Lankamuslim.org

Archive for ஜூன் 12th, 2009

பஞ்சாபி அணிந்து சென்றதினால் தமிழ் எம்.பி. நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றம்!! ??

நேற்று நாடாளுமன்றம் கூடியிருந்த வேளை அங்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் தங்கேஸ்வரி பாராளுமன்ற சம்பிரதாயத்தை மீறி உடை அணிந்து சென்றதன் காரணமாக படைக்கல சேவிதரினால் சபைக்குள் செல்ல முடியாமல் வெளியேற்ற வேண்டிய நிலைக்காளாகினார் என தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்து தெரிய வருவதாவது நாடாளுமன்றம் நேற்றுக்காலை சபநாயக்கர் டபிள்யூ ஜே.எம் லொக்கு பண்டாரவின் தலைமையில் கூடி முதலீட்டு உக்குவிப்பு திருத்தச் சட்டமூலம் மீதான விவாதம் இடம்பெற்றுக் கொண்டிருந்தது அவ் வேளை பஞ்சாபி அணிந்தவாறு தங்கேஸ்லரி எம்.பி சபைக்குள் நுழைந்தார். அவரை பிரதி படைக்கல் சேவிதர் நரேந்திர பொணான்டோ அவதானித்தார். அப்போது அவர் தங்கேஸ்வரியிடம் நீங்கள் நாடாளுமன்ற சம்பிரதாயத்திற்கு முரணான வகையில் ஆடை அணிந்து கொண்டு வந்திருக்கறீர்கள் நீங்கள் சபையை விட்டு வெளியேற வேண்டும் என்று கூறினார். அதனைத் தொடர்ந்து தங்கேஸ்வரி வெளியேறினார். இதேவேளை இதுகுறித்து கருத்துத் தெரிவித்த தமிழ் அரசியல்வாதி ஒருவர் ‘பாராளுமன்ற உறுப்பினர் தங்கேஸ்வரி குறைந்த பட்சம் தனது வயதைக்கூட நினைத்துப் பார்க்கவில்லையா?” எனத் தெரிவித்துள்ளார்.

Advertisements

Written by lankamuslim

ஜூன் 12, 2009 at 2:46 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது