Lankamuslim.org

Archive for ஜூன் 15th, 2009

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கும் செயற்திட்டம்: செ.பத்மநாதன்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அடுத்த கட்ட நகர்வாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கும் செயற்திட்டம் சட்ட அறிஞர் விசுவநாதன் உருத்திரகுமார் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று திங்கட்கிழமை அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

தமிழீழ மக்களின் தன்னாட்சி உரிமைக்கான விடுதலைப் போராட்டம் இன்று புதியதோர் கட்டத்தை எட்டியுள்ளது.

தாயகத்தின் யதார்த்த நிலையினைப் புரிந்து கொண்டு, நமது விடுதலை இலட்சியத்தினை முன்னோக்கி நகர்த்துவதற்குத் தேவையான அரசியல் வேலைத் திட்டங்களை முன்னெடுக்க வேண்டிய காலகட்டம் இது.

இதற்காக பொதுக்கொள்கையின் அடிப்படையிலான ஒரு சீரிய வேலைத் திட்டத்தின் முக்கியத்துவத்தினை உய்த்துணர்ந்து, அதற்குரிய ஆலோசனைகளையும் நமது மக்களிடமிருந்து கோரியிருந்தோம்.

நமது மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற கருத்துக்களையும், புலமைசார் அறிஞர்களது ஆலோசனைகளையும் கவனத்திற் கொண்டு, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஒன்றினை அமைப்பது (Provisional Transnational Government of Tamil Eelam) எமது அடுத்த கட்டப் போராட்டத்தை முன்னோக்கி நகர்த்துவதற்கு அவசியமானது என உணர்கிறோம்.

இத்தகைய அரசாங்கம் ஒன்றினை அமைப்பதற்கான சகல முன்னேற்பாடுகளையும் மேற்கொண்டு உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்காக ஒரு செயற்குழு, சட்ட அறிஞர் விசுவநாதன் உருத்திரகுமார் அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த செயற்குழுவிற்கு முழுமையான ஆதரவினையும் ஒத்துழைப்பினயும் வழங்குமாறு அனைத்துத் தமிழ் மக்களையும் தமிழர் அமைப்புக்களையும் வேண்டிக் கொள்கிறோம்.

தமிழீழ மக்களின் அரசியல் அபிலாசைகள் தமிழர் தேசியம், தாயகம், தன்னாட்சி உரிமை என்ற அடிப்படைக் கோட்பாடுகளிலிருந்து கட்டப்பட்டவை.

1976 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானம், 1985 ஆம் ஆண்டு திம்புப் பேச்சுவார்த்தை, 2003 ஆம் ஆண்டு இடைக்கால நிர்வாக அதிகாரசபைத் திட்டம் ஆகியன ஊடாக வெளிப்படுத்தப்பட்டவை.

இந்த அரசியல் அபிலாசைகள் உயிர்ப்பாகப் பேணப்பட்டு பலப்படுத்தப்பட வேண்டியவை.

இதேவேளையில் இன்றைய தாயகச் சூழலில் சிறிலங்காவின் இராணுவ ஆதிக்கப்பிடிக்குள் சிக்கியுள்ள நமது மக்களால் இந்த அரசியல் அபிலாசைகளை ஓங்கி ஒலிப்பது நடைமுறைச் சாத்தியமாகாது.

இந்த யதார்த்த நிலையைப் புரிந்து கொண்டு செயற்படுவது மிகவும் அவசியமானது.

இந்நிலையில் பொதுநோக்குடன் பொது உடன்பாட்டின் அடிப்படையில் தாயகத்திலும் புலத்திலும் இரு சமாந்திரமான செயற்திட்டங்களை தமிழர் தேசம் நடைமுறைப்படுத்த வேண்டும்.

ஜனநாயக முறையில் புலத்தில் அமைக்கப்படவிருக்கும் தமிழீழ அரசாங்கம் தமிழீழ மக்களின் அரசியல் அபிலாசைகளையும் உரிமைக்குரலையும் பிரதிநிதித்துவப்படுத்தி அனைத்துலக அரங்கில் இயங்க வேண்டும்.

அதேவேளையில் தமிழீழ மக்களின் அரசியல் அபிலாஷைகளை தமது அரசியல் அடிப்படைகளாகக் கொண்டிருக்கக்கூடிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையில் தாயக நிலைமைகளை பவித்திரமாகப் புரிந்து கொண்டு இயங்கும் வகையிலான தாயகச் செயற்திட்டம் அமைய வேண்டும்.

இந்த இரு செயற்திட்டங்களுக்கிடையில் ஓர் இணைவு இருக்க வேண்டும்.

இப்போது அமைக்கப்பட்டிருக்கும் செயற்குழு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் அதேவேளையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் தமிழர் தேசியம், தாயகம், தன்னாட்சி உரிமை ஆகிய அரசியல் கோட்பாடுளை அடிப்படையாகக் கொண்டிருக்கக்கூடிய ஏனைய அரசியல் அமைப்புக்களுடனும் பேச்சுக்கள் நடத்தி ஒரு பொது உடன்பாட்டை எட்டுவதற்கான முயற்சிகளையும் மேற் கொள்ளும்.

தனது செயற்பாடுகளை ஜனநாயக விழுமியங்களுக்கு உட்பட்டு சுயாதீனமாக முன்னெடுக்கவிருக்கும் இந்த செயற்குழு தனது செயற்பாட்டுத்திட்ட விபரங்களை மக்களுக்கு அறியத்தந்து மக்களுடன் தொடர்ச்சியாகத் தொடர்புகளைப் பேணிக் கொள்ளும்.

இந்த செயற்குழு தனது முயற்சியில் முழுமையான வெற்றி பெற நாம் அனைவரும் இன ஒற்றுமையுடன் ஒன்றிணைந்து செயற்படுவோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisements

Written by lankamuslim

ஜூன் 15, 2009 at 2:36 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

முள்ளிவாய்க்கால் பகுதியில் புலிகளால் பதுக்கி வைக்கபட்டிருந்த நீர்மூழ்கிக் கப்பல் மீட்பு.


njhlu;e;J NjLjypy; <Lgl;LtUk; ghJfhg;Gg; gilapdu; New;W khiy Ky;iyj;jPT> nts;is Ks;sp tha;f;fhy; gFjpf;F mz;kpj;j flypy; Gypfspd; kw;nwhU ePu; %o;fpnahd;iw fz;nlLj;jpUg;gjhf ,uhZtg; Ngr;rhsu; mYtyf mjpfhup nahUtu; njuptpj;jhu;. ehd;F mbfs; cauKk;> 24 mbfs; ePsKk; nfhz;l ,e;j ePu;%o;fp nts;isKs;sp tha;f;fhy; gpuNjrj;jpd; fiuapypUe;J rpy kPl;lu;fs; J}uj;jpy; flypypUe;J kPl;fg;gl;bUg;gjhfTk; mt;tjpfhup $wpdhu;. ,e;ePu;%o;fp Vw;fdNt ghtpf;fg;gl;bUg;gjhfTk; Muk;g tprhuizfspy; njupate;jpUg;gjhfTk; mtu; Fwpg;gpl;lhu

Written by lankamuslim

ஜூன் 15, 2009 at 2:20 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இனவாதக் கருத்துக்களைத் முன்னெடுத்துவரும் அரசில் அங்கம் வகிப்போர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இனவாதக் கருத்துக்களைத் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருபவர்களான அரசில் அங்கம் வகிக்கும் விமல்வீரவன்ச, உதய கம்மன்வல போன்றவர்கள் தொடர்பாக அரசாங்கம் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காது மௌனம் சாதித்து வருவது கவலையளிக்கும் விடயமாகுமென்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் மேல்மாகாணசபை உறுப்பினருமான கலாநிதி ந.குமரகுருபரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்திருக்கும் அறிக்கையில், ஜனாதிபதி யுத்த நிறைவை அறிவித்தபோது இனப்பிரச்சினைக்கான தீர்வு எடுத்துக் கூறியுள்ளார். சிறுபான்மையினர் என தமிழினமில்லை. சம உரிமையோடு அனைவரும் வாழவேண்டும் எனக் கூறியமை வரவேற்புக்குரியது. ஆனால் ஒரே ஒரு கேள்வியை மட்டும் மன உளைச்சலுடன் கேட்க விரும்புகிறேன். விமல்வீரவன்ச போன்றோ ஹெலஉறுமய உதய கம்மன்வில போன்றோ சிங்கள இனவாதத்தை பேச எமக்கு சம உரிமை உண்டா? அவ்விதம் நாம் இனவாதம் பேசினால் பிரிவினை கோரினோம். நாட்டின் இன சௌஜன்யத்தை சீரளிக்கிறோம் என பயங்கரவாதப் பிரிவினரால் விசாரிக்கப்படும் நிலைக்கு தள்ளப்படுவோம். இதனால் இன சௌஜன்யம் மிக்க ஸ்ரீலங்காவை உருவாக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

athirady.org

Written by lankamuslim

ஜூன் 15, 2009 at 1:44 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

வெள்ளவத்தையில் இணையசேவை நிறுவனம் புலனாய்வுத்துறையினரால் மூடப்பட்டது!!

கொழும்பு வெள்ளவத்தையில் தமிழர் ஒருவரால் நடத்தப்பட்டு வந்த இணையசேவை நிறுவனம் ஒன்று இலங்கை புலனாய்வுத்துறையினரால் மூடி முத்திரையிடப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் மலேசியாவில் இருந்து வந்த சிலர் விடுதலைப்புலிகள் சம்பந்தப்பட்ட படங்கள் வைத்திருந்ததாக கூறி கைது செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த இணையசேவை நிறுவனம் மூடப்பட்டு அதனை நடத்தி வந்தவர்கள் கடும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இந்த இணையசேவை நிறுவனம் ஊடாகவே விடுதலைப்புலிகள் சார்ந்த படங்கள் தரவிறக்கம் செய்யப்பட்டதாகவும் இதனாலேயே புலனாய்வுத் துறையினரால் மூடி சீல்வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப் படுகிறது. இதனைத் தொடர்ந்து அப்பதியில் தொடர்ந்து பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

athirady.org

Written by lankamuslim

ஜூன் 15, 2009 at 1:35 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கிஷோர் தலைமையில் TNA பா.உ அரசில் இணைவு!

வன்னிபாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் தலைமையில் ஜந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசில் இணையவுள்ளனர். எதிர்வரும் பாராளுமன்ற அமர்வின்போது கிஷோர் தலைமையிலான ஜந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசுடன் இணைவார்கள் என்றும் தெரியவருகின்றது. இதேவேளை நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டி.பி.யும் கிஷோர் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பும் அரசுடன் இணைந்து வெற்றிலை சின்னத்திலேயே போட்டியிடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன் வெளிப்பாடாகவே எமது முன்னைய செய்தியில் குறிப்பிட்டவாறு ஜ.ம.சு.கூ.பின் வவுனியா நகரசபைக்கான முதன்மை வேட்பாளராக சுகந்தி கிஷோர் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், அடுத்த பாராளுமன்ற தேர்தலில் தற்போது அரசில் இணைந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜவரும் அடுத்த பாராளுமன்ற தேர்தலில் அரசின் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இணைந்து போட்டியிடுவோம் என்றும் அரசுக்கு உறுதியளித்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

தீவிரமாக தமிழ்தேசியம் பேசியவர்கள் தற்போது தம்மை பெரும்பான்மை காட்சிகளுடன் இணைத்துவருவது தமிழ்பேசும் மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

neruppu.com

Written by lankamuslim

ஜூன் 15, 2009 at 4:07 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது