Lankamuslim.org

Archive for ஜூன் 9th, 2009

ஐரோப்பிய நாடாளுமன்றத் தேர்தலில் மைய வலதுசாரிகள் பெரு வெற்றி ஐரோப்பிய தேர்தலில் மிகவும் குறைவான வாக்களிப்பு

ஐரோப்பிய நாடாளுமன்றத் தேர்தலில் ஜனனி தோல்வி

jananiஐரோப்பிய நாடாளுமன்றத் தேர்தலில், மைய வலது சாரி அரசியல் கட்சிகள் பெரும் வெற்றி பெற்றுள்ளன.

அரசியல் கொள்கையளவில் மைய வலதுசாரி கொள்கைகளை கொண்ட கட்சிகள் மிகப்பெரும் குழுவாக உருவாகியிருக்கின்றன. மைய இடதுசாரி கட்சிகளின் தோல்வியின் விளைவாகவே மைய வலதுசாரிக் கட்சிகள் இத்தகைய வெற்றியை பெற்றிருப்பதாக பிபிசியின் செய்தியாளர் தெரிவிக்கிறார். தற்போதைய உலக அளவிலான பொருளாதார நெருக்கடி காரணமாக மைய வலதுசாரி அரசியல் கட்சிகள் வெற்றி பெறக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அதற்கு மாறாக, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும் போலந்து ஆகிய நாடுகளில் ஆட்சியிலும், பிரிட்டன், ஸ்பெய்ன் மற்றும் போர்த்துக்கல் ஆகிய நாடுகளில் எதிர்கட்சி வரிசையிலும் இருக்கும் மைய வலதுசாரி கட்சிகள் நல்ல வெற்றிகளை பெற்றிருக்கின்றன.

தீவிர வலதுசாரிகட்சிகள் மற்றும் தேசியவாத கட்சிகளும் சில இடங்களை வென்றுள்ளன. ஆனால் அவர்களுக்கு மேலதிக இடங்கள் கிடைக்கக்கூடும் என்று சில நிபுணர்கள் எதிர்வுகூறியிருந்தபடி பெருமளவிலான இடங்களை அவர்கள் கைப்பற்றவில்லை.

ஐரோப்பிய தேர்தலில் மிகவும் குறைவான வாக்களிப்பு

ஐரோப்பிய நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குப் பதிவு 43 சதவீதமாக அமைந்திருந்தது.

முப்பது ஆண்டுகளுக்கு முன் நேரடித் தேர்தல் ஆரம்பித்த நாளிலிருந்து மிகக் குறைவான வாக்களிப்பு இந்த முறைதான்.

வாக்காளர்கள் பலர் ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் மீது அவநம்பிக்கை கொண்டுள்ளனர் என்றும், வாக்களித்துள்ளவர்களும் கூட பெரும்பங்கில் தேசிய அரசியல் காரணங்களை முன்னிட்டே வாக்களித்துள்ளதாகவும் நோக்கர்கள் கூறுகின்றனர்.

பிரிட்டனைப் பொறுத்தவரையில், ஆளும் தொழிற்கட்சி மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ள இந்த மோசமான முடிவு, பிரச்சினைகளை எதிர்கொண்டுவரும் பிரதமர் கோர்டன் பிரவுனுக்கு மேலும் அழுத்தங்களை ஏற்படுத்தியுள்ளது.

சென்ற வாரம் அமைச்சர்கள் பலர் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ள நிலையில், கோர்டன் பிரவுன் பதவி விலக வேண்டும் என்ற குரல்கள் ஓங்கிவருகின்றன.

இளநிலை அமைச்சரான ஜேன் கென்னடி அரசாங்கத்தில் இருந்து கடைசியாக விலகியிருக்கிறார்.

– BBC News

ஐரோப்பிய நாடாளுமன்றத் தேர்தலில் ஜனனி தோல்வி

ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்ட இலங்கைத் தமிழ்ப் பெண் ஜனனி ஜனநாயகம் வெற்றி பெறத் தவறினார். லண்டன் பகுதியிலிருந்து சுயேச்சையாகப் போட்டியிட்டிருந்தார் ஜனனி. அவருக்கு புலம் பெயர்ந்த தமிழர்கள் பேராதரவு தெரிவித்திருந்தனர். இலங்கைப் பெண்ணான பிரபல பாடகி மாதங்கி மாயா அருள் பிரகாசம் (எம்.ஐ.ஏ.) வும் ஆதரவு தெரிவித்திருந்தார். ஐரோப்பிய நாடாளுமன்ற தேர்தல் வரலாற்றிலேயே, ஒரு சுயேச்சை வேட்பாளருக்கு இவ்வளவு வாக்குகள் இதுவரை கிடைத்ததில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

இங்கிலாந்தைச் சேர்ந்த சில கட்சிகளின் வேட்பாளர்களை விட ஜனனி அதிக வாக்குகளைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அனைத்து சுயேச்சை வேட்பாளர்களும் மொத்தமாக பெற்ற வாக்குகளை விட 2மடங்கு அதிக வாக்குகளையும் ஜனனி பெற்றுள்ளார். லண்டன் பகுதியில் எட்டு எம்.பி. இடங்கள் உள்ளன. இதில், 3 இடங்களை கன்சர்வேட்டிவ் கட்சியும், ஆளும் தொழிலாளர் கட்சி 2 இடங்களையும் பெற்றன. லிபரல் டெமாக்ரட்ஸ், கிரீன் கட்சி, இங்கிலாந்து சுயேச்சைக் கட்சி ஆகியோருக்கு தலா ஓர் இடம் கிடைத்தது. ஜனனிக்கு 1 லட்சம் வாக்குகள் கிடைத்திருந்தால் அவர் எம்.பி. ஆகியிருப்பார்.

thenee.com

Advertisements

Written by lankamuslim

ஜூன் 9, 2009 at 7:09 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

முகாம்களிலுள்ள வங்கிகளில் 2 நாட்களில் 390 மில்லியன் ரூபா வைப்பு

வன்னியிலிருந்து இடம் பெயர்ந்த மக்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் நலன்புரி நிலையங்களில் அமைக்கப் பட்டிருக்கும் நடமாடும் வங்கிகளில் இதுவரை 390 மில்லியன் ரூபா வைப்பிலிடப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இடம் பெயர்ந்த மக்கள் பணம் மற்றும் தங்க நகைகளைப் பொட்டணிகளாகக் கட்டி இடம் பெயரும் போது அவற்றைத் தம்முடன் எடுத்து வந்து தற்பொழுது வங்கிகளில் வைப்பிலிட்டிருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

நலன்புரி நிலையங்களில் இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி ஆகிய இரண்டு வங்கிகளும் நடமாடும் சேவைகளை ஆரம்பித்துள்ளன. இவ்வங்கிகள் திறக்கப்பட்டு 2 நாட்களில் 390 மில்லியன் ரூபா வைப்பிலிடப்பட்டிருப்பதாக நலன்புரி நிலையங்களிலுள்ள வங்கி வசதிகளை ஆராயச் சென்றிருந்த மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் கூறினார்.

“இதனைவிட மேலதிகமாக மக்களிடம் பணம் இருக்கும். இடம்பெயர்ந்த மக்கள் தமது பெறுமதிவாய்ந்த நகைகள் மற்றும் பணத்தைத் துணிகள் மற்றும் பைகளில் சுற்றியபடி எடுத்துவந்துள்ளனர். இந்த வங்கிகள் வெளிநாட்டிலிருந்து வரும் பணத்தைப் பெற்று நலன்புரி நிலையங்களிலுள்ள மக்களுக்கு வழங்கவும் நடவடிக்கை எடுக்கும். நலன்புரி நிலையங்களிலிருக்கும் மக்களுக்காக வெளிநாடுகளிலிருந்து அனுப்பப்பட்ட பணமும் இந்த 390 மில்லியன் ரூபாவில் அடங்குகிறது” என அவர் குறிப்பிட்டார்ட.

அதேநேரம், புதுமாத்தளன் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் களப்புக்கடல் பகுதியூடாகப் பயணித்து வந்தமையால் நலன்புரி நிலையத்திலுள்ள மக்கள் சிலர் பணத்தை உலரவைப்பதைக் காணக்கூடியதாவிருந்தது என முன்பு செய்திகள் வெளியாகியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Written by lankamuslim

ஜூன் 9, 2009 at 6:56 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஜாதிக ஹெல உறுமயவின் செயல்

அம்பாறையில் கடல்கோளினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அமைச்சர் பேரியல் அஷ்ரப் மேற்கொண்டு வரும் வீடமைப்புத் திட்டம் தொடர்பாக ஜாதிக ஹெல உறுமய மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பௌத்த தர்மத்தை மட்டுமல்ல மனித தர்மத்தையும் மீறுமொரு செயலென இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூன் 9, 2009 at 6:50 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அரசியலில் இருந்து ஒதுங்க வேண்டும்-த.வி.கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி!!

anandasangari-j தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழர் விடுதலைக் கூட்டணியும் யாழ். மாநகரசபை, வவுனியா நகரசபை தேர்தல்களில் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு இணக்கம் காண்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீகாந்தா தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரியை சந்தித்து உரையாடியுள்ளார். இது தொடர்பில் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளதாவது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீகாந்தா எம்முடன் உரையாடினார். ஆனால் நாம் ஒன்றுசேர்வது குறித்தோ, சேர்ந்து போட்டியிடுவது குறித்தோ உத்தரவாதம் கொடுக்கவில்லை. சந்தித்துப் பேச்சு நடத்தியது மட்டுமே நடந்துள்ளது. நிலைமை மோசமடைந்துள்ளது. அதனால் ஒன்று சேர்ந்து போட்டியிடுவோம் என்று ஸ்ரீகாந்தா கேட்டார், பல மக்கள் உயிரிழக்க முன்னரே இம்முடிவுக்கு வந்திருக்க வேண்டும் என்று நான் கூறினேன்.

கூட்டமைப்பினர் மக்களை ஏமாற்றி விட்டனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அரசியலில் இருந்து ஒதுங்க வேண்டும். கிளிநொச்சி அரச படைகளால் மீட்கப்படும் நிலையில் கூட நாங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரிடம், புலிகள்மீது அழுத்தங்களைக் கொடுத்து மக்களை விடுவிக்கச் செய்யுமாறு கோரினோம். அப்போது அவர்கள் செவிமடுத்திருந்தால் பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிரிழப்புக்களையும் உடைமைகள் இழப்பையும் தடுத்து நிறுத்தியிருக்க முடியும் என்று தெரிவித்துள்ளது. இதேவேளை தமிழரின் பிரச்சினைக்கு இந்தியாவின் தீர்வு முறையிலான மாதிரித் திட்டமே பொருந்தும். இந்தத் தீர்வுத் திட்டத்தை சிங்கள ஆட்சியாளர்களே ஏற்றுக்கொண்டார்கள் என்றும் ஆனந்தசங்கரி மேலும் கூறியுள்ளார்.

ggggg

Written by lankamuslim

ஜூன் 9, 2009 at 6:41 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது