Lankamuslim.org

One World One Ummah

Archive for ஜூலை 14th, 2009

சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்தவிற்கு தாமே வேலையை(?) கொடுத்ததாக அமைச்சர் மேர்வின் அறிவித்துள்ளார்.

mervinsilva

சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவிற்கு தாமே வேலையை கொடுத்ததாக தொழில் அமைச்சர் மேர்வின் சில்வா பகிரங்கமாக அறிவித்துள்ளார். லசந்த விக்கிரமதுங்கவை அனுப்ப வேண்டிய இடத்திற்கு அனுப்பியதாகவும் போத்தல ஜயந்தவின் கால்களை உடைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதேபோன்று தமது தொகுதியைச் சேர்ந்த பிரதேசசபை தலைவர் சற்று அதிகமாக துள்ளுவதாகவும் எலும்பு முறிவு வைத்தியர் ஒருவரை கூடவே வைத்துக் கொள்ளமாறு குறித்த பிரதேச சபைத்தலைவருக்கு தாம் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பி;ட்டுள்ளார். ஏழு நாட்களுக்குள் தமது கட்டளைக்கு அடிபணியத் தவறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப் பின்நிற்கப் போவதில்லை என மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். களனி ஹ_னுப்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற பொதுக்கூட்டமொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றிய போது இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஒத்தழைப்பு இருக்கும் வரையில் யாருக்கும் தான் அஞ்சவேண்டிய அவசியமில்லை என அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை களனி பிரதேசசபைத் தலைவரது வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர் என்பதும் குறிப்பிடதக்கது.

athirady.org

Advertisements

Written by lankamuslim

ஜூலை 14, 2009 at 6:22 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

முஸ்லிம்கள் பற்றி சிங்கள பத்திரிகைகள் கூறும் கதைகளை தமிழில் கூறும் தினக்குரல்

leave a comment »

முஸ்லிம் ஆயுதக் குழுக்களுடன் பாதாளக் குழுவும் இணைந்து இயங்குவதாக புலனாய்வுப் பிரிவு தெரிவிப்பு
கிழக்கு மாகாணத்தில் இயங்கிவரும் குழுக்கள் தம்மிடமுள்ள அனைத்து ஆயுதங்களையும் உடனடியாகப் பாதுகாப்புத் துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அரசு உத்தரவு பிறப்பித்திருந்த போதும் முதலில் அதற்காக விதிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் பெரும்பான்மையான கிழக்கு ஆயுதக் குழுக்கள் ஆயுதங்களை ஒப்படைக்கவில்லை. இதன் காரணமாக அரசு மறுபடியும் இறுதிக் காலக்கெடுவாக கடந்த 4 ஆம் திகதியை அறிவித்திருந்தது.எவ்வாறாயினும் இறுதியான காலக்கெடுவாகிய குறித்த தினத்திற்கு முன்னர் கிழக்கில் இயங்கும் குறிப்பிட்ட சில குழுவினரே தம்வசமுள்ள சில ஆயுதங்கள் எனத் தெரிவித்து ஆயுதங்களை ஒப்படைத்தன. இவற்றில் மட்டக்களப்பு காத்தான்குடியில் இயங்கும் பிரபலமான இரண்டு ஆயுதக் குழுக்களும் காத்தான்குடி பள்ளிவாசல் நிலையத்தில் வைத்து ஆயுதங்களை ஒப்படைத்தன. ஆயினும் இவை பாதுகாப்புதுறை தரப்பில் எதிர்பார்க்கப்பட்ட வகையில் பெரும் எண்ணிக்கையில் இருக்கவில்லை.

இவ்வாறு ஒப்படைக்கப்பட்ட ஆயுதங்கள் பற்றித் தெரிவிக்கப்பட்டிருக்கும் தகவல்களுக்கேற்ப ரி 56 வகைத் துப்பாக்கிகள் 16, 0.303 வகை றைபிள்கள்4, ஷொற்கன் துப்பாக்கி ஒன்று,பிஸ்டல் ஒன்று, ஒரு எஸ்.எம்.ஜி. துப்பாக்கி, 5 கட்டுத் துவக்குகள் ஆகியன மட்டுமே ஒப்படைக்கப்பட்டிருந்தன. தவிரவும் 16 கைக்குண்டுகளும் துப்பாக்கி ரவைகள், மகசீன்களும் ஒப்படைக்கப்பட்டன. ஒப்படைக்கப்பட்ட துப்பாக்கிகளின் எண்ணிக்கை அடிப்படையில் பாதுகாப்புத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கும் தகவல்களுக்கேற்ப ஒப்படைக்கப்பட்ட எண்ணிக்கையிலும் பல மடங்கு தொகையான ஆயுதங்கள் கிழக்கில் இயங்கும் ஆயுதக் குழுக்களிடம் இருப்பதாகத் தெரியவருகிறது.

இராணுவப் புலனாய்வுப் பிரிவுகளின் தகவல்களுக்கேற்ப கிழக்கில் இயங்கும் குறிப்பிட்ட தமிழ் குழுக்களை விட பெருந்தொகையான முஸ்லிம் ஆயுதக் குழுக்கள் இயங்கி வருவதாகவும் இதுவரையில் இவ்வாறான 20 குழுக்களின் தலைவர்களை புலனாய்வுப் பிரிவுகள் அடையாளம் கண்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இவர்களில் பாயிஸ், மூதூர் நிலாம் மற்றும் றுஹுல் ஹக் எனப்படும் முஸ்லிம் ஆயுதக் குழுத் தலைவர்கள் பிரபலமானவர்கள் எனவும் இவர்களைப் பற்றிய தகவல்கள் புலனாய்வுப் பிரிவுக்குத் தற்போது கிடைத்துள்ளதாகவும் இவற்றின் அடிப்படையில் அவர்களைக் கைது செய்வதற்கான விசாரணை மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை கிழக்கு விசேட புலனாய்வுப் பொலிஸ் அதிகாரிகள் மேற்கொண்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மேற்படி பாயிஸ், மூதூர் நிலாம், றுஹுல் ஹக் மற்றும் சில முஸ்லிம் தலைவர்களின் கீழ் இயங்கிவரும் ஆயுதக் குழுக்களில் சர்வதேசப் பிரபலமானவையும் மத்திய கிழக்கு, ஈரான், ஈராக், ஆப்கானிஸ்தான் மற்றும் குறிப்பிட்ட முஸ்லிம் நாடுகளில் தீவிரமாகச் செயற்படுபவையுமான அல்ஹைடா, தலிபான், ஜிஹாத் போன்ற முன்னணி முஸ்லிம் தீவிரவாத இயக்கத்துடன் நெருங்கிய தொடர்புடைய தீவிரவாதிகளும் செயற்படுவதாக புலனாய்வுத்துறைக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

இவ்வாறு சர்வதேச முஸ்லிம் தீவிரவாத அமைப்பாகிய “ஜிஹாத்’ முஸ்லிம் இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் இயங்குவதாகத் தகவல் தெரிவிக்கப்பட்ட வீடு ஒன்றை பொலிஸாரும் இராணுவத்தினரும் அண்மையில் சுற்றிவளைத்து அங்கிருந்து ரி56 வகைத் துப்பாக்கிகள் ஏழு மற்றும் ஒரு எஸ்.எம்.ஜி. துப்பாக்கி, அதிசக்தி வாய்ந்த செய்திப் பரிமாற்றக் கருவி பெருந்தொகையான கைக்குண்டுகள் ஆகியவற்றைக் கைப்பற்றினர். மேலும், இதுபற்றி பொலிஸ் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணைகளைத் தொடர்ந்து குறிப்பிட்ட “”ஜிஹாத்’ முஸ்லிம் தீவிரவாத அமைப்புக்கும் கொழும்பில் இயங்கும் பிரபல பாதாளக்குழுவினருக்கும் இடையே மிக நெருங்கிய தொடர்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் அண்மையில் பாதாளக் குழுவினருக்கு எதிரான நடவடிக்கைகளின் போது கொல்லப்பட்ட “”ஆனமாலு இம்தியாஸ்’ எனப்படும் பிரபல குழுத் தலைவரும் மேற்படி “”ஜிஹாத்’ முஸ்லிம் தீவிரவாத அமைப்புடன் நெருங்கிய தொடர்புகளை வைத்திருக்கும் நபர்களில் ஒருவர் எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கிழக்கில் விசாரணைகள், தேடுதல்களை மேற்கொண்டுவரும் புலனாய்வுப் பொலிஸ் பிரிவு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

லங்காதீப:தகவலும் விமர்சனமும்: 12.07.2009

Written by lankamuslim

ஜூலை 14, 2009 at 6:00 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

வீரகமவில் முஸ்லிம் இளைஞன் சுட்டுக் கொலை

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாதோர் வீடொன்றிற்குள் புகுந்து ஒருவரை துப்பாக்கியினால் சுட்டு கொலைசெய்து விட்டுச்சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.நேற்று முன்தினம் நண்பகல் பதுளை வீரகம என்ற இடத்தில் நடைபெற்ற இச்சம்பவத்தில் எம். ரிஸ்வான் என்ற நடுத்தர வயதானவர் உயிரிழந்துள்ளார்.

கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை பொலிஸார் தேடி வருவதுடன் இச்சம்பவம் குறித்து தீவிரப் புலன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Written by lankamuslim

ஜூலை 14, 2009 at 3:28 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் விபத்துக்குள்ளானார்.

மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் நேற்றிரவு பொலிஸ் பார்க்குக்கு அருகே விபத்துக்குள்ளாகி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.ஜகத் டயஸின் காலில் காயங்கள் காணப்படுவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Written by lankamuslim

ஜூலை 14, 2009 at 3:05 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது