Lankamuslim.org

One World One Ummah

Archive for ஜூன் 18th, 2009

தமிழ், முஸ்லிம், ஈழம் பெயர்களுடைய கட்சிகளுக்கு விரைவில் தடை!!

நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு எதிரான பெயர்களையுடைய அரசியல் கட்சிகளுக்கு தடைவிதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன குறிப்பிட்ட ஓர் சமூகத்தையோ அல்லது வேறு நாட்டை பிளவுபடுத்தக்கூடிய வகையிலான பெயர்களைக் கொண்டிருக்கும் கட்சிகளுக்கு தடைவிதிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது இதன்படி குறித்த கட்சிகளின் தற்போதைய மற்றும் கடந்தகால செயற்பாடுகள் குறித்து ஆராயப்படவுள்ளது. செயற்படாத அரசியல் கட்சிகளை ரத்து செய்யவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நாட்டில் சுமார் 40க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் இருந்த போதிலும் 10 அரசியல் கட்சிகளே செயற்பட்டு வருவதாக சுட்டிக் காட்டப்படுகிறது. புதிய சட்டத்தின் பிரகாரம் தமிழ், முஸ்லிம், ஈழம் போன்ற பதங்களை தங்களது கட்சியின் பெயரில் இணைத்துக் கொண்ட கட்சிகள் பெயர்களை மாற்ற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் என தெரிவிக்கப்படுகிறது.

athirady.org

Advertisements

Written by lankamuslim

ஜூன் 18, 2009 at 12:10 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பிரபாகரன் பயன்படுத்திய டயரி

பிரபாகரன் 2008ம் ஆண்டு பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் டயரியொன்று கொழும்பு குணசிங்கபுர பஸ் நிலையத்தில் வைத்து பஸ் ஒன்றுக்குள் இருந்த பயணப் பையிலிருந்து நேற்று முன்தினம் கைப்பற்றப்பட்டுள்ளது. இது முஸ்லிம் படைவீரர் ஒருவரின் பயணப்பை என்றும் அவர் வன்னிப் பகுதியிலிருந்து விடுமுறையாக கொழும்பு வந்த நிலையில் பையை தவறவிட்டு சென்றிருந்தாரென்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது. பைக்குள் இருந்த டயரியில் இருந்த தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டபோது மேற்படி முஸ்லிம் படைவீரரே பையை தவறவிட்டவர் என்றும் தெரிய வந்துள்ளது. அவர் தற்போது  விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார். அவர் புதுமாந்தளன் பகுதியில் இறுதி யுத்தத்தின் போது புலிகளின் பங்கருக்குள் இருந்து கிடைத்த டயரி என்றும், அது பிரபாகரனுடையதென சந்தேகித்தே தான் அதனை எடுத்து வைத்திருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து அவர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றார். பிரபாகரனின் கையெழுத்திலேயே எழுதப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இந்த டயரியின் முன்பக்கத்தில் பிரபாகரனின் பெயர், விலாசம் உள்ளிட்ட சகல விபரங்களும் எழுதப்பட்டுள்ளது. கடந்த வருட புலிகளின் தாக்குதல்கள் தொடர்பான தகவல்கள், கடந்த வருடம் கொழும்பில் நடைபெற்ற சுதந்திரதின நிகழ்வின்போது நடத்தவிருந்த தாக்குதல் திட்டம் போன்றன டயரியில் எழுதப்பட்டுள்ளன.

athirady.org

Written by lankamuslim

ஜூன் 18, 2009 at 12:04 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

7 இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் கைது

விடுதலைப் புலிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய 7 இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் கைது
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய ஏழு இராணுவப் புலனாய்வு அதிகாரிகளை புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் இரண்டு இராணுவ மேஜர்களும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இராணுவப் புலனாய்வுப் பிரிவில் கடமையற்றிய இவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிடப்படுகிறது.

குறித்த இராணுவ உயரதிகாரிகள் தொடர்பில் விரிவான இரகசிய விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதன் காரணமாக அவர்ளது விபரங்களை வெளியிட முடியாதென பாதுகாப்பு தரப்பினர் அறிவித்துள்ளனர்.

Written by lankamuslim

ஜூன் 18, 2009 at 11:51 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது