Lankamuslim.org

One World One Ummah

Archive for ஜூலை 18th, 2009

நவாஸ் ஷெரீப்புக்கு தேர்தலில் போட்டியிட விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தேர்தலில் போட்டியிடுவதற்கு விதிக்கப்பட்டிருந்த இறுதித் தடையையும் அந்நாட்டு உயர் நீதிமன்றம் நீக்கியுள்ளது.1999 இல் அப்போதைய இராணுவத் தளபதி பர்வேஷ் முஷாரப் பயணித்த விமானத்தை கடத்த முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டு தேர்தலில் போட்டியிடுவதற்கு நவாஷ?க்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

1999 இல் நவாஸ் பிரதமராக பதவி வகித்த அதேவேளை, முஷாரப் இராணுவத் தளபதியாக பதவி வகித்தார்.

இதன்போது தனது அரசாங்கத்திற்கெதிரான சதி முயற்சியை முறியடிக்கும் பொருட்டு முஷாரப்பின் விமானம் இஸ்லாமாபாத் விமான நிலையத்தில் தரையிறங்குவதைத் தடுக்கும் முயற்சிகளில் நவாஸ் ஈடுபட்டார்.

எனினும், இராணுவச் சதிப்புரட்சி மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றிய முஷாரப் தனது விமானத்தைக் கடத்த முயன்றதாக நவாஸ் மீது குற்றம் சுமத்தியிருந்தார்.

இந்நிலையில், இக்குற்றச்சாட்டுகளை கைவிட உயர் நீதிமன்றம் ஏகமனதாகத் தீர்மானித்திருப்பதாக வழக்கறிஞரொருவர் தெரிவித்துள்ளார். நவாஸ் தேர்தலில் போட்டியிடுவதற்கான தடைகளை நீக்க கடந்த இரு மாதங்களில் வெளியான மூன்றாவது தீர்ப்பு இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

Thinakural

Advertisements

Written by lankamuslim

ஜூலை 18, 2009 at 6:04 பிப

உலக செய்திகள், பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

முகாம்களில் வாரத்துக்கு 1400 மரணங்கள் செய்திகளை சுகாதார அமைச்சு நிராகரிப்பு

வடக்கில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கவைக்கப்பட்டிருக்கும் முகாம்களில் வாரமொன்றிற்கு 1400 மரணங்கள் சம்பவிப்பதாக சர்வதேச ஊடகங்களில் வெளியான செய்திகளை முற்றாக மறுத்திருக்கும் சுகாதார அமைச்சு, உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்கள் தொடர்பான சர்வதேச தர நிர்ணயங்களின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் குறைந்த பட்ச மரண எண்ணிக்கையிலும் குறைவான மரணங்களே வடக்கிலுள்ள முகாம்களில் சம்பவிப்பதாகவும் சுட்டிக்காட்டியது.

சுகாதார அமைச்சில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சின் செயலாளர் டாக்டர் அத்துல சாந்த லியனகே இது தொடர்பாக விளக்கமளித்தார்.

அவர் அங்கு மேலும் பேசுகையில்;

“”வடக்கில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருக்கும் வவுனியா முகாம்களில் வாரமொன்றுக்கு 1400 மரணங்கள் சம்பவிப்பதாக சில தினங்களுக்கு முன்னர் “லண்டன் ரைம்ஸ்’ மற்றும் “சண்டே ரெலிகிராப்’ ஆகிய இரு சர்வதேச ஊடகங்களிலும் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன. இதற்கு பல்வேறு தரப்புகளை ஆதாரம் காட்டப்பட்டிருந்தன.

எனினும் வவுனியா முகாம்களில் கடந்த ஜூன் மாதம் 15 ஆம் திகதி முதல் கடந்த 14 ஆம் திகதி (ஜூலை மாதம்) வரையான ஒரு மாத காலப்பகுதியில் மொத்தமாக 163 மரணங்களே சம்பவிக்கின்றன. அதிகபட்சமாக கடந்த 7 ஆம் திகதி 11 மரணங்கள் சம்பவித்திருக்கின்றன.

ஏனைய தினங்களில் அனைத்தும் 10 இலும் குறைவான மரணங்களே சம்பவித்திருப்பதுடன், குறைந்த பட்சமாகக் கடந்த 4 ஆம், 8 ஆம், 14 ஆம் திகதிகளில் தலா இரு மரணங்கள் வீதம் சம்பவித்திருக்கின்றன.

முகாம்களில் 2 இலட்சத்து 65 ஆயிரம் மக்கள் தங்கியிருக்கின்றனர். உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்கள் தொடர்பாக சர்வதேச தர நிர்ணயம் ஒன்று இருக்கிறது. அதன் பிரகாரம் இங்கு இடம்பெயர்ந்திருக்கும் மக்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது தினமொன்றுக்கு குறைந்தபட்சம் 6.6 மரணத்திலிருந்து அதிகபட்சம் 13.2 மரணங்கள் எதிர்பார்க்கக் கூடியதே.

இதில் மரணங்கள் 13 ஐயும் தாண்டினால் அது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயமே. எனினும், இங்கு நாளொன்றுக்கு எதிர்பார்க்கக் கூடிய குறைந்தபட்ச (6.6) மரணங்களிலும் பார்க்கக் குறைவான அதாவது 5.62 மரணங்களே சராசரியாக நாளொன்றுக்கு சம்பவித்திருக்கின்றன.

எனவே, இந்தச் செய்திகளில் எந்த உண்மையும் கிடையாது. இது இலங்கையின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் முயற்சியாகும்’ என்று கூறினார். இதேநேரம், வயோதிபர்களும், போஷாக்கற்றவர்களுமே இவ்வாறு அதிகம் மரணமாவதாகக் கொழும்பு பிரதான சட்ட வைத்திய நிபுணரான டாக்டர் ஆனந்த சமரசேகர இதன்போது தெரிவித்தார்.

Thinakkural

Written by lankamuslim

ஜூலை 18, 2009 at 5:55 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

தனக்கு கட்டுப்படாத செய்தி இணையத்தளங்களை முடக்க இலங்கை அரசு தீர்மானம்

leave a comment »

இலங்கை அரசானது தனக்குக் கட்டுப்பட்டுச் செயற்படாத செய்தி இணையத் தளங்கள் அனைத்தையும் அந்நாட்டில் பார்வையிட முடியாதவாறு முடக்கிவிடுவதற்குத் தீர்மானித்திருப்பதாக நம்பிக்கையான அரச வட்டாரங்களை ஆதாரம் காட்டி சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இவ்வாறான இணையத்தளங்களை யார் நடத்தி வருகின்றார்கள், எங்கிருந்து நடத்துகின்றார்கள் என்ற தகவல்களைக் கண்டறியுமாக குற்றப் புலனாய்வுத்துறைக்கும் இலங்கை அரசு உத்தரவிட்டிருக்கின்றது.

அரசின் நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தும் வகையிலான பரப்புரைகளை மேற்கொண்டுவரும் இணையத் தளங்களைக் கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கை ஒன்று முடுக்கிவிடப்பட்டுள்ளது’ என அரச ஆதரவுச் சிங்கள நாளேடான ‘தினமின’ இன்று செய்தி ஒன்றை வெளியிட்டிருப்பதும் கவனிக்கத்தக்கது.

அரசை சங்கடத்துக்குள்ளாக்கும் வகையிலான செய்திகளை வெளியிட்ட இணையத்தளங்கள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கான விசாரணைகளை காவல்துறையினர் தொடங்கியுள்ளார்கள் எனவும் தினமினவின் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

tamilwin.org

Written by lankamuslim

ஜூலை 18, 2009 at 12:33 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஒன்றரை வயது இரட்டைக் குழந்தைகள் உயிரிழப்பு!

புத்தளம் மாவட்டம் சிலாபம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த ஒன்றரை வயது நிரம்பிய இரட்டைக்குழந்தைகள் உயிரிழந்துள்ளன என சிலாபம் மருத்துவமனை மருத்துவரொருவர் தெரிவித்துள்ளார். சிலாபம் அங்குராங்கொட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த இரட்டைக் குழந்தைகளே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சுகயீனமுற்ற நிலையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இந்த குழந்தைகள் உயிரிழந்துள்ளன. இதில் ஒரு குழந்தை நேற்று முன்தினம் காலையிலும், மற்றைய குழந்தை நேற்று முன்தினம் பிற்பகலிலும் உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் குழந்தைகள் உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

athirady.org

Written by lankamuslim

ஜூலை 18, 2009 at 12:03 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஜனாதிபதி இன்றுஅதிகாலை நாடு திரும்பினர்!

எகிப்தில் நடைபெற்ற 15வது அணிசேரா நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான குழுவினர் இன்றுஅதிகாலை நாடு திரும்பியுள்ளனர். கடந்த 15ம் திகதி எகிப்தின் சராம் எல் ஷெய்க் நகரில் நடைபெற்ற அணிசேரா நாடுகளின் தலைவர்களுக்கான கூட்டத்தொடரில் பங்கேற்று அங்கு விசேட உரையொன்றையும் ஜனாதிபதி ஆற்றியிருந்தார். இலங்கையில் இடம்பெயர்ந்த மக்களை சொந்த இடங்களில் விரைவில் குடியமர்த்தி அவர்களின் வாழ்வாதாரத்திற்கு வழியேற்படுத்திக் கொடுப்பதே தமது நோக்மென்றும் ஜனாதிபதி தமதுரையில் குறிப்பிட்டிருந்தார்.

athirady.org

Written by lankamuslim

ஜூலை 18, 2009 at 11:25 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இலங்கையைச் சேர்ந்த ஹூசேன் நப்ராஸ் நவாஸ் இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் காவல் நிலையத்திலிருந்து தப்பித்துள்ளார்

leave a comment »

இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் காவல் நிலையத்தில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்த இலங்கை நபர்  தப்பி ஓடி விட்டார். இதையடுத்து போலீஸார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். காஸ்மீரிய போராளிகளின்  இணையத் தளத்தைப்  பார்த்துக் கொண்டிருந்த இலங்கையைச் சேர்ந்த ஹூசேன் நப்ராஸ் நவாஸ் இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் பகுதியில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பொலீசாரினால் கைது செய்யப்பட்டார்   சிறையில் அடைக்கப்பட்ட அவரை, நாடு கடத்த உள்ளூர் கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து ஜம்மு கேனால் ரோடு போலீஸாரிடம் சிறை நிர்வாகம் ஹூசேனை ஒப்படைத்தது.

அவரை நாடு கடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில் நேற்று காவல் நிலையத்திலிருந்து தப்பித்துள்ளார்

இந்த சம்பவத்தால் . பணியில் இருந்ததாக முன்ஷி முஷ்டாக், அகமது உள்ளிட்ட இரு காவல்ர்களை மாவட்ட எஸ்.பி. மனோகர் சிங் சஸ்பெண்ட் செய்துள்ளார்.

Written by lankamuslim

ஜூலை 18, 2009 at 12:40 முப

உலக செய்திகள், பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது