Lankamuslim.org

Archive for ஜூன் 10th, 2009

அத் தவ்பா (மனம் வருந்தி மன்னிப்பு தேடுதல்)

At-Thauba

1

2

3

4

5

Advertisements

Written by lankamuslim

ஜூன் 10, 2009 at 5:58 பிப

அல்- குர் ஆன் இல் பதிவிடப்பட்டது

அல் அன்ஃபால் (போரில் கிடைத்த பொருள்கள்)

Al-Anfal

1

2

3

Written by lankamuslim

ஜூன் 10, 2009 at 5:50 பிப

அல்- குர் ஆன் இல் பதிவிடப்பட்டது

Genocide in Gujarat-Tamil

leave a comment »

a recall

Written by lankamuslim

ஜூன் 10, 2009 at 4:56 பிப

உலக செய்திகள் இல் பதிவிடப்பட்டது

புலிகளை இராணுவ ரீதியாக இலங்கை அரசாங்கம் தோற்கடித்தது! தமிழ்த் தேசியக்கூட்டமைப்பை அரசியல் ரீதியாக தமிழ் மக்கள் தோற்கடிக்க வேண்டும்!!

– வி.சின்னத்தம்பி (யாழ்ப்பாணம்)

TNA_in_Delhi200புலிகளின் பினாமி அமைப்பாக இதுவரைகாலமும் செயற்பட்டு வந்த, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சிறீகாந்தா, வீ.ஆனந்தசங்கரி தலைமையிலான ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளார். இந்த பேச்சுவார்த்தையின் போது, தமிழ்க் கட்சிகள் அனைத்தும் எதிர்காலத்தில் ஒர் அணியாக செயற்படுவது குறித்து கலந்துரையாடியதாக, சிறீகாந்தா விளக்கமளித்துள்ளார். சிறீகாந்தாவின் மேற்படி சந்திப்புக்கு, தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைமையின் அங்கீகாரம் இருந்ததா என்பது சரியாகத் தெரியவில்லை. அரசியல் கில்லாடிகளான தமிழ் தேசியக் கூட்டமைப்பினர், சிறீகாந்தாவை உத்தியோகப்பற்றற்ற முறையில் ஜனநாயக தேசியக் கூட்டமைப்பினருடன் கதைக்கவிட்டிட்டு, பின்னர் தமது நோக்கம் ஈடேறாது போனால், தமக்கும் அந்தச் சந்திப்புக்கும் தொடர்பு இல்லையென கூறவும் கூடும்.

புலிகள் அரச படைகளினால் முற்றாக அழிக்கப்பட்ட பின்னர், தமிழ் மக்கள் பற்றி எதுவும் சிந்திக்காது புலிகளுக்கு வால்பிடித்து திரிந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினர், தமது எதிர்காலம் எப்படிப்போகுமோ என்ற அங்கலாய்ப்பில் அங்குமிங்குமாக ஓடித்திரிவதை அவதானிக்க முடிகிறது. பெரும் படைபலத்துடன் மக்களை மிரட்டிவந்த புலிப்பிரமுகர்களுக்கே, வவுனியா நலன்புரி முகாம்களில் வைத்து மக்களினால் ‘பூசைகள்’ நடாத்தப்பட்டுள்ள சூழ்நிலையில், தாம் மக்களிடம் அகப்பட்டால் என்ன நடக்குமோ என்ற அச்சம் கூட்டமைப்பினரை வாட்டுவது நன்கு தெரிகின்றது. இது ஒன்றும் புதுமையான விடயம் அல்ல. பல நாடுகளில் மக்கள், தாம் மோசமாக அரசியல்வாதிகளால் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்று அறிந்த போது, அந்த ஏமாற்றுப் பேர்வழிகளை ஓட, ஓட விரட்டி நையப்புடைத்திருக்கிறார்கள்!

வீ.ஆனந்தசங்கரி, த.சித்தார்த்தன், தி.சிறீதரன் போன்ற ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களை, புலிகள் படுகொலை செய்வதற்கு முயற்சித்த போதும், ஈ.பி.டி.பி. தலைவர் டக்ளஸ் தேவானந்தா மீது பலமுறை கொலை முயற்சி தாக்குதல்கள் மேற்கொண்டபோதும், இந்தத் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அதைத் தடுக்கவோ அல்லது கண்டனம் தெரிவிக்கவோ ஒருமுறை தன்னும் முயற்சிக்கவில்லை. ‘இந்தச் சனியன்கள் தொலைந்தால் எம்மை விமர்ச்சிக்க ஆட்கள் இருக்கமாட்டார்கள்’ என்ற தோரணையில் இருந்து கொண்டு, மௌனமாக அங்கீகாரம் கொடுத்தவர்கள் தான் இந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினர். இப்பொழுது என்ன முகத்தோடு ஜனநாயக  கூட்டமைப்புத் தலைவர்களை, சிறீகாந்தா போய்ப்பார்த்துப் பேசினாரோ தெரியவில்லை.

இனிவரும் தேர்தல்களில், தமிழ்மக்கள் தமக்கு ஆதரவாக வாக்களிக்கமாட்டார்கள் என்பது தமிழ் தேசியக் கூட்டமைப்பினர்க்கு நன்கு தெரியும். சென்ற பொதுத்தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர்க்கு தமிழ் மக்களின் வாக்குகளை கொள்ளையடித்து வழங்கி, அவர்களை பாராளுமன்றம் அனுப்பி வைத்த புலிகளும், ‘நரகலோகத்திலும்’, தடுப்பு முகாம்களிலும் கிடந்து தவிக்கின்றனர். பாராளுமன்றத்துக்குள் பின்கதவால் நுழைந்த சிறீகாந்தாவுக்கு, மற்றெல்லோரையும் விட இந்த உண்மை நன்கு விளங்கும். அதனால் தான் காலம் கடந்த ஞானமாக, ‘எல்லா தமிழ் கட்சிகளும் ஐக்கியப்பட்டு செயற்பட வேண்டும்’ என்ற புதிய கோஷத்துடன், வாக்கு வேட்டைக்கு கிளம்பியுள்ளனர். ஆனால் அவர்களது இந்தக் கோரிக்கையை எடுத்த எடுப்பிலேயே ஆனந்தசங்கரி நிராகரித்துள்ளமையானது, மிகச்சரியானது மட்டுமின்றி, தமிழ் மக்களின் நம்பிக்கையையும் காப்பாற்றியுள்ளது.

தமிழ்மக்கள் கடந்த 25 வருடங்களாக பாசிசப் புலிகளின் கைகளில் சிக்கி, சீரழிந்து, இறுதியில் பலத்த இழப்புகளுடன் இழப்பதற்கு ஏதுமற்ற, கோவணாண்டிகளாக, இன்று அகதி முகாம்களில் வதைபடுவதற்கும், முன்னைய தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைமையும், இன்றைய தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தான் காரணம் என்பதை யாரும் மறுத்துவிட முடியாது.

உண்மையான தமிழ் ஜனநாயகக் கட்சிகள், தமிழ் தேசியக் கூட்டமைப்புடனோ, இப்பொழுது புதிதாக அகிம்சை பற்றியும், ஜனநாயகம் பற்றியும் பேச ஆரம்பித்திருக்கும் செல்வராசா பத்மநாதன் தலைமையிலான புலிகளுடனோ, எவ்விதமான அரசியல் கூட்டுக்களும் வைக்கக்கூடாது. அவ்வாறு செய்தால் அது தமிழ் மக்களுக்கு செய்யும் மாபெரும் துரோகமாக அமையும். மாறாக,  தமிழ் ஜனநாயகக் கட்சிகள் தமக்குள் ஐக்கியப்பட்டு செயற்பட வேண்டும். குறிப்பாக தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப் (பத்மநாபா அணி) ஆகிய கட்சிகள் உள்ளடக்கிய ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஈ.பி.டி.பி, தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் போன்ற கட்சிகளும் ஒரே அணியாக இணைந்து ஐக்கியப்பட்டு செயற்படுவது, இன்றைய காலத்தின் தவிர்க்க முடியாத அவசிய தேவையாகும். இவர்கள் தேர்தல்களிலும் இணைந்தே போட்டியிட வேண்டும். அதன் மூலம் எதிர்காலத்தில் ஒரு பலம் வாய்ந்த, ஐக்கியப்பட்ட தமிழ் ஜனநாயக அரசியல் அணியை உருவாக்க வேண்டும். அதேவேளையில் இந்த ஐக்கிய தமிழ் ஜனநாயகக் கூட்டு, ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதிலும், தேசிய சுதந்திரத்தைப் பாதுகாப்பதிலும், நாட்டின் இறைமையைப் பேணுவதிலும் அக்கறையுடன் செயல்படுகின்ற பொதுசன ஐக்கிய முன்னணியுடன் இணைந்து செயல்பட முன்வர வேண்டும்.

ஏனெனில் இன்றைய சூழ்நிலையில், இலங்கையில் ஆட்சியமைக்கக்கூடிய வல்லமையுள்ள இரண்டு பிரதான கட்சிகளில், பொதுசன ஐக்கிய முன்னணி மட்டுமே நாட்டைப் பாதுகாப்பதில் மட்டுமின்றி, தமிழ் – முஸ்லீம் மக்களின் பிரச்சினையையும் தீர்க்கக் கூடிய ஆற்றலும், விருப்பமும் உள்ள கட்சியாகும். அந்த கட்சியின் அரசாங்கமே உலகின் கொடிய பயங்கரவாத இயக்கமான புலிகளிடமிருந்து தமிழ் மக்களை பாதுகாத்துள்ளது. ஆனால் அத்துடன் தமிழ் மக்களின் பாதுகாப்பு பூரணப்படுத்தப்பட்டுவிட்டது என நாம் கருதக்கூடாது. இந்தக் கொடிய புலிகளை உருவாக்கிவிட்ட, பிற்போக்குவாத, இனவெறிகொண்ட தமிழ் தலைமையின் பிரதிநிதியான தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் உயிருடன் இருக்கின்றது. அவர்களால் எதிர்காலத்திலும் புலிகள் போன்ற ஒரு பாசிஸ இயக்கத்தை மீண்டும் உருவாக்க முடியும் என்பதை, நாம் மறந்துவிடக்கூடாது. அரசாங்கம் புலிகளை இராணுவரீதியாகத் தோற்கடித்தது போல, தமிழ் தேசியக் கூட்டமைப்பை தமிழ் மக்கள் அரசியல் ரீதியாகத் தோற்கடிக்க வேண்டும். அது தமிழ் மக்களின் தலையாய கடமையாகும். அப்பொழுது தான் தமிழ் மக்களின் முழுமையான விடிவு சாத்தியமாகும். இதற்காக தமிழ் ஜனநாயக சக்திகள் ஐக்கியப்பட வேண்டும்.

theneeweb.de

Written by lankamuslim

ஜூன் 10, 2009 at 12:00 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது