Lankamuslim.org

One World One Ummah

Archive for ஜூன் 14th, 2009

soldiers of Allah: Songs

1

2

3

4

5

6

7

8

Advertisements

Written by lankamuslim

ஜூன் 14, 2009 at 5:12 பிப

இஸ்லாமிய கீதங்கள் இல் பதிவிடப்பட்டது

மலையக மக்களின் வாழ்விடங்களையே சூறையாடிய இனவாதிகள்

1956 இல் சிங்களம் மட்டுமே அரசகரும மொழி என்று அறிவித்து தேர்தல் களத்தில் இனவாதிகள் குதித்தனர். சிறீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சிக்கு வந்தால் 24 மணித்தியாலத்தில் சிங்களம் மட்டும் என்ற சட்டத்தை கொண்டு வருவதாக வாக்களித்தனர். 1961 1.1 தனிச் சிங்களம் நாடுமுழுக்க அழுலுக்கு வந்தது. மொழியில் மட்டுமல்ல, வேலை வாய்ப்பிலும், குடியிருப்பு நிலத்திலும் ஏன் முழு இலங்கையின் அனைத்துதுறையிலும் சிங்கள இன மயமாக்கும் உள்ளடக்கத்தை இனவாதிகள் தமது அரசியல் ஆணையாக வைத்தனர். இதையே படிப்படியாக செய்தனர், செய்து வருகின்றனர், செய்யத் துடிக்கின்றனர். இதன் ஒரு பகுதியாகவே மலையக மக்களின் வாழ்விடங்கள் சூறையாடப்பட்டன.

1939-1947 க்கு இடையில் மலையகத்தில் கிராம அபிவிருத்தி என்ற பெயரில் வழங்கப்பட்ட 148 562 ஏக்கர் நிலத்தில் ஒரு துளி கூட, மலையக மக்களுக்கு வழங்கப்படவில்லை. இதன் திட்டமிட்ட குடியேற்றத்தின் போது மலையக மக்கள் சொந்த வாழ்விடங்களில் இருந்து விரட்டியடிக்கப்பட்டனர். 1945 இல் நாவேஸ்மிர் தோட்டத்தில் 400 ஏக்கர் காணியை இனவாதிகள் பலாத்காரமாக பறித்த போது, அது கடுமையான எதிர்ப்பினால் தடுக்கப்பட்டது. 1950 இல் சேனநாயக்க உருளவள்ளி தோட்டத்தில் மலையக மக்களை வெளியேற்றி சிங்கள குடியேற்றத்தை நடத்த முற்பட்ட போது, இதை எதிர்த்து மலையக மக்கள் போராட்டத்தை நடத்தினர். தொடர்ச்சியான குடியேற்றங்களை இலங்கையில் இன அழிப்பு வரலாற்றின் ஒரு பகுதியாக மலையகத்திலும் திட்டமிட்டு நடத்தினர்.

1972 இல் கொண்டு வந்த காணி சீர்திருத்தச் சட்டம் இனவிரோதச் சட்டமாகி, 80000 ஏக்கர் தேயிலைத் தோட்டத்தை கைப்பற்றி சிங்கள மக்களுக்கு பகிர்ந்தளித்தனர். மலையக மக்கள் அகதிகளாக வீதியில் விரட்டி அடிக்கப்பட்டனர். அத்துடன் அவர்களை தீவிரமான நாடு கடத்தலுக்குள்ளாக்கினர். பலர் பட்டினியால் வீதிகளில் செத்தனர். அந்த மக்கள் உழைப்பில் இருந்து அந்நியமாகி வீதிவீதியாக கையேந்தும் ஒரு சமூகமாக உருவானது. சிங்கள குடியேற்றங்கள் கொலனி என்ற பெயரில், கிராமங்களுக்கு வரும் வீதியோரங்களில் நடத்தப்பட்டது. இதன் மூலம் மலையக கிராமங்கள் சிங்கள குடியேற்றம் மூலம் சுற்றி வளைக்கப்பட்டது. நுவரெலியா மாவட்டத்தில் 7 ஆயிரம் ஏக்கர் நிலம் பிரதான வீதிகளை அண்டிய பகுதிகளில் இனவாத குடியேற்றத்தை நடத்த முயன்ற போது, பெரியளவில் போராட்டம் வெடித்தது. அது உயிர் தியாகம் செய்யும் அளவுக்கு நடைபெற்றது. இதைத் தொடர்ந்து இனவாதிகள் திட்டமிட்ட இந்த குடியேற்றத்தை கைவிட வேண்டியதாகியது.

1983 இல் திருகோணமலையில் குடியிருந்த மலையக மக்களை பலாத்காரமாக மலையகத்துக்கு அனுப்பினர். இனவாதிகள் திட்டமிட்ட வகையில் இன அழிப்பை நடத்திய போதும், தமிழ் தேசியம் மௌனத்தின் மூலம் அதை அங்கீகரித்தது. கண்டன அறிக்கையுடன் இதை பூசி மொழுகுவதை காலகாலமாக செய்ததுடன், இதைக் காட்டி சொந்த நலனை கோருவது தொடர்கின்றது. 1988 மலையகத்தில் 14710 ஏக்கர் நிலத்தில் திட்டமிட்டு இனவாத குடியேற்றத்தை நடத்த பாராளுமன்றத்தில் அங்கீகாரத்தைப் பெற்றனர். சுவர்ணபூமி திட்டப்படி கண்டியில் 1000 ஏக்கரும், மாத்தளையில் 1000 ஏக்கரும், பதுளையில் 1200 ஏக்கரும், இரத்தினபுரியில் 1200 ஏக்கரும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்தை நடத்தினர். கிராம விரிவுபடுத்தும் திட்டத்தின் கீழ் கண்டியில் 400 ஏக்கரும், மாத்தளையில் 500 ஏக்கரும், நுவரெலியாவில் 400 ஏக்கரும், பதுளையில் 25 ஏக்கரும், இரத்தினபுரியில் 800 ஏக்கரும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்துக்கு ஒதுக்கப்பட்டது. காணி சுவீகரிப்பு திட்டத்தின் கீழ் கண்டியில் 400 ஏக்கரும், நுவரெலியாவில் 400 ஏக்கரும், பதுளையில் 100 ஏக்கரும், இரத்தினபுரியில் 85 ஏக்கரும் அபகரிக்கப்பட்டது. காணி சீர்திருத்த சட்டப்படி கண்டியில் 400 ஏக்கரும், இரத்தினபுரியில் 1600 ஏக்கரும் சூறையாடப்பட்டது. 1988 இல் மொத்தமாக கண்டியில் 2500 ஏக்கரும், மாத்தளையில் 2600 ஏக்கரும், நுவரெலியாவில் 2000 ஏக்கரும், பதுளையில் 2125 ஏக்கரும், இரத்தினபுரியில் 5485 ஏக்கரும் திட்டமிட்ட சிங்கள இனக் குடியேற்றத்துக்காக ஒதுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டன. இந்த நிலங்கள் மலையக மக்களுக்கு வழங்கப்படவில்லை. மாறாக குடியெழுப்பப்பட்டனர்.

இதைவிட மலையகத்தில் சட்டவிரோத குடியேற்றங்கள் ஊக்குவிக்கப்பட்டு, சட்டப்படி உறுதி வழங்கப்பட்டது. இந்த வகையில் 1988 இல் கண்டியில் 750 ஏக்கரும், மாத்தளையில் 2250 ஏக்கரும், நுவரெலியாவில் 65 ஏக்கரும், பதுளையில் 200 ஏக்கரும், இரத்தினபுரியில் 1500 ஏக்கருக்கும் உறுதி வழங்கப்பட்டது. அத்துமீறிய சிங்களவருக்கு மட்டுமே உறுதி வழங்கிய இனவாத அரசாங்கம், அத்துமீறி வாழ்ந்த மலையக மக்களுக்கு இதை வழங்க மறுத்தனர். 1987 இல் போகாவத்தையில் அத்துமீறி வாழ்ந்த மலையக மக்களை, பலாத்காரமாக பொலிசாரின் துணையுடன் வெளியேற்றப்பட்டனர். மலையக மக்களின் சிறியளவில் காய்கறி தோட்டங்களையும் கூட, மரநடுகை என்ற பெயரில் அபகரிக்கப்படுகின்றது.

இனவாத அரசாங்கம் 1935-1985 ஆண்டுக்கு இடையில் குடியிருப்பு சார்ந்து அரசு ஒதுக்கிய நிலம்

பாரிய குடியேற்றம் 434 751 ஏக்கர்

கிராம விரிவாக்கம் 682 737 ஏக்கர்

மேட்டு நிலக் குடியேற்றம் 33 519 ஏக்கர்

அத்து மீறிய குடியேற்றம் 508 438 ஏக்கர்

மத்திய வர்க்கத்திற்கான நிலம்135 951 ஏக்கர்

மொத்தமாக 1935-1985க்கு இடையில் 18 லட்சம் ஏக்கர் நிலம் பெரும்பான்மை இனத்துக்கு திட்டமிட்ட இன அழிப்பு சார்ந்து குடியேற்றப்பட்டனர். இதன் மூலம் இலங்கையில் நிலப்பிரபுத்துவம் இடையிலான முரண்பாடு தவிர்க்கப்பட்டது. அதேநேரம் இன அழிப்பை நடத்த முடிந்தது. இனத்தின் வாழ் நிலங்களை அபகரித்ததன் மூலம் இனத்தின் தனித் தன்மையை சிதைக்க முடிந்தது. தமிழ் முஸ்லீம் இனங்களின் பாரம்பரிய நிலங்கள் மட்டுமல்ல, மலையக மக்களின் நிலங்களும் இனஅழிப்பின் மூலம் சூறையாடப்பட்டது. தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்புக்கு தேவையான நிலம் 15 000 ஏக்கர் மட்டுமேயாகும். ஆனால் இனவாதிகள் இதை கொடுக்க மறுத்ததுடன், இருந்ததை பறிப்பதிலேயே இலங்கையின் இனவரலாறு தொடருகின்றது. பெரும் இனவாத தேசியத்துக்கு எதிரான போராட்டம், ஒட்டுமொத்தமான அனைத்து சிறுபான்மை இனங்களின் ஜனநாயக கோரிக்கைகளையும் உள்ளடக்கத் தவறி, குறுந்தேசியமாகி மற்றவர்களின் அழிவில் சில நலன்களை அடைவதையே அரசியல் கோரிக்கையாக்கியுள்ளனர்.

பி.இரயாகரன்

Written by lankamuslim

ஜூன் 14, 2009 at 4:27 பிப

கட்டுரைகள், பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மின்னேரியாவில் இயேசுவின் சிலை உடைப்பு.. -கத்தோலிக்க திருச்சபை கண்டனம்!!

மத்திய மாகாணத்திலுள்ள மின்னேரியாவில் இனந்தெரியாத சிலரால் இயேசு கிருஸ்துவின் சிலை அகற்றி உடைத்தெறியப் பட்டமைக்கு தேசிய கத்தோலிக்க திருச்சபை கண்டனம் தெரிவித்துள்ளது. மின்னேரியா கன்னியர் மடத்தில் இருந்த சிலையை கடந்த 3ம்திகதி இனந்தெரியாத குழுவொன்று அகற்றி எடுத்துச் சென்று சிலையின் பாகங்கள் பி;ன்னர் மின்னேரியா குளத்திற்கு அருகில் மீட்கப்பட்டிருந்தன. இலங்கையில் சிறுபான்மையின மக்கள் எவரும் இல்லை என கடந்த மே 18ம் திகதி ஜனாதிபதி உரையாற்றிய பின்னரே இவ்வாறான சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் கத்தோலிக்க திருச்சபை சுட்டிக் காட்டியுள்ளது. கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இருந்த மதரீதியான பாகுபாடுகளும்  தாக்குதல்களும் மீண்டும் ஆரம்பித்திருப்பதாகவும் திருச்சபை வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. நீர்கொழும்பு தொடரூந்து நிலையத்தில் இருந்த இயேசு சிலையும் சில இனந்தெரியாத விஷமிகளால் கடந்த மாதம் அகற்றப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது

Written by lankamuslim

ஜூன் 14, 2009 at 3:16 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இணைப்பு-2-சவுதியில் பஸ்விபத்து இலங்கையர் ஐவர் பலி இதில் 4வர் முஸ்லிம்

சவுதி அரேபியாவில் இடம்பெற்ற பஸ்விபத்தில் ஐந்து இலங்கையர்கள் உட்பட பத்தொன்பது பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் கடந்த வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. சவுதியில் கடமை புரியும் பணியாளர்களை ஏற்றிச் சென்றுக் கொண்டிருந்த பஸ்வண்டியொன்று டிரக்குடன் மோதிய போது பஸ் தீப்பற்றி எரிந்ததையடுத்தே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. குறிப்பிட்ட பஸ்ஸின் அனைத்து கதவுகளும் ஜன்னல்களும் மூடப்பட்டிருந்ததால் இதில் பயணம் செய்தவர்கள் எவரும் தப்பியிருக்க முடியாதென அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து றியாத் தமாம் வீதியில் இடம்பெற்றுள்ளது. சவுதி அரேபியா இந்தியா இலங்கை யெமன் சூடான் எகிப்து பங்களாதேஷ் ஆகிய நாடுகளை சேர்ந்தோரே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சவூதி அரேபியாவில் இடம்பெற்ற பஸ்விபத்தில் ஐந்து இலங்கையர் உட்பட 20பேர் பலியாகியுள்ளனர். ரியாத் நகரிலுள்ள தமாமம் நெடுஞ்சாலையில் ட்ரக் வண்டியொன்றுடன் பஸ் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதரக அதிகாரி சரத்குமார தெரிவித்துள்ளார். அத்துடன் விபத்துக்குள்ளான பஸ் வண்டி தீப்பற்றியதாலேயே இதில் பயணித்த ஐந்து இலங்கையர் உட்பட இருபதுபேர் பலியானதாகவும் அவர் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் சடலங்களை இலங்கைக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் கபீர்முவி, சேகு ஆம்பாவா, சுலைமான் லெப்பை, அப்துல்கபூர், ஹமிம் முகமட் அம்சா, விதாகே மெண்டிஸ் அப்புகாமி ஆகியோரே பலியாகியுள்ளனர்.
இதேவேளை பாகிஸ்தானில் இலங்கைப் பணிப்பெண் ஒருவர் பலியாகியுள்ளார். 30வருடங்களாக பாகிஸ்தானிலுள்ள இலங்கை ஆசிரியை ஒருவரின் வீட்டில் பணியாற்றிய பணிப்பெண்ணே பலியாகியுள்ளார். இந்த மரணம் தொடாப்hன மரண விசாரணை அறிக்கையை அனுப்புமாறு வெளிவிவகார அமைச்சு கோரியுள்ளது.

athirady.org

Written by lankamuslim

ஜூன் 14, 2009 at 3:14 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

74லட்சம் ரூபா செலவில் சிவனொளிபாத மலைக்கான படிக்கல் நிர்மாணம்!!

leave a comment »

எதிர்வரும் டிசம்பர் மாதம் ஆரம்பமாக உள்ள சிவனொளிபாதமலை பருவ காலத்தினை முன்னிட்டு யாத்திரிகர்களின் வசதிக்காக சுமார் 74லட்சம் ரூபா செலவில் படிக்கட்டுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன. இரத்தினபுரி பலாபத்தல வீதியில் லிஹினி எல்லவரை இராணுவ வீரர்கள் படிகளை கடந்தவருடம் நிர்மாணித்து வந்தனர் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையில் இராணுவ வீரர்கள் களமுனைப்பு செல்ல வேண்டி ஏற்பட்டதால் நிர்மாணப் பணிகள் தாமதமாகி மந்தகதியில் நடைபெற்று சீத்த கங்குல என்னும் இடம் வரை மட்டும் நிர்மாணிக்கப்பட்டது. ஆதனைத் தொடர்ந்தே தினேஷ் குணவர்தனவின் நிதி ஒதுக்கீட்டில் இருந்து சீத்த கங்குலயிலிருந்து சிவனொளிபாத மலைவரை படிகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

athirady.org

Written by lankamuslim

ஜூன் 14, 2009 at 3:09 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

யாழ்-கண்டி வீதி ஊடாக யாழ் செல்வதற்கு தனியார் லொறிகளுக்கு அனுமதி!

யாழ். குடாநாட்டுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்கள் உட்பட அனைத்து பொருட்களுடன் முதற்கட்டமாக தனியார் வர்த்தகர்களின் பொருட்களுடன் சுமார் 120 லொறிகள் ஏ-9 பாதையூடாக செல்லவுள்ளன. எதிர்வரும் 18ஆம் திகதி கொழும்பிலிருந்து மேற்படி லொறிகள் ஏ-9 பாதையூடாக செல்கின்றன என அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடக்கில் குறிப்பாக ஓமந்தைக்கு அப்பால் மோதல்கள் ஓய்ந்ததன் பின்னர் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளரினால் அனுப்பப்படும் அத்தியாவசிய பொருட்களுடன் ஏற்கனவே லொறிகள் சென்றன.

இதனையடுத்து குடாநாட்டிலுள்ள தனியார் வர்த்தகர்களின் கடைகளுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் அவர்களது லொறிகளிலேயே ஏற்றி செல்வதற்கு ஏதுவாக லொறிகளை பதிவு செய்யுமாறு அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் கேட்டிருந்தார்.

இந்த அறிவித்தலையடுத்து இதுவரை சுமார் 300 லொறிகள் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் திணைக்களத்தில் பதிவு செய்துகொண்டுள்ளன. பதிவு செய்யப்பட்ட இந்த லொறிகளில் சுமார் 120 லொறிகளே முதற்கட்டமாக செல்லவுள்ளன.

காலை ஆறு மணி முதல் மாலை 6.00 மணி வரை மட்டுமே ஏ-9 வீதியூடாக செல்ல லொறிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதுடன் எக்காரணம் கொண்டும் லொறிகளை வீதியின் ஓரத்தில் நிறுத்தக்கூடாது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வீதி ஓரங்கள் கண்ணிவெடி, மிதிவெடி அச்சுறுத்தல் உள்ளது என்பதாலேயே இவ்வாறான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குடாநாட்டை நோக்கியோ அங்கிருந்து கொழும்பு நோக்கியோ வரும் போது போகும் போது தற்செயலாக லொறி பழுதடைந்தால் லொறிச் சாரதிகள், நடத்துனர்கள் லொறி நிறுத்தப்பட்டுள்ள இடத்தைவிட்டு செல்லவேண்டாம் எனவும், வீதியின் ஓரங்களுக்கு செல்லவேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். தனியார் வர்த்தகர்களினால் லொறிகளுக்கு ஏற்றப்படும் பொருட்கள் ஒரே இடத்தில் வைத்து ஏற்றப்பட்டு சீல் வைக்கப்படும். குடாநாட்டில் கைதடி களஞ்சியசாலையில் வைத்தே பொருட்கள் கொண்டு செல்லப்பட்டு சோதனையின் பின்னர் தனியார் வர்த்தகர்களின் கடைகளுக்கு கொண்டு செல்லப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

அத்தியாவசிய உணவுப் பொருட்கள், உடைகள், கட்டடப் பொருட்கள், பாத்திரங்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் குடாநாட்டிற்குள் சென்றடைந்ததும் சகல பொருட்களின் விலைகளும் வெகுவாக குறைந்துவிடும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.neruppu.com

Written by lankamuslim

ஜூன் 14, 2009 at 2:57 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கூட்டமைப்புக்குள் குத்து வெட்டு அதிகரிப்பு! கிஷோர்,விநோதரலிங்கம், ஸ்ரீகாந்தா அரசில் இணைய முடிவு!

இதுவரை காலமும் புலிகளின் ஆசீர்வாதத்துடன் செயற்பட்டுவந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு தற்போது இரண்டாக பிளவுபடும் நிலைக்கு சென்றுள்ளதுடன். அதன் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர், அரசில் இணைந்து மந்திரி பதவிகளை பெற்றுக்கொள்ளவும் எண்ணியுள்ளதாக தெரியவருகின்றது.

வன்னியை இராணுவம் சூழ்ந்து புலிகளை சுற்றிவளைத்த நிலையில், இந்திய மத்திய அரசுடன் சந்திப்பினை மேற்கொள்வதற்கு TNAயினர் முன் அனுமதி கோரியிருந்தனர். கூட்டமைப்பினரின் கோரிக்கைக்கு அமைய புதுடில்லி வந்து தம்மை சந்திக்கலாம் என்றும் மத்திய அரசின் முக்கிய அமைச்சுக்களில் இருந்து முன் அனுமதி கிடைத்தது. அப்போது புலிகளின் குத்துவெட்டு உச்சக்கட்டத்தை ஆரம்பித்து ஸ்ரீகாந்தாவும், சம்பந்தரும் ஒருவருக்கொருவர் முரணான கருத்துக்களை தெரிவித்துக் கொண்டதும், பி.பி.சி. தமிழோசையில் அதன் ஒலிவடிவத்தையும் பலரும் கேட்க முடிந்தது.

இந்திய அரசின் அனுமதியை ஏற்று அவர்களை சந்தித்து தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தர் தெரிவிக்கையில், அதற்கு எதிர்மாறாக கூட்டமைப்பின் பா.உ ஸ்ரீகாந்தா தெரிவித்து இந்தியாவுக்கு எதிரான தனது வெளிப்படையான நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார். இவ்வாறாக இவர்களுக்குள் மெல்ல மெல்ல விரிசலடைந்துவந்த குத்துவெட்டு தற்போது புலிகளின் தலைமையே ஒட்டுமொத்தமாக அழிக்கப்பட்ட நிலையில், தமது பதவிகளை தக்கவைத்து கொள்வதற்காக அரசுடனும், புலிகளுக்கு எதிரான கருத்துக்களை கொண்டிருந்ததுடன் அரசுடன் இணையாமல் இருந்து செயற்பட்டு வரும் தமிழ்கட்சிகளுடனும் பேச்சுக்களை நடாத்தி பாராளுமன்ற ஆசனங்களையும், சுகபோகங்களையும் தக்கவைத்து கொள்வதில் தமிழ்தேசிய கூட்டமைப்பு தீவிரம் காட்டிவருவதையே கடந்தவாரங்களில் இடம்பெற்ற சந்திப்புகள், நிகழ்வுகள், செய்திகள் தெளிவுபடுத்தியுள்ளன.

புலிகளின் ஆசீர்வாதத்துடன் செயற்பட்டுவந்த இந்த கூட்டமைப்பினர், தமிழீழமே முடிந்த முடிவு, புலிகளே தமிழ்மக்களின் ஏக பிரதிநிதிகள் என்று ஒருபுறம் கூறிக்கொண்டு, மறுபுறத்தில் வெளிநாடுகளில் தமது குடும்பத்தினரை தக்கவைத்து கொண்டு தமிழீழம் கேட்டு போராடியவர்கள், அது மட்டுமல்ல எந்த சிங்கள அரசுக்கு எதிரான கருத்துக்களை ஊடகங்களில் தெரிவித்தார்களோ அதே அரசுடன் பின்கதவால் பேச்சு நடாத்தி தமது குடும்பத்தினர், உறவினருக்கான தேவைகளை நிவர்த்தி செய்த இந்த கூட்டமைப்பினர் தமிழ் மக்களின் தேவைகளுக்காக பேச்சு நடாத்தவில்லை, இன்றுவரை முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள நலன்கள் குறித்து கரிசனை கொள்ளாமல் புனர்வாழ்வு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள புலி உறுப்பினர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என்றே கோரிவருகின்றனர்.

கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தர் இந்தியாவில் வசித்து மாரடைப்பால் மரணமான மருமகனுக்கு இந்தியாவில் உள்ள இலங்கை தூதரகத்தில் வேலை போட்டு தருமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரியதுடன், அதற்கு ஜனாதிபதி சம்மதம் தெரிவித்த நிலையில் சம்பந்தரின் மருமகன் மரணமாகிவிட்டார். கனடாவின் ரொறன்ரோவில் வசித்துவந்த தனது மனைவி, பிள்ளைகளை இந்தியாவுக்கு அழைத்த சுரேஸ் பிரேமச்சந்திரன், இந்தியாவின் முன்னைநாள் சுகாதார அமைச்சர் அன்புமணி ராமதாஸ் அவர்களை அணுகி தனது மகளுக்கு இந்தியாவிலேயே சிறந்த மருத்துவ கல்லூரியாக விளங்கும் மருத்துவ கல்லூரியில் அனுமதி பெற்றதும், கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் கிஷோர் தனது குடும்பத்தினரின் தேவைகளுக்காக ஜனாதிபதியுடனும் அவரது சகோதரர் பஷில் ராஜபக்ஷவுடன் பின்கதவால் பேசி தமது தேவைகளை ப+ர்த்தி செய்து கொண்டார். இவ்வாறானவர்களுக்கு தமிழ்மக்களின் அவல நிலைகள் குறித்து பேசுவதற்குதான் முடியாமல் போய்விட்டது.

இவ்வாறான கொள்கைகளை கொண்ட இந்த கூட்டமைப்பு கூத்தாடிகள் தமது பதவி சுகபோகங்களை இழப்பதற்கு என்றுமே தயாரானவர்கள் இல்லை என்பதையே இவர்களது கட்சிவிட்டு கட்சிமாறு கொள்கையும், தமது தலைவனையே கொன்று வெறித்தனம் புரிந்த கொள்ளை, கொலை குழுவுடன் கூட்டுவைத்து பாராளுமன்றம் சென்றதும் இவர்களது கடந்த காலவரலாறுகள், இந்த கூட்டமைப்பினரின் பதவிகளுக்கு காரணமான புலிகள் அழிக்கப்பட்ட நிலையில், தமது பதவிகளை தக்கவைப்பதற்காக சிலர் அரசுடனும் சிலர் அரசுடன் இணையாமல் புலிகளின் தமிழின அழிப்பு நடவடிக்கைக்கு எதிராக குரல் கொடுத்துவரும் தமிழ்கட்சிகளுடன் இரகசிய பேச்சுவார்த்தைகளை நடாத்தி வருகின்றனர்.

இதில் கிஷோர் உட்பட சில கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் நிலைப்பாடுகள் குறித்து புலிகளின் தலைமை அழிக்கப்பட முன்பே நெருப்பு சுட்டிக்காட்டியிருந்தது. திரைமறைவில் அரசு நிலைப்பாட்டை எடுத்து செயற்பட்டு வந்த கிஷோர் அண்மையில் தாண்டிக்குளம் வரை நீடிக்கப்பட்டுள்ள புகையிரத நிலைய திறப்பு விழாவில் அரச அமைச்சர்களுடன் இணைந்து கொண்டிருந்ததுடன். நடந்து முடிந்த அவசரகால சட்ட வாக்கெடுப்பில் பாராளுமன்றத்தில் சமூகமளித்த கூட்டமைப்பினர் அரசுக்கு எதிராக வாக்களித்த நிலையில், இவர் மட்டும் வாக்களிக்காமல் மௌனம் காத்தும் இவர் அரசுடன் இணைவதற்குரிய வெளிப்படையான ஒளியாகவே கருதப்பட்டது. இறுதியாக வெளியான தகவல்களின் பிரகாரம் கிஷோர் அவர்களின் மனைவியான சுகந்தி கிஷோர் அரசின் ஜ.ம.சு.கூ.பின் வெற்றிலை சின்னத்தில் வவுனியா நகரசபைக்கான முதன்மை வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை கூட்டமைப்பின் மற்றுமொரு பாராளுமன்ற உறுப்பினரான விநோதரலிங்கம் என்பவர், கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் எவருக்கும் வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களுக்கு செல்வதற்கு அனுமதியில்லாத நிலையில், அரசுடன் இவருக்கு உள்ள கள்ள உறவின் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டு அங்கே சென்றுவந்து பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது முகாம்கள் சிறப்பாக இயங்குவதாக அரசிற்கு நற்சான்றிதழ் வழங்கினார். அது மட்டுமல்ல தமிழினத்திற்கு துரோகமிழைக்க விரும்பவில்லையாம், ஆகவே அரசு ஆதரவு நிலையை எடுத்துள்ள தமது அமைப்பின் மற்றுமொரு பிரிவாக செயற்படும் ஸ்ரீரேலோவுடன் இணைவதற்கான பேச்சுக்களை நடாத்தி வருவதாகவும், கூட்டமைப்பு போட்டியிடாவிட்டால் ரெலோ தனித்து போட்டியிடும் எனவும் தெரிவித்துள்ளார். தற்போது அரசுடன் உறவுகொண்டு எதிர்வரும் தேர்தலில் ஆளும்கட்சியின் வெற்றிலை சின்னத்தில் போட்டியிட சம்மதம் தெரிவித்துள்ள ஸ்ரீரெலோ ஊடகா அரசுடன் இணையவுள்ளார். இவரை பொறுத்தவரை அரசுடன் நேரடியாக இணையாமல் சுற்றிவளைத்து ஸ்ரீரெலோ ஊடாக அரசுடன் இணைந்து மந்திரி பதவியை பெற்று கொள்வதற்கான முயற்சி.

TNA.யில் அங்கம் வகிக்கும் மற்றுமொரு ரெலோ பா.உ ஸ்ரீகாந்தாவோ அரசுடன் இணைந்து கொள்ளாமல் புலிகளின் தவறான போராட்ட பாதையை கண்டித்துவரும் TULF,PLOTE, EPRLF(நாபா) அணியுடன் இரகசிய பேச்சுக்களை நடாத்தி அவர்களுடன் இணைந்து பாராளுமன்ற ஆசனத்தை தக்கவைத்து கொள்ள முயற்சி, இவர் மட்டுமல்ல TNAயின் மற்றுமொரு பாராளுமன்ற உறுப்பினரான சிவசக்தி ஆனந்தனின் நிலைப்பாடும், ஆகவே இந்நிலையில் இந்தியாவில் உள்ள சம்பந்தர், சுரேஸ், செல்வம், மாவை, சிவாஜிலிங்கம் போன்றவர்களின் நிலைப்பாடு இன்னும் தெளிவாக தெரியவில்லை. இந் நிலையில் கூட்டமைப்பு இரண்டாகவோ மூன்றாகவோ பிளவுபடும் நிலை தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

http://www.neruppu.com

Written by lankamuslim

ஜூன் 14, 2009 at 2:51 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது