Lankamuslim.org

Archive for ஜூன் 17th, 2009

கசிப்பு விற்பகைகு எதிர்ப்பு தெரிவித்தமையால் நஞ்சூட்டப்பட்ட பிக்கு சிகிச்சை பலனின்றி பலி!!

கசிப்பு விற்பகைகு எதிர்ப்பு தெரிவித்தமையால் நஞ்சூட்டப்பட்ட பிக்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார். எலஹா அத்தரகல்லேவைச் சேர்ந்த சீலனந்த (வயசு23) என்ற தேரரே இவ்வாறு உயிரிழந்தவராவர். இப்பகுதியில் கசிப்பு விற்பனை செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பல ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்த அவர் அது தொடர்பில் பாதுகாப்புத் தரப்பினருக்கு அறிவித்திருந்தார். இந்நிலையில் விகாரையில் அவருக்கு தானமாக வழங்கப்பட்ட உணவை சாப்பிட்டதன் பின்னர் அவர் சுகயீனமுற்றார். தேரர் சாப்பிட்ட உணவில் நஞ்சு கலக்கப்பட்டிருந்தமை மருத்துவர்களால் உறுதி செய்யப் பட்டதையடுத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்தனர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட தேரருக்கு கடந்த ஒரு வருடமாக சிகிட்சை அளிக்கப்பட்டு வந்த போதும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

athirady.org

Advertisements

Written by lankamuslim

ஜூன் 17, 2009 at 3:31 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மட்டக்களப்பு பொலநறுவை பிரதான வீதியில் அமைந்துள்ள மைலம்பாவெளி, மன்னம்பிட்டி சோதனைச் சாவடிகள் தவிர்ந்த அனைத்து சாவடிகளும் அகற்றப்படும்!!

மட்டக்களப்பு பொலநறுவை பிரதான வீதியில் அமைந்துள்ள மைலம்பாவெளி, மன்னம்பிட்டி சோதனைச் சாவடிகள் மாத்திரம் சில காலத்திற்கு இயங்கும் என்றும் அவை தவிர அனைத்து சோதனைச் சாவடிகளையும் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது. இப்பகுதியிலுள்ள பொலீஸ் மற்றும் இராணுவ விசேட அதிரடிப்படை சோதனை நிலையங்களை மூடுவதற்கான பேச்சுக்கள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கில் தற்போதைய சுமுகமான சூழ்நிலைகளினால் சகல சோதனை மையங்களும் முற்றாக அகற்றப்படவுள்ளன. ஆனால் குறிப்பிட்ட காலத்திற்கு மன்னம்பிட்டி மற்றும் மைலம்பாவெளி சோதனைச் சாவடிகளை செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் நிலைமைகளைப் பொறுத்து அவைகளும் அகற்றப்படவுள்ளன.

athirady.org

Written by lankamuslim

ஜூன் 17, 2009 at 3:29 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இவ்வருட முடிவுக்குள் வடமாகாணத்தில் 500வீடுகள் நிர்மாணிக்க திட்டம்!!

வடக்கு வசந்தம் திட்டத்தின்கீழ் இந்த வருட முடிவுக்குள் வட மாகாணத்தில் 500வீடுகள் நிர்மாணிக்க திட்டமிட்டுள்ளதாக வீடமைப்பு, பொது வசதிகள் அமைச்சின் செயலாளர் குணதிலக்க நேற்று தெரிவித்துள்ளார். இதற்காக 50 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப் பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றும் நடவடிக்கையுடன் இணைந்ததாக வீடமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமெனவும் முதலில் மன்னார் மாவட்டத்தில் 100வீடுகள் நிர்மாணிக்கப் படுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நிலக்கண்ணிவெடிகள் அகற்றப்பட்ட மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்படும் நடவடிக்கையோடு இணைந்ததாக வீடமைப்பு திட்டங்களை முன்னெடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மீள்குடியேற்ற நடவடிக்கைகளின்போது மக்களுக்கு தற்காலிக வீடுகள் வழங்கப்படவுள்ளதோடு வெளிநாட்டு உதவியுடன் நிரந்தர வீடுகள் நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மோதல் காரணமாக சேதமான வீடுகளை திருத்தியமைக்கவும் வீடமைப்பு அமைச்சு திட்டமிட்டுள்ளது. இதுதவிர மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா மாவட்டங்களில் அரச உத்தியோகத்தர்களுக்கான வீடுகள் நிர்மாணிக்கவும் திட்டமிட்டுள்ளதாக செயலாளர் கூறினார். வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த ம்ககளை மீள்குடியேற்றுவது தொடர்பான 180நாள் திட்டத்தின்கீழ் மன்னாரில் 100வீடுகளும் வவுனியாவில் 175வீடுகளும் யாழ்ப்பாணத்தில் 175வீடுகளும் நிர்மாணிக்கப்படவுள்ளன. இதுதவிர தொடர்மாடி வீடமைப்பு திட்டங்களும் வடக்கில் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. வீடுகள் கடனுதவி அடிப்படையிலும் பொதுமக்களுக்கு வழங்கப்படவுள்ளன.

athirady.org

Written by lankamuslim

ஜூன் 17, 2009 at 3:25 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

துபையில் விற்பனையாகும் ஹிஜாப்களில் புற்று நோய் இரசாயனங்கள்!

துபையில் விற்பனையாகும் ஹிஜாப்கள் (கேன்ஸர்) புற்று நோயை ஏற்படுத்தக் கூடியவை என்ற அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது. இது UAE யின் கல்ஃப் நியூஸ் செய்தியில் வெளியாகியுள்ளது.


இஸ்லாமிய உடையான ஹிஜாப் (Abayas and Shailahs) முஸ்லிம் பெண்கள் பரவலாக அணியக்கூடிய ஒன்றாகும். சமீபத்தில் துபையின் மத்திய ஆய்வுக்கூடமான (DCL) ஒரு ஆய்வினை மேற்கொண்டது. இதில் ஹிஜாப் தயாரிக்கப் பயன்படுத்தப் படும் துணியில் நிறத்தினைத் தருவதற்காக பயன்படுத்தப் படும் இரசாயனப் பொருட்களில் கார்ஸினோஜென்ஸ் (carcinogens) என்ற நச்சுத் தன்மை வாய்ந்த இரசாயனம் கலக்கப் பட்டிருப்பதும் அனுமதிக்கப் பட்ட அளவை விட கூடுதலாக உலோகக் கலவைகள் இவ்வகை நெசவில் பயன்படுத்தியிருப்பதும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.


DCL இல் பணிபுரியும் ஸோஃபியா காஸிம் என்ற பெண் ஆய்வாளர் கல்ஃப் நியூஸ் பத்திரிகைக்கு அளித்துள்ள செய்தியில் இந்த திடுக்கிடும் உண்மை வெளியாகியுள்ளது. இந்த ஆய்வினைத் தொடர்ந்து துபையில் உள்ள பெரும்பாலான ஹிஜாப் நிறுவனங்கள் தயாரிக்கும் உடைகள் கார்ஸினோஜென்ஸ் தனிமங்கள் உள்ளனவா என்ற ஆய்வுக்கு உட்படுத்தப் பட்டு வருகின்றன. இத்தகைய ஹிஜாபை அணிவதால் உடலில் ஏற்படும் இராசயப் மாற்றங்கள் மற்றும் பக்க விளைவுகளை ஆய்வு செய்தபின் இந்த அறிக்கை வெளியிடப் பட்டுள்ளது.


இச் செய்தி கண்டு ஹிஜாப் அணியும் பெண்கள் குழப்பமடைய வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது DCL. சந்தையில் விற்கும் அனைத்து ஹிஜாப்களிலும் இத்தகைய இரசாயனங்கள் இல்லை என்றும் பரிசோதனையில் சிக்கிய நிறுவனங்களின் அனைத்துத் தயாரிப்புகளும் உடனடியாக அகற்றப் பட்டுள்ளது என்றும் DCL தெளிவுபடுத்தியுள்ளது.


புற்றுநோயாளிகளுக்கான சங்கத்தில் (President of the Friends of Cancer Patients Society) முக்கியப் பொறுப்பினை வகிக்கும் டாக்டர் ஸா-ஸன் அல் மஹ்தி, இவ்விஷயத்தில் சதி அரங்கேற்றப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். ஆச்சரியமான விஷயம் என்னவெனில் நாம் எத்தகைய உணவை உண்ண வேண்டும், எத்தகைய உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும், புகை பிடித்தல் போன்ற பழக்கவழக்கங்களைக் கைவிட வேண்டும் என்று தினமும் அறிவுறுத்தி வருகிறோம். ஆனால் எத்தகைய உடையை அணியவேண்டும் என்பதை மறந்து விட்டோம் என்றார்.


இத்தகைய ஹிஜாபினைத் தயாரித்து வெளியிட்ட நிறுவனங்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது என்பது இன்னும் வெளியாக வில்லை. ஐக்கிய அரபு அமீரகத்தில் துணிகளில் பயன்படுத்தும் இத்தகைய இரசாயனப் பொருட்கள் மீதான தனிச் சட்டம் ஏதுமில்லாததால் இதற்கான உடனடி தீர்வை அறிவிக்க அரசினால் இயலவில்லை என்றார் துபை ஹாஸ்பிடல் நிறுவனத்தில் oncology துறைத் தலைவரான டாக்டர் ஃபரீத் கலீஃபா.


செயற்கை நிறமிகள் ஏற்படுத்தும் ஆபத்து என்ன?
நெசவின் போது பயன்படுத்தப்படும் சில செயற்கை நிறமிகள் ஆண் விதைகளில் பாதிப்பை ஏற்படுத்தும் புற்று நோய்களையும் மற்றும் சில நிறமிகள் பித்தப்பை மற்றும் சீறுநீரகப் பை போன்றவற்றில் புற்று நோயை உருவாக்கவல்லவை என்று அறிக்கைகள் மேலும் தெரிவிக்கின்றன.

நெசவுப் பொருட்களில் சேர்க்கும் நிறமிகளிலும் இராசயப் பொருட்களிலும் உள்ள carcinogenic ஆபத்துகளைப் பற்றி வேர்ல்ட் ஹெல்த் ஆர்கனைசேஷன் (WHO) பட்டியலை வெளியிட்டுள்ளது. அவற்றில் முக்கியமானவை:

Direct Blue 6, Direct Black 38 மற்றும் Direct Brown 95 போன்ற பென்சீன் (benzidine) ஐ மூலப் பொருளாகக் கொண்டு உருவாக்கப் படும் நிறமிகள் அனைத்துமே ஆபத்தானவை ஆகும். முக்கியமான விஷயம் என்னவெனில் இவை எல்லாம் ஏற்கனவே அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் முற்றிலுமாகத் தடை செய்யப் பட்ட ஒன்றாகும். WHO வெளியிட்டுள்ள இந்தப் பட்டியலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறமிகள் மற்றும் அவற்றின் குணாதிசியங்கள் இடம் பெற்றுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.


carcinogens என்ற நச்சுப் பொருள் நாம் தினசரி பயன்படுத்தும் பொருட்களில் விழிப்புணர்வு எந்த அளவிற்கு உள்ளது இவற்றைக் கண்டுபிடித்தலும் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் என்ன? என்பதே எஞ்சி நிற்கும் கேள்வியாக உள்ளது.

islamicdress.

Written by lankamuslim

ஜூன் 17, 2009 at 5:47 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பயங்கரவாதத்துக்கு எதிராக இந்திய முஸ்லிம்கள் அமைப்பு!

பயங்கரவாதத்துக்கு எதிராக இந்திய முஸ்லிம்கள் அமைப்பு!

2002ஆம் ஆண்டு குஜராத் சபர்மதி எக்ஸ்பிரஸ் தொடர்வண்டியில் இராம பக்தர்களாக வந்த சங் பரிவார் தொண்டர்களையும் அப்பாவி இந்து மக்களையும் தீவைத்துக் கொளுத்திவிட்டு நிமிட நேரத்தில் அதனை ‘முஸ்லிம் தீவிரவாத’மாகத் திசை திருப்பி, 3000க்கும் மேற்பட்ட முஸ்லிம்களைக் காவுகொண்ட மோடியும் அவனது கொலைவெறிக் கூட்டமும் இன்றுவரை வெகு சுதந்திரமாக பவனி வரும் நாடு, நம் நாடு.

கடந்த 2006ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் நான்டட் நகரத்தில் சங்பரிவார் அமைப்பு உறுப்பினர் ஒருவரது வீட்டில் குண்டு தயாரித்துக் கொண்டிருந்தபோது சக்தி வாய்ந்த குண்டு வெடித்த நிகழ்வின்போது அங்கு முஸ்லிம்கள் அணியும் தொப்பிகளும் ஒட்டுத் தாடிகளும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டன. இது போன்ற நிகழ்வுகளால் பலமுறை ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்பரிவார குழுக்களின் பயங்கரவாத முகம் அம்பலப்பட்டாலும் பயங்கரவாதத்தை முஸ்லிம்கள் மட்டும் ஒட்டு மொத்தக் குத்தகை எடுத்துக் கொண்டு செயல்படுவதாகக் காட்டுக் கூச்சல் போடும் பேச்சுரிமைச் சுதந்திரம் மிளிரும் நாடு, நம் நாடு.

கடந்த 2007 ஜனவரி மாதம் 24ஆம் நாளிரவில் தென்காசி RSS அலுவலகத்திலும் பேருந்து நிலையத்திலும் நிறுத்தப் பட்டிருந்த ஆட்டோ ரிக்ஷாக்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. பேருந்து நிலையக் குண்டு வெடிப்பில் ஒரு வெற்றிலை வியாபாரி உள்பட இருவர் காயமடைந்தனர். இந்தக் குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்களைக் கைது செய்வதற்காகக் காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி, இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த 3 பேரைக் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து வெடிக்காத குண்டு, டெட்டனேட்டர்கள் உள்ளிட்டப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. என்றாலும், செய்வதையும் செய்துவிட்டு, “இந்தக் குண்டுவெடிப்புகளுக்கு முஸ்லிம் பயங்கரவாதிகளே காரணம்; அவர்களைக் கைது செய்ய வெண்டும்” என்று அறிக்கைகளை அள்ளி விடுவதற்கும் அவற்றைப் படித்துப் பார்க்காமலே பதிப்பதற்கும் பரபரப்புப் பத்திரிகைகள் நிறைந்த கருத்துச் சுதந்திரம் கொடி கட்டிப் பறக்கும் நாடு, நம் நாடு.

கேரளத்திலிருந்து வெளியாகும் “தேஜஸ்” என்ற தினசரியில், “நாட்டை உலுக்கிக் கொண்டிருக்கும் வெடிகுண்டு சம்பவங்களுக்குப் பின்னால் முஸ்லிம்களை மோசமானவர்களாகவும் தேச விரோதிகளாகவும் சித்தரிக்க ஹிந்துத்துவ இயக்கங்கள் நடத்தும் சதிகளே” என்று பிரபல தலித் சிந்தனைவாதியும் “தலித் வாய்ஸ்” பத்திரிக்கையின் ஆசிரியருமான V.T இராஜசேகர் உரக்க உண்மையைப் போட்டுடைத்த போதிலும் பயங்கரவாதம், தீவிரவாதம் போன்ற இன்னபிற புண்ணாக்கு வாதங்களெல்லாம் இஸ்லாத்தின் பெயரால் முஸ்லிம்களின் கடமைகளாக நிறைவேற்றப் படுவதுபோல் உலகமுழுதும் உருவாக்கப்பட்டு வரும் மாயையை ஒழித்துக் கட்டுவதற்காகப் பல்வேறு முயற்சிகளை முஸ்லிம்கள் மேற்கொண்டு வருகின்றனர். அதிலொன்றாக, இந்திய முஸ்லிம் அறிஞர்களும் அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்டக் குழுவினரும் இணைந்து ‘பயங்கரவாதத்துக்கு எதிரான இயக்கம்’ Movement Against Terrorism (MAT) என்ற இயக்கத்தைத் தோற்றுவித்திருக்கின்றனர்.

“முஸ்லிம்களுக்குக் கல்வியூட்டும் கடமையோடு பயங்கரவாதச் செயற்பாடுகளுக்கு இஸ்லாத்தில் எள்ளளவும் இடமில்லை என்பதை ஊடகங்களுக்கும் பிறமதச் சகோதரர்களுக்கும் உரியவகையில் புரிய வைப்பதைக் கடமையாகக் கையிலெடுத்துள்ளோம்” என்று கூறுகிறார் ப.எ.இ.யின் ஒருங்கிணைப்பாளரும் அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்டக் குழுவின் செயற்குழு உறுப்பினருமான காலித் ரஷீத் ஃப்ராங்கி மஹல்லீ.

“அண்மையில் நடைபெற்ற ஜெய்ப்பூர் குண்டு வெடிப்புக்குப் பொறுப்பேற்றுக் கொள்வதாக இந்திய முஜாஹிதீன் என்ற பெயரில் மின்னஞ்சல் அனுப்பியவரையும் அதைப்போன்ற பெயர் தாங்கிகளையும் எதிர்த்துப் போராடி முறியடிப்போம்” என்றும் அவர் சூளுரைத்தார்.

மேலும், கடந்த ஃபிப்ரவரி 2ஆம் நாள் லக்நவ்வில் இந்திய இஸ்லாமிய அறிஞர்கள் குழுமிய மாநாட்டில் இந்தத் தீர்மானம் எடுக்கப் பட்டு, இப்போது செயலுக்கு வருவதாகவும் IANS க்கு அளித்த தொலைபேசிப் பேட்டியின்போது ஆயிஷ்பக் ஈத்காவின் துணை இமாமான மஹல்லீ கூறினார்.

“நாட்டில் நிகழ்த்தப் படும் பயங்கரவாதச் செயல்கள் அனைத்தையும் ஒட்டு மொத்தமாக முஸ்லிம்கள் தலையில் சுமத்தி வேடிக்கை பார்ப்பது வேதனைக்குரியதாகும்” என்று கூறிய மஹல்லீ, நாங்கள் தொடங்கியிருக்கும் இந்த ‘பயங்கரவாதத்துக்கு எதிரான இயக்கம்’ பற்றி, ஒவ்வொரு பள்ளியின் வெள்ளிமேடைகளிலும் அறிமுகப் படுத்தி, எங்கள் சமுதாயத்தவரைத் தவறான வழிகாட்டுதலின் பக்கம் செல்ல விடாது தடுத்து, வெற்றியின் இலக்கை நிச்சயம் அடைவோம்” என்று உறுதியோடு கூறும் மஹல்லீயின் அவாவும் இலட்சியமும்தான் கோடானு கோடி இந்திய முஸ்லிம்களின் அவாவும் இலட்சியமுமாகும்.

நாட்டின் அமைதியே நமது அவா!

muslimpage.blogspot.com

Written by lankamuslim

ஜூன் 17, 2009 at 4:02 முப

கட்டுரைகள், காஷ்மீர் இல் பதிவிடப்பட்டது