Lankamuslim.org

One World One Ummah

Archive for ஜூலை 7th, 2009

சிவசேனா தலைவர் பால் தாக்கரே மருத்துவமனையில் அனுமதி

சிவசேனா தலைவர் பால்தாக்கரே (வயது 82) மூச்சு திணறல் காரணமாக கடந்த மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்
இந்த நிலையில் இன்று அவர் மும்பை புறநகர் பகுதியான பந்த்ராவில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் உடல் நலத்துடன் இருப்பதாகவும், வழக்கமான பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisements

Written by lankamuslim

ஜூலை 7, 2009 at 3:21 முப

உலக செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கிழக்கு மாகாணத்தில் 332 விஞ்ஞானப் பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை

கிழக்கு மாகாணத்திலுள்ள அரசாங்க பாடசாலைகளில் நிலவும் விஞ்ஞானப்பட்டதாரிகளுக்கான வெற்றிடங்களை நிரப்பும் வகையில் விரைவில் 332 விஞ்ஞானப்பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படவிருப்பதாக மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் உபுல் வீரவர்தனா தெரிவிக்கிறார் இம்மாகாணத்திலுள்ள பின்தங்கிய மற்றும் மிகபின்தங்கிய பிரதேச பாடசாலைகளில் நிலவும் குறிப்பிட்ட பட்டதாரி ஆசிரியர்கள் பற்றாக்குறையை இந்நியமனம் மூலம் நிவர்த்தி செய்யக் கூடியதாக இருக்கும் என்றும் அவர் தெரிவிக்கின்றார்.

Written by lankamuslim

ஜூலை 7, 2009 at 2:29 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அமெரிக்க ஜனாதிபதி ரஷ்யா பயணம்

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா சென்ற ஞாயிற்றுக்கிழமை ரஷ்யா பயணமானார். தன் குடும்ப சகிதம் பயணத்தை மேற்கொண்டுள்ள பராக் ஒபாமாவுடன் அமெரிக்காவின் முக்கிய அதிகாரிகள் சிலரும் சென்றுள்ளனர்.

அமெரிக்க, ரஷ்யா உறவுகளின் புதிய அத்தியாயத்தை எழுத இந்த விஜயம் உதவும். ரஷ்ய ஜனாதிபதி மெத்விடிவ், பிரதமர் விளா திமிர் புட்டின் சோவியத் ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதி மிகைல் கொர்பச்சேவ் ஆகியோரை யும் சந்திக்கவுள்ளார். நேற்று திங்கட்கிழமை ஒபாமா ரஷ்யாவைச் சென்றடைந்த போது மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது.

ஏ. எப். பி.

Written by lankamuslim

ஜூலை 7, 2009 at 2:27 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அமைச்சர் றிஷாட்டுக்கு பாதுகாப்பு வழங்கிச் சென்ற வாகனம் விபத்து

மெய்ப்பாதுகாவலர் பலி; ஐவர் படுகாயம்

மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு பாதுகாப்புக்காக சென்ற வாகனம் விபத்துக்குள்ளாகியதில் அமைச்சரின் மெய்ப்பாதுகாவலரான பொலிஸ் கான்ஸ்டபிள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஐவர் படுகாயமடைந்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தின் போது வெலிவேரிய பகுதியைச் சேர்ந்த ரணவக்க எனும் பொலிஸ் கான்ஸ்டபிளே உயிரிழந்துள்ளார்.

அமைச்சர் ரிசாட் பதியுதீன் நேற்று மாலை மெனிக்பாம் சென்றார். அவருக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடச் சென்ற மெய்ப்பாதுகாவலர் களுடைய வாகனமே மெனிக்பாம் நிவாரண கிராமத்துக்கு அருகாமையில் வைத்து விபத்துக்குள்ளாகியது.

மெய்ப்பாதுகாவலர்கள் சென்ற வாகனம் மின்சார கம்பத்துடன் மோதியே விபத்துக்குள்ளான தாக அமைச்சர் கூறினார். சம்பவத்தின் போது காயமடைந்த ஐவரும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

செட்டிக்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெ டுத்து வருகின்றனர்

Written by lankamuslim

ஜூலை 7, 2009 at 2:19 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது