Lankamuslim.org

Archive for ஜூலை 2009

பலிபீடமாக மாறிய பள்ளிவாயல்! – எம். பி. எம். பைரூஸ்

leave a comment »

ஜேர்மனியில் நீதிமன்றினுள் வைத்து முஸ்லிம் பெண் ஒருவரை யூத இளைஞன் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் குறித்து சில வாரங்களுக்கு முன்னர் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

அச் சம்பவம் ஏற்படுத்திய அதிர்வலைகளிலிருந்து மீள்வதற்கிடையில், இலங்கையின் பேருவளையில் பள்ளிவாசல் ஒன்றினுள் வைத்து முஸ்லிம்களை முஸ்லிம்களே வாள்களால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் நடந்தேறியிருக்கிறது. கருத்தை கருத்தால் எதிர்கொள்ள முனையாது கத்தியால் எதிர்கொள்ளத் துணிந்ததன் விளைவு இன்று இரு உயிர்களைப் பலியெடுத்து, 15 இற்கும் அதிகமானோரைக் காயப்படுத்தி, விலைமதிப்பிட முடியாத அல்லாஹ்வின் இல்லத்தை அடித்து நொருக்கித் தீயிட்டுக் கொளுத்தியிருக்கிறது.

காத்தான்குடி பள்ளிவாயலில் தொழுது கொண்டிருந்த 103 முஸ்லிம்கள் விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்டு எதிர்வரும் ஆகஸ்ட் 3 ஆம் திகதியுடன் 19 வருடங்கள் பூர்த்தியாகின்ற நிலையில் பேருவளை பள்ளிவாயல் படுகொலை சம்பவம் நடந்திருப்பது கவலைக்குரியது.

இலங்கை முஸ்லிம்களுக்கு மாத்திரமன்றி முழு இலங்கைக்குமே தலைகுனிவை ஏற்படுத்தியிருக்கின்ற இச்சம்பவம், இந்நாட்டின் மும்மொழி ஊடகங்களிலும் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கின்றது. அத்துடன் ஒவ்வொரு ஊடகங்களும் இதனை ஒவ்வொரு விதமாக அறிக்கையிட்டுக் கொண்டிருக்கின்றன.

இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் முஸ்லிம் அரசியல் கட்சிகளிடையே அல்லது முஸ்லிம் அமைப்புகளிடையே அவ்வப் போது முரண்பாடுகள் எழுவதும் ஈற்றில் அவை வன்முறைகளில் முடிவதும் வழமையானவைதான். இருந்த போதிலும் இறுதியாக பேருவளையில் இரு தரப்பினரிடையே தோன்றிய கருத்து முரண்பாடு பள்ளிவாயலினுள் வைத்தே ஒரு சகோதரனை இன்னொரு சகோதரன் படுகொலை செய்யுமளவு பாரதூரமாக மாறியமை இதுவே முதற்தடவையாகும்.

உண்மையில் அங்கு என்னதான் நடந்தேறியது?

பேருவளை மஹகொட, மாளிகாச்சேனையில் அமைந்துள்ள “பைதுல் முபாறக் அல் முஸ்தபவிய்யா புகாரி தக்கியா’வின் 130 ஆவது வருடாந்த புகாரி கந்தூரி வைபவத்தின் இறுதி நாள் நிகழ்வுகள் கடந்த ஜூலை 23 ஆம் திகதி வியாழக்கிழமை குறித்த பள்ளிவாயல் வளாகத்தில் நடைபெற்றன. இந்நிகழ்வில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருகைதந்த ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

இந்தப் பள்ளிவாயலுக்கு மிகச் சமீபமாகவே தற்போது தாக்குதலுக்கு இலக்கான “ஜம்இய்யதுல் அன்சாரிஸ் சுன்னதில் முஹம்மதியா’ அமைப்பினால் நிர்மாணிக்கப்பட்ட “மஸ்ஜிதுர் ரஹ்மான்’ பள்ளிவாயல் அமைந்துள்ளது.

கந்தூரி நிறைவுற்ற நாளுக்கு மறுதினமான வெள்ளிக்கிழமை மஸ்ஜிதுர் ரஹ்மானில் குத்பா பிரசங்கம் நிகழ்த்திய மௌலவி ஒருவர், புகாரி தக்கியாவில் நடைபெற்ற கந்தூரி குறித்து கடுமையான தொனியில் விமர்சித்துள்ளார். இந்த விமர்சனமே குறித்த வன்முறையின் தோற்றுவாயாக அமைந்ததாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

மேற்படி குத்பா நிறைவுற்று சில மணி நேரங்களின் பின்னர் அப்பகுதியில் சலசலப்பு தோன்றியுள்ளது. இரு தரப்பினதும் ஆதரவாளர்களிடையே வாக்குவாதங்களும் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு 6 மணியளவில் “மஸ்ஜிதுர் ரஹ்மான்’ பள்ளிவாயல் வளாகத்தினுள் பிரவேசித்த சிலர் பள்ளிவாயலுக்கு சிறியளவில் சேதத்தை விளைவித்து விட்டுச் சென்றுள்ளனர். இது குறித்து உடனடியாக பேருவளை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பொலிஸார் இதனை பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. இச்சம்பவத்துக்குப் பின்னர் இரு தரப்பினரிடையே பதற்ற நிலை அதிகரித்துள்ளது. சிலவேளைகளில் மோதல்களும் நிகழக் கூடும் என அஞ்சிய பிரதேசவாசிகளில் சிலர் மஸ்ஜிதுர் ரஹ்மான் மற்றும் புகாரி தக்கியா முக்கியஸ்தர்களுக்கு இது குறித்து அறிவித்ததுடன் பிரச்சினையை நிதானமாகக் கையாளுமாறும் அறிவுறுத்தியுள்ளனர். அத்துடன் பொலிஸாருக்கும் இதன் அபாயத்தை தெரியப்படுத்தியுள்ளனர். இதன் பின்னர் மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாயல் மீது தாக்குதல்கள் இடம்பெறக் கூடும் என அஞ்சியதன் காரணமாக பள்ளிவாயலைப் பாதுகாக்கும் கடமையில் சுமார் 30 இளைஞர்கள் ஈடுபட்டிருந்தனர். அத்துடன் குறித்த இடத்திற்கு பொலிஸார் வந்து பாதுகாப்பு அளிப்பர் என்ற எதிர்பார்ப்பும் அவர்களிடத்தில் இருந்தது. ஆனாலும் சனிக்கிழமை அதிகாலை 12.30 மணி வரை பொலிஸார் அங்கு வரவில்லை. வந்ததோ சுமார் 500 பேருக்கும் அதிகமான குண்டர் படைதான். கையில் கத்திகள், வாள்கள் மற்றும் சில கூரிய ஆயுதங்களுடன் மஸ்ஜிதுர் ரஹ்மானினுள் பிரவேசித்த அவர்கள் கையில் அகப்பட்ட சகலரையும் முடியுமானவரை தாக்கினர். பெரும் கூட்டத்தைக் கண்டு தப்பியோடியவர்களைத் தவிர மஸ்ஜிதுர் ரஹ்மானினுள் நின்றிருந்த சகலருமே தாக்குதலுக்கு இலக்காகினர். பள்ளிவாயலின் மலசல கூட பகுதிக்குள் ஒளிந்திருந்த முஹம்மது முஹைதீன் ( 37) முஹம்மது மாஹிர் (30 ) ஆகிய இருவரும் ஸ்தலத்திலேயே கொலை செய்யப்பட்டனர். ஏனைய 15 இற்கும் அதிகமானோர் கடுமையான வெட்டுக் காயங்களுக்கு ஆளாகினர். அத்துடன் பள்ளிவாயலின் கதவுகள், யன்னல்கள், தளபாடங்கள் அனைத்தும் அடித்து நொறுக்கப்பட்டன. பள்ளிவாயல் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 30 இற்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களும் துவிச்சக்கர வண்டிகளும் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. பள்ளிவாயலுடன் இணைந்ததாக அமைந்துள்ள குர்ஆன் மத்ரஸாவும் மருத்துவ நிலையம் ஒன்றும் இதன்போது சேதமாக்கப்பட்டன.

இச்சம்பவத்தில் மரணமடைந்த இருவரினதும் ஜனாஸாக்கள் சனிக்கிழமை மாலை நல்லடக்கம் செய்யப்பட்டன. ஜனாஸா நல்லடக்கத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.இதன்பின்னர் நல்லடக்கத்தில் கலந்துகொண்டோர் பேருவளை பொலிஸ் நிலையம் நோக்கி ஊர்வலமாகச் சென்றதுடன் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இச்சம்பவத்துடன் தொடர்புடைய சகலரையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் கோஷமெழுப்பினர்.இதனையடுத்து அங்கு மீண்டும் பதற்ற நிலை தோன்றியதால் மஹாகொடை மற்றும் மாளிகாச்சேனை பகுதிகளில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. பிரதேசத்தின் பாதுகாப்பு கருதி மறுநாள் ஞாயிற்றுக் கிழமை காலையும் பொலிசார் ஊரடங்குச் சட்டத்தைப் பிறப்பித்தனர்.

இதற்கிடையில் இச்சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் பலரை பொலிசார் கைது செய்தனர். சனிக்கிழமை காலை பேருவளை பகுதியிலிருந்து காலி பயணித்துக் கொண்டிருந்த லொறி ஒன்றைத் தடுத்து நிறுத்திய பொலிசார் அதிலிருந்த 28 பேரை கைது செய்தனர். இறுதியாக இந்தக் கட்டுரை எழுதப்படும் வரை 131 பேர் கைது செய்யப்பட்டு களுத்துறை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.இவர்களை எதிர்வரும் ஆகஸ்ட் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதற்கிடையில் இச்சம்பவம் குறித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள பேருவளை புகாரி தக்கியா நிருவாகத்தினர் மேற்படி பிரச்சினையை தூண்டிய மௌலவி குறித்து தாம் பொலிசில் முறைப்பாடு செய்ததாகவும் பொலிசார் உரிய நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதனாலேயே மக்கள் கொந்தளித்து வன்முறையில் ஈடுபட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

“மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாயலில் குத்பா பிரசங்கம் நிகழ்த்திய மௌலவி மக்களின் மனம் புண்படும்படி பேசினார். இது தொடர்பாக தக்கியாவைச் சேர்ந்த மௌலவிமாரும் சட்டத்தரணிகளும் பொலிசில் முறைப்பாடு செய்தனர். இதனையடுத்து குறித்த மௌலவியை இரண்டு மணித்தியாலங்களுக்குள் பொலிசில் ஒப்படைப்பதாக மஸ்ஜிதுர் ரஹ்மான் நிருவாகிகள் உறுதியளித்தனர். இருப்பினும் இது நடக்காததால் ஆவேசமடைந்த மக்கள் மஸ்ஜிதுர் ரஹ்மானை நோக்கிச் சென்றனர். அங்கு இரு தரப்பினரிடையேயும் கைகலப்பு நடந்தது.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எது எப்படியிருப்பினும் மார்க்கத்தின் பெயரால் எழுந்த முரண்பாடு முழு முஸ்லிம் சமூகத்தையுமே வெட்கித் தலைகுனியச் செய்யுமளவு வன்முறையில் முடிந்திருக்கிறது.மார்க்க விவகாரங்கள் மற்றும் தஃவா பிரசாரங்கள் தொடர்பில் போதிய கள அனுபவமும் தெளிவான சிந்தனையுமற்றவர்களாலேயே நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அடிக்கடி மார்க்க முரண்பாடுகள் தோற்றம் பெறுவதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.இவ்வாறானதொரு அகோரம் நிகழ்ந்தேறிய பின்னரும் இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் மார்க்கத்தின் பெயரால் பிளவுகளும் சண்டை சச்சரவுகளும் நிகழ்ந்தேறுவது அழகல்ல. அது நாம் பின்பற்றும் மார்க்கம் நமக்குக் காட்டித் தந்த வழிமுறையுமல்ல.

நன்றி முஸ்லிம் காடியன்

Advertisements

Written by lankamuslim

ஜூலை 31, 2009 at 9:46 முப

கட்டுரைகள், முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஜனாதிபதி மஹிந்த -பஹ்ரேய்ன் பிரதமர் சந்திப்பு: இருதரப்பு பேச்சு: மூன்று ஒப்பந்தங்கள் கைச்சாத்து

leave a comment »

0013729c0495096afb5427

இலங்கைக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள பஹ்ரேய்ன் பிரதமர் கலீபா பின் ஷல்மான் அலி கலீபா நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். நேற்றுக் காலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பின்போது இரு நாடுகளுக்கும் பொதுவான விடயங்கள் தொடர்பில் விரிவான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதுடன் மூன்று முக்கிய உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்பட்டுள்ளன. வடக்கில் இடம்பெயர்ந்தோரின் புனர் வாழவு மற்றும் மீள்குடியேற்றம் சம்பந்தமாகவும் இப்பேச்சுவார்த்தையின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன் இதற்கான பூரண ஒத்துழைப்பை தமது அரசாங்கம் வழங்குமென பஹ்ரேய்ன் பிரதமர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் உறுதியளித்துள்ளார். பயங்கரவாதத்தை ஒழிப்பதில் இலங்கை மேற்கொண்ட நடவடிக்கைகளைப் பாராட்டிய பஹ்ரேய்ன் பிரதமர், பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்டுள்ள ஏனைய நாடுகளுக்கும் இது சிறந்த முன்னுதாரணமாக அமையுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.

Written by lankamuslim

ஜூலை 30, 2009 at 8:56 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பிரிகேடியர்கள் மூவர் மேஜர் ஜெனரல்களாக பதவி உயர்வு!

leave a comment »

kk

புலிகளை அழிக்கும் வன்னி படைநடவடிக்கையில் முக்கிய பங்காற்றிய பிரிகேடியர்கள் மூவருக்கு மேஜர் ஜெனரல்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது. 58வது படைப்பிரிவுக்கு தலைமை தாங்கிய பிரிகேடியர் சர்வேந்திர சில்வா, 55வது படை பிரிவுக்கு தலைமை வகித்த பிரசண்ணா டி.சில்வா, 59வது படையணிக்கு தலைமை வகித்த சார்ஜி கமலகே ஆகிய பிரிகேடியர்களே மேஜர் ஜெனரல்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

Written by lankamuslim

ஜூலை 30, 2009 at 12:13 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இன்று காளை தலையில் சுடப்பட்ட நிலையில் மேலும் இரண்டு சடலங்கள்

leave a comment »

போலீஸ் தகவல் இன்று காளை  இரண்டு இனம்காணப்படாத துப்பாக்கி குண்டு தலைகளில்   துளைக்கப்பட்ட சடலங்களை  தேல்கண்ட , ரட்டனபிட்டிய பகுதில் காணப்பதுவதாக கூறுகிறது இச்சடலங்கள் இன்னும் இனம்காணப்பவில்லை.

dailymirror

Written by lankamuslim

ஜூலை 30, 2009 at 11:55 முப

நேற்று காலையில் இருவர் சுட்டு கொலை!

leave a comment »

போலீஸ் தகவல் நேற்று காலையில்   குடு  அஜித்  வயது 45 என்பவர் காலியில்  சுடப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்    மற்றும்  கொழும்பு, மாளிகாவத்தைப் பகுதியில் வைத்து போலீசார் “ஆமி  சப்ப” முஹம்மத்   நிஷாத் என்ற இளைஞர் ஒருவரைச் சுட்டுக் கொன்றுள்ளனர். பாதாளக் கும்பலைச் சேர்ந்தவர் என்ற சந்தேகத்தில் நேற்றுக் கைது செய்யப்பட்ட இந்த இளைஞர் ஒரு தொகுதி ஆயுதங்களைக் காட்டித் தருவதாகக் கூறியதால் தாம் அவரை பெலியகொடவுக்குக் கொண்டு சென்றதாகவும், ஆனால் அவர் தான் மறைத்து வைத்திருந்த கைக்குண்டால் போலீசாரைத் தாக்க முயன்றதால் சுட்டதாகவும் போலீசார் கூறுகின்றனர்.

Written by lankamuslim

ஜூலை 30, 2009 at 11:42 முப

பஹ்ரேன் பிரதமர் ஜனாதிபதியுடன் சந்திப்பு பல ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டுள்ளது

leave a comment »

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பஹ்ரேன் பிரதமர் ஷேக் காலிபா பின் சல்மான் அல்-பாலிபா இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

இச்சந்திப்பின் போது இரு நாடுகளுக்குமிடையின் பல ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Written by lankamuslim

ஜூலை 29, 2009 at 11:24 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

குவைத் ஒருங்கிணைந்த நிவாரணக்குழுவின் பிரதிநிதிகள் முசலி பிரதேசத்திற்கு விஜயம்

leave a comment »

குவைத் ஒருங்கிணைந்த நிவாரணகுழுவின் இரு பிரதிநிதிகள் நேற்று மன்னார் முசலி பிரதேசத்துக்கான விஜயமொன்றை மேற்கொண்டனர் செரண்டிப் நிவாரண மற்றும் அபிவிருத்தி சங்கத்தின் வேண்டுகோளின் பேரில் இலங்கை வந்த பிரதிநிதிகள் மற்றும் மீள்குடியேற்ற அனர்த்த சேவைகள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் அழைப்பின்பேரில் முசலிக்கு விஜயம் செய்தனர். தற்போது அரசாங்கம் முசலி பிரதேசத்தை தமது கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்ததன் பிற்பாடு அங்கு மீள்குடியமர்ந்துள்ள குடும்பங்களுக்கு  குவைத் ஒருங்கிணைந்த நிவாரண குழுவின் பிரதிநிதிகளினால் கொண்டு வரப்பட்ட ஒருதொகை உலர் உணவுப் பொதிகள் அம்மக்;களுக்கு கையளிக்கப்பட்டது. குவைத் ஒருங்கிணைந்த நிவாரண குழுவின் இணைப்பாளர்களான பத்ர்ஆஸ் சம்ரூக் மற்றும் பைசல் யகூத் சரண்டிப் தலைவர் எம்.அப்துல் ரஹ்மான் ஆகியோர் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடன் முசலிக்கு சென்று இதனை கையளித்தனர். இதேவேளை வவுனியா சாளம்பைபுரம் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த நிலையில் அநுராதபுரம் இக்கிரிகொள்ளாவ நலன்புரி கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு அமைச்சர் ரிஷாட் மற்றும் பிரதிநிதிகள் இந்த நிவாரணப் பொருட்களை கையளித்தனர்.

Written by lankamuslim

ஜூலை 29, 2009 at 11:17 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது