Lankamuslim.org

One World One Ummah

Archive for ஜூலை 13th, 2009

பல்வேறு குற்றச்சாட்டுக்களின் பேரில் 25 சிறைச்சாலைகளில் 31 ஆயிரத்து 653 பேர் தற்போது வைக்கப்பட்டுள்ளார்கள்

இலங்கையிலுள்ள மொத்த சனத்தொகையில் சுமார் 1.5 சத வீதமானோர் சிறைச்சாலைகளில் இருப்பதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் வி.ஆர்.டி. சில்வா தெரிவித்தார்.

“பல்வேறு குற்றச்சாட்டுக்களின் பேரில் 25 சிறைச்சாலைகளில் 31 ஆயிரத்து 653 பேர் தற்போது வைக்கப்பட்டுள்ளார்கள்.260 பேர் மரண தண்டனைக் கைதிகள். 184 பேர் ஆயுள் தண்டனைக் கைதிகள்” என தெரிவித்துள்ள அவர் இக்கைதிகளில் 541 பேர் தங்களுடைய தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

“இக் கைதிகளின் வயதைப் பொறுத்த வரை 46 சத வீதமானோர் 20 முதல் 30 வயதுக்கு இடைப்பட்டவர்களாவர். 36.5 சதவீதமானோர் போதைப் பொருள் தொடர்பான குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையவர்கள். 3.6 வீதமானோர் பொது இடங்களில் மது போதை குறித்த குற்றங்களுடன் தொடர்புடையவர்கள்”என்றும் அவர் குறிப்பிட்டார்.

Advertisements

Written by lankamuslim

ஜூலை 13, 2009 at 9:33 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கிழக்கு மாகாண அமைச்சர் நவரட்ண ராஜாவை கைது செய்ய கல்முனை நீதிவான் உத்தர

கிழக்கு மாகாண அமைச்சர் நவரட்ண ராஜாவை கைது செய்து நீதிமன்றில் ஆஜர் செய்யுமாறு கல்முனை நீதிவான் நீதிமன் றம் நேற்று திங்கட்கிழமை உத்தரவிட்டது.
கல்முனை நீதிவான் என்.எம். அப்துல்லா குற்றச்சம்பவம் ஒன்று தொடர்பாக மேற் படி அமைச்சரையும் அவருடன் தொடர் புடைய அமைச்சரின் ஆள்களையும் கைது செய்து எதிர்வரும் 27ஆம் திகதி மன்றில் ஆஜராக்குமாறு கல்முனைப் பொலிஸ் நிலைய சிறு குற்றப் பிரிவு பொலிஸாருக்கு கண்டிப்பான உத்தரவொன்றைப் பிறப்பித்தார்.

ஓட்டோவில் பயணம் செய்த செய்னுலாப்தீன் நஸ்ருல்லா என்பவரை கையாலும், காலாலும், துப்பாக்கியாலும் அடித்து காயப்படுத்தினர் என்று கூறப் படும் சம்பவம் தொடர்பான வழக்கிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மருதமுனைக்கு அருகாமையில் வைத்து நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை பிற் பகல் 3 மணியளவில் ஓட்டோவில் பயணம் செய்த செய்னுலாப்தீன் நஸ்ருல்லா என்பவருக்கும் வெள்ளை நிறப் “பிக்கப்”ஒன்றில் வந்த அமைச்சர் மற்றும் அமைச் சரின் ஆள்களுக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதாகக் கூறப்படுகின்றது.
அமைச்சரும் அமைச்சரின் ஆள்களும் ஓட்டோவில் பயணம் செய்தவரை தாக்கி காயப்படுத்தினர் எனவும், காயப்பட்டவர் உடடனடியாகக் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டபின் தற்போது மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் எனவும் வழக்கு அழைக்கப்பட்டபோது மன்றுக்குத் தெரியப்படுத்தப்பட்டது.
அஷ்ரப் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போது அங்கு கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு காயமடைந்தவர் வழங்கிய முறைப்பாட்டின் பேரிலேயே இவ்வழக்கைத் தாங்கள் தாக்கல் செய்துள்ளனர் எனக் கல்முனைப் பொலிஸ் நிலைய சிறுகுற்றப் பிரிவு பொலிஸாரின் சார்பில் ஆஜரான பொலிஸ் சார்ஜன்ட் அப்துல் ஹை மன்றுக்குத் தெரிவித்தார்.

நேற்றைய வழக்கு விசாரணையின் முடிவில் அவர் சந்தேகநபர்களான அமைச்சர் மற்றும் அமைச்சரின் ஆள்களை கைது செய்து எதிர்வரும் 27 ஆம் திகதி மன்றுக்கு ஆஜராக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

Written by lankamuslim

ஜூலை 13, 2009 at 9:21 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

EPDP பட்டியலில் யாழ் முஸ்லிம்கள்

saraf

Sarapul Annam

Mohamed Nowfer

Mohamed Nowfer

யாழ் மாநகர சபைத்தேர்தல் (2009) இல் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன்(UPFA) இணைந்து வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடும் ஈழமக்கள் ஐனநாயகக் கட்சியின்(EPDP)சார்பில் போட்டியிடும் அபேட்சகர்களின் பெயர் விபரங்களும் அவர்களுக்கான இலக்கங்களும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பட்டியலில் யாழ் முஸ்லிம்கள் இருவரின் பெயர்கள்  குறிப்பிடப்பட்டுள்ளது.  பாபா சாஹிப் முஹிடீன் சரபுள் அனாம் மற்றும் சலீம் முஹம்மத் நவ்பர்

Written by lankamuslim

ஜூலை 13, 2009 at 6:14 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்(கருணா அம்மான்)

அமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) காத்தான்குடிக்கு (2/6/229) மாலை விஜயம் செய்தார். புலிகள் இயக்கத்திலிருந்து அவர் பிரிந்ததன் பின்னரும், அமைச்சரானதன் பின்னரும் காத்தான்குடிக்கு அவர் மேற்கொள்ளும் முதலாவது விஜயம் இதுவாகும். கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ்வின் அழைப்பின் பேரில், அவரது மாகாண அமைச்சில் காத்தான்குடி காரியாலயத்தில் பிரதேச முக்கியஸ்தர்கள், கல்விமான்கள், பள்ளிவாயல் தலைவர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். இங்கு உரை நிகழ்த்திய அமைச்சர் முரளிதரன்

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையினை ஆளும் கட்சியான சு.க. ஊடாக அதிகரிப்பதே எனது இலக்கு. கிழக்கில் மாத்திரமல்ல வடக்கிலும் ஆளும் கட்சியூடான தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை ஆதரிக்கவேண்டும். தமிழ், முஸ்லிம் சமூக வேற்றுமைகளை மறந்து, ஐக்கியத்துடன் செயற்பட வேண்டும். அதற்காகவே தேசிய நல்லிணக்க அமைச்சைப் பொறுப்பேற்றேன். யுத்தம் முடிந்துவிட்டது. இனி இனங்களிடையே ஒற்றுமையைக் கட்டி எழுப்ப வேண்டும். அமைச்சர்களான ஹிஸ்புல்லா, அதாஉல்லா, அமீர்அலி, ரிஷாட் பதியுதீன் ஆகிய முஸ்லிம் அமைச்சர்களின் சேவைகளைப் பாராட்டுகின்றேன். வன்னியில் இடம்பெயர்ந்து வவுனியா நலன்புரி நிலையங்களில் தங்கியிருக்கும் தமிழ் மக்களுக்கு அங்கேயே நின்று ரிஷாட் அமைச்சர் அம்மக்களின் நலன் விடயங்களில் அக்கறைகாட்டி வருகின்றார். ஒரு முஸ்லிம் அமைச்சராக இருந்து கொண்டு அவர் அங்கு ஆற்றிவரும் சேவையானது வரவேற்கத்தக்கதாகும். அமைச்சர் ஹிஸ்புல்லாவும் தமிழ், முஸ்லிம் வேறுபாடில்லாமல் சேவையாற்றி வருகின்றார். இந்த நேரத்தில் அவர் பாராளுமன்றத்தில் இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.அன்று நான் பிரபாகரனிடத்தில் அடிக்கடி கூறுவேன் முஸ்லிம்களை புறக்கணிக்காதீர்கள், முஸ்லிம் தலைவர்களுடன் பேசுங்கள் என்று, அதுதான் அவர் இறுதியில் முஸ்லிம் தலைவர்களுடன் செய்து கொண்ட ஒப்பந்த மாகும்.

Written by lankamuslim

ஜூலை 13, 2009 at 12:40 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது