Lankamuslim.org

Archive for ஜூன் 27th, 2009

இஸ்லாத்தை தழுவிய USA குவாண்டனாமோ படை வீரன்

leave a comment »

1

2

Advertisements

Written by lankamuslim

ஜூன் 27, 2009 at 7:03 பிப

உலக செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பிரபாகரனின் குடும்பத்தில் யார், யார் எஞ்சியுள்ளனர்?

25.6.2009  ‘இந்தியா ருடே’ குழுமத்தின் ‘ஹெட்லைன்ஸ் ருடே’க்கு செ.பத்மநாதன் வழங்கிய நேர்காணலின் முக்கிய பகுதிகள்:

பிரபாகரன் அவர்களின் மரணம் பற்றிய உண்மைகள் என்ன?

எனக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி, எமது தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் சிறிலங்கா படைகளுடனான போரில் மே 17 ஆம் நாள் மாவீரர் ஆனார்.
இறுதி மணித்துளிகள் வரை நீங்கள் தொடர்பில் இருந்தீர்களா? அந்த இறுதி மணித்துளிகள் எப்படியாக இருந்தன?

ஆம், அவரின் தொடர்பு இணைப்புத் துண்டிக்கப்படும் கடைசி மணி நேரம் வரையில் நான் எமது தலைவருடன் தொடர்பில் இருந்தேன். எனது இறுதித் தொடர்பு கேணல் சூசையுடன் இருந்தது. அந்த நேரத்தில் அவர் சிறிலங்கா படையினருடன் மீதான தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல் அணியை கடைசி மணிவரை வழி நடத்திக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில் களத்தில் நடப்பதை விபரமாக அவர் எனக்கு விபரித்தார்.

கடைசி நேரத்தில் சிறிலங்கா இராணுவத்தின் தாக்குதல் நிறையக் கோரமும் பயங்கரமும் கொண்டிருந்தது. ஆயிரக்கணக்கான எமது மக்கள் கொல்லப்பட்டும் காயப்பட்டும் இருந்தனர். அங்கே மருத்துவர்களோ, மருத்துவ வசதிகளோ, காயப்பட்டவர்களைக் கவனிப்பதற்கு இருக்கவில்லை. மருத்துவ கவனிப்பு இல்லாமல் மக்கள் இறந்து கொண்டிருந்தனர். எமது தலைவர் சிறிலங்கா இராணுவத்துடன் மோதி ஈழத் தமிழ் தேசியத்துக்காக தமது உயிரைத் தியாகம் செய்து கொண்டிருக்கிறார் எனவும் சூசை தெரிவித்தார்.

பிரபாகரனின் குடும்பத்தில் யார், யார் எஞ்சியுள்ளனர்?

எமக்கு கிடைத்த மிக நம்பகரமான தகவல்களின் படி எமது தலைவரின் மூத்த மகன் சாள்ஸ் அன்ரனியும் மகள் துவாரகாவும் தமிழீழ விடுதலைப் புலிகளின் படையணியில் இணைந்து சிறிலங்கா படையினருடனான போரில் இறுதி நேரத்தில் அவர்களும் வீரச்சாவடைந்தனர். இந்தக் கணம் வரை தலைவரின் துணைவியார் மதிவதனியும் இளைய மகன் பாலச்சந்திரனின் கதியும் என்ன என்பது பற்றிய துல்லியமான தகவல் எமக்கு கிடைக்கவில்லை.

Written by lankamuslim

ஜூன் 27, 2009 at 5:48 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அமெரிக்காவில் 10 லட்சம் பேருக்கு பன்றிக் காய்ச்சல்


அமெரிக்காவில் பன்றிக் காய்ச்சல் நோய் தாக்கியவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை தொட்டுள்ளது.

‘ஸ்வைன் புளூ ‘ எனப்படும் பன்றிக்காய்ச்சல் நோயின் தாக்கம் அமெரிக்காவில்தான் மிக அதிகமாக காணப்படுகிறது. மிக வேகமாக பரவி வரும் இந்நோய், அமெரிக்காவில் இதுவரை சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமானோரை பாதித்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது என்று அந்நாட்டின் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதில் 6 சதவீதத்திற்கும் அதிகமானோர் நகர்ப்புறங்களைச் சார்ந்தவர்கள் என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

Written by lankamuslim

ஜூன் 27, 2009 at 5:23 பிப

உலக செய்திகள், பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது