Lankamuslim.org

One World One Ummah

Archive for ஜூன் 19th, 2009

நிந்தவூர் கடற்கரைப் பிரதேசத்தில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல், ஒருவர் கொலை!

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் கடற்கரைப் பிரதேசத்தில் நேற்றிரவு 9மணியளவில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக சம்மாந்துறைப் பொலீசார் தெரிவித்துள்ளனர். இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலின்போது பலத்த காயமடைந்த குறித்த நபர் நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 4.45அளவில் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் உயிரிழந்தவர் நிந்தவூர் ஒன்பதாம் பிரிவைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 56வயதுடைய எம்.மஹ்முத் ஆவார். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறைப் பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

athirady.org

Advertisements

Written by lankamuslim

ஜூன் 19, 2009 at 4:19 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

நாரெஹென்பிட்டி, புத்தளம் வண்ணாத்திவில்லு பிரதேசங்களிலிருந்து சடலங்கள் மீட்பு

கொழும்பு நாரெஹென்பிட்டி புத்தளம் வண்ணாத்திவில்லு பிரதேசங்களிலிருந்து சடலங்கள் இன்று காலையில் மீட்கப்பட்டுள்ளதாக அந்தந்த பிரதேச பொலீசார் தெரிவித்துள்ளனர். நாரெஹென்பிட்டியிலுள்ள ஆர்.எம்.பி எனப்படும் இலங்கை மோட்டார் போக்குவரத்து அலுவலகத்திற்கு முன்னாலுள்ள வாய்க்காலுக்குள்ளிருந்து ஒரு சடலம் மீட்கப்பட்டுள்ளது. இதேவேளை புத்தளம் வண்ணாத்திவில்லு காட்டுப்பகுதியில் வைத்து இன்றுகாலை இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதாக புத்தளம் பொலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவங்கள் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அந்தந்த பிரதேச பொலீசார் முன்னெடுத்து வருகின்றனர்.

Written by lankamuslim

ஜூன் 19, 2009 at 4:16 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இந்திய முஸ்லிம்களின் வேன்டுகோல்

இலங்கை வானொலி முஸ்லிம் நிகழ்ச்சிகள் தமிழகத்தை எட்டச் செய்க!

இலங்கை வானொலி முஸ்லிம் நிகழ்ச்சிகள் தமிழகத்தை எட்டச் செய்க!
இலங்கை வானொலியில் ஒலிபரப்பப்பட்டு வரும் முஸ்லிம் நிகழ்ச்சிகளை மீண்டும் தமிழகத்தில் கேட்கச் செய்ய ஆவன செய்து தருமாறு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தைத் தொடர்புகொண்டு கோரிக்கை முன்வைக்குமாறு பொதுமக்களுக்கு அதிரை எக்ஸ்ப்ரஸ் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து,

அறிக்கை பின்வருமாறு:-

அன்பார்ந்த பொதுமக்களுக்கு! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)! இன்று நம் வீடுகளையும், நம் சிந்தனையையும் விடாப்பிடியாக பற்றிக் கொண்டிருக்கும் தொலைக்காட்சியின் படையெடுப்பு நடப்பதற்கு முந்தைய காலகட்டமது.
அதாவது 1980களின் தொடக்க வருடங்கள் வரை நம் இல்லங்களையும், இதயங்களையும் நிறைத்திருந்தது. இலங்கை வானொலியின் முஸ்லிம் சேவை.
இரவு 8 மணி முதல் 9 மணி வரை நடைபெறும் முஸ்லிம் நிகழ்ச்சியில் அல்குர்ஆன் முரத்தல், மணிமொழிகள், குத்பா உரைகள், அஸ்மாஉல் ஹுஸ்னா, இஸ்லாமிய கீதங்கள், அறிவுக்களஞ்சியம், வரலாற்றில் ஓர் குறிப்பேடு, நாடகம், மாதர் மஜ்லிஸ்… என இன்னபிற சீரிய நிகழ்ச்சிகளை ஒலிபரப்பி நம் சிந்தையை சீர்படுத்தியது இலங்கை வானொலி.

அத்துடன் நில்லாது, நோன்பு தொடக்கம், இரு பெருநாட்கள் பற்றிய பிறை அறிவிப்புகளுக்கு நாம் முற்றிலும் இலங்கை வானொலியைச் சார்ந்திருந்ததை யாராலும் மறக்கவியலாது. ரமழானில் ஸஹர் நேரங்களில் நள்ளிரவு 3 மணி முதல் ஸுப்ஹு பாங்கு சொல்லும் வரை சீரிய மார்க்கக் கருத்துக்களை ஸஹர் உணவோடு சேர்த்து நமக்கு ஊட்டிய இலங்கை வானொலிக்கு நாம் பல வகைகளில் நன்றிக்கடன் பட்டுள்ளோம்.

இந்தியாவின் தமிழ்நாட்டிலிருந்து – குறிப்பாக அதிராம்பட்டினம், காயல்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளின் மார்க்கப் பெருந்தகைகள் இலங்கை தீவிற்கு வருகை புரியும்போதெல்லாம் அவர்களை தமது ஒலிப்பதிவுக் கூடத்திற்கு அழைத்து, அந்த உலமாப் பெருமக்களின் மார்க்க அறவுரைகளை இந்திய – இலங்கையின் வான்பரப்புகளில் தவழ விட்ட இலங்கை வானொலியின் தஃவா பரப்புரை பாரியது.

இனக்கலவரமும், தொலைக்காட்சி வருகையும்
1983ஆம் ஆண்டு, இலங்கை தீவில் வெடித்துக் கிளம்பிய இனக்கலவரம்ளூ இலங்கை வானொலியின் முஸ்லிம் சேவை தமிழகத்திற்குக் கிட்டி வந்ததை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டது. இலங்கை வானொலியின் தமிழகத்திற்கான ஒலிபரப்புக் கோபுரங்கள் அங்கு நடைபெற்ற உள்நாட்டுப் போரில் தகர்க்கப்பட்டுவிட்டது. இலங்கை வானொலி இல்லாமற்போன வெற்றிடத்தை இங்குள்ள தொலைக்காட்சி அலைவரிசைகள் வேக
வேகமாக வந்து நிரப்பிவிட்டன.

தகவல் தொழில்நுட்பப் பாய்ச்சலில், தொலைக்காட்சியின் இருப்பைத் தவிர்க்க முடியாதெனினும், அதனால் நம் சமூக, கூட்டு, மார்க்க வாழ்வில் ஏற்பட்ட உடைவுகளையும், சிதறல்களையும் மறுக்கவியலாது. அன்று மஃரிபைத் தொழுது, அதே முஸல்லாவில் இஷாவையும் நிறைவு செய்த நம் பெண்மணிகள், இலங்கை வானொலியின் முஸ்லிம் சேவை துவங்கும் வரையிலும் முஸல்லாவிலேயே இபாதத்துகளைத்
தொடர்ந்திருந்தனர்.

ஆனால் இன்றோ தொலைக்காட்சியின் குறு – நெடுந்தொடர்கள் தங்களின் தொழுகைகளையும், நேரத்தையும், சிந்தனையையும், சிரத்தையையும் தொலைத்தவர்களாக நாம் மாறிவிட்டோம். ஒருதலைக்காதல், பொருந்தாக் காதல், கூடாநட்பு, சதிபதி துரோகம், நுகர்வியம் என தாறுமாறாகத் தாக்குதல்களைத் தொடுத்து, ஒழுக்கமான வாழ்வியல் ஒழுங்குகளை இந்தத் தொலைக்காட்சித் தொடர்கள் குலைத்துப் போட்டுவிட்டன.
அத்துடன், வீடு வரை தேடி வந்த மார்க்க வழிகாட்டுதல்களுக்கும் இன்று பெரும் வறட்சி ஏற்பட்டு விட்டது.

இன்று நாம் காணும் – கேள்வியுறும் – அனுபவிக்கும் தலாக், ஓடிப்போதல்… என்பன போன்ற ஒழுக்கக் கேடுகளுக்கான வித்துக்களைத் தூவியதில் தொலைக்காட்சிக்கு பெரும்பங்குண்டு.
இலங்கையின் போர் ஓய்வும், வானொலியின் மீள்வருகையும்
இன்று இலங்கையில் இனப்போர் ஓய்ந்து அமைதி திரும்பியுள்ளது. இந்த நிலையில், இலங்கை வானொலி கடந்த ஒரு வருட காலமாக ஷஷகொழும்பு சர்வதேச ஒலிபரப்பைஷஷ காலை 7 மணி முதல் நண்பகல் வரை தமிழகத்திற்கென ஒலிபரப்பி வருகிறது. அந்தத் தமிழ்ச்சேவையில் திரைப்படப் பாடல்கள் மட்டுமே ஒலிபரப்பாகின்றன.. ஆனால் இந்த ஒலிபரப்பிற்கும் தமிழகத்தில் நிறைய முஸ்லிமல்லாத வானொலி நேயர்கள் உள்ளனர்.

இந்நிலையில், இலங்கை வானொலிக்கு நாம் ஒரு வேண்டுகோளை முன்வைக்க வேண்டும். காலை 8 முதல் 10.30 மணிளூ இரவு 7:30 முதல் 9 மணி வரை ஒலிபரப்பாகும் முஸ்லிம் நிகழ்ச்சிகளை தமிழக மக்களும் கேட்கும்படியாக இலங்கை வானொலி தகுந்த ஏற்பாடுகளைச் செய்ய வேண்டுமென நாம் கோர வேண்டும்.

இறையருளால் இவ்வொலிபரப்புச் சேவை நம் பகுதிக்கு விரைவில் கிடைக்கும்பட்சத்தில், ஒலிபரப்பப்படும் நிகழ்ச்சிகள் குறித்த கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளைக் கொண்ட தொடர்புகளுக்காக இலங்கை முகவரிக்குப் பகரமாக இந்தியாவில், சென்னையிலுள்ள இலங்கை துணைத் தூதரக முகவரிக்கு தரைவழி அஞ்சல் அனுப்ப வசதி செய்து தருமாரும் நாம் கோர வேண்டும்.

இலங்கை வானொலியின் முஸ்லிம் சேவைகளினால் நமக்குக் கடந்த காலங்களில் ஏற்பட்டிருந்த பயனை நாம் பார்ப்போம். அப்பயன்களுடன் கூடவே இன்னும் சில பயன்கள் உண்டு. அவை என்னவெனில்,
(1) இலங்கை வானொலியின் தமிழ் தேசிய ஒலிபரப்பை நிறைய முஸ்லிமல்லாத அன்பர்கள் கேட்கின்றனர். அதே நேயர்கள் முஸ்லிம் நிகழ்ச்சிகளையும் கேட்பதினூடாக தஃவா எனப்படும் மார்க்கப் பரப்புரைப் பணி மிக எளிதாக நடந்தேறி விடும்.

(2) தொலைக்காட்சியைப் பார்ப்பதற்கு நாம் தனியே நேரம் ஒதுக்கி, வேலையை ஒதுக்கி, அப்பெட்டி முன்னே முடங்கிக் கிடக்க வேண்டும். ஆனால் வானொலிக்கோ அத்தகைய சிரமம் ஒன்றுமில்லை. நமது அன்றாடப் பணிகளைச் செய்துகொண்டே மார்க்க நெறி உரைகளை நம் வீட்டிலுள்ள அனைவருமே கேட்க முடியும்.

இதற்காக நாம் செய்ய வேண்டியது…
இலங்கை வானொலியின் முஸ்லிம் சேவை மூலம் நாம் பெற்ற பலன்களை விவரித்து, நன்றி தெரிவித்து, அந்த ஒலிபரப்பின் தற்காலத் தேவை குறித்து சுருக்கமாகவோ, விரிவாகவோ கீழ்க்கண்ட முகவரிகளுக்கு மின்னஞ்சல், தரைவழி அஞ்சல் (ளரசகயஉந அயடை) மூலம் கோரிக்கைகளை ஆங்கிலம் அல்லது தமிழில் அனுப்பலாம். கோரிக்கைகளை அனுப்பியவர்களும், அதற்கான மறுமொழி கிடைக்கப் பெற்றவர்களும் மறவாமல் நமது
காயல் இணையதளத்திற்கு அதன் படியை (நகலை) மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்குமாறு வேண்டுகிறோம்.

முகவரிகள்:
(1) Deputy High Commissioner,
Deputy High Commission of Srilanka,
196, T.T.K. Road,
Alwarpet,
Chennai – 600 018
Phone: 00-91-44-24987896, 24987612
Email:
sldehico@md3.vsnl.net.in
sldehico@hathway.com

(2)
The Director,
Muslim Services,
SLBC, Torrindton Square,
Post Box No.: 574,
Colombo – 07,

Srilanka.
Mobile : 00-94-777304033

Office Phone Numbers:
00-94-11-2692529, 2675976

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://adiraixpress.blogspot.com

Written by lankamuslim

ஜூன் 19, 2009 at 3:49 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது