Lankamuslim.org

One World One Ummah

Archive for ஜூன் 28th, 2009

தற்கொலைப்படையை உருவாக்கும் சிவசேனா!

Advertisements

Written by lankamuslim

ஜூன் 28, 2009 at 7:04 பிப

உலக செய்திகள் இல் பதிவிடப்பட்டது

யாழ். வேட்பு மனு நிராகரிப்புக்கு எதிராக முஸ்லிம் காங்கிரஸ் சட்ட நடவடிக்கை?

யாழ். மாநகரசபைத் தேர்தலில் தமது கட்சி தாக்கல் செய்த வேட்பு மனு நிராகரிக்கப்பட்டமை தொடர்பாக மேல்நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்ய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இத் தேர்தலில் போட்டியிடுவதற்கு முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தது. வேட்பாளர் ஒருவரின் கையொப்பம் குறித்த சந்தேகத்தை அடுத்து அந்த மனு நிராகரிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து மேல் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்ய சட்ட ஆலோசகர்களுடன் பேச்சு நடத்தப்பட்டு வருவதாக கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் நிசாம் காரியப்பர் கூறியதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Written by lankamuslim

ஜூன் 28, 2009 at 6:01 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இலங்கை படகு அகதிகளுக்கு புகலிடம் வழங்க பிரான்ஸ் முடிவு

அகதிகளாக படகில் சென்றபோது மோல்ரா கடற்பகுதியில் காப்பாற்றப்பட்ட இலங்கை உட்பட நான்கு நாடுகளைச் சேர்ந்த 100 பேருக்கு புகலிடம் வழங்கப் போவதாக பிரான்ஸ் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

இலங்கை, ஐவரி கோஸ்ட், சோமாலியா, ஈராக் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 100 பேர்களில் 20 சிறுவர்களும் உள்ளனர்.

ஐரோப்பாவுக்கு படகுகளில் செல்லும் குடியேற்ற வாசிகள் மோல்ரா கடலில் வைத்தே அனேகமாக மீட்கப்படுகின்றனர். மோல்ராவுக்கு இந்த விடயத்தில் உதவியளிப்பதாக பிரான்ஸ் அறிவித்திருக்கிறது.

மோல்ராவின் தலைநகர் வலெற்றாவில் பிரெஞசு தூதரகத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரான்சின் குடிவரவுத்துறை அமைச்சர் எரிக் பீசன் இதனை தெரிவித்திருக்கிறார்.

ஐரோப்பாவில் உங்களின் எதிர்காலத் திட்டத்திற்கான சந’தர்ப்பத்தை பிரான்ஸ் வழங்குகிறது என்று அகதிகளுக்கு பீசன் தெரிவித்திருக்கிறார். அதே சமயம் பிரான்சின் மதச் சார்பின்மை பாரம்பரியத்திற்கு மதிப்பளிக்கவேண்டும் என்றும் அங்கு பீசன் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து அங்கு உரையாற்றிய பிரான்ஸின் உட்துறை அமைச்சர் கார்ம் மிங்சூட் யொனிச்சி கூறுகையில், பிரான்ஸின் தீர்மானமானது மனிதாபிமான நடவடிக்கை என்றும் இது ஏனைய ஐரோப்பிய நாடுகளுக்கு முன்னுதாரமாக அமையும் என்றும் குறிப்பிட்டார்.

இதேவேளை படகில் சென்ற 100 குடியேற்ற வாசிகளும் பிரான்சில் மூன்று இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவ்வைபவத்தில் படகில் அஜுசென்ற அகதிகளின் சார்பாக ஆங்கில மொழியில் உரையாற்றிய ஹபிபா அமீர் மூஸா கூறுகையில் கடலில் படகில் சென்ற தங்களை காப்பாற்றியதற்காக மோல்ராவுக்கும் தங்களை புகலிடம் தர ஏற்றுக்கொண்டுள்ள பிரான்ஸிற்கும் நன்றி தெரிவித்தார்

Written by lankamuslim

ஜூன் 28, 2009 at 5:57 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

முரளிதரன், சந்திரகாந்தன் அணிகளின் உறுப்பினர்கள் இராணுவத்தில் சேர்கின்றனர்

Karuna-Pillaiyan.jpg

அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா),கிழக்கு மாகாண முதலமைச்சர் எஸ்.சந்திரகாந்தன் (பிள்ளையான்) ஆகிய இருவரினதும் அணிகளைச் சேர்ந்தோர் இராணுவ வெற்றிடங்களுக்கு விண்ணப்பித்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அமைச்சர் முரளிதரனின் பிரிவில் உள்ள உறுப்பினர்களில் 540 பேர் இராணுவத்தில் இணைய விண்ணப்பித்துள்ளனர் எனவும், இவர்களில் 140 பேர் ஏற்கனவே இராணுவத்தில் இணைக்கப்பட்டு விட்டனர் எனவும், எஞ்சியுள்ள விண்ணப்பதாரிகளின் விண்ணப்பங்கள் படையினரால் பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றன என்றும் அமைச்சர் வி.முரளிதரன் (கருணா) தெரிவித்துள்ளார்.
அதேவேளை தமது அணியில் 100 பேர் இராணுவ வெற்றிடங்களுக்கு விண்ணப்பித்துள்ளனர் என்றும் இதுவரை 40 பேர் இராணுவத்தில் உள்வாங்கப்பட்டுள்ளனர் என்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் எஸ்.சந்திரகாந்தன் (பிள்ளையான்) கூறியிருக்கிறார்.

Ilakku.com

Written by lankamuslim

ஜூன் 28, 2009 at 5:50 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது