Lankamuslim.org

One World One Ummah

Archive for ஜூன் 24th, 2009

பாகிஸ்தான் 70,000 அமெரிக்கன் டொலர் நிதியுதவி !

70,000 அமெரிக்கன் டொலர்களுக்கான காசோலையை நேற்று செவ்வாய்க்கிழமை இலங்கை அரசிடம் கையளிக்குமாறு இலங்கையில் உள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகரை பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ராஸா கிலானி பணித்துள்ளதாக பாகிஸ்தான் இணையம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த நிதி வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியா தடுப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களின் நலன்களுக்காக, குறிப்பாக மருத்துவ தேவைகளுக்கு வழங்கப்படுவதாக மேலும் அது கூறுகிறது. தெற்காசியாவுக்கான சிறப்பு உதவித் திட்டத்தின் நிதியில் இருந்து இந்த பண உதவி வழங்கப்படுகிறது.இலங்கையில் ஏற்பட்டுள்ள மனிதாபிமான நெருக்கடிகளுக்கு உதவுமாறு இலங்கை அதிபர் ராஜப§க்ஷ சர்வதேச நாடுகளுக்கு அண்மையில் அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Ilakku.com
Advertisements

Written by lankamuslim

ஜூன் 24, 2009 at 3:20 பிப

உலக செய்திகள், பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

யாழ். முஸ்லிம்கள் வசிக்கும் இடங்களில் வாக்களிக்க அனுமதி

leave a comment »

நடைபெறவுள்ள யாழ். மாநகரசபைத் தேர்தலில், யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்டு இலங்கையின் பல பகுதிகளிலும் வாழும் யாழ். முஸ்லிம்களும அவர்கள் வசிக்கும் மாவட்டங்களில் வாக்களிப்பதற்கு தேர்தல் ஆணையாளரால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே வாக்களிக்கும் உரிமையை பாதுகாப்பதற்காக, உடனடியாக வாக்களிக்க விண்ணப்பிக்குமாறு யாழ் முஸ்லிம் தொழில்சார் அமைப்பு வேண்டிக் கொண்டுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து புலிகளால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு புத்தளம், நீர்கொழும்பு, பாணந்துறை, கொழும்பு, அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் இலங்கையின் பல பகுதிகளிலும் வாழும் யாழ் முஸ்லிம்களின் வாக்குகளைப் பதிவதில் யாழ். முஸ்லிம் தொழில்சார் அமைப்பு உதவி வருகின்றது. இது சம்பந்தமான விபரங்களை அறிவிதற்கு சகோதாரர் ஏ.சீ அமீனுடன் தொடர்பு கொள்ளுமாறு யாழ். முஸ்லிம் தொழில்சார் அமைப்பு வேண்டிக்கொள்கிறது. தொலைபேசி இலக்கம்- 077-3187222

Written by lankamuslim

ஜூன் 24, 2009 at 3:12 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது