Lankamuslim.org

Archive for ஜூன் 26th, 2009

புலிகளால் கடத்தப்பட்ட யாழ் முஸ்லிம் இளைஞர்களின் குடும்பங்களுக்கு நட்டஈடு !

புலிகளால் கடத்திச் செல்லப்பட்ட யாழ்ப்பாணம் முஸ்லிம் இளைஞர்களின் குடும்பங்களுக்கு ஒருமாத காலத்திற்குள் நட்டஈடு வழங்கப்படுமென மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். புலிகளால் கடத்தப்பட்ட 32யாழ் முஸ்லிம் இளைஞர்களின் கதி இதுவரை என்னவென்று தெரியாத நிலையில் அவர்களின் குடும்பங்கள் கடந்த 20வருடங்களுக்கும் மேலாக எதிர்நோக்கும் கஸ்டநிலை தொடர்பாக யாழ். தொழில்சார் அமைப்பினர் மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர். இவ்வமைப்பினர் அமைச்சர் ரிசாத் பதியுதீனை சந்தித்து விளக்கியபோதே இவ்விளைஞர்களின் பெயர் விபரங்கள் சர்வதேச மன்னிப்புச்சபை வெளியிட்டிருந்த அறிக்கையில் காணப்படுவதையும் இவ்வமைப்பினர் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர். இச்சந்திப்பின்போது கருத்துரைத்த அமைச்சர் பதியுதீன், கடத்தப்பட்ட இளைஞர்களின் குடும்பங்களுக்கு ஒருமாத காலத்திற்குள் நட்டஈடு வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்தினர் உரிய அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு நட்டஈட்டைப் பெறமுடியுமென்றும் அவர் தெரிவித்துள்ளார். எனவே கடத்தப்பட்ட இளைஞர்களின் குடும்பங்கள் உடனடியாக மீள்குடியேற்ற அதிகாரசபை உத்தியோகத்தர் எம்.ஏ.எம்.சப்ரினுடன் தொடர்பு கொள்ளுமாறு யாழ். முஸ்லிம் தொழில்சார் அமைப்பினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Advertisements

Written by lankamuslim

ஜூன் 26, 2009 at 3:22 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இலங்கையில் ௨௦௦௦ முஸ்லீம்களுக்கு பாகிஸ்தான் பயிற்சி!

ராமதாஸுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கண்டனம்!

முஸ்லிம்கள் குறித்து P.M.K., நிறுவனர் ராமதாஸ் தவறாகப் பேசியதாக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலச் செயலர் காயல் மகபூப் விடுத்துள்ள அறிக்கை:

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேட்டி அளித்தபோது, “இலங்கை கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டு, அவர்கள் ஐ.எஸ்.ஐ., உளவாளிகளிடம் பயிற்சி பெற்று திரும்பி இருப்பதாகவும், அவர்களால் இந்தியாவுக்கு ஆபத்து என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இது, தமிழக முஸ்லிம்களை தவறான கண்ணோட்டத்தோடு பார்க்கக்கூடிய சூழ்நிலைக்கு வழிவகுத்துள்ளது. இலங்கை ராணுவத்தின் கோரத் தாக்குதலில் அப்பாவித் தமிழர்கள் பாதிக்கப்படுவதைப் போல், விடுதலைப் புலிகளால் இலங்கை முஸ்லிம்கள் பல மடங்கு பாதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் முஸ்லிம் பகுதிகளில் இரவு 12 மணிக்கு விடுதலைப் புலிகள் துப்பாக்கியுடன் புகுந்து, அங்குள்ள லட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்களின் அசையும், அசையா சொத்துக்கள் அனைத்தையும் பிடுங்கி, 24 மணி நேர அவகாசத்தில், வாழ்ந்த இடங்களை விட்டு, உடுத்திய உடைகளோடு வெளியேற்றியதை வரலாறு மறக்கத் தயாராக இல்லை.

இவர்களின் பூர்வீகம் தமிழகத்தில் உள்ள தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் தஞ்சை மாவட்டங்கள் என்ற வரலாறு, ராமதாசைப் போன்றவர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். இலங்கை கிழக்கு மாகாணத்தில் உள்ள காத்தான்குடி பள்ளி வாசலில் இரவு தொழுகை நடந்திக்கொண்டிருந்த நிராயுதபாணியான முஸ்லிம்கள் நூற்றுக்கணக் கானவர்களை விடுதலைப் புலிகள் ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொன்றதை, ராமதாசைப் போன்றவர்கள் மறந்திருக்கலாம். இலங்கைத் தமிழர்களுக்காகவே வாழ்நாள் எல்லாம் உழைத்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர்களான அமிர்தலிங்கம், சிவசிதம்பரம் உள்ளிட்டவர்கள் விடுதலைப் புலிகளால் கொல்லப் பட்டதையே இவர்கள் மறந்துவிட்டனர்.

புலனருவ மாவட்டத்தில் விடுதலைப் புலிகள் நள்ளிரவில் புகுந்து முஸ்லிம் பச்சிளம் குழந்தைகளை கண்டம் துண்டமாக வெட்டிக் கொன்றதை மனசாட்சி உள்ள எவருமே மறக்க மாட்டார்கள். தமிழகத்தின் தொப்புள் கொடி உறவு தமிழர்கள் இலங்கையில் உள்ள தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் தான். இவர்களுக்குக் குடியுரிமை கொடுக்கக் கூடாது எனத் தடுத்தவர்கள் யாழ்ப்பாணத் தமிழர்கள் என்பதும், இதைப் பற்றி 30 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியப் பார்லிமென்டில் கோசல் ராம் சுட்டிக்காட்டியதும் வரலாற்றில் பதிவு செய்யப் பட்டுள்ளது.

இவை அனைத்தையும் மறந்துவிட்டு, சொந்த நாட்டிலும், பிற நாடுகளிலும் அகதிகளாக வாழ்ந்துகொண்டிருக்கிற அப்பாவி இலங்கை முஸ்லிம்கள் மீது அநியாயமான அவதூறை ராமதாஸ் சுமத்துவது, இந்திய நாட்டின் மீது விசுவாசம் கொண்டுள்ள முஸ்லிம்களை, விரட்டத் துணியும் கொடூரச் செயல். லோக்சபாத் தேர்தலை மனதில் வைத்து இலங்கைப் பிரச்னையில் காய் நகர்த்தும் ராமதாஸ், இலங்கைத் தமிழர்கள் மீது அக்கறை கொண்டவராக இருப்பாரேயானால், மத்திய அமைச்சராக உள்ள அவரது மகனை பதவியிலிருந்து விலகச் செய்துவிட்டு அறிக்கைகளை வெளியிடட்டும்.

Written by lankamuslim

ஜூன் 26, 2009 at 2:47 பிப

உலக செய்திகள், பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பிரபாவின் கடைசி நிமிடங்கள்-வீடியோ

புலிகளின் தவைர் பிரபாகரன் இறந்ததை ம(று)றைத்து அது முகமூடி அல்லது மாஸ்க் என்று கதையளக்கும் புலிப்பினாமிகளின் கவனத்திற்காக.. அதிரடிக்கு கிடைத்த வீடியோ ஒன்றை (அதாவது வன்னிக்களமுனையில் 19.05.09 அன்று புலிகளின் தலைவர் பிரபாகரனின் தலையில் வெட்டி மருத்துவப் பரிசோதனைக்காக மாதிரிகள் எடுக்கும் காட்சி)

athirady.org

Written by lankamuslim

ஜூன் 26, 2009 at 5:05 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மைகள் ஜாக்சன் (மிகாயில்) மரணமானார்

இன்று  25.6.2009 மைகள் ஜாக்சன் (மிகாயில்) உடல் வலிப்பதாக அருகில் இருந்த உதவியாளரிடம் கூறினார். உடனே   டாக்டர்கள் வரவழைக்கப்பட்டனர்.

அவர்கள் மிகாயில்க்கு தீவிரசிகிச்சை அளித்தனர். சிகிச்சை பலனின்றி மைகள் ஜாக்சன் (மிகாயில்) மரணம் அடைந்தார். அவருக்கு வயது 50 இவர் இஸ்லாத்தை தலுவிகொண்டார் என்பது ஊடகதகவல் Inalilahi wa Inalilaihi Rajioon .Written by lankamuslim

ஜூன் 26, 2009 at 4:35 முப

உலக செய்திகள் இல் பதிவிடப்பட்டது