இந்திய முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்!

leave a comment »

உத்திரப்பிரதேசத்தில் பாபர் மஸ்ஜித் நிலவக்கில் தொடர்புடைய 23 கோப்புகள் மாயமானதாக கூறுவது வேடிக்கையாகவும், வினோதமாகவும் உள்ளது. இது தொடர்பாக உத்திரப்பிரதேச நீதிமன்றம் சி.பி.ஐ விசாரனைக்கு உத்தரவிட்டுள்ளது.

நாட்டையே உலுக்கிய இப்படிப்பட்ட முக்கியமான கோப்புகள் காணாமல் போனால் இந்திய நாட்டில் எப்படி வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் மாற்றலாம், மறைக்கலாம் என்ற நிலை உருவானால் சிறுபான்மை பிரிவு மக்கள் எப்படிப்பட்ட சூழ்நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்பதை கவனிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட அயோக்கியத்தனமான செயலை வன்மையாக கண்டிக்கும் வகையில் இந்திய முஸ்லிம்கள் நேற்று (24-7-2009)  கண்டன ஆர்ப்பாட்டம்

Advertisements

Written by lankamuslim

ஜூலை 25, 2009 at 2:15 பிப

உலக செய்திகள் இல் பதிவிடப்பட்டது

முஸ்லிம்கள் தம்மத்தியில் பிரச்சினைகளை தவிர்கவேண்டும்

leave a comment »

நேற்று (24-7-2009) பேருவளயில் இரண்டு முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர் 8 பேர்  காயம்

பேருவள பகுதியில் அசம்பாவிதம் ஒன்றின்போது இரண்டு முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர் 8 பேர்  காயமடைந்தனர் இந்த கொலை சம்பவத்துக்கு பிரச்சாரத்தின்போது  பரிமாறப்பட்ட வார்த்தைகள் பிரதான காரணமாக கூறப்படுகிறது இது பிற்போக்கான மூட பழக்கவழக்கங்கள்   மூட நம்பிக்கைகள்  என்பனவற்றில்  முழ்கிக்கிடக்கும்  மக்கள் மத்தியில் அதற்கு  எதிராக பிரச்சாரம் செய்தபோது பிரச்சாரத்தில் ஈடுபட்ட    குழுவினருக்கும் அப்பகுதி மக்களுக்கும் ஏற்பட்ட பிரச்சினை இருவரின் கொலையில்  முடிந்துள்ளது இது நன்மைகளின் மாதம் ரமழான் நெருங்கி வரும்வேளையில் அனைத்து முஸ்லிம்களையும்  வேதனையடையச்செய்துள்ளது முஸ்லிம்கள் தம் மத்தியில் பிரச்சினைகனை  தவிர்க்கவேண்டும் அணுகுமுறைகளை சரியாக பயன்படுத்தினால் பிரச்சினைகளின் அளவை குறைத்துகொள்ளமுடியும்

Written by lankamuslim

ஜூலை 25, 2009 at 1:56 பிப

2ம் இணைப்பு- உடதலவின்ன 10 முஸ்லிம் இளைஞர்கள் படுகொலை

leave a comment »

உடதலவின்ன படுகொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட 5 இராணுவ வீரர்களும் விடுதலை-உயர் நிதிமன்றம் தீர்ப்பு

பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த உடதலவின்ன படுகொலை வழக்கில் கொழும்பு மேல்நீதிமன்றத்தினால் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஐந்து இராணுவ வீரர்களையும் உயர் நீதிமன்றம் நேற்று விடுதலை செய்துள்ளது. 2001ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் திகதி பொதுத் தேர்தல் தினத்தன்று உடதலவின்னவில் 10 முஸ்லிம் இளைஞர்கள் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டதுடன் ஐவர் படுகாயங்களுக்குள்ளாகியிருந்தனர். இந்த படுகொலை வழக்கில் குற்றவாளிகளாக காணப்பட்ட இராணுவ வீரர்களான ரஞ்சித் விஜேரத்ன, சுனில் டீ சில்வா, கமல் விஜயரட்ன, அனுரகுமார, புத்திதிசாநாயக்க ஆகியோரே நேற்று உயர்நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த படுகொலை வழக்கில் முன்னாள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அனுருத்த ரத்வத்தை, அவரது மகன்மாரான லொஹான் ரத்வத்தை, சானுகரத்வத்தை ஆகியோர் உட்பட ஐந்து இராணுவத்தினர் மீதும் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. ஆனால், 2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21ஆம் திகதி மேல்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் அனுருத்த ரத்வத்தையும் அவரது மகன்மார் இருவரும் நிரபராதிகள் என விடுவிக்கப்பட்டதுடன் இந்த ஐந்து இராணுவ வீரர்களுக்கும் மரண தண்டனையுடன் நூறு வருட கடூழிய சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டிருந்தது.

இந்த தண்டனைக்கு எதிராக ஐந்து இராணுவ வீரர்களும் உயர்நீதிமன்றத்தில் விசேட மேன்முறையீட்டு மனுவினை தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவினை விசாரித்த உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழு, இராணுவ வீரர்கள் ஐவரையும் அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் நிரபராதிகள் எனத் தீர்மானித்து விடுதலை செய்துள்ளது. பிரதம நீதியரசர் அசோக்க டீ சில்வா, நீதியரசர்களான நிமல் காமினி அமரதுங்க, ஜகத் பாலபட்ட பெந்தி, பி.ஏ. ரத்னாயக்க, சந்திரா ஏக்கநாயக்க ஆகிய ஐவரைக் கொண்ட குழுவினரே இத்தீர்ப்பினை நேற்று வழங்கியுள்ளனர். படுகொலை வழக்கில் மேல்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை தள்ளுப்படி செய்த உயர்நீதிமன்ற நீதியரசர்கள், அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் இராணுவ வீரர்களை விடுவித்துள்ளனர். விடுவிக்கப்பட்ட இந்த ஐந்து இராணுவ வீரர்களும் சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் அனுருத்த ரத்வத்தையின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களாக கடமையாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

உடதலவின்ன பகுதியில் 10 முஸ்லிம் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு ஆரம்பத்தில் கண்டி தெல்தெனிய நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட பின்னர் கொழும்பு மேல்நீதிமன்றத்திற்கு 2002ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் திகதி மாற்றப்பட்டிருந்தது. ட்ரயல் அட்பார் விசாரணை அப்போதைய சட்டமா அதிபரின் வேண்டுகோளை ஏற்று முன்னாள் பிரதம நீதியரசர் சரன் என் சில்வாவினால் நியமிக்கப்பட்ட எரிக் பஸ்நாயக்க, தீபாலி விஜேசுந்தர, சுனில் ராஜபக்ஷ ஆகியோரைக் கொண்ட நீதிபதிகளின் முன்னிலையில் இந்த வழக்கு ட்ரயல் அட்பார் முறையில் நடைபெற்றது.

குற்றச்சாட்டுக்கள்

2001ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த காலப்பகுதிக்குள் பொது தேர்தல் சமயத்தின்போது உடதலவின்ன பகுதியில் 10 முஸ்லிம் இளைஞர்களை மிலோச்சத்தனமாக சுட்டுக் கொன்றமை, ஐந்து முஸ்லிம் இளைஞர்களுக்கு படுகாயம் ஏற்படுத்தியதன் மூலம் இவர்களை படுகொலை செய்ய முயன்றமை, 250 1655 என்ற இலக்கமுடைய வாகனத்தில் பயணம் செய்தவர்களை படுகொலை செய்வது தொடர்பில் சட்டவிரோதமாக கூடி ஆராய்ந்தமை, அரசியல் எதிரிகளை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியமை, வாக்காளர்களை வாக்களிப்பு நிலையத்திற்கு செல்லவிடாமல் தடுத்தமை, வாக்காளர் மற்றும் பொதுமக்களை அச்சுறுத்தியமை, வாக்காளர் அட்டைகள் மற்றும் வாக்குப் பெட்டியை பலவந்தமாக கொள்ளையிட்டமை உட்பட மொத்த 80 குற்றச்சாட்டுகள் இவ்வழக்கு தொடர்பில் சட்டமா அதிபரினால் சுமத்தப்பட்டிருந்தன.

ரத்வத்தைக்கு எதிரான 31 குற்றச்சாட்டுக்கள்

இந்த வழக்கில் பிரதான எதிரியான அனுருத்த ரத்வத்தைக்கு எதிராக 31 குற்றச்சாட்டுக்களும் அவரது புதல்வர்கள் இருவருக்கும் எதிராக 32 குற்றச்சாட்டுக்களும் சட்டமா அதிபரினால் சுமத்தப்பட்டிருந்தன.

இந்த வழக்கு விசாரணையை அடுத்து 706 பக்கம் கொண்ட தீர்ப்பு மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழுவினரால் வழங்கப்பட்டது. இந்தத் தீர்ப்பில் அனுருத்த ரத்வத்தையும் அவரது இரு மகன்மார்களும் நிரபராதிகள் என விடுவிக்கப்பட்டனர். குற்றவாளிகளாக காணப்பட்ட ஐந்து இராணுவ வீரர்களுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டதுடன் கொலை செய்ய முயன்ற குற்றத்திற்காக தலா ஒவ்வொருவருக்கும் நூறு வருட கடூழிய சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் முன்னாள் பிரதி பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்தையின் சார்பில் ஜனாதிபதியின் சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ஷவும் மகன்மாரின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி திரந்த வரலியெத்தவும் விசாரணைகளின் போது ஆஜராகியிருந்தனர். சட்டமா அதிபரின் சார்பில் அன்றைய பிரதி சொலிசிஸ்டர் ஜெனரல் பாலித பெர்னாண்டோ ஆஜராகியிருந்தார்.

வீரகேசரி நாளேடு 7/25/2009

Written by lankamuslim

ஜூலை 25, 2009 at 11:29 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது